10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 10th Standard Science Tamil Medium Important Questions 2019-2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தூரப்பார்வை [ஹைப்பர் மெட்ரோபியா] குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.
2.
கொடுக்கப்பட்ட மின்சுற்றுப் படத்திலிருந்து (i) தொகுபயன் மின்தடை, (ii) சூரின் வழியே செல்லும் மொத்த மின்னோட்டம், (iii) ஒவ்வொரு மின்தடை வழியே செல்லும் மின்னோட்டம், (iv) மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம், (v) ஒவ்வொரு மின்தடையாலும் ஆற்றல் பயனீடு இவற்றை காண்.
3.
பக்க இணைப்பில் தொடர் மின்தடையாக்கிகளின் சமன்பாட்டினைத் தருக.
4.
வெப்ப ஆற்றலைப் பற்றிய கருத்துக்களை விவாதி.
5.
மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.
6.
ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.
7.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
8.
கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்படவேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?
9.
வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகள் எவை?
10.
ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு.
11.
12.
1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.
13.
14.
துத்தநாக தகட்டின் வெப்பநிலையை 50K அதிகரிக்கும் போது, அதனுடைய பருமன் 0.25 மீ3 லிருந்து 0.3 மீ3 ஆக உயருகிறது எனில், அந்த துத்தநாக தகட்டின் பரும வெப்ப விரிவு குணகத்தைக் கணக்கிடுக.
15.
மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc-ஐ கணக்கிடுக.
16.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
17.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
18.
இயந்திரப்பணியாளர் ஒருவர் 40 செ.மீ கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?
19.
5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
20.
குவி லென்சு என்பவை ஒளிக்கற்றைகளை ஒரு புள்ளியில் குவிப்பதால் இவை ____
விரிக்கும் லென்சு
குவிக்கும் லென்சு
தட்டக் குவி லென்சு
தட்டக் குழி லென்சு
21.
ஒரு மின்சுற்றில் எப்பொழுது மின்னோட்டம் பாயும்?
ஒரு சுவிட்சு மூடப்படும்போது
ஒரு சுவிட்சு திறந்திருக்கும்போது
சுவிட்சு மூடியும் திறந்தும் இருக்கும்போது
ஏதுமில்லை
22.
சில குறிப்பிட்ட வெப்பநிலையில் வெப்ப விரிவு இதில் குறைவானது
திடப் பொருள்
திரவப் பொருள்
வாயு
மேற்கண்ட அனைத்தும்
23.
ஒரு முடுக்கப்பட்ட இயக்கத்தில் நேர்க்கோட்டு பாதையில் இயங்கும் ஒரு பொருளுக்கு பின்வரும் கூற்றில் எது பொருந்தாது?
அதன் வேகம் மாறிக்கொண்டே இருக்கும்
அதன் திசைவேகம் எப்போதும் மாறும்
எப்போதும் புவியிலிருந்து வெளியே செல்லும்
ஒரு விசை எப்போதும் அதன் மீது செயல்படும்
24.
ஒளி அலைகள்
குறுக்கலைகள்
பரவ ஊடகம் தேவை
அ மற்றும் ஆ
340 மீவி-1 திசைவேகம்
25.
மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவிலென்சானது
விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இணைக்கற்றைகளை உருவாக்கும்
நிறக் கற்றைகளை உருவாக்கும்.
26.
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1 அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
330 மீவி-1
165 மீவி-1
330 x \(\sqrt{2}\) மீவி-1
320 x \(\sqrt{2}\) மீவி-1
27.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
28.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
29.
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
30.
கூட்டு நுண்ணோக்கியில் இரண்டு லென்சுகள் பயன்படுத்த காரணம் யாது?
31.
கடத்தி-காப்பான் -வேறுபடுத்துக.
32.
பரும வெப்ப விரிவு என்பது யாது?
33.
பொருள் எப்பொழுது 'ஓய்வு' அல்லது இயக்கத்தில் உள்ளது எனலாம்?
34.
எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.
35.
செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
36.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
37.
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக
38.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
39.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
40.
லென்சின் திறன் வரையறு. அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
41.
நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.
42.
50 kg மற்றும் 10 kg எடைகள் கொண்ட இரு பொருள்கள் 10 மீ தொலைவில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கிடையேயான புவி ஈர்ப்பு விசையைக் கணக்கிடுக. மேலும் அதன் தொலைவு 100% அதிகரிக்கப்படுமானால் விசையின் மாற்றத்தில் ஏற்படும் விழுக்காடு யாது? [புதியவிசை, தொடக்க விசையிலிருந்து 75% குறைவு]
43.
கேட்குநர் ஓய்வு நிலையில் உள்ள போது ஒரு ரயில் வண்டி 30 மீவி-1 வேகத்தில் அவரை நோக்கி நெருங்குகிறது.ரயிலின் அதிர்வெண் 600Hz ஒலியின் வேகம் 340 மீ.வி-1 எனில் கேட்குநர் உணரும் அதிர்வெண் யாது?
44.
இராஜஸ்தான் பாலைவனங்களில் காற்றின் வெப்பநிலை 46°C ஐ அடைய இயலும். அந்த வெப்பநிலையில் காற்றில் ஒலியின் திசைவேகம் என்ன? (Vo = 331 மீவி-1 )
45.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
1.
(i) தூரப் பார்வை என்று அழைக்கப்படும், ஹைப்பர் மெட்ரோபியா குறைபாடானது விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படுகிறது.
(ii) இக்குறைபாடு உடைய மனிதர்களால் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியும். ஆனால் அருகில் உள்ள பொருள்களைக் காண முடியாது.
(iii) விழிலென்சின் குவியத்தொலைவு அதிகரிப்பதால், விழி லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையே உள்ளத் தொலைவு குறைவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
(iv) இதனால் அண்மைப் புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் அமையாமல், சேய்மைப் புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
(v) எனவே, அருகில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு அப்பால் (பின்புறம்) உருவாக்கப்படுகின்றன. தகுந்த குவியத்தொலைவு கொண்ட குவி லென்சினைப் பயன்படுத்துவதன் மூலம் இக்குறைபாட்டைச் சரி செய்யலாம், பயன்படுத்த வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை பின்வரும் முறையில் கண்டறியலாம்.
(vi) தூரப்பார்வை குறைபாடு உடைய ஒரு மனிதரால் 'd' என்ற தொலைவிற்கு அப்பால் உள்ள பொருள்களை மட்டுமே காண முடிகிறது எனக் கொள்வோம். அவர் 'd' குறைவாக உள்ள 'D' என்ற தொலைவில் அமைந்த பொருள்களையும் காண விரும்பினால், பயன்படுத்த வேண்டிய குவி லென்சின் குவிய தூரம்.
f=\(\frac { dD }{ d-D } \).
2.
(i) மின்சுற்று பக்க இணைப்பில் உள்ளது. எனவே தொகுபயன் மின்தடை R =?
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \)
=\(\frac { 1 }{ 20 } +\frac { 1 }{ 100 } +\frac { 1 }{ 50 } \)
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 5+1+2 }{ 100 } =\frac { 8 }{ 100 } \)
Rp=\(\frac { 100 }{ 8 } \)=12.5 Ω
(ii) மின்சுற்றின் வழியே பாயும் மொத்த மின்னோட்டம் =\(\frac { { V }_{ p } }{ { R }_{ p } } \)
Ip =\(\frac { 125 }{ 12.5 } \)=10 A
(iii) ஓமின் விதிப்படி ஒவ்வொரு மின்தடையின் வழியே மின்னோட்டம் V=IR
I1= \(\frac { { V }_{ 1 } }{ { R }_{ 1 } } =\frac { 125 }{ 20 } \)=6.25 A
I2=\(\frac { { V }_{ 2 } }{ { R }_{ 2 } } =\frac { 125 }{ 100 } \)=1.25 A
I3=\(\frac { { V }_{ 3 } }{ { R }_{ 3 } } =\frac { 125 }{ 50 } \)=2.50 A
மின் சுற்றில் பாயும் மின்னோட்டம்
Ip=I1+I2+I3
I=6.25+1.25+2.50=10 A
(iv) பக்க இணைப்புச் சுற்றுகளில் ஒவ்வொரு மின்தடையின் குறுக்கே மின்னழுத்தம்
=V1=V2=V3=125
(v) ஒவ்வொரு மின்தடையின் வழியேயான ஆற்றல் பங்கீடு
P1=V1I1=125 x 6.25 =781.25w
P2=V2I2=125 x 1.25=156.25w
P3=V3I3=125 x 50=312.50 w
3.
(i) தொடரிணைப்பில் உள்ள மின்தடையாக்கி சுற்றுகள் பக்க இணைப்பில் இணைக்கப்படும் போது நமக்கு பக்க - தொடர் இணைப்புச் சுற்றுகள் கிடைக்கும்.
(ii) மின்தடையாக்கிகள் R1 மட்டும் R2 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS1 பெறப்படுகிறது.
(iii) இதேபோன்று R3 மற்றும் R4 தொடரிணைப்பில் இணைக்கப்பட்டு தொகுபயன் மின்தடை RS2 பெறப்படுகிறது.
(iv) இந்த இரண்டு தொடர் சுற்றுக்களும் பக்க இணைப்பில் இணைக்கப்படுகிறது.
சமன்பாடு RS=R1+R2+R3 -லிருந்து
RS1=R1+R2, RS2=R3+R4
இறுதியாக சமன்பாடு
\(\frac { 1 }{ { R }_{ p } } =\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } +\frac { 1 }{ { R }_{ 3 } } \) -யிலிருந்து
தொகுபயன் மின்தடை
\(\frac { 1 }{ { R }_{ total } } =\frac { 1 }{ { R }_{ S1 } } +\frac { 1 }{ { R }_{ S2 } } \).
4.
(i) ஒரு கோப்பையில் உள்ள சூடான பாலினை சிறிது நேரம் மேசையின் மீது வைத்தால் என்ன நிகழும்? சூடான பாலின் வெப்பம் சிறிது நேரத்திற்குப் பிறகு குறையும்.
(ii) இதே போல் ஒரு பாட்டிலில் உள்ள குளிர்ச்சியான நீரினை சிறிது நேரம் மேசையின் மீது வைக்கும்போது அதனுடைய வெப்பநிலை சிறிது அதிகரிக்கும்.
(iii) சூடான பாலிலிருந்து ஆற்றலானது சுற்றுப்புறத்திற்குப் பரவுகிறது. அடுத்த நிகழ்வில் ஆற்றல் சுற்றுப்புறத்திலிருந்து நீர் உள்ள பாட்டிலுக்கு பரவுகிறது. இந்த ஆற்றலையே வெப்ப ஆற்றல் எனலாம்.
(iv) எனவே சூடான பொருள் குளிர்ச்சியான பொருளிற்கு அருகில் வைக்கப்பட்டால், சூடான பொருளிலிருந்து குளிர்ச்சியான பொருளிற்கு பரிமாற்றம் அடையும். ஆற்றலே வெப்ப ஆற்றல் என அழைக்கப்படுகிறது .
(v) எனவே, வெப்ப ஆற்றல் என்பது ஒரு வகையான ஆற்றல், இது இரு வேறு வெப்ப நிலையில் உள்ள இரண்டு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக 'வெப்பம்' எனவும் அழைக்கலாம்.
(vi) ஒரு பொருள் வெப்பத்தினை உணர்வதற்கும், அந்த பொருள் வெப்பம் அடைவதற்கும் வெப்ப ஆற்றல் ஓர் காரணியாக செயல்படுகிறது.
(vii) வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்று பெயர்.
(viii) வெப்பக் கடத்தல். வெப்பச் சலனம் மற்றும் வெப்பக் கதிர்வீசல் ஆகிய ஏதாவது ஒரு வழிகளில் வெப்பப்பரவல் நடைபெறுகிறது.
(ix) வெப்பம் என்பது ஓர் ஸ்கேலார் அளவு ஆகும். வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு ஜூல் (J) ஆகும்.
(x) வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது. இதுபோல, அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது.
(xi) இதனால் சில நேரங்களில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் என்பது குளிர்வித்தல் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பல நிகழ்வுகளில் குளிர்வித்தல் என்பதற்குப் பதிலாக வெப்பப்படுத்துதல் என்றே பயன்படுத்தப்படுகிறது.
(xii) ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும் போது, இரண்டு பொருள்களில் ஒன்றில் வெப்பநிலை குறையவோ அல்லது அதிகரிக்கவோ செய்கிறது.
5.
| நிலை 1: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது. |
நிலை 2: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது. |
நிலை 3: மின்தூக்கி ஓய்வில் உள்ளது (a =0) முடுக்கம் சுழியாகும். |
நிலை 4: மின்தூக்கி புவி ஈர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது. (a=g) |
| R -W = Fதொ = ma R=W+ma R=mg+ma R=m(g+a) |
W-R=Fதொ=ma |
முடுக்கம் சுழியாகும் (a=0) W-R=Fதொ=0 R=W R=mg |
R=W-ma |
| R>W | R |
R=W | R=0 |
| தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட அதிகம். |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட குறைவு. |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடைக்கு சமம். | தோற்ற எடையின் மதிப்பு சுழியாகும். |
6.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ரா சோனா கிராபி கருவியல் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
(iv) இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
(v) ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
(vi) ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
7.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி,ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
\(n'=\left( \frac { V }{ V-{ V }_{ s } } \right) n\)
\(n'=\left( \frac { 330 }{ 330-30 } \right) \times 500\)
= 550 Hz
8.
தரப்பட்டவை: x = 4 மீ மற்றும் y = 20 மீ.
பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் குவியத்தொலைவு
\(f=\frac { xy }{ x-y } \)
\(f=\frac { 4\times 20 }{ 4-20 } =\frac { 80 }{ -16 } =-5\) மீ
பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் திறன் \(=\frac { 1 }{ f } =-\frac { 1 }{ 5 } =-0.2D\)
9.
அடர்த்தியின் விளைவு:
1. வாயுக்களில் ஒலியின் திசைவேகம் அதன் அடர்த்தியின் இருமடி மூலத்திற்கு எதிர் விகிதில் அமையும். எனவே வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது திசைவேகம் குறைகிறது.
\(V\propto \sqrt { \cfrac { 1 }{ d } } \)
வெப்பநிலையின் விளைவு:
வாயுக்களில் ஒலியின் திசைவேகம், அதன் வெப்பநிலையின் இருமடி மூலத்திற்கு நேர் விகிதில் அமையும். எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, திசைவேகமும் அதிகரிக்கிறது. \(V\alpha \sqrt { T } \) வெப்பநிலை T°C ல் திசைவேகமானது.
VT = (v0 + 0.61 T) ms-1
இங்கு v0 என்பது 0°C வெப்பநிலையில் வாயுக்களில் ஒலியின் திசைவேகம் ஆகும். காற்றிற்கு v0 = 331 மீ.வி-1 எனவே ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் திசைவேகமானது 0.61 மீ.வி-1 அதிகரிக்கிறது.
ஒப்புமை ஈரப்பதத்தின் விளைவு:
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே தான் மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
10.
மின்னோட்டம் (I) = 5 A
காலம் (t) = 1 வினாடி
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (e) = ?
q = It
= 5 \(\times\) 1 = 5 கூலூம்
q = ne
n = \(\frac{q}{e}\)
\(n =\frac { 5 }{ 1.6\times 10^{ -19 } } = 31.25 \times 10^{ 18 }\)எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
11.
12.
R1 = 1 Ω, R2 = 2 Ω, R3 = 4 Ω Current I1 = 1 A
1 Ω மின் தடைக்கு எதிராக இருக்கும் மின்னழுத்த வேறுபாடு = I1 R1 = 1 × 1 = 1 V
இங்கு மின்தடைகள் இணையாக இருப்பதால் மூன்று மின்தடைக்கு எதிராகவும் சமமான மின்னழுத்த வேறுபாடே இருக்கும்.
எனவே 2 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம்
\(\frac { V }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ 2 } =0.5A\)
இதுபோல 4 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம் \(\frac { V }{ { R }_{ 3 } } =\frac { 1 }{ 4 } =0.25A\)
13.
14.
\(\Delta\) V = 0.3 - 0.25 = 0.05 மீ3
உண்மையான பருமன் Vo = 0.25 மீ3
\(\Delta\)T = 50 K
\(\begin{aligned}
\frac{\Delta V}{V_0} & =\alpha \Delta \mathrm{T}
\end{aligned}\)
\(\begin{aligned}
\alpha_v & =\frac{\Delta \mathrm{V}}{\mathrm{V}_0} \times \frac{1}{\Delta \mathrm{T}}=\frac{0.05}{0.25 \times 50}=\frac{0.05}{12.5}=0.004
\end{aligned}\)
av = 0.004 K-1
15.
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4 P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ.மீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின் படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
\({ v }_{ 2 }=\frac { { P }_{ 1 } }{ { P }_{ 2 } } \times { v }_{ 1 }\)
\(=\frac { P }{ 4P } \times { 20 }\) செ.மீ3
V2 = 5 செ.மீ3
16.
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வொரு துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது.
அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.
மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும்.
இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.
இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி.
நியூட்டன் ஈர்ப்பியல் விதிப்படி,

\(F\propto \) m1 \(\times\) m2
\(F\propto { 1/r }^{ 2 }\)
இவை இரண்டையும் இணைத்து
\(F\propto \cfrac { { m }_{ 1 }\times{ m }_{ 2 } }{ { r }^{ 2 } } \)
\(F=\cfrac { { Gm }_{ 1 }\times m_{ 2 } }{ { r }^{ 2 } } \)
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 \(\times\) 10-11N m2kg-2
17.
1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
3. ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை, வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 \(\times\) 108 மீவி-1.
5. ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (\(\lambda\)) மற்றும் அதிர்வெண்(v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = v\(\lambda\) என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலைநீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
7. கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
8. ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.
18.
F1 =140 N
d1 = 40 செ.மீ = 40 \(\times\) 10-2 மீ
F2 =40 N
d2 = ?
விசையின் திருப்புத்திறனின் மதிப்பு (\( \tau \)) = F \(\times\) d
= 140 \(\times\) 40 \(\times\) 10-2 = 56 Nm
40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற, 56 Nm விசையின் திருப்புத்திறன் தேவைப்படுகிறது.
F1 \(\times\) d1 = F2 \(\times\) d2
56 = F2 \(\times\) d2
56 = 40 \(\times\) d2
d2 = 56/40 = 1.4 மீ
= d2 = 56/40 = 1.4 மீ
1.4 மீ நீளம் கொண்ட திருகுக்குறடு தேவை.
19.
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்கோட்டு உந்தம் (p) = 2.5 கிகி மீவி-1
சூத்திரம்:
நேர்கோட்டு உந்தம் (p)=நிறை (m) \(\times\) திசைவேகம் (v)
திசைவேகம் = நேர்கோட்டு உந்தம் / நிறை = 2.5/5
= 0.5 மீ வி-1
20.
(b)
குவிக்கும் லென்சு
21.
(a)
ஒரு சுவிட்சு மூடப்படும்போது
22.
(a)
திடப் பொருள்
23.
(c)
எப்போதும் புவியிலிருந்து வெளியே செல்லும்
24.
(a)
குறுக்கலைகள்
25.
(c)
இணைக்கற்றைகளை உருவாக்கும்
26.
(c)
330 x \(\sqrt{2}\) மீவி-1
27.
(c)
ஓம்
28.
(c)
சுழி
29.
(d)
300% அதிகரிக்கும்
30.
(i) குவிலென்சின் குவியத் தொலைவினைக் குறைப்பதன் மூலம் நுண்ணோக்கியின் உருப்பெருக்குத்திறனை அதிகரிக்கலாம். ஆனால், லென்சுகளை வடிவமைப்பதில் உள்ள இடர்பாடுகளால், குவிய தூரத்தினை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் குறைக்க இயலாது.
(ii) எனவே கூட்டு நுண்ணோக்கியில், உருப் பெருக்கத்தை அதிகரிப்பதற்காக இரண்டு குவிலென்சுகள் பயன்படுத்தப் படுகின்றன.
31.
| கடத்தி | காப்பான் |
| மின்னோட்டத்தை நன்கு கடத்தும் | மின்சாரத்தை கடத்தாது. |
| எ.கா. தாமிரம், அலுமினியம் | கண்ணாடி, இரப்பர் |
| மின்கடத்தி எண் அதிகம் | மின்கடத்தி எண் குறைவு |
| மின்தடை எண் குறைவு |
மின்தடை எண் அதிகம் |
32.
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு பரும வெப்ப விரிவு எனப்படும்.
33.
(i) ஒரு குறிப்பிட்ட காலத்தில் பொருள் தனது நிலையை மாற்றவில்லையெனில் அது ஓய்வு நிலையில் உள்ளது எனலாம்.
(ii) ஒரு குறிப்பிட்ட கால அளவில் ஒரு பொருளானது தனது நிலையில் மாற்றம் அடையுமானால் அது இயக்க நிலையில் உள்ளது எனலாம்.
34.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவி பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
35.
இவை 20 Hz முதல் 20,000 Hz க்கு இடைப்பட்ட அதிர்வெண் உடைய ஒலி அலைகள் ஆகும்
36.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
37.
| நீள் வெப்ப விரிவு | பரப்பு வெப்ப விரிவு |
| ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு நீள் வெப்ப விரிவு எனப்படும். | ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் பரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு பரப்பு வெப்ப விரிவு எனப்படும். |
| ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படுகிறது. | ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு பரப்பு வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படுகிறது. |
| \(\frac { \triangle L }{ { L }_{ 0 } } \)=αLΔT | \(\frac { \triangle A }{ A_{ 0 } } \)=αAΔT |
38.
1. கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம் மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. எனவே அதிக தூரத்திற்கு தெளிவாக காணமுடியும்.
2. எனவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
39.
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
1. ஒத்த இணைவிசைகள்
2. மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
40.
லென்சின் திறன் என்பது ஒரு லென்சின் குவிக்கும் அல்லது விரிக்கும் திறன் என வரையறுக்கப்படுகிறது. லென்சின் திறன் என்பது எண்ணளவில் அந்த லென்சின் திறன் என்பது எண்ணளவில் அந்த லென்சின் குவியத்தொலைவின் தலைகீழ் மதிப்பிற்குச் சமம் என வரையறுக்கப்படுகிறது.
P=\(\frac { 1 }{ f } \).
41.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு, நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1.
42.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1=50 kg
இரண்டாம் பொருளின் நிறை m2=10 kg
தொலைவு R =10 m
பொது ஈர்ப்பு மாறிலி (G)=6.67 x 10-11 Nm2 kg-2
கண்டறிய:
ஈர்ப்பு விசை F =\(\frac { G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ { R }_{ 2 } } \)
F =\(\frac { 6.67\times 10^{ -11 }\times 50\times 10 }{ 10^{ 2 } } \)
விசை F =33.35 x 10-11 N
43.
\(n'\left( \cfrac { V }{ V-{ V }_{ s } } \right) n=\left[ \cfrac { 340 }{ 340-30 } \right] \times 600=\cfrac { 340 }{ 310 } \times 600\)
தோற்ற அதிர்வெண் n' = 658 Hz
44.
வெப்பநிலை = 46°C
ஒலியின் திசைவேகம் = 331 மீ.வி-1
46°C ல் ஒலியின் திசைவேகம் = ?
VT = Vo + 0.61 T மீ.வி-1
= 331 + 0.61 \(\times\) 46
= 359.06 மீ.வி-1.
45.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards