10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
மின்னோட்டவியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு கம்பியின் மின்தடை r ஓம் எனில் கம்பியின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்போது அதன் மின்தடை என்ன?
r
2r
4r
\(\frac{r}{2}\)
2.
கிலோவாட் மணி ஏதன் அலகு
மின்திறன்
மின்னழுத்த வேறுபாடு
விசை
மின்ஆற்றல்
3.
ஒரு தொடர் இணைப்புச் சுற்றில் உள்ள மூன்று மின்தடைகளின் மதிப்பு 140,250 மற்றும் 220. மொத்த மின்தடை _____
330
610
720
ஏதுமில்லை
4.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
5.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
6.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
7.
ஒன்றுக்கு மேற்பட்ட மின்தடைகளின் தொகுப்புக்கள் மின் சுற்றுகளோடு இணைக்கப் பட்டிருந்தால் எதற்கு _____ என பெயர்.
8.
_____ உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி செல்லும்.
9.
LED என்பதன் விரிவாக்கம் _______.
10.
வீடுகளில் ______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.
11.
ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _______ பாய்ந்து செல்லாது.
12.
ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1000 கிலோ வாட் மணிக்கு சமமாக இருக்கும்.
13.
திறன் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
14.
மின்இழை
15.
மின்தடை , R
16.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | மின்னோட்டம் | அ) | வோல்ட் |
| 2) | மின்னழுத்த வேறுபாடு | ஆ) | ஓம் மீட்டர் |
| 3) | மின்தடை எண் | இ) | வாட் |
| 4) | மின்திறன் | ஈ) | ஜூல் |
| 5) | மின்னாற்றல் | உ) | ஆம்பியர் |
17.
மின்திறனின் அலகு யாது? வரையறு.
18.
ஓம் விதி வரையறு.
19.
மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
20.
100 வாட் மின் திறனுள்ள ஒரு மின்விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இது போல நான்கு 60 வாட் மின் விளக்கு தினமும் 5 மணிநேரம் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றலை கிலோ வாட் மணி அலகில் கணக்கிடு.
21.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (படம் தேவையில்லை)
22.
23.
கூற்று: ஒரு பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ள மின் சாதனங்களின் மொத்த திறன் பயனீடு தனித்தனி திறன்களின் கூடுதலுக்கு சமம்.
காரணம்: எலக்ட்ரான்கள் உயர் அழுத்தத்திலிருந்து தாழ் அழுத்தத்திற்கு செல்லும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது
24.
கூற்று: வீடுகளுக்கான மின்சுற்றில் மூன்றாவது கம்பியாக புவித்தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும்.
காரணம்: ஆபத்தான மின்னோட்டம் புவித்தொடுப்பு இணைக்கப்பட்டிருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியல்ல.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
25.
H:I2Rt : ______ : VI
26.
ஆம்பியர் : மின்னோட்டம் : ______ மின்னழுத்தம்.
27.
தொடரிணைப்பு : உயர்மின்தடை : பக்கஇணைப்பு: _____
1.
(c)
4r
2.
(d)
மின்ஆற்றல்
3.
(a)
330
4.
(c)
மின் ஆற்றல்
5.
(c)
ஓம்
6.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
7.
( )
மின்தடையின் குழுமம்
8.
( )
மின்னோட்டம்
9.
( )
Light Emitting Diode
10.
( )
பக்க இணைப்பு
11.
( )
மின்னோட்டம்
12.
தவறு.
சரியான விடை: ஒரு யூனிட் மின்னாற்றல் என்பது 1 கிலோவாட் மணிக்கு சமமாக இருக்கும்.
13.
தவறு.
சரியான விடை: மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தம் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை ஓம் விதி விளக்குகிறது.
14.
டங்ஸ்டன்
15.
\(\frac { V }{I } \)
16.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| உ | அ | ஆ | இ | ஈ |
17.
மின் திறனின் SI அலகு வாட். ஒரு வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டில், ஒரு ஆம்பியர் மின்னோட்டத்தில் செயல்படும் மின்கருவி பயன்படுத்திக் கொள்ளும் மின்திறன் ஒரு வாட் ஆகும்.
P =1 வோல்ட் x 1 ஆம்பியர் =1 வாட்
நடைமுறையில் மின் திறனின் பெரிய அளவு அலகாக கிலோ வாட் பயன்படுத்தப்படுகிறது.
18.
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
V = IR
19.
மின்னழுத்தம்:
ஒரு புள்ளியில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர்மின்னூட்டத்தை முடிவில்லா தொலைவில் இருந்து மின்விசைக்கு எதிராக அப்புள்ளிக்கு கொண்டு வர செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு வோல்ட்.
மின்னழுத்த வேறுபாடு:
இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு புள்ளிக்கு ஓரலகு நேர்மின்னூட்டத்தை மின் விலக்கு விசைக்கு எதிராக நகர்த்த செய்யப்படும் வேலை என வரையறுக்கப்படுகிறது. இதன் அலகு வோல்ட்.
20.
மின்விளக்கின் திறன் = 100 வாட் = \(\frac{100}{1000}\) = 0.1 கிலோ வாட் மணி
மின்விளக்கு நாளொன்றில் பயன்படுத்தப்படும் நேரம் = 5 மணி
நான்கு 60 வாட் மின் விளக்கு பயன்படுத்தப்படும் நேரம் = 5 மணி
60 வாட் = \(\frac{60}{1000}\) = 0.06 kW
60 வாட் பல்புகளின் எண்ணிக்கை = 4
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றல் = ?
சூத்திரம்:
ஆற்றல் = திறன் x காலம்
i) 100 வாட் மின்திறன் 5 மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் நுகரும் ஆற்றல் = 0.1 \(\times\) 5
= 0.5 கிலோ வாட் மணி
நான்கு 60 வாட் மின்விளக்கு 5 மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் நுகரப்பட்ட மின்னழுத்த ஆற்றல்
= 4 \(\times\) 0.06 \(\times\) 5
= 1.2 கிலோ வாட் மணி
மொத்த ஆற்றல் = 1.2 + 0.5
= 1.7 கிலோ வாட் மணி
ஜனவரி மாதத்தில் நுகரப்பட்ட மின்னழுத்தம் = 31 \(\times\) 1.7 = 52.7 கிலோ வாட் மணி
21.
வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன.
இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும்.
கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.
நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும்.
இவ்விரு கம்பிகளும் வாட்மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன.
மின்னோட்ட கம்பி மின் உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.
மின்னளவிப் பெட்டியிலிருந்து வரும் கம்பியானது முதன்மைச் சாவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சாவியானது தேவைப்படும் போது மின்னோட்டத்தை நிறுத்துவதற்கு பயன்படுகிறது.
முதன்மை சுற்றிலிருந்து வரும் மின்னோட்ட கம்பிகள் வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் தனித்தனிச் சுற்றுகளுக்குத் திறனை வழங்கும்.
இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மின்பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15 A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.
22.
23.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
24.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்.
25.
P
26.
வோல்ட்
27.
குறைவான தடை
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards