10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
அணுக்கரு இயற்பியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
_______ ஓர் அலகு எதிர் மின் சுமை உடைய கதிர்கள்.
ஆல்பா
பீட்டா
காமா
ஹைட்ரஜன்
2.
பிளவுபடக்கூடிய தனிமம் எது?
U238
Th232
Pu240
U235
3.
காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் _____.
கல்பாக்கம்
கூடங்குளம்
மும்பை
இராஜஸ்தான்
4.
புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு பிளவு
ஆல்பாச் சிதைவு
அணுக்கரு இணைவு
பீட்டாச் சிதைவு
5.
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.
காரீய ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
6.
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை ____.
கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
திசுக்களைப் பாதிக்கும்
மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும்
அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
7.
மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் _______ எனக் கருதப்படுகிறது.
தூண்டப்பட்ட கதிரியக்கம்
தன்னிச்சையான கதிரியக்கம்
செயற்கை கதிரியக்கம்
அ) மற்றும் இ) இரண்டும்
8.
வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _____.
9.
அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது _______ K என்ற அளவில் இருக்கும்.
10.
_______ அதிக ஊடுருவு திறன் கொண்டவை.
11.
ICRP என்பதன் விரிவாக்கம் _____.
12.
பாசிட்ரான் என்பது ஓர் ______.
13.
ஒரு ரான்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ________ சிதைவுக்குச் சமமாகும்.
14.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
15.
அணுக்கரு பிளவு வினையில் உருவாகும் சராசரி ஆற்றலை எழுதுக.
16.
இயற்கைக் கதிரியக்கத்தின் போது வெளியாகும் மின்காந்த கதிரின் பெயரை எழுதுக.
17.
கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக.
18.
பிட்ச் பிளண்ட் (pitch blende) தாதுப் பொருளில் உள்ள கதிரியக்கப் பொருள் யாது?
19.
அணுக்கரு உலையின் வகைகள் யாவை?
20.
தொடர்வினையை விளக்குக.
21.
கியூரி - வரையறு.
22.
விண்மீன் ஆற்றல் என்றால் என்ன?
23.
வரையறு: ராண்ட்ஜன்
24.
வரையறு: மாறுநிலை நிறை
25.
இயற்கையில் தனிமம் போரான் என்பது போரான் – 10 (5 புரோட்டான்கள் + 5 நியூட்ரான்கள்) மற்றும் போரான் – 11 (5 புரோட்டான்கள் + 6 நியூட்ரான்கள்) ஆகியவற்றின் கலவையாக உள்ளது. B –10 ன் சதவீத பரவல் 20 ஆகவும் B – 11 ன் சதவீத பரவல் 80 ஆகவும் உள்ளது. எனில் போரானின் சராசரி நிறை கீழ்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
26.
மருத்துவத் துறையில் கதிரியக்க ஐசோடோப்புகளின் பங்கினை விவரி.
1.
(b)
பீட்டா
2.
(d)
U235
3.
(a)
கல்பாக்கம்
4.
(c)
அணுக்கரு இணைவு
5.
(c)
காரீயம்
6.
(c)
மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும்
7.
(d)
அ) மற்றும் இ) இரண்டும்
8.
( )
பாஸ்பரஸ் 32
9.
( )
107 முதல் 109
10.
( )
காமா கதிர்கள்
11.
( )
International Commission on Radiological Protection
12.
( )
நேர்மின்சுமை கொண்ட எலக்ட்ரானின் எதிர்துகள்
13.
( )
0.000258 C/kg
14.
பெக்கரல்
15.
ஒரு அணுக்கரு பிளவில் உருவாகும் சராசரி ஆற்றல்
200 MeV = 3.2 x 10-11J
16.
காமா கதிர்கள்
17.
போரான், அலுமினியம்
18.
யுரேனியம்
19.
உற்பத்தி உலை, வேக உற்பத்தி உலை, அழுத்த நீர்ம உலை, கன அழுத்த நீர்ம உலை, கொதி நீர் உலை, குளிரூட்டப்பட்ட நீர்ம உலை, குளிரூட்டப்பட்ட வாயு உலை, அணுக்கரு இணைவு உலை மற்றும் வெப்ப அணுக்கரு உலை ஆகியவை உலக அளவில் பயன்பாட்டில் உள்ள சில அணுக்கரு உலைகளாகும்.
20.
(i) யுரேனியம்(U235) அணுக்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது பிளவுக்குட்பட்டு மூன்று நியூட்ரான்கள் வெளியேற்றப்படுகின்றன.
(ii) இந்த மூன்று நியூட்ரான்களும் அடுத்து வரும் மூன்று யுரேனியம் உட்கரு பிளவிற்குக் காரணமாக அமைந்து ஒன்பது நியூட்ரான்களைத் தருகின்றன.
(iii) இந்த ஒன்பது நியூட்ரான்கள் உருவாகக் காரணமாகின்றன.
(iv) இதேபோல் இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே இது 'தொடர்வினை' என்றழைக்கப்படுகிறது. தொடர்வினையில் தன் பரவுதல் நிகழ்வின் மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்கத் தொடர்வரிசையில் மிக வேகமாக பெருக்கமடைகின்றது.
21.
(i) இது கதிரியக்கத்தின் தொன்மையான அலகாக்கும். ஒரு கதிரியக்க பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 x 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால், அது ஒரு கியூரி எனப்படும். இது தோராயமாக 1 கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமாகும்.
(ii) 1 கியூரி = ஒரு வினாடி நேரத்தில் 3.7 x 1010 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு.
22.
சூரியன் மற்றும் விண்மீன்களின் உள் அடுக்கில் அணுக்கரு இணைவு நடைபெறுவதால் அதிக அளவு ஆற்றல் உருவாகிறது. இது விண்மீன் ஆற்றல் எனப்படும்.
23.
ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 × 10-4 கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும்.
24.
தொடர் வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை மாறுநிலை நிறை என்கிறோம்.
25.
போரானின் அணு நிறை
\(=\left(10 \times \frac{20}{100}\right)+\left(11 \times \frac{80}{100}\right)\)
= (10 × 0.20) + (11 × 0.80)
= 2 + 8.8
= 10.8 amu
26.
கதிரியக்க ஐசோடோப்புகள் மருத்துவத் துறையில் இரண்டு வகைகளில் வகைப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
(1) நோயறிதல்
(2) கதிரியக்கச் சிகிச்சை
ரத்தச் சுழற்சியில் உள்ள குறைபாடுகளை அறியவும், எலும்புகளில் வளர்சிதை மாற்றக் குறைபாட்டினை அறியவும், மூளையில் உள்ள கட்டிகளை அறியவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. ஹைட்ரஜன், கார்பன், நைட்ரஜன் சல்பர் போன்ற சில கதிரியக்க ஐசோடோப்புகள் நோய்களைக் கண்டறியப் பயன்படுகின்றன.
(i) கதிரியக்கச் சோடியம்-24(Na24) இதயத்தை சீராகச் செயல்பட வைக்க உதவுகிறது.
(ii) கதிரியக்க அயோடின்-131(I 31) முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவுகிறது.
(iii) இரும்பின் ஐசோடோப்பான இரும்பு -59(Fe59) ரத்தசோகையை அடையாளம் காணவும் குணப்படுத்தவும் உதவுகிறது.
(iv) கதிரியக்கப் பாஸ்பரஸ்-32 (P32) தோல் நோய்ச் சிகிச்சையில் பயன்படுகிறது.
(v) கதிரியக்கக் கோபால்ட்-60(Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198(Au198) தோல் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
(vi) அறுவைச் சிகிச்சைக்குப் பின் பயன்படும் சாதனங்களில் காணப்படும் நுண்கிருமிகளைக் கதிரியக்கத்தின் மூலம் நீக்கி தூய்மை செய்யப்படுகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards