10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 10th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
வெவ்வேறு தொலைவுகளில் பொருள் வைக்கப்படும் போது குவி லென்சினால் உருவாக்கப்படும் பிம்பங்கள் குறித்து படத்துடன் விவரி.
2.
ஒரு வீட்டின் இரு அறைகளில் வெவ்வேறு விதமான பல்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அதிக ஒளியுடன் எரிகிறது. மற்றொன்று மங்கலான ஒளியுடையதாக இருக்கிறது. இதன் காரணம் என்ன? இரண்டாவதை இரவு விளக்காக கூட கருதலாம்.
3.
வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.
4.
மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.
5.
ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.
6.
ஒலி மூலமும், கேட்குநரும் V/10 வேகத்தில் ஒருவரையொருவர் நோக்கி நகர்கின்றனர். இங்கு Vஎன்பது ஒலியின் வேகம் ஆகும். ஒலி மூலத்தில் வெளிப்படும் ஒலியின் அதிர்வெண் ‘f’ எனில்,கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
7.
ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30o எனில் விலகு கோணம் என்ன?
8.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
9.
10.
இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
11.
12.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையைக் கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
13.
மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc-ஐ கணக்கிடுக.
14.
10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
15.
உந்தமாறாக் கோட்பாட்டை கூறி அதனை மெய்ப்பிக்க.
16.
இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 மீ.வி-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
17.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?
18.
நாம் பொருட்களை காண்பது _______ நிகழ்வினால் ஆகும்.
எதிரொளிப்பு
ஒளிவிலகல்
ஊடுருவல்
ஒளிச்சிதறல்
19.
ஒரு 110w, 220w பல்பு அளிக்கும் மின்னோட்டம்
2A
440 A
0.5 A
5.5 A
20.
சார்லஸ் விதிப்படி
P α \(\frac{1}{V}\)
V α T
V α n
மேற்கண்ட அனைத்தும்
21.
இறுக்கங்கள் என்பவை
துகள்கள்
அதிர்வுகள்
வெற்றிடம்
அதிக அழுத்தம்
22.
ஒரு பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் தன் கால் தசைகளால் கடினமான உந்தித்தள்ளி வேகமாக நகரத் தொடங்குகிறார். இது
நியூட்டனின் முதல் விதி
நியூட்டனின் இரண்டாம் விதி
நியூட்டனின் மூன்றாம் விதி
அழிவின்மை விதி
23.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
24.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
330 மீவி-1
165 மீவி-1
330 x \(\sqrt{2}\) மீவி-1
320 x \(\sqrt{2}\) மீவி-1
25.
கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?
மின்தடை எண்
மின் கடத்து திறன்
மின் ஆற்றல்
மின் திறன்
26.
பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.
3.81 J மோல்–1 K–1
8.03 J மோல்–1 K–1
1.38 J மோல்–1 K–1
8.31 J மோல்–1 K–1
27.
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
28.
நுண்நோக்கிகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
29.
ஒரு கடத்தியில் மின்னோட்டம் எவ்வாறு பாயும்?
30.
வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை?
31.
வரையறு : 1 டைன்.
32.
எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.
33.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?
34.
மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
35.
இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயு – வேறுபடுத்துக.
36.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
37.
நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறு.
38.
ஒரு குவி லென்சின் திறன் +6D மற்றும் ஒரு குழி லென்சின் திறன் -4D சேர்த்து வைக்கப்படுகிறது. இரு லென்சுகளின் கட்டமைப்பின் திறன் யாது?
39.
வோல்ட் வரையறு.
40.
கிலோ கலோரி -வரையறு.
41.
20 g துப்பாக்கி குண்டு 300 m/s ல் 2 cm க்கு எலும்பினைத் துளைத்து சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது. அக்குண்டினால் செலுத்தப்பட்ட சராசரி விசையைக் கணக்கிடுக.
42.
10o C-ல் நீங்கள் 0.274 விநாடி நேரத்தில் ஓர் எதிரொலியை கேட்டால், அதன் எதிரொலிக்கும் பரப்பு எவ்வளவு தொலைவில் இருக்கும்?
43.
கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை அடைய 1 விநாடி எடுத்துக் கொள்கிறது. நீரில் ஒலியின் வேகம் 1450 மீ.வி-1 எனில் கடலின் ஆழம் என்ன?
44.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றில் எந்த வகை மின்சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன ?
45.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
1.
(i) பொருள் ஈறிலாத் தொலைவில் உள்ள போது:
பொருள் ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, முதன்மைக் குவியத்தில் மெய்ப்பிம்பம் உருவாக்கப்படுகின்றது. பிம்பத்தின் அளவு பொருளின் அளவைவிடப் பலமடங்கு சிறியதாக இருக்கும்.
(ii) பொருள் C-க்கும் அப்பால் வைக்கப்படும் போது(>2F)
பொருளானது வளைவு மையத்திற்கு அப்பால் வைக்கப்படும் போது, சிறிய தலைகீழான, மெய்ப் பிம்பமானது லென்சின் மறுபுறம் வளைவு மையத்திற்கும், முதன்மைக் குவியத்திற்கும் இடையே தோன்றுகிறது.
(iii) பொருள் C-ல் வைக்கப்படும் போது
பொருளொன்று குவி லென்சின் வளைவு மையத்தில் வைக்கப்படும் போது, அதே அளவிலான, தலைகீழான, மெய்பிம்பம் லென்சின் மற்றொரு பக்கத்தின் மையத்தில் கிடைக்கிறது.
(iv) பொருள் C-க்கும் F-க்கும் இடையே வைக்கப்படும் போது:
பொருளொன்று குவி லென்சின் வளைவு மையத்திற்கும், குவியத்திற்கும் இடையே வைக்கப்படும் போது அளவில் பெரிய, தலைகீழான, மெய்ப்பிம்பம் லென்சின் மறுபுறத்தில் வளைவு மையத்திற்கு அப்பால் உருவாகிறது.
(v) பொருள் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது
பொருளொன்று, குவி லென்சின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்படும் போது அளவில் பெரிய தலைகீழான, மெய்ப்பிம்பம் ஈறிலாத் தொலைவில் உருவாக்கப்படுகின்றது.
(vi) பொருள் முதன்மை குவியம் F மற்றும் ஒளியியல் மையம் O ஆகியவற்றுக்கு இடையே வைக்கப்படும் போது
பொருளொன்று, குவி லென்சின் முதன்மைக் குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே வைக்கப்படும் போது, அளவில் பெரிய, நேரான மாயப்பிம்பத்தைப் பொருள் இருக்கும் அதே பக்கத்தில் உருவாக்குகிறது.
2.
இரு பல்புகளும் செல்லக்கூடிய மின்னோட்டத்தால் உயர்மின் தடையுடைய பல்பானது திறன் குறைவாக இருக்கும். எனவே அது மங்கலான ஒளிர்வினை கொண்டிருக்கும். குறைவான மின்தடை கொண்ட பல்பானது திறன் அதிகமாக இருக்கும். எனவே அதிக ஒளியுடன் எரிகிறது.
திறன், மின்தடையுடன் எதிர் விகிதத்தில் இருக்கும்.
\(\therefore P={ \frac { { V }^{ 2 } }{ R}}\) or P=V x I
\(V\times \left( \frac { V }{ R } \right) =\frac { V^{ 2 } }{ R } \).
3.
(i) ஒரு கோப்பையில் உள்ள சூடான பாலினை சிறிது நேரம் மேசையின் மீது வைத்தால் என்ன நிகழும்? சூடான பாலின் வெப்பம் சிறிது நேரத்திற்குப் பிறகு குறையும்.
(ii) இதே போல் ஒரு பாட்டிலில் உள்ள குளிர்ச்சியான நீரினை சிறிது நேரம் மேசையின் மீது வைக்கும்போது அதனுடைய வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்.
(iii) சூடான பாலிலிருந்து ஆற்றலானது சுற்றுப்புறத்திற்குப் பரவுகிறது. அடுத்த நிகழ்வில் ஆற்றல் சுற்றுப்புறத்திலிருந்து நீர் உள்ள பாட்டிலுக்கு பரவுகிறது. இந்த ஆற்றலையே வெப்ப ஆற்றல் எனலாம்.
(iv) எனவே சூடான பொருள் குளிர்ச்சியான பொருளிற்கு அருகில் வைக்கப்பட்டால், சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளிற்கு பரிமாற்றம் அடையும். ஆற்றலே வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது .
(v) எனவே, வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ஆற்றல், இது இரு வேறு வெப்ப நிலையில் உள்ள இரண்டு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக 'வெப்பம்' எனவும் அழைக்கலாம்.
(vi) ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்த பொருள் வெப்பம் அடைவதற்கும் வெப்ப ஆற்றல் ஓர் காரணியாக செயல்படுகிறது.
(vii) வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்று பெயர்.
(viii) வெப்பக் கடத்தல். வெப்பச் சலனம் மற்றும் வெப்பக் கதிர்வீசல் ஆகிய ஏதாவது ஒரு வழிகளில் வெப்பப்பரவல் நடைபெறுகிறது.
(ix) வெப்பம் என்பது ஓர் ஸ்கேலார் அளவு ஆகும். வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜூல் (J) ஆகும்.
(x) வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. இதுபோல, அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது.
(xi) இதனால் சில நேரங்களில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது குளிர்வித்தல் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல நிகழ்வுகளில் குளிர்வித்தல் என்பதற்குப் பதிலாக வெப்பப்படுத்துதல் என்றே பயன்படுத்தப்படுகிறது.
(xii) ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும் போது, இரண்டு பொருள்களில் ஒன்றில் வெப்பநிலை குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்கிறது.
4.
| நிலை 1: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது. |
நிலை 2: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது. |
நிலை 3: மின்தூக்கி ஓய்வில் உள்ளது (a =0) முடுக்கம் சுழியாகும். |
நிலை 4: மின்தூக்கி புவி ஈர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது. (a=g) |
| R -W = Fதொ = ma R=W+ma R=mg+ma R=m(g+a) |
W-R=Fதொ=ma |
முடுக்கம் சுழியாகும் (a=0) W-R=Fதொ=0 R=W R=mg |
R=W-ma |
| R>W | R |
R=W | R=0 |
| தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட அதிகம். |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட குறைவு. |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடைக்கு சமம். | தோற்ற எடையின் மதிப்பு சுழியாகும். |
5.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ரா சோனா கிராபி கருவியல் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
(iv) இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
(v) ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
(vi) ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
6.
ஒலி மூலமும், கேட்குநரும் V/10 வேகத்தில் ஒருவரையொருவர் நோக்கி நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணானது
\(n'=\left( \frac { v+{ v }_{ 1 } }{ v-{ v }_{ s } } \right) .n\)
\(n'=\left( \frac { v+\frac { v }{ 10 } }{ v-\frac { v }{ 10 } } \right) .n\)
\(n'=\frac { 11 }{ 9 } .f\)
=1.22 f
7.
தரப்பட்டவை : \({ \mu }_{ 1 }=1.0;{ \mu }_{ 2 }=1.5;i={ 30 }^{ o }\)
ஸ்நெல் விதிப்படி,
\(\frac{\sin i}{\sin r}=\frac{\mu_{2}}{\mu_{1}} \)
\(\mu_{1} \sin i=\mu_{2} \sin r \)
\((1.0) \cdot \sin 30^{\circ}=1.5 \sin \mathrm{r} \)
\(1 \times \frac{1}{2}=1.5 \sin \mathrm{r} \)
\(\sin \mathrm{r}=\frac{1}{2 \times 1.5}=\frac{1}{3}=(0.333) \)
\(\mathrm{r}=\sin ^{-1}(0.333) \)
\(\mathrm{r}=19.45^{\circ} \)
8.
அடர்த்தியின் விளைவு:
1. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் விகிதில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
\(V\propto \sqrt { \cfrac { 1 }{ d } } \)
வெப்பநிலையின் விளைவு:
வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. \(V\alpha \sqrt { T } \) வெப்பநிலை T°C ல் திசைவேகமானது.
VT = (v0 + 0.61 T) ms-1
இங்கு v0 என்பது 0°C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு v0 = 331 மீ.வி-1 எனவே ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீ.வி-1 அதிகரிக்கிறது.
ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு:
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
9.
10.
மின்திறன் \(P=\frac { { V }^{ 2 } }{ R } \)
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக் கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
11.
12.
பரப்பில் ஏற்படும் மாற்றம் ΔA = 11 - 10 = 1மீ2
உண்மையான பரப்பு Ao = 10 மீ2
தொடக்க வெப்பநிலை T1= 90 K
வெப்ப விரிவு குணகம் αA = 0.0021 K-1
இறுதி வெப்பநிலை T2 = ?
\(\frac{\Delta \mathrm{A}}{\mathbf{A_o}_{}} =\alpha_{A} \Delta \mathrm{T} \)
\(\frac{\mathrm{lm}^{2}}{10 \mathrm{~m}^{2}} =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(0.1 =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(\frac{0.1}{0.0021} =\mathrm{T}_{2}-90 \)
\(\mathrm{~T}_{2} =\frac{0.1}{0.0021}+90 \)
\(\mathrm{~T}_{2} =137.61 \mathrm{~K} \)
காப்பர் தண்டின் இறுதி வெப்பநிலை = 137.61 K
13.
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4 P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ.மீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின் படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
\({ v }_{ 2 }=\frac { { P }_{ 1 } }{ { P }_{ 2 } } \times { v }_{ 1 }\)
\(=\frac { P }{ 4P } \times { 20 }\) செ.மீ3
V2 = 5 செ.மீ3
14.
குவியத்தொலைவு (f) - 10 செ.மீ.
பொருளின் தூரம் (u) = - 20 செ.மீ.
பிம்பம் தோன்றும் இடம் (v) = ?
\(\begin{aligned}
\frac{1}{f}=\frac{1}{v}-\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{f}+\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{10}+\frac{1}{-20}=\frac{1}{10}-\frac{1}{20}=\frac{2-1}{20}=\frac{1}{20}
\end{aligned}\)
பிம்பம் தோன்றும் இடம் = 20 செ.மீ. தொலைவில்
பிம்பத்தின் தன்மை
மெய்ப்பிம்பம், தலைகீழான, பொருளின் அளவிலேயே, மற்றொரு பக்கத்தில் வளைவு மையத்தில் பிம்பம் கிடைக்கிறது.
15.
1. புற விசை ஏதும் தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
2. நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை கீழ்கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:

3. A மற்றும் B என்ற இருபொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும் m2 என்க. அவை நேர்க்கோட்டில் பயணிப்பதாக கொள்வோம்.
4. u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசைவேகங்களாக கொள்வோம்.
5. பொருள் A னது, B ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக கருதுவோம்.
6. (u1 > u2) 't' என்ற கால இடைவெளியில் பொருள் A ஆனது, B மீது மோதலை ஏற்படுத்துகிறது.
7. மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே நேர்க்கோட்டில் V1 மற்றும் V2 திசைவேகத்தில் பயணிப்பதாக கொள்வோம்.
8. நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
9. B யின் மீது A செயல்படுத்தும் விசை FA = m2 (v2 - u2)/t அதேபோல் A யின் மீது B செயல்படுத்தும் விசை FB = m1 (v1 - u1)/t
11. நியூட்டனின் மூன்றாம் விதிப்படி A ன் மீது செயல்படும் விசையானது B மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்.
FB = - FA
m1 (v1 - u1)/t = - m2 (v2 - u2)/t
m1 v1+ m2 v2 = m1u1 + m2 u2
12. மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில் வெளிவிசையின் தாக்கம் ஏதும் இல்லாதபோது, மோதலுக்கு பின் உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது.
13. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம் ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.
16.
நிறை விகிதம் = 3 : 4
m1 : m2 = 3 : 4
முடுக்கம் a2 = 12 மீ.வி-2
F = ma
F1 = m1a1 = 3a1
F2 = m2a2 = 4 x 12 = 48 N
F = F1 = F2
3a1= 48
a1 = \(\frac{48}{3}\) = 16 மீ.வி-2
தேவைப்படும் முடுக்கம் = 16 மீ.வி-2.
17.
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவிமையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் Rʹ = R + h
அவ் உயரத்தில் புவி ஈர்ப்பு முடுக்கம் g' = g/4
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம் = g’ = GMm/ (R’)2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g = GMm/ (R)2
\(\frac { g }{ g' } =\left( \frac { R' }{ R } \right) ^{ 2 }={ \left( \frac { R+h }{ R } \right) }^{ 2 }={ \left( 1+\frac { h }{ R } \right) }^{ 2 }\)
\(4=\left( 1+\frac { h }{ R } \right) ^{ 2 },\)
\(2=1+\frac { h }{ R } \)
h = R.
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் R' = R + h
h = R ஆதலால்
Rʹ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்கு தொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.
18.
(a)
எதிரொளிப்பு
19.
(c)
0.5 A
20.
(b)
V α T
21.
(d)
அதிக அழுத்தம்
22.
(b)
நியூட்டனின் இரண்டாம் விதி
23.
(c)
2f
24.
(c)
330 x \(\sqrt{2}\) மீவி-1
25.
(c)
மின் ஆற்றல்
26.
(d)
8.31 J மோல்–1 K–1
27.
(c)
சைக்கிள் பந்தயம்
28.
(i) நுண்ணோக்கிகள் என்பவை மிக நுண்ணிய பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவியாகும்.
(ii) இவை எளிய நுண்ணோக்கிகள் மற்றும் கூட்டு நுண்ணோக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
29.
ஒரு கடத்தியில் மின்னோட்டமானது உயர் மின் அழுத்தப்புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்தப்புள்ளிக்கு பாயும்.
30.
வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை
(i) பாயில் விதி
(ii) சார்லஸ் விதி
(iii) அவகேட்ரோ விதி
31.
1 கிராம் நிறையுடைய பொருளொன்றை 1 செ.மீ-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு 1 டைன் ஆகும்.
1 டைன் = 1 கி. செ.மீ-2
1 நியூட்டன் = 10 டைன்
32.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவி பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
33.
நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்றவற்றால் மீயொலியை உணர முடியும்.
34.
டங்ஸ்டனின் உருகுநிலை மிக அதிகம். ஆகவே அவை மின்னிழை விளக்குகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் மின் உருகு இழையானது குறைந்த உருகுநிலையை கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது.
35.
| இயல்பு வாயு | நல்லியல்பு வாயு |
| குறிப்பிட்ட கவர்ச்சி விசையினால் ஒன்றோடொன்று இடைவினை புரிந்து கொண்டிருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அடங்கிய வாயுக்கள் இயல்பு வாயுக்கள் எனப்படும். |
ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் நல்லியல்பு வாயுக்கள் என அழைக்கப்படும். |
36.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.
37.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது, அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்த்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
F = m x a
38.
குவி லென்சின் திறன் P =+6D
குழிலென்சின் திறன் P = -4D
கட்டமைப்பின் திறன் P=?
P=P1+P2=6-4=2D
P=2D
39.
(i) மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட் (V).
(ii) ஒரு கூலூம் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச்செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.
40.
ஒரு கிலோகிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 10C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கிலோ கலோரி என வரையறுக்கப்படுகிறது.
41.
கொடுக்கப்பட்டவை:
குண்டின் நிறை m =20 x 10-3 kg
தொடக்க திசைவேகம் u =300 m/s
இறுதி திசைவேகம் v =0
தொலைவு s = 2 cm
= 2 x 10-2 m
கண்டறிய:
குண்டினால் செலுத்தப்பட்ட விசை f=?
இயக்க விதி சமன்பாடுகளை பயன்படுத்த
v2=u2+2as
0=(300)2+2(a) x 2 x 10-2
a=\(\frac { (300)^{ 2 } }{ 4\times { 10 }^{ -2 } } =\frac { 9\times { 10 }^{ 4 } }{ 4\times { 10 }^{ -2 } } \)
a=-2.25 x 106 m/s2
a=2.25 x 106 m/s2
விசை F =ma
=20 x 10-3 x 2.25 x 106
=45 x 103 =4.5 x 104 N
42.
V=(Vo+0.61T) மீவி-1
=(331.3+0.61)=337.4
= (331.3+6.1)337.4 மீவி-1
D=V x t
D= 337.4 x 0.274
D = 92.45 மீ

43.
மீயொலி எடுத்துக் கொள்ளும் காலஅளவு = 1 வி
நீரின் ஒலியின் வேகம் = 1450 மீ.வி-1

=\(\frac{1450\times 1}{2}\)725 மீ.
44.
1. பக்க இணைப்பு வகை பயன்படுத்தப்படுகின்றன.
2. காரணம், பக்க இணைப்பில் ஒரு சாதனம் பழுதுபட்டாலும், மற்ற சாதனங்களுக்கு சமமான மின்னழுத்தம் அளிக்கப்பட்டு மற்ற சாதனங்கள் இயங்குகின்றன.
45.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards