10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு அறிவியல் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 10th Standard Science Tamil Medium model Question Paper Full Chapter 2020 )
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு எளிய நுண்ணோக்கியில் பிம்பம் உருவாதலை படத்துடன் விவரி.
2.
ஒரு நீர் சூடேற்றி 30 நிமிடத்தில் 120 V-ல் 1.2 kWh ஆற்றலை எடுத்துக்கொள்கிறது எனில் அதனால் நுகரப்பட்ட மின்னோட்டம் யாது?
3.
LED தொலைக்காட்சியைப் பற்றி விவரி.
4.
திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.
5.
திருப்புத்திறன் நடைமுறை வாழ்க்கையில் செயல்படும் சில அமைப்புகளை எடுத்துக்காட்டுடன் விவரி.
6.
டாப்ளர் விளைவின் பயன்பாடுகளை விவரி.
7.
8.
ஒரு பொருளிலிருந்து செல்லும் ஒளிக் கற்றையானது 0.3 மீ குவியத் தொலைவு கொண்ட விரிக்கும் லென்சால் குவிக்கப்பட்டு 0.2 மீ என்ற தொலைவில் பிம்பத்தை ஏற்படுத்துகிறது எனில் பொருளின் தொலைவைக் கணக்கிடுக.
9.
எதிரொலி என்றால் என்ன?
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?
10.
இரு மின் தடையாக்கிகளை பக்க இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 2 Ω. தொடரிணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை 9 Ω. இரு மின் தடைகளின் மதிப்புகளையும் கணக்கிடுக.
11.
வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சுற்றை விளக்கவும். (படம் தேவையில்லை)
12.
இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
13.
திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவினை அளவிடும் சோதனையை தெளிவான படத்துடன் விவரி.
14.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையைக் கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
15.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மி.லி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மி.லி-லிருந்து 48.5 மி.லி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மி.லி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
16.
கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தைக் கணக்கிடுக.
17.
பொது ஈர்ப்பியல் விதியினை கூறுக. அதன் கணிதவியல் சூத்திரத்தை தருவிக்க.
18.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
19.
5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
20.
லென்சு சமன்பாடு குறிப்பு வரைக.
21.
மின்கூறுகள் யாவை?
22.
வாயுக்களின் அடிப்படை விதிகள் யாவை?
23.
ஒரு சுருள் வில்லினை அமுக்கத் தேவையான விசை 25N எனில் சுருள் வில்லால் செலுத்தப்படும் எதிர்விசை எவ்வளவு?
24.
டாப்ளர் விளைவு வரையறு.
25.
எதிரொலிக்குத் தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
26.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
27.
பாயில் விதியைக் கூறுக.
28.
இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.
29.
நிறப்பிரிகை வரையறு.
30.
ஒரு குவி லென்சின் திறன் +6D மற்றும் ஒரு குழி லென்சின் திறன் -4D சேர்த்து வைக்கப்படுகிறது. இரு லென்சுகளின் கட்டமைப்பின் திறன் யாது?
31.
வெப்ப சமநிலை என்றால் என்ன?
32.
இரு கோள்களின் நிறைகள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளன. அதன் ஆர விகிதம் 1:2 எனில் கோள்களின் மீதான புவி ஈர்ப்பு முடுக்கத்தின் விகிதத்தைக் காண்க.
33.
10o C-ல் நீங்கள் 0.274 விநாடி நேரத்தில் ஓர் எதிரொலியை கேட்டால், அதன் எதிரொலிக்கும் பரப்பு எவ்வளவு தொலைவில் இருக்கும்?
34.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?
35.
ராஜா என்ற மாணவர், குவிலென்ஸ் ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
36.
பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் இதன் வழியாகவே விழித்திரையை அடைகின்றன.
சிலியா தசைகள்
பாவை
கார்னியா
ஐரிஸ்
37.
ஒரு தொடர் இணைப்புச் சுற்றில் உள்ள மூன்று மின்தடைகளின் மதிப்பு 140,250 மற்றும் 220. மொத்த மின்தடை _____
330
610
720
ஏதுமில்லை
38.
எந்த வெப்பநிலையில் செல்சியஸ் வெப்பநிலையும் ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் சமம்?
400
-400
00
1000
39.
ஒலிக்கும் மணி அல்லது ட்ரம் இசைக்கருவி
மின்சாரத்தை உருவாக்குகின்றன.
எதிரொலியை உருவாக்குகின்றன.
அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.
ஏதுமில்லை
40.
ஒரு கத்தியை கூர் செய்யும் போது சாணை பிடிக்கும் கருவியின் சக்கரத்தின் விளிம்பிற்கு தொடு புள்ளியில் உண்டாகும் பொறிகள் இதற்கு எடுத்துக்காட்டு.
ஓய்வில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
திசையில் நிலைமம்
செலுத்தப்பட்ட விசை
41.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
42.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.
330 மீவி-1
660 மீவி-1
156 மீவி-1
990 மீவி-1
43.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
44.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்

A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
A\(\rightarrow\)B, A\(\rightarrow\)C, B\(\rightarrow\)C
A\(\rightarrow\)B, A\(\leftarrow\)C, B\(\rightarrow\)C
A\(\leftarrow\)B, A\(\rightarrow\)C, B\(\leftarrow\)C
1.
எளிய நுண்ணோக்கி:
(i) குறைந்த குவியத் தொலைவு கொண்ட குவி லென்சானது எளிய நுண்ணோக்கியாகச் செயல்படுகிறது.
(ii) குவி லென்சைக் கண்களுக்கு அருகில் வைத்து, பொருள்களைப் பார்க்கும் போது பொருள்களின் பெரிதாக்கப்பட்ட மாயபிம்பம் தோற்றுவிக்கப்படுகிறது.
(iii) AB என்ற பொருளை, குவி லென்சின் முக்கிய குவியத்திற்குள் (u<f) வைத்து லென்சின் மறுபுறத்தின் வழியாகப் பொருளைக் காண வேண்டும். குவிலென்சின் முக்கிய குவியத்திற்கும், ஒளியியல் மையத்திற்கும் இடையே பொருள் வைக்கப்படும் போது,லென்சானது நேரான, பெரிதாக்கப்ட்ட மாய பிம்பத்தை பொருள் இருக்கும் அதே பக்கத்தில் தோற்றுவிக்கப்படுகிறது.
2.
கொடுக்கப்பட்டவை:
மின் ஆற்றல் E =1.2 kWh
=1.2 x 103 Wh
காலம் t =30 நிமிடங்கள்
=\(\frac{1}{2}\)
மின்னழுத்தம் V=120 v
கண்டறிய:
சூடேற்றியால் நுகரப்பட்ட மின்னோட்டம் I=?
ஆற்றல் E = VIt
∴ மின்னோட்டம், I -\(\frac { E }{ Vt } =\frac { (1.2\times 10^{ 3 }) }{ 120\times \frac { 1 }{ 2 } } \)
I =\(\frac { 1.2\times 10^{ 3 }\times 2 }{ 120 } \)=20 A
3.
(i) ஒளி உமிழ் டையோடின் மற்றொரு முக்கியமான பயன்பாடு LED தொலைக்காட்சி ஆகும். LED தொலைக்காட்சி உண்மையில் ஒளி உமிழ் டையோடை பயன்படுத்தி செய்யப்பட LCD (Liquid Crystal Display) தொலைக்காட்சி ஆகும்.
(ii) LED காட்சி சாதனத்தில் ஒளி உமிழ் டையோடுகளை மின்னொளிக்காக பயன்படுத்துகின்றனர். ஒளி உமிழ் டையோடுகளின் வரிசை படப்புள்ளிகளாக (pixel) செயல்படும்.
(iii) இந்த படப்புள்ளிகளே டிஜிட்டல் படம் அல்லது காட்சிக்கு அடிப்படை ஆகும். கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் வெள்ளை நிற ஒளியை உமிழும் ஒளி உமிழ் டையோடுகளைப் பயன்படுத்துகின்றனர்.
(iv) சிவப்பு, பச்சை மற்றும் நீலம் ஆகிய நிறங்களை உமிழும் ஒளி உமிழ் டையோடுகளைப் பயன்படுத்தி வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை தயாரிக்கின்றனர்.
(v) 1997-ல் ஜெம்ஸ் P. மிட்சல் என்பவரால் முதல் LED தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. இது ஓரியல் மூல நிறக்காட்சிப் பெட்டி, 2009-இல் வணிக ரீதியான LED தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
4.
(i) திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலினைப் பெற்று விலக்கு விசைக்கு உட்படுகிறது.
(ii) பொருள் விரிவடைவதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது வாயுவில் ஏற்படும் வெப்ப விரிவு திட மற்றும் திரவப் பொருள்களைவிட அதிகமாகவும், திடப் பொருள்களைவிட அதிகமாகவும் திடப் பொருளை ஒப்பிடும் போது திரவப் பொருள்களில் அதிகமாகவும் இருக்கும்.
(iii) பரும வெப்ப விரிவு குணத்தின் மதிப்பு திரவத்தில் வெப்பநிலையைச் சார்ந்ததல்ல. ஆனால் வாயுவில், இதன் மதிப்பு வெப்ப நிலையைச் சார்ந்து அமையும்.
(iv) ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தினை வெப்பப்படுத்தும்போது கொள்கலனின் வழியாக வெப்ப ஆற்றலானது திரவத்திற்கு அளிக்கப்படுகிறது. எனவே, வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலன் விரிவடைவதற்கும், மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து திரவத்தில் ஏற்படும் உண்மையான விரிவை நேரடியாக கணக்கிட இயலாது.
(v) எனவே திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இருவழிகளில் வரையறுக்கலாம்.
உண்மை வெப்ப விரிவு:
(i) எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும்.
(ii) ஓரழகு வெப்பநிறை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
தோற்ற வெப்ப விரிவு:
(i) கொள்கலன் இல்லாமல் திரவத்தினை நேரடியாக வெப்பப்படுத்த முடியாது. இதனால் நடைமுறையில் கொள்கலனில் வைத்தே திரவத்தினை வெப்பப்படுத்த வேண்டும்.
(ii) அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலனை விரிவடையச் செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(iii) எனவே, இந்நிகழ்வில் நாம் காண்பது திரவத்தின் உண்மையான வெப்ப விரிவு அல்ல. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் வெப்ப விரிவு என அழைக்கப்படும்.
(iv) ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
5.
1. பற்சக்கரங்கள் (Gears):
பற்சக்கரங்கள் வட்டப்பரப்பின் விளிம்புகளில் பல் போன்று மாற்றம் செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும். பற்சக்கரங்கள் மூலம் திருப்பு விசையினை மாற்றி இயங்குகின்ற வாகனசக்கரங்களின் சுழற்சி வேகத்தை மாற்றலாம். மேலும் திறனை கடத்துவதற்கு பற்சக்கரங்கள் உதவுகின்றன.
2. ஏற்றப்பலகை: (seesaw play):
ஏற்றப்பலகையில் அமர்ந்துள்ள எடை அதிகமான ஒருவர், மற்றொருவரை எளிதில் தூக்குகிறார். எடை அதிகமான நபர் பலகையின் ஆதாரப்புள்ளியினை நோக்கி நகரும் போது, விசை செயல்படும் தூரம் குறைந்து, திருப்புவிசையின் செயல்பாடு குறைகிறது. இது எடை குறைவான நபரானவர், எடை அதிகமான நபரை தூக்க வழி வகை செய்கிறது.
3. திருப்பிச்சக்கரம் (steering wheel)
மிக வலுவான மகிழுந்து மற்றும் பார உந்துகளின் சக்கரங்களின் திசையினை, குறைவான திருப்பு விசை எளிதில் மாற்ற திருப்புச்சக்கரம் உதவுகிறது.
6.
டாப்ளர் விளைவின் பயன்பாடுகள்:
(i) வாகனம் ஒன்றின் வேகத்தை அளவிடுதல் :
காவலரின் காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி ஒன்று மின் காந்த அலையை உமிழும். இந்த அலையானது சாலையில் வேகமாக செல்லும் வாகனத்தின் மீது பட்டு எதிரொளிக்கப்படும். எதிரொளித்த அலையின் அதிர்வெண்ணில் மாற்றம் ஏற்படும்.அந்த அதிர்வெண்ணில் மாற்றத்தைப் பயன்படுத்தி வாகனத்தின் வேகத்தைக் காண இயலும்.இது அதிவேக வாகனங்களைக் கண்காணிக்க உதவுகிறது.
(ii) துணைக்கோள் ஒன்றின் தொலைவினைக் கணக்கிடுதல் :
துணைக்கோள் ஒன்று புவியிலிருந்து வெகு தொலைவிற்குச் செல்லும்போது, அதனால் உமிழப்பட்ட ரேடியோ அலைகளின் அதிர்வெண் குறையும். அந்தந்த அதிர்வெண்ணில் மாற்றத்தைப் பயன்படுத்தி துணைக்கோளின் இருப்பிடத்தைக் கண்டறியலாம்.
(iii) ரேடார் (RADAR-Radio Detection and Ranging):
ரேடரானது அதிர்வெண் மிக்க ரேடியோ அலைகளை ஆகாய விமானத்தை நோக்கி அனுப்பும். எதிரொளித்து வரும் ரேடியோ அலைகளை ரேடார் நிலையத்தில் உள்ள வேறுபாட்டைக் கொண்டு விமானத்தின் வேகத்தைக் கணக்கிடலாம்.
(iv) சோனார்(SONAR-Sound Navigation And Ranging)
சோனார் கருவியின் மூலம் நீரில் அனுப்பப்பட்ட மற்றும் எதிரொலித்தக் கதிரின் அதிர்வெண் வேறுபாட்டைக் கொண்டு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் நீர் மூழ்கிக் கப்பல்களை கண்டறியலாம்.
7.
8.
f = -0.3 மீ, v = -0.2 மீ
லென்சு சமன்பாட்டிலிருந்து
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
\(\frac { 1 }{ u } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ f } \)
\(\frac { 1 }{ u } =\frac { 1 }{ -0.2 } -\frac { 1 }{ -0.3 } =\frac { -10 }{ 6 } \)
\(u=\frac { -6 }{ 10 } =-0.6\) மீ
9.
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள், மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும்.
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்:
எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடி இருக்க வேண்டும்.
எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்கள்:
எதிரொலி தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப்பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
இ) எதிரொலி முறையில் ஒலியின் திசைவேகத்தைக் காணுதல்.
தேவையான கருவிகள்:
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்
செய்முறை
ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு
நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூலத்திலிருந்து வெளிப்படும்.
நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலி மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியைக் குறித்துக் கொள்ளவும். கால இடைவெளி 't' என்க.
இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.
ஒலியின் திசைவேகம் கணக்கிடல்
ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே

10.
இரு மின் தடைகளை பக்க இணைப்பில் இணைக்கும் அதன் தொகுபயன் மின்தடை = 2 \(\Omega\)
\(\frac { 1 }{ { R }_{ 1 } } +\frac { 1 }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ { R }_{ P } } \)
தொடர் இணைப்பில் இணைக்கும் போது அதன் தொகுபயன் மின்தடை = 9\(\Omega\)
R1 + R2 = Rs
R1 + R2 = 9\(\Omega\)
\(\frac{\mathrm{R}_{1}+\mathrm{R}_{2}}{\mathrm{R}_{1} \mathrm{R}_{2}}=\frac{1}{\mathrm{R}_{p}}\)
\(\frac{9}{\mathrm{R}_{1} \mathrm{R}_{2}}=\frac{1}{2}\)
R1 . R2 = 18 \(\Omega\) ......(1)
R1 + R2 = 9 \(\Omega\) .....(2)
சமன்பாடு (2) லிருந்து
R2 = 9 - R1
(1) ல் பிரதியிட
R1 (9 - R1) = 18
9R1 - \(R_{1}^{2}\)= 18
\(R_{1}^{2}\) - 9R1 + 18 = 0 \(\Rightarrow\) (R1 - 3) (R1 - 6) = 0
R1 = 6 \(\Omega\) (or) 3 \(\Omega\)
R2 = 3 \(\Omega\) (or) 6 \(\Omega\)
11.
வீடுகளுக்கு வரும் மின்னோட்டமானது இரண்டு விதமான மின் காப்பிடப்பட்ட கம்பிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன.
இந்த இரண்டு கம்பிகளில் ஒன்று சிவப்பு காப்புறை கொண்ட கம்பி. அது மின்னோட்ட கம்பி எனப்படும்.
கறுப்பு காப்புறை உள்ள மற்றொரு கம்பி நடுநிலை கம்பி எனப்படும்.
நமது வீட்டிற்கு கொடுக்கப்படும் மின்சாரமானது 220 வோல்ட் மின்னழுத்த வேறுபாடு கொண்ட ஒரு மாறு திசை மின்னோட்டமாகும்.
இவ்விரு கம்பிகளும் வாட்மணி மீட்டருடன் (மின்னளவிப் பெட்டி) இணைக்கப்பட்டுள்ளன.
மின்னோட்ட கம்பி மின் உருகு இழை வழியாக மின்னளவிப் பெட்டியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நடுநிலை கம்பி நேரடியாக மின்னளவிப் பெட்டியோடு இணைக்கப்பட்டுள்ளது.
மின்னளவிப் பெட்டியிலிருந்து வரும் கம்பியானது முதன்மைச் சாவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த சாவியானது தேவைப்படும் போது மின்னோட்டத்தை நிறுத்துவதற்கு பயன்படுகிறது.
முதன்மை சுற்றிலிருந்து வரும் மின்னோட்ட கம்பிகள் வீட்டினுள் அமைக்கப்பட்டிருக்கும் தனித்தனிச் சுற்றுகளுக்குத் திறனை வழங்கும்.
இரு வகையான மின்சுற்றுகள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
மின்பல்புகள், மின் விசிறிகள் அடங்கிய ஒரு சுற்றுக்கு 5A அளவிலான குறைந்த திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
குளிர்சாதன பெட்டிகள், நீர் சூடேற்றிகள், மின் சலவை பெட்டி, ரொட்டி சுடும் அடுப்பு, மின்சார அடுப்பு, மின்சூடேற்றி, வெந்நீர் கொதிகலன் அடங்கிய மின்திறன் சுற்றுகளுக்கு 15 A அளவிலான அதிக திறன் வழங்கும் சுற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன.
வீட்டிலுள்ள அனைத்து சுற்றுக்களும் பக்க இணைப்பு முறையில் இணைக்கப்படுவதால் ஒரு சுற்றில் தடை ஏற்பட்டாலும் அது மற்ற சுற்றுக்களை பாதிக்காது. பக்க இணைப்பின் மற்றொரு நன்மை என்னவெனில் அனைத்து மின்சாதனங்களும் சமமான மின்னழுத்தத்தை பெறும்.
12.
மின்திறன் \(P=\frac { { V }^{ 2 } }{ R } \)
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக் கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
13.

1. உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு கணக்கிட வேண்டிய திரவத்தினை கொள்கலனில் நிரப்பி சோதனையை தொடங்கலாம்.
2. இப்பொழுது கொள்கலனில் உள்ள திரவத்தின் நிலையை L1 எனக் குறித்துக் கொள்ளலாம்.
3. பிறகு கொள்கலன் மற்றும் திரவத்தினை படத்தில் காட்டியுள்ளவாறு வெப்பப்படுத்தப்படுகிறது.
4. தொடக்கத்தில் கொள்கலனானது வெப்ப ஆற்றலைப் பெற்று விரிவடையும்.
5. அப்போது திரவத்தின் பருமன் குறைவதாகத் தோன்றும். இப்போது இந்த நிலையை L2 எனக் குறித்துக் கொள்ளலாம்.
6. மேலும் வெப்பப்படுத்தும்போது திரவமானது விரிவடைகிறது. தற்போது திரவத்தின் நிலையை L3 எனக் குறித்துக் கொள்ளலாம்.
7. நிலை L1 மற்றும் L3 க்கு இடையேயான வேறுபாடு தோற்ற வெப்ப விரிவு எனவும், நிலை L2 மற்றும் L3 இடையேயான வேறுபாடு உண்மை வெப்ப விரிவு எனவும் அழைக்கப்படுகிறது.
8. எப்போதும் உண்மை வெப்ப விரிவு தோற்ற வெப்ப விரிவை விட அதிகமாக இருக்கும்.
9. உண்மை வெப்ப விரிவு = L3 - L2
10. தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
14.
பரப்பில் ஏற்படும் மாற்றம் ΔA = 11 - 10 = 1மீ2
உண்மையான பரப்பு Ao = 10 மீ2
தொடக்க வெப்பநிலை T1= 90 K
வெப்ப விரிவு குணகம் αA = 0.0021 K-1
இறுதி வெப்பநிலை T2 = ?
\(\frac{\Delta \mathrm{A}}{\mathbf{A_o}_{}} =\alpha_{A} \Delta \mathrm{T} \)
\(\frac{\mathrm{lm}^{2}}{10 \mathrm{~m}^{2}} =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(0.1 =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(\frac{0.1}{0.0021} =\mathrm{T}_{2}-90 \)
\(\mathrm{~T}_{2} =\frac{0.1}{0.0021}+90 \)
\(\mathrm{~T}_{2} =137.61 \mathrm{~K} \)
காப்பர் தண்டின் இறுதி வெப்பநிலை = 137.61 K
15.
திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
= 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
16.
கன உந்து (Heavy vehicle) - ன் இயக்க ஆற்றல் = \(\frac { 1 }{ 2 } \)m1v12
இரு சக்கர வாகனத்தின் இயக்க ஆற்றல் = \(\frac { 1 }{ 2 } \)m2v22
\(\frac { 1 }{ 2 } \)m1v12 = \(\frac { 1 }{ 2 } \)m2v22 = K எனக் கொள்வோம்.
\(v_{1}=\sqrt{\frac{2 K}{m_{1}}} \) மற்றும் \( v_{2}=\sqrt{\frac{2 K}{m_{2}}}\)
இரண்டு வாகனங்களின் உந்தம்
\(\mathrm{p}_{1}=\mathrm{m}_{1} \mathrm{v}_{1}=\mathrm{m}_{1} \sqrt{\frac{2 \mathrm{~K}}{\mathrm{~m}_{1}}}=\sqrt{2 \mathrm{~m}_{1} \mathrm{~K}} \)
\(\mathrm{p}_{2}=\mathrm{m}_{2} \mathrm{v}_{2}=\mathrm{m}_{2} \sqrt{\frac{2 \mathrm{~K}}{\mathrm{~m}_{2}}}=\sqrt{2 \mathrm{~m}_{2} \mathrm{~K}}\)
உந்த விகிதம்
\(\frac{p_{1}}{p_{2}}=\frac{\sqrt{2 m_{1} \mathrm{~K}}}{\sqrt{2 m_{2} \mathrm{~K}}}\)
ஆனால்,\(\mathrm{m}_{1}=4 \mathrm{~m}_{2}\)
\(=\frac{\sqrt{2 \times 4 m_2 K}}{\sqrt{2 m_2 K}}=\frac{\sqrt{4}}{1}=\frac{2}{1}\)
உந்த விகிதம் = 2 : 1
17.
அண்டத்தில் உள்ள பொருட்களின் ஒவ்வொரு துகளும் பிற துகளை ஒரு குறிப்பிட்ட விசை மதிப்பில் ஈர்க்கிறது.
அவ்விசையானது அவைகளின் நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்விகிதத்திலும், அவைகளின் மையங்களுக்கிடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும்.
மேலும் இவ்விசை நிறைகளின் இணைப்புக் கோட்டின் வழியே செயல்படும்.
இவ்விசை எப்போதும் ஈர்ப்பு விசையாகும். இவ்விசை, நிறைகள் அமைந்துள்ள ஊடகத்தை சார்ந்தது அல்ல.
m1 மற்றும் m2 என்ற நிறையுடைய இரு பொருள்கள் r என்ற தொலைவில் வைக்கப்பட்டுள்ளதாக கருதுவோம்.
இவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்பு விசை F ஆனது, பொது ஈர்ப்பியல் விதிப்படி.
நியூட்டன் ஈர்ப்பியல் விதிப்படி,

\(F\propto \) m1 \(\times\) m2
\(F\propto { 1/r }^{ 2 }\)
இவை இரண்டையும் இணைத்து
\(F\propto \cfrac { { m }_{ 1 }\times{ m }_{ 2 } }{ { r }^{ 2 } } \)
\(F=\cfrac { { Gm }_{ 1 }\times m_{ 2 } }{ { r }^{ 2 } } \)
G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு (SI அலகுகளில்) 6.674 \(\times\) 10-11N m2kg-2
18.
1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
3. ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை, வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 \(\times\) 108 மீவி-1.
5. ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (\(\lambda\)) மற்றும் அதிர்வெண்(v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = v\(\lambda\) என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலைநீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
7. கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
8. ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.
19.
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்கோட்டு உந்தம் (p) = 2.5 கிகி மீவி-1
சூத்திரம்:
நேர்கோட்டு உந்தம் (p)=நிறை (m) \(\times\) திசைவேகம் (v)
திசைவேகம் = நேர்கோட்டு உந்தம் / நிறை = 2.5/5
= 0.5 மீ வி-1
20.
(i) கோளக லென்சுகளுக்கு லென்சு சமன்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.
(ii) இச்சமன்பாடு பொருளின் தொலைவு (u), பிம்பத்தின் தொலைவு (v) மற்றும் குவியத் தொலைவு (f) ஆகியவற்றைத் தொடர்புபடுத்துகிறது.
(iii) லென்சு சமன்பாடானது,
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
21.
ஒரு மின்சுற்றில் மின்கலன், மின்விளக்கு மற்றும் சாவி போன்ற பல மின்கூறுகள் உள்ளன.
22.
வாயுக்களின் அழுத்தம், கனஅளவு மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை தொடர்புபடுத்தும் மூன்று அடிப்படை விதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை
(i) பாயில் விதி
(ii) சார்லஸ் விதி
(iii) அவகேட்ரோ விதி
23.
சுருள் வில்லால் செயல்படும் எதிர்விசை =-25 N நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒரு சுருள் வில்லினை அமுக்கத் தேவையான விசை 25 N எனில் அதற்கு சமமான எதிர்திசையில் நடக்கும். எனவே -25N.
24.
ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும்போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
25.
எதிரொலி கேட்க வேண்டும் எனில், ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையே குறைந்தபட்சம் 17.2 மீ தொலைவு இருக்க வேண்டும்.
26.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

27.
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P α \(\frac{1}{V}\)
28.
இரட்டைகளின் தொகுபயன் விசை மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல் விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்கிறோம்.
இரட்டையின் திருப்புத்திறன் (M) = விசையின் எண் மதிப்பு (F) \(\times\) இணைவிசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு (S)
M = F \(\times\) S
29.
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகை அடைகின்றன.
இந்நிகழ்வு நிறப்பிரிகை எனப்படும்.
30.
குவி லென்சின் திறன் P =+6D
குழிலென்சின் திறன் P = -4D
கட்டமைப்பின் திறன் P=?
P=P1+P2=6-4=2D
P=2D
31.
(i) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே எந்த வெப்ப ஆற்றல் பரிமாற்றமும் இல்லை எனில் அந்தப் பொருட்கள் வெப்பச் சமநிலையில் உள்ளன என்று பொருள்.
(ii) வெப்பநிலை வேறுபாட்டினால் வெப்ப ஆற்றல் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குப் பரவுகிறது.
(iii) ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்கள் வெப்ப சமநிலையில் உள்ளது எனவும் வரையறுக்கலாம்.
32.
கொடுக்கப்பட்டவை:
இரு கோள்களின் நிறை விகிதம் =M1:M2 = 1:2
இரு கோள்களின் ஆர விகிதம் =R1:R2 = 1:2
கண்டறிய:
இரு கோள்களின் மீதான புவி ஈர்ப்பு முடுக்கம்
=g1:g2=?
g=\(\frac { GM }{ { R }^{ 2 } } \)
ஈர்ப்பு மாறிலி G=6.674 x 10-11 Nm2 kg-2
g1=\(\frac { { GM }_{ 1 } }{ { R }_{ 1 }^{ 2 } } \);
g2=\(\frac { G(2{ M }_{ 1 }) }{ (2{ R }_{ 1 })^{ 2 } } \)
(M1- இன் இருமடங்கு M2; R1-இன் இருமடங்கு R2)
∴ g2=\(\frac { 2{ GM }_{ 1 } }{ 4{ R }_{ 1 }^{ 2 } } =\frac { { GM }_{ 1 } }{ 2{ R }_{ 1 }^{ 2 } } \)
\(\frac { { g }_{ 1 } }{ { g }_{ 2 } } =\frac { { GM }_{ 1 } }{ { R }_{ 1 }^{ 2 } } \times \frac { 2{ R }_{ 1 }^{ 2 } }{ { GM }_{ 1 } } =\frac { 2 }{ 1 } \)
g1: g2 = 2:1
33.
V=(Vo+0.61T) மீவி-1
=(331.3+0.61)=337.4
= (331.3+6.1)337.4 மீவி-1
D=V x t
D= 337.4 x 0.274
D = 92.45 மீ

34.
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
35.
i) ஆம், பிம்பம் கிடைக்கும். ஆனால் தெளிவான பிம்பம் தெரிவதில்லை.
ii) இல்லை. குவிலென்சானது தளக் குவிலென்சாக மாறிவிடும், இது குவிலென்சை போன்று செயல்பட்டு ஒளிக்கற்றையை குவிக்கும்.
36.
(b)
பாவை
37.
(a)
330
38.
(b)
-400
39.
(c)
அதிர்வுகளால் ஒலியை உருவாக்குகின்றன.
40.
(c)
திசையில் நிலைமம்
41.
(a)
நேர்க்குறி
42.
(a)
330 மீவி-1
43.
(c)
ஓம்
44.
(a)
A\(\leftarrow\)B, A\(\leftarrow\)C, B\(\leftarrow\)C
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards