10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
1979
1989
1990
1991
2.
அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?
கெய்ரோ
ஜோர்டான்
லெபனான்
சிரியா
3.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
செப்டம்பர் 1959
செப்டம்பர் 1949
செப்டம்பர் 1954
செப்டம்பர் 1944
4.
எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?
உட்ரோ வில்சன்
ட்ரூமென்
தியோடர் ரூஸ்வேல்ட்
பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்
5.
வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?
சன் யாட் சென்
ஷியாங் கே-ஷேக்
மைக்கேல் பொரோடின்
சூ-யென்-லாய்
6.
துருக்கிய அரபுப்பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம்______ ஆகும்.
7.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்________ ஆகும்
8.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்______ ஆவார்.
9.
1918இல் பல்கலைக்கழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.
10.
நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ________ ஆவார்.
11.
நிகோ டின் டியம்
12.
ஹோ சி மின்
13.
அன்வர் சாதத்
14.
சிங்மென் ரீ
15.
டாக்டர் சன் யாட் சென்
16.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
17.
மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.
18.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
19.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
20.
கோமின்டாங்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண் அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.
21.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
22.
ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியமானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
23.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
1.
(d)
1991
2.
(a)
கெய்ரோ
3.
(b)
செப்டம்பர் 1949
4.
(b)
ட்ரூமென்
5.
(b)
ஷியாங் கே-ஷேக்
6.
( )
வெர்செய்ல்ஸ்
7.
( )
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்
8.
( )
ஷியாங்-கை-ஷேக்
9.
( )
பீகிங்
10.
( )
டாக்டர் சன்யாட்சென்
11.
தெற்கு வியட்நாம்
12.
வடக்கு வியட்நாம்
13.
எகிப்து
14.
தென் கொரியா
15.
கோமின்டாங்
16.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரங்கில் முதலாம் உலக நாடுகள் என்றும், சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
17.
சூயஸ் கால்வாய் சிக்கல்:
(i) எகிப்தில் 1952 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டார். அவர் 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்
(ii) இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவு செய்தன.
(iii) இச்சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்து வசதியாக அக்கபா வளைகுடாவை திறந்து விட்டதோடு அதன் மூலம் எகிப்தின் எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
18.
1. மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
2. இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
19.
1. ஷியாங் கை ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிடும் விதமாக ஆங்காங்கே பல நிலைகளை அமைத்திருந்தார்.
2. மாவோவும் ஹுனான் பகுதியை விட்டு அகன்று பாதுகாப்பான ஒரு பகுதிக்குச் செல்ல நினைத்தார்.
3. கிட்டத்தட்ட 1933 ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின்மீது முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
4. ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934ல் கிளம்பினர்.
5. அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
6. இவர்களில் 20,000 பேர் மட்டும் 1935 இன் பிற்பகுதியில் 6000 மைல்களைக் கடந்து ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
7. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
20.
(i) கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் - கை - ஷேக் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும் மாசேதுங்கும் விளங்கினர்
(ii) பொதுவுடைமை வாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமை வாதிகளை முக்கிய பொறுப்புக்களிலிருந்து விடுவித்தார்
(iii) பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கோ பெருக்கப் பெற்று அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது
(vi) ஷியாங் - கை - ஷேக் சீனாவை படையெடுக்க துவங்கினார். காண்டனில் ஆரம்பித்த அவர் 1925 இன் இறுதியில் ஹான்கோ வரை பிடித்திருந்தார்
21.
1. மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் டோவேஜரின் மரணத்தோடு துவங்கியது.
2. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டனர்.
3. உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மடங்குகளில் பரவியது.
4. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
22.
ஐரோப்பிய குழுமம்:
1. 1949 இல் பத்து நாடுகள் லண்டனில் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்க கையொப்பமிட்டன. இதன் தலைமையகம் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது.
2. அதன்மூலம் ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும், ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்டு சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்குச் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும், கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுவதுமாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.
ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:
1. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
2. அதன் மூலம் ஐரோப்பியப் பொதுச்சந்தையை பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தின.
ஐரோப்பிய பொருளாதார சமூகம் :
1. இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
2. சந்தைப் போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
3. பொதுவான விவசாயக் கொள்கையையும், பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும் இவ்வமைப்பு உருவாக்கியது.
ஒற்றை ஐரோப்பியர் சட்டம்:
1. ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1987 இல் நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்ட வடிவம் கொடுத்தது.
2. மேலும் அது உறுப்பு நாடுகளை வெளியுறவுக் கொள்கையில் அதிகமான ஒத்துழைப்பை நாடியது.
ஐரோப்பிய ஒன்றியம்:
1. 1992ல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
2. பொதுவான நிதிக் கொள்கையும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் (யூரோ) முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நிர்வகிக்கும் பொது நிறுவனங்களும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
3. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை பிரெஸெல்ஸ் (பெல்ஜியத்தின்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
23.
மா சே துங்:
1. மா சே துங் தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹூனான் நகரில் பிறந்தார்.
2. ஹூனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய அவர் ஒரு முழு பொதுவுடைமைவாதியாக மாறியிருந்தார்.
3. கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் கை-ஷேக் இருந்தபோது பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும், மா சே - துங்கும் இருந்தனர்.
விவசாயிகளை வழிநடத்திய மாவோ:
1. கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ உணர்ந்தார். அதனால் அவர் விவசாயிகளை ஒன்றிணைக்க முயன்றார்.
2. கோமிங்டாங்கிற்கும் பொதுவுடைமை கட்சிக்கும் இடையே நிலவிய உறவு முறிந்ததும் மாவோவின் தலைமையில் சில நூறு விவசாயிகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் ஏழு ஆண்டுகள் பதுங்கியிருந்தனர்.
3. கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதியில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக்கொண்டே சென்றது.
4. ஷியாங் கை-ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிட்டார். எனவே மாவோ ஹூனான் பகுதியை விட்டு அகன்று ஒரு பாதுகாப்பான பகுதிக்கு செல்ல நினைத்தார்.
நீண்ட பயணம்:
1. 1933 ஆம் ஆண்டுவாக்கில் சீனப் பொதுவுடைமை கட்சியின் மீது முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
2. அவர் 1934 இல் 1,00,000 இராணுவத்தினருடன் ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்தார். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
3. இப்பயணத்தில் பங்கு பெற்றோர் தொடர்ச்சியாக கடும் தொந்தரவிற்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டனர்.
4. இறுதியில் 6,000 மைல்களைக் கடந்து 1935 இன் பிற்பகுதியில் ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
5. மேற்கொண்டு அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.
6. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
7. கோமிங்டாங் அரசு விவசாயிகளை உள்ளடக்கிய போர் வீரர்களின் அதிருப்தியை சம்பாதித்த வேளையில் மாவோ நடுத்தர வர்க்கத்தின் ஆதரவைப் பெற கடுமையாக முயற்சித்தார்.
மாவோவின் வெற்றி:
1. மாவோ ஒருபுறம் கொரில்லாப் போர் முறையைக் கடைபிடித்துக் கொண்டே மறுபுறம் பெயரளவிலான இராணுவ நகர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
2.ஷியாங் கை - ஷேக்கின் இராணுவம் வேகமாக உதிரத் துவங்கியது. சீனாவின் பெருவாரியான பகுதிகள் 1948 இல் பொதுவுடைமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
சீன மக்கள் குடியரசு
1. 1949 இல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது. அம்மாநாடு நடுவண் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுத்து அதற்கு மா சே - துங்கை தலைவராக நியமித்தது.
2. சீனாவில் மா சே - துங்கின் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards