10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Science Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.
2.
பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.
3.
200 K வெப்பநிலையில் எஃகுத் துண்டின் நீளம் 2மீ. 250 K ல் அதன் நீளம் 0.1மீ அதிகரிக்கிறது எனில், பரும வெப்ப விரிவு குணகத்தைக் காண்க.
4.
வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.
5.
நியூட்டனின் மூன்றாம் இயக்கவிதிக்கு எடுத்துக்காட்டுடன் தருக.
6.
ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.
7.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
8.
ஒரு ஒளிக்கதிரானது, வெற்றிடத்திலிருந்து ஒளிவிலகல் எண் 1.5 உடைய ஊடகத்திற்குள் செல்லும் போது படுகோணத்தின் மதிப்பு 30o எனில் விலகு கோணம் என்ன?
9.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
10.
11.
இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
12.
13.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3 ஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தைக் கணக்கிடுக.
14.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மி.லி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மி.லி-லிருந்து 48.5 மி.லி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மி.லி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
15.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாயப்படுத்துக.
16.
10 செ.மீ குவியத்தொலைவு கொண்ட குவிலென்சிலிருந்து 20 செ.மீ தொலைவில் பொருளொன்று வைக்கப்படுகிறது எனில் பிம்பம் தோன்றும் இடத்தையும், அதன் தன்மையையும் கண்டறிக.
17.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
18.
கீல் (keel) முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
19.
ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு
50
16.66
6.66
10
20.
மின் உருகு இழை
குறைந்த உருகுநிலை கொண்டது
உயர் மின்தடையுடையது
தாழ் மின்தடையுடையது
அ மற்றும் ஆ
21.
பின்வருவனவற்றில் வெப்பம் பரிமாற்றப்படுவதற்கான விரைவான முறை
வெப்பக்கடத்தல்
வெப்பச்சலனம்
வெப்பக்கதிர்வீசல்
மேற்கண்ட அனைத்தும்
22.
நியூட்டனின் ஈர்ப்பியல் விதி எதற்குப் பொருந்தும்
சிறிய பொருட்களுக்கு மட்டும்
தாவரங்களுக்கு மட்டும்
வடிவத்தைப் பொருத்து அல்லாமல் அனைத்துப் பொருட்களுக்கும்
சூரிய குடும்பத்திற்கு மட்டும்
23.
ஒலிக்கும் மணி அல்லது ட்ரம் இசைக்கருவி
மின்சாரத்தை உருவாக்குகின்றன.
எதிரொலியை உருவாக்குகின்றன.
அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.
ஏதுமில்லை
24.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக்கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்.
25.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
17 மீ
20 மீ
25 மீ
50 மீ
26.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
27.
மூலக்கூறுகளின் சராசரி ______ வெப்பநிலை ஆகும்
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
28.
விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது.
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
29.
நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?
30.
ஒரு கடத்தியில் மின்னோட்டம் எவ்வாறு பாயும்?
31.
திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவு யாது?
32.
இரட்டை விசைகள் அல்லது இரட்டை என்பது யாது?
33.
அடர்குறை மற்றும் அடர்மிகு ஊடகம் என்றால் என்ன?
34.
அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அதிர்வெண் என்ன?
35.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
36.
பாயில் விதியைக் கூறுக.
37.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
38.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
39.
தட்டக்குவி லென்சு, தட்டக்குழி லென்சு என்றால் என்ன?
40.
வீட்டில் உபயோகப்படுத்தும் அனைத்து மின்சாதனங்களும் மின் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுமா? ஏன்?
41.
2 கிகி நிறையுள்ள ஒரு பொருள் 40 ms-1 சீரான திசைவேகத்தில் ஓய்வில் உள்ள மற்றொரு பொருள் மீது மோதுகிறது. இருபொருள்களும் 20 ms-1 திசைவேகத்தில் சேர்ந்து நகர்கின்றன. மற்றொரு பொருளின் நிறையைக் காண்க.
42.
கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30 மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?
43.
ஒருவர் 600 Hz அதிர்வெண் உடைய ஒலி மூலத்திலிருந்து 400 மீ தொலைவில் அமர்ந்துள்ளார். ஒலி மூலத்திலிருந்து வரும் அடுத்தடுத்த இறுக்கங்களுக்கான அலைவு நேரத்தைக் காண்க.
44.
ஓம் விதி வரையறு.
45.
ராஜா என்ற மாணவர், குவிலென்ஸ் ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
1.
(i) தூரப் பார்வை என்று அழைக்கப்படும், ஹைப்பர் மெட்ரோபியா குறைபாடானது விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
(ii) இக்குறைபாடு உடைய மனிதர்களால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். ஆனால் அருகில் உள்ள பொருள்களைக் காண முடியாது.
(iii) விழிலென்சின் குவியத்தொலைவு அதிகரிப்பதால், விழி லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ளத் தொலைவு குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
(iv) இதனால் அண்மைப் புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் அமையாமல், சேய்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
(v) எனவே, அருகில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு அப்பால் (பின்புறம்) உருவாக்கப்படுகின்றன. தகுந்த குவியத்தொலைவு கொண்ட குவி லென்சினைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டைச் சரி செய்யலாம், பயன்படுத்த வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை பின்வரும் முறையில் கண்டறியலாம்.
(vi) தூரப்பார்வை குறைபாடு உடைய ஒரு மனிதரால் 'd' என்ற தொலைவிற்கு அப்பால் உள்ள பொருள்களை மட்டுமே காண முடிகிறது எனக் கொள்வோம். அவர் 'd' குறைவாக உள்ள 'D' என்ற தொலைவில் அமைந்த பொருள்களையும் காண விரும்பினால், பயன்படுத்த வேண்டிய குவி லென்சின் குவிய தூரம்.
f=\(\frac { dD }{ d-D } \).
2.
(i) தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது நமக்கு பக்க - தொடர் இணைப்புச் சுற்றுகள் கிடைக்கும்.
(ii) மின்தடையாக்கிகள் R1 மட்டும் R2 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS1 பெறப்படுகிறது.
(iii) இதேபோன்று R3 மற்றும் R4 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS2 பெறப்படுகிறது.
(iv) இந்த இரண்டு தொடர் சுற்றுக்களும் பக்க இணைப்பில் இணைக்கப்படுகிறது.
சமன்பாடு RS=R1+R2+R3 -லிருந்து
RS1=R1+R2, RS2=R3+R4
இறுதியாக சமன்பாடு
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \) -யிலிருந்து
தொகுபயன் மின்தடை
\(\frac { 1 }{ { R }_{ total } } =\frac { 1 }{ { R }_{ S1 } } +\frac { 1 }{ { R }_{ S2 } } \).
3.
கொடுக்கப்பட்டவை:
எஃகுத் துண்டின் நீளம் L=2மீ
தொடக்க வெப்பநிலை (Ti)=200 K
இறுதி வெப்பநிலை (Tf) =250K
ΔT =Tf - Ti
வெப்பநிலை உயர்வு,
ΔT =250-200
=50 K
நீளத்தில் ஏற்படும் மாற்றம்,
ΔL=0.1 மீ
கண்டறிய:
நீள் வெப்ப விரிவு குணகம் =αL=?
αL=\(\frac { 0.1 }{ 2 } \times \frac { 1 }{ 50 } \)
αL=0.001 K-1
பரும வெப்ப விரிவு குணகம்
=3 x நீள் வெப்ப விரிவு குணகம்
αv =3 x αL =3 x 0.001 =0.003 K
4.
(i) ஒரு கோப்பையில் உள்ள சூடான பாலினை சிறிது நேரம் மேசையின் மீது வைத்தால் என்ன நிகழும்? சூடான பாலின் வெப்பம் சிறிது நேரத்திற்குப் பிறகு குறையும்.
(ii) இதே போல் ஒரு பாட்டிலில் உள்ள குளிர்ச்சியான நீரினை சிறிது நேரம் மேசையின் மீது வைக்கும்போது அதனுடைய வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்.
(iii) சூடான பாலிலிருந்து ஆற்றலானது சுற்றுப்புறத்திற்குப் பரவுகிறது. அடுத்த நிகழ்வில் ஆற்றல் சுற்றுப்புறத்திலிருந்து நீர் உள்ள பாட்டிலுக்கு பரவுகிறது. இந்த ஆற்றலையே வெப்ப ஆற்றல் எனலாம்.
(iv) எனவே சூடான பொருள் குளிர்ச்சியான பொருளிற்கு அருகில் வைக்கப்பட்டால், சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளிற்கு பரிமாற்றம் அடையும். ஆற்றலே வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது .
(v) எனவே, வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ஆற்றல், இது இரு வேறு வெப்ப நிலையில் உள்ள இரண்டு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக 'வெப்பம்' எனவும் அழைக்கலாம்.
(vi) ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்த பொருள் வெப்பம் அடைவதற்கும் வெப்ப ஆற்றல் ஓர் காரணியாக செயல்படுகிறது.
(vii) வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்று பெயர்.
(viii) வெப்பக் கடத்தல். வெப்பச் சலனம் மற்றும் வெப்பக் கதிர்வீசல் ஆகிய ஏதாவது ஒரு வழிகளில் வெப்பப்பரவல் நடைபெறுகிறது.
(ix) வெப்பம் என்பது ஓர் ஸ்கேலார் அளவு ஆகும். வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜூல் (J) ஆகும்.
(x) வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. இதுபோல, அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது.
(xi) இதனால் சில நேரங்களில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது குளிர்வித்தல் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல நிகழ்வுகளில் குளிர்வித்தல் என்பதற்குப் பதிலாக வெப்பப்படுத்துதல் என்றே பயன்படுத்தப்படுகிறது.
(xii) ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும் போது, இரண்டு பொருள்களில் ஒன்றில் வெப்பநிலை குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்கிறது.
5.
(i) பறவைகள் தமது சிறகுகளின் விசை (விசை) மூலம் காற்றினை கீழே தள்ளுகின்றன. காற்றானது அவ்விசைக்கு சமமான விசையினை (எதிர் விசை) உருவாக்கி பறவையை மேலே பறக்க வைக்கிறது.
(ii) நீச்சல் வீரர் ஒருவர் நீரினை கையால் பின் நோக்கி தள்ளுதலின் மூலம் விசையினை ஏற்படுத்துகிறார். நீரானது அந்நபரை விசைக்கு சமமான எதிர்விசை கொண்டு முன்னே தள்ளுகிறது.
(iii) துப்பாக்கி சுடுதலில் குண்டு, விசையுடன் முன்னோக்கி செல்ல அதற்கு சமமான எதிர்விசையினால் குண்டு வெடித்தபின் துப்பாக்கி பின்னோக்கி நகர்கிறது.
6.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ரா சோனா கிராபி கருவியல் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
(iv) இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
(v) ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
(vi) ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
7.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி,ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
\(n'=\left( \frac { V }{ V-{ V }_{ s } } \right) n\)
\(n'=\left( \frac { 330 }{ 330-30 } \right) \times 500\)
= 550 Hz
8.
தரப்பட்டவை : \({ \mu }_{ 1 }=1.0;{ \mu }_{ 2 }=1.5;i={ 30 }^{ o }\)
ஸ்நெல் விதிப்படி,
\(\frac{\sin i}{\sin r}=\frac{\mu_{2}}{\mu_{1}} \)
\(\mu_{1} \sin i=\mu_{2} \sin r \)
\((1.0) \cdot \sin 30^{\circ}=1.5 \sin \mathrm{r} \)
\(1 \times \frac{1}{2}=1.5 \sin \mathrm{r} \)
\(\sin \mathrm{r}=\frac{1}{2 \times 1.5}=\frac{1}{3}=(0.333) \)
\(\mathrm{r}=\sin ^{-1}(0.333) \)
\(\mathrm{r}=19.45^{\circ} \)
9.
அடர்த்தியின் விளைவு:
1. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் விகிதில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
\(V\propto \sqrt { \cfrac { 1 }{ d } } \)
வெப்பநிலையின் விளைவு:
வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. \(V\alpha \sqrt { T } \) வெப்பநிலை T°C ல் திசைவேகமானது.
VT = (v0 + 0.61 T) ms-1
இங்கு v0 என்பது 0°C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு v0 = 331 மீ.வி-1 எனவே ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீ.வி-1 அதிகரிக்கிறது.
ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு:
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
10.
11.
மின்திறன் \(P=\frac { { V }^{ 2 } }{ R } \)
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக் கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
12.
13.
\(\Delta\) V = 0.3 - 0.25 = 0.05 மீ3
உண்மையான பருமன் Vo = 0.25 மீ3
\(\Delta\)T = 50 K
\(\begin{aligned}
\frac{\Delta V}{V_0} & =\alpha \Delta \mathrm{T}
\end{aligned}\)
\(\begin{aligned}
\alpha_v & =\frac{\Delta \mathrm{V}}{\mathrm{V}_0} \times \frac{1}{\Delta \mathrm{T}}=\frac{0.05}{0.25 \times 50}=\frac{0.05}{12.5}=0.004
\end{aligned}\)
av = 0.004 K-1
14.
திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
= 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
15.
நியூட்டனின் முதல் விதிப்படி, புறவிசை செயல்படாத நிலையில் இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து அதே திசையில் இயக்க நிலையிலேயே இருக்கும். வேகமாகச் செல்லும் இரு சக்கர வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டால் அதில் அமர்ந்திருப்பவர் தொடர்ந்து அதே திசையில் இயக்கம் பெற்றவராகவே இருப்பார். இதன் காரணமாக, வாகன ஓட்டி எறிபொருள் போன்று வீசப்படுவார்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியின்படி, பொருள் ஒன்றின் மீது செலுத்தப்படும் விசையால் தோற்றுவிக்கப்படும் முடுக்கம் பொருளின் நிறையைப் பொறுத்தது. மோதல் ஏதும் ஏற்படும் பொழுது, வாகனத்தின் முன்பக்கம் உள்ள காற்றுத் தடுப்பான் கண்ணாடியின் மீது வேகமாக சென்று மோதாமல், மோதல் நேரத்தை நீட்டித்து கணத்தாக்கு விசையின் விளைவைக் குறைப்பதற்கு பெல்ட் உதவுகிறது.
தலை, முதலாவது தரையை வந்தடைந்து தலையில் அதிகமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க தலைக்கவசம் மிகவும் அவசியம்.
16.
குவியத்தொலைவு (f) - 10 செ.மீ.
பொருளின் தூரம் (u) = - 20 செ.மீ.
பிம்பம் தோன்றும் இடம் (v) = ?
\(\begin{aligned}
\frac{1}{f}=\frac{1}{v}-\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{f}+\frac{1}{u}
\end{aligned}\)
\(\begin{aligned}
\frac{1}{v}=\frac{1}{10}+\frac{1}{-20}=\frac{1}{10}-\frac{1}{20}=\frac{2-1}{20}=\frac{1}{20}
\end{aligned}\)
பிம்பம் தோன்றும் இடம் = 20 செ.மீ. தொலைவில்
பிம்பத்தின் தன்மை
மெய்ப்பிம்பம், தலைகீழான, பொருளின் அளவிலேயே, மற்றொரு பக்கத்தில் வளைவு மையத்தில் பிம்பம் கிடைக்கிறது.
17.
நியூட்டனின் முதல் விதி:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
18.
தரவுகள் : விசையின் மதிப்பு F = 40 நியூட்டன்
விசை செயல்படும் தூரம் = கீல்முனை அமைந்துள்ள தொலைவு = d = 90 செ.மீ = 0.9 மீ
சூத்திரம் : திருப்புத்திறன் M = விசையின் மதிப்பு F \(\times\) விசை செயல்படும் தொலைவு d
ஃ திருப்புத்திறன் = 40 \(\times\) 0.9 = 36 நியூட்டன் - மீட்டர்
19.
(b)
16.66
20.
(d)
அ மற்றும் ஆ
21.
(c)
வெப்பக்கதிர்வீசல்
22.
(c)
வடிவத்தைப் பொருத்து அல்லாமல் அனைத்துப் பொருட்களுக்கும்
23.
(c)
அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.
24.
(c)
இணைக்கற்றைகளை உருவாக்கும்
25.
(c)
25 மீ
26.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
27.
(c)
மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
28.
(c)
சைக்கிள் பந்தயம்
29.
வெள்ளொளியானது ஒளிபுகும் ஊடகத்தில் செல்லும் போது வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு கோண அளவுகளில் விலகல் அடைவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது.
30.
ஒரு கடத்தியில் மின்னோட்டமானது உயர் மின் அழுத்தப்புள்ளியிலிருந்து குறைந்த மின்னழுத்தப்புள்ளிக்கு பாயும்.
31.
திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இரு வகைகளில் வரையறுக்கலாம்.
32.
இரட்டை (Couple): இரு சமமான இணை விசைகள் ஒரே நேரத்தில் ஒரு பொருளின் இரு வேறு புள்ளிகளின் மீது எதிர் எதிர் திசையில் செயல்பட்டால், அவை 'இரட்டை விசைகள்' அல்லது 'இரட்டை' என்றழைக்கப்படும். அவை ஒரே நேர்க்கோட்டில் செயல்படாது.
33.
(i) ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் திசைவேகம் அதிகரித்தால் அது அடர்குறை ஊடகம் ஆகும்.(காற்றுடன் ஒப்பிடும் போது நீரானது ஒலிக்கு அடர்குறை ஊடகம் ஆகும்)
(ii) ஒலியானது ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும்போது அதன் திசைவேகம் குறையுமானால் அது அடர்மிகு ஊடகம் ஆகும்.(நீருடன் ஒப்பிடும்போது காற்றானது ஒலிக்கு அடர்வுமிகு ஊடகம் ஆகும்)
34.
அலைநீளம் λ = 0.20 மீ
ஒலியின் வேகம் v = 331 மீவி-1
அதிர்வெண் f = ?
\(n=\cfrac { v }{ \lambda } =\cfrac { 331 }{ 0.2 }\) = 1655 Hz
35.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
36.
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P α \(\frac{1}{V}\)
37.
1. கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம் மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. எனவே அதிக தூரத்திற்கு தெளிவாக காணமுடியும்.
2. எனவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
38.
1. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதால் அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
2. அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் அவர் தடையின்றி விழும் நிலையில் உள்ளார். அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும்.
3. எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார். விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
39.
(i) தட்டக்குவி லென்சு: ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பி சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குவிலென்சு எனப்படும்.
(ii) தட்டக்குழி லென்சு: ஓர் இருபுற குவிலென்சின் ஒரு பரப்பி சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது தட்டக் குழிலென்சு எனப்படும்.
40.
மாற்றாது. எடுத்துக்காட்டாக குளிர்சாதனப்பெட்டி குளிரூட்டிகள் முதலியவற்றில் மின் ஆற்றல் குளிர்விப்பதற்கான வேலை ஆற்றலாக மாற்றப்படும். கிரைண்டர், மிக்ஸி போன்றவற்றில் மின் ஆற்றல் மோட்டார்களை சூடேற்ற பயன்படுத்தப்படும். ஆனால், நீரை கொதியூட்டும் சாதனங்கள், மின்சலவைப்பெட்டி போன்றவற்றில் மட்டுமே மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இதற்காக இவற்றில் உயர்மின்தடை உடைய நிக்ரோம் போன்ற உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன.
41.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1=2 kg
முதல் பொருளின் தொடக்க திசைவேகம் u1=40 ms-1
இரண்டாம் பொருளின் தொடக்க திசைவேகம் u2=0
முதல் பொருளின் இறுதி திசைவேகம் =v1
இரண்டாம் பொருளின் இறுதி திசைவேகம் =v2
எனவே v1=v2=20 ms-1
கண்டறிய:
இரண்டாம் பொருளின் நிறை m2=?
உந்தம் மாறா விதிப்படி,
m1u1 + m2u2 = m1v1 + m2v2
2 x 40 + m2 x 0 = 2 x 20 + 20 m2
m2=\(\frac{40}{20}\)=2 kg
இரண்டாம் பொருளின் நிறை m2=2 kg
42.
\(n'\left( \cfrac { V }{ V-{ V }_{ s } } \right) n=\left[ \cfrac { 340 }{ 340-30 } \right] \times 600=\cfrac { 340 }{ 310 } \times 600\)
தோற்ற அதிர்வெண் n' = 658 Hz
43.
ஒலியின் அதிர்வெண் n = 600 Hz
அலைவு நேரம் T = ?
\(T=\frac { 1 }{ n } = \frac { 1 }{ 600 } \) = 0.0016 வினாடி (அல்லது) 1.6 மி.வி.
44.
மாறா வெப்பநிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
V = IR
45.
i) ஆம், பிம்பம் கிடைக்கும். ஆனால் தெளிவான பிம்பம் தெரிவதில்லை.
ii) இல்லை. குவிலென்சானது தளக் குவிலென்சாக மாறிவிடும், இது குவிலென்சை போன்று செயல்பட்டு ஒளிக்கற்றையை குவிக்கும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards