10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
இயக்க விதிகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளை பற்றிய அறிவியல் பாடம் _______
இயங்கியல்
நிலையியல்
இயக்கவிசையியல்
இயந்திரவியல்
2.
ராக்கெட் ஏவுதலில் _______ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
3.
ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 \(\times\) 104 N
98 \(\times\) 104 டைன்
980 டைன்
4.
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
5.
கீழ்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
இயக்க நிலையிலுள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்
6.
தனது இயக்கநிலையை எதிர்க்கும் தன்மை ______
7.
உந்தம் ஒரு _____ அளவு.
8.
100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும்.
9.
மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _______ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் ______ குறியிலும் குறிக்கப்படுகிறது.
10.
இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு ________ தேவை.
11.
கூற்று : சீரான திசைவேகத்தில் நகரும் பொருளினை தொடர்ந்து நகர்த்த புறவிசை ஏதும் தேவையில்லை.
காரணம் : ஏனெனில் F = ma = m(0) = 0
(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
(ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
(இ) கூற்று சரியானது, ஆனால் காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரி.
12.
கூற்று: ‘g’ ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.
காரணம்: ‘g’ மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.
அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.
13.
நிறை வரையறு.
14.
வரையறு: 1 நியூட்டன்.
15.
சுழற்புள்ளி என்றால் என்ன?
16.
'நேர்க்கோட்டு உந்தம்' - வரையறு.
17.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
18.
நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
19.
நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.
20.
நிலைமம் என்பது யாது? அதன் வகைகள் யாவை?
21.
உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.
22.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
23.
இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2 : 5 அவைகளின் ஆர விகிதம் முறையே 4 : 7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தைக் கணக்கிடுக.
24.
துப்பாக்கியிலிருந்து குண்டு வெளிப்படும் போது ஒரு பின்னோக்கு இயக்கம் இருக்கும். ஏன்?
25.
ஒரு மின்தூக்கி மேல் நோக்கி இயங்குகிறது. அதனுள்ளே உள்ள ஒரு நபரின் தோற்ற எடை யாது?
26.
ஒரு ஓடும் வண்டியானது எதிரே வரும் ஓடும் வண்டியின் மீது மோதுவதால் ஏற்படும் உந்தமாறா நிலை என்ன?
27.
அதிக நிறையுடைய பொருட்களுக்கு அதிக முயற்சியெடுத்து அதனை இயங்கவைக்க வேண்டியுள்ளது ஏன்?
28.
விசை
29.
ஈர்ப்பு விசை
30.
நியூட்டனின் மூன்றாம் விதி
1.
(d)
இயந்திரவியல்
2.
(d)
அ மற்றும் இ
3.
(c)
98 \(\times\) 104 டைன்
4.
(c)
சைக்கிள் பந்தயம்
5.
(c)
அ மற்றும் ஆ
6.
( )
நிலைமம்
7.
( )
வெக்டர்
8.
( )
980 N
9.
( )
எதிர், நேர்
10.
( )
விசை
11.
(அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளங்குகிறது.
12.
இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு
13.
நிறை என்பது பொருட்களின் அடிப்படைப் பண்பாகும். பொருட்களின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவாகும். இதன் அலகு கிலோகிராம் ஆகும்.
14.
1 நியூட்டன் என்பதன் வரையறை : 1 கிலோ கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 மீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 நியூட்டன் (1N) ஆகும். 1 நியூட்டன் =1 கிகி மீவி-2.
15.
தண்டொன்றின் ஒரு முனையை தரையிலோ அல்லது சுவரிலோ நிலையாக பொருத்தி, மறுமுனையில் தண்டின் தொடுகோட்டின் வழியே விசை செயல்படுத்தப்பட்டால், தண்டானது நிலைப் புள்ளியை மையமாக வைத்து சுழலும். இப்புள்ளி சுழற்புள்ளி (point of rotation) எனப்படும்.
16.
(i) இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் உந்தம் எனப்படும். இதன் திசையானது பொருளின் திசைவேக திசையிலேயே அமையும். இது ஒரு வெக்டார் அளவாகும்.
(ii) உந்தம் (p)=நிறை (m) x திசைவேகம் (v)
p = mv
(iii) விசையின் எண் மதிப்பானது உந்தத்தால் அளவிடப்படுகிறது. இதன் SI அலகு கிகி மீவி-1, CGS அலகு கி செ.மீ வி-1 ஆகும்.
17.
1. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதால் அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
2. அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் அவர் தடையின்றி விழும் நிலையில் உள்ளார். அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும்.
3. எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார். விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
18.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
F = m x a
19.
| நிறை | எடை |
|---|---|
| நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும் | ஒரு பொருள் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை ஆகும். |
| இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன் |
| இடத்திற்கு இடம் மாறுபடாது. | இடத்திற்கு இடம் எடையின் மதிப்பு மாறுபடும். |
20.
ஒவ்வொரு பொருளும் தன்மீது சமன் செய்யப்படாத புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையையோ, அல்லது சென்று கொண்டிருக்கும் நேர்க்கோட்டு இயக்க நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் தன்மை "நிலைமம்" என்றழைக்கப்படுகிறது.
நிலைமத்தின் வகைகள்:
(i) ஓய்வில் நிலைமம்
(ii) இயக்கத்தில் நிலைமம்
(iii) திசையில் நிலைமம்
21.
1. புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
2. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:

3. A மற்றும் B என்ற இருபொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
4. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசைவேகங்களாக கொள்வோம்.
5. பொருள் A னது, B ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம்.
6. (u1 > u2) 't' என்ற கால இடைவெளியில் பொருள் A ஆனது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
7. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் V1 மற்றும் V2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
8. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
9. B யின் மீது A செயல்படுத்தும் விசை FA = m2 (v2 - u2)/t அதேபோல் A யின் மீது B செயல்படுத்தும் விசை FB = m1 (v1 - u1)/t
11. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி A ன் மீது செயல்படும் விசையானது B மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
FB = - FA
m1 (v1 - u1)/t = - m2 (v2 - u2)/t
m1 v1+ m2 v2 = m1u1 + m2 u2
12. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் ஏதும் இல்லாதபோது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
13. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.
22.
நியூட்டனின் முதல் விதி:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
23.
இரு கோள்களின் நிறை விகிதம் M1 : M2 = 2 : 5
ஆர விகிதம் R1 : R2 = 4 : 7
ஈர்ப்பு முடுக்க விகிதம் g1 : g2 = ?
g = \(\frac { GM }{ { R }^{ 2 } } \)
g1 = \(\frac { GM_1 }{ { R }_{ 1 }^{ 2 } } ;{ g }_{ 2 }=\frac { GM_2 }{ { R }_{ 2 }^{ 2 } } \)
\(\frac{\mathrm{g}_1}{\mathrm{~g}_2}=\frac{\frac{\mathrm{GM}_1}{\mathrm{R}_1{ }^2}}{\frac{\mathrm{GM}_2}{\mathrm{R}_2{ }^2}} \Rightarrow \frac{\mathrm{g}_1}{\mathrm{~g}_2}=\frac{\mathrm{M}_1}{\mathrm{M}_2} \times \frac{\mathrm{R}_2{ }^2}{\mathrm{R}_1{ }^2}\)
\(= \frac { 2 \times 7 \times 7 } { 5 \times 4 \times 4 } = \frac { 49 }{ 40 }\)
g1 : g2 = 49 : 40
24.
( )
நேர்க்கோட்டு உந்தமாறா விதிப்படி, துப்பாக்கி சுடுவதற்கு முன் உள்ள நேர்க்கோட்டு உந்தம் = துப்பாக்கி சுடுவதற்கு பின் உள்ள நேர்க்கோட்டு உந்தம்.
25.
( )
தோற்ற எடை அதிகரிக்கும்
26.
( )
இரு வண்டிகளின் மொத்த உந்தம் மாறாது
27.
( )
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி F =ma
அதிக விசை செலுத்தப்படும்போது அதிக முடுக்கமடையும்.
28.
இழுத்தல் அல்லது தள்ளுதல்
29.
GM\(\frac { m }{ R^{ 2 } } \)
30.
FB = -FA
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards