10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
மைட்டோகாண்ட்ரியாவில் காணப்படும் டென்னிஸ் ராக்கட் வடிவ துகள்களின் பெயர் ________ ஆகும்.
போரின்
ATP
ஆக்ஸிசோம்
கிரானா
2.
மைட்டோகாண்ட்ரியாவை கண்டறிந்தவர்________ ஆவார் .
சாக்
கெல்வின்
மெல்வின்
கோலிக்கர்
3.
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATP யானது ADP யாக மாறும் போது
CO2 நிலை நிறுத்தப்படும் போது
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
இவை அனைத்திலும்
4.
காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது ______.
கார்போஹைட்ரேட்
எத்தில் ஆல்கஹால்
அசிட்டைல் கோ.ஏ
பைருவேட்
5.
உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?
வேர்
தண்டு
இலைகள்
மலர்கள்
6.
7.
நிறமற்ற கணிகம் _______ என அழைக்கப்படுகிறது.
8.
புறணியின் கடைசி அடுக்கு _________ எனப்படும்.
9.
வாஸ்குலார் திசுத் தொகுப்பில் ________ காணப்படவில்லை என்றால் மூடிய ஒருங்கிணைந்த வாஸ்குலார் கற்றை எனப்படும் .
10.
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_____.
11.
ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன்_______லிருந்து கிடைக்கிறது.
12.
சைலமும் புளோயமும் ஒரே ஆரங்களில் காணப்படும் வாஸ்குலார் கற்றை_______.
13.
புறணி இதனிடையே உள்ளது ________
14.
புளோயம்
15.
சைலம்
16.
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
17.
கேம்பியம்
18.
புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
19.
வினை மையம் என்பது யாது?
20.
தரச அடுக்கு என்பது யாது?
21.
வாஸ்குலார் திசுத் தொகுப்பினை வகைப்படுத்து.
22.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
23.
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை என்றால் என்ன?
24.
அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
ஆ] அதன் வகைகளைக் கூறு.
இ] உதாரணம் தருக.
25.
பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.
26.
27.
ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.
28.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
29.
இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
30.
1.
(c)
ஆக்ஸிசோம்
2.
(d)
கோலிக்கர்
3.
(c)
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
4.
(b)
எத்தில் ஆல்கஹால்
5.
(b)
தண்டு
6.
(d)
7.
( )
வெளிர் கணிகம்
8.
( )
அகத்தோல்
9.
( )
கேம்பியம்
10.
( )
மைட்டோகாண்ட்ரியா
11.
( )
H2O (நீர்)
12.
( )
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
13.
( )
எபிபிளமா மற்றும் அகத்தோல்
14.
இரண்டாம் நிலை வளர்ச்சி
15.
உணவு கடத்துதல்
16.
டிரசீனா
17.
நீரைக் கடத்துதல்
18.
பெரணிகள்
19.
ஒளிச்சேர்க்கையில் பச்சையம் a முதன்மை நிறமியாகும். இவை சூரிய ஆற்றலை அதிகம் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டதாகும். இந்த நிறமியானது சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது. ஆகையால் இது வினை மையம் என்று அழைக்கப்படுகிறது.
20.
புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும், இது ஓரடுக்கு பீப்பாய் வடிவ செல்களால் ஆனது. இதில் தரசம் காணப்படுவதால் தரச அடுக்கு எனவும் அழைக்கப்படுகிறது.
21.
(i) ஆரப்போக்கு அமைந்தவை
(ii) ஒன்றிணைந்தவை
(iii) சூழ்ந்தமைந்தவை
22.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து (CO2) கிடைக்கிறது.
23.
சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் ஒரு கற்றையில் அமைந்துள்ளன. இவற்றில் இருவகைகள் உள்ளன.
1. ஒருங்கமைந்தவை
2. இருபக்க ஒருங்கமைந்தவை
24.
அ) இது ஒரு வாஸ்குலார் திசுத் தொகுப்பு.
ஆ) இது சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையாகும். இவை இரு வகைப்படும். அவை:
1. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
2. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
நாம் படத்தில் பார்ப்பது புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை. ஏனெனில், புளோயம் கற்றை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
இ) எ.கா. பாலிபோடியம்
25.
பச்சைய நிறமிகளை (Chlorophyll) கொண்டுள்ள கணிகம் பசுங்கணிகம் 2 - 10 மைக்ரோமீட்டர் விட்டமும் 1 - 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பாகும்.
(i) உறை: பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
(ii) ஸ்ட்ரோமா: சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி உள்ளது. இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.
(iii) தைலக்காய்டு: ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பை போன்ற தட்டு வடிவ அமைப்பு காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர். பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது.
(iv) கிரனா: பல கிரானாக்கள் ஒன்றோடொன்று கிரானா லேமெல்லா அல்லது ஸ்ட்ரோமா லேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது. தைலக்காய்டில் ஒளிச்சேர்க்கைக்கான நிறமிகள் உள்ளன.
26.
1. ஒளிச்சார்ந்த வினை தைலக்காய்டு (கிரானா) பகுதியில் நடைபெறுகிறது.
2. ஒளிசாரா வினை (கால்வின் சுழற்சி) ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
27.

28.
தற்சார்பு ஊட்ட உயிரிகளான ஆல்காக்கள், தாவரங்கள், பச்சை நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்தி கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை எனப்படும்.
இது செல்லில் பசுங்கணிகங்களில் நடைபெறுகிறது.
29.
1. மேல்புறத் தோலுக்கும், கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும்.
2. இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுக்களில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன.
3. ஒருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது.
4. செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.
5. பசுங்கணிகம் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
6. ஒழுங்கற்ற செல்கள் வாயுப் பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.
30.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards