10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
GEO - இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.
நீலகிரி
அகத்திய மலை
பெரிய நிக்கோபார்
கட்ச்
2.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ .
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
3.
இமய மலையில் 2400 மீ உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள்______
இலையுதிர்க்காடுகள்
ஆல்பைன் காடுகள்
மாங்குரோவ் காடுகள்
ஓதக்காடுகள்
4.
நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.
கோடைக்காலம்
குளிர்க்காலம்
மழைக்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
5.
வானிலையியல் ஒரு _______ அறிவியலாகும்
வானிலை
சமூக
அரசியல்
மனித
6.
மானாஸ்
7.
தேசிய பூங்காக்கள்
8.
கடலோரக் காடுகள்
9.
வடகிழக்குப் பருவக் காற்று
10.
சுந்தரவனம்
11.
கூற்று (A) : இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.
காரணம் (R) : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
12.
கூற்று (A) : பருவக் காற்றுகள் எளிதில் புரிந்துகொள்ள இயலாத வானிலை நிகழ்வாகும்.
காரணம் (R) : வானிலை வல்லுநர்கள் பருவக்காற்றின் தோற்றத்தைப் பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
ஆ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு.
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு காரணம் சரி.
13.
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்
அ) அட்ச பரவல்
ஆ) உயரம்
இ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்
ஈ) மண்
14.
ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.
அ) பாலைவனம்
ஆ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா
இ) கோதாவரி டெல்டா
ஈ) மகாநதி டெல்டா
15.
வன உயிரினங்கள் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படுகின்றன? அவை யாவை?
16.
முட்புதர்க் காடுகள் - குறிப்பு தருக.
17.
'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?
18.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகளிலுள்ள மரங்களை எழுதுக..
19.
அதிக மழை பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக
20.
’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
21.
22.
’வானிலையியல்’ வரையறு
23.
கோடைக்காலம் மற்றும் குளிர்காலம்
24.
வடகிழக்கு பருவக் காற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று
25.
வானிலை மற்றும் காலநிலை
26.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
27.
இந்தியா அயன மண்டலப் பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
28.
இந்தியாவில் உள்ள உயிர்க்கோள பெட்டகங்கள் மற்றும் அவைகளின் அமைவிடங்களை எழுதுக.
29.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
30.
இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
3. அதிக மழை பெரும் பகுதிகள்.
4. மலைக் காடுகள்.
5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.
1.
(d)
கட்ச்
2.
(b)
ஆந்திரப் பிரதேசம்
3.
(b)
ஆல்பைன் காடுகள்
4.
(a)
கோடைக்காலம்
5.
(a)
வானிலை
6.
உயிர்க் கோள காப்பகம்
7.
102
8.
கடற்கரைக் காடுகள்
9.
அக்டோபர், டிசம்பர்
10.
மேற்கு வங்காளம்
11.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.
12.
அ) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி.
13.
ஈ) மண்
14.
அ) பாலைவனம்
15.
இயற்கைச் சூழ்நிலை அல்லது காடுகளை வாழிடமாகக் கொண்டு வாழும் விலங்குகள் வன உயிரினங்கள் எனப்படுகின்றன. வன உயிரினங்கள் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.
அவை.
1) முதுகெலும்புள்ளவை (மீன், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள்)
2) முதுகெலும்பில்லாதவை (தேனீ, பட்டாம் பூச்சி, அந்திப் பூச்சி போன்றவை).
16.
பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்கள் முட்புதர்க் காடுகள் என்றும் அழைக்கப்படும். இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50செ.மீ குறைவாகவும், அதிக வெப்பமும் மற்றும் குறைவான ஈரப்பதமும் கொண்டப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்வகைத் தாவரங்கள் வடமேற்கு இந்திய பகுதிகளான மேற்கு இராஜஸ்தான், வடக்கு குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றன.
17.
1. "புலிகள் பாதுகாப்புத் திட்டம்" இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
3. இத்திட்டத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
18.
1. இரப்பர்
2. எபனி
3. ரோஸ் மரம்
4. தென்னை
5. மூங்கில்
6. சின்கோனா
7. சிடார்
19.
1. மேற்கு கடற்கரை
2. அசாம்
3. மேகாலயாவின் தென்பகுதி
4. நாகாலாந்து
5. திரிபுரா
6. அருணாச்சலப்பிரதேசம்
20.
1. தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென்னிந்தியாவில்) 'பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது.
2. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
21.
22.
வானிலையியல்:
வானிலையின் பல்வேறு கூறுகளைப் பற்றி குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பற்றிய ஒரு அறிவியல் பிரிவு வானிலையியல் எனப்படும்.
23.
| வ.எண் | கோடைக் காலம் | குளிர்காலம் |
| 1 | மார்ச் முதல் மே வரை இந்தியாவின் கோடைக்காலமாகும். | ஜனவரி முதல் பிப்ரவரி வரை இந்தியாவின் குளிர் காலமாகும். |
| 2 | இக்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் கடகரேகையில் செங்குத்தாக விழுகின்றன. | இக்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் மகர ரேகையின் மீது செங்குத்தாக விழுகின்றன. |
| 3 | இதனால் இந்தியப் பகுதிகள் செங்குத்தான சூரியக் கதிர்களைப் பெறுகின்றன. | இதனால் இந்தியப் பகுதிகள் சாய்வான சூரியக்கதிர்களை பெறுகின்றன. |
| 4 | இதுவே நாடுமுழுவதும் வெப்பமான வறண்ட வானிலை நிலவக் காரணமாகிறது. | இதுவே குறைந்த வெப்பத்திற்குக் காரணமாகிறது. |
| 5 | இப்பருவத்தில் பீகார், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்கள் இடியுடன் கூடிய குறுகிய கால மழையைப் பெறுகின்றன. | இப்பருவத்தில் மேற்கு இமயமலை, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகள் மழையைப் பெறுகின்றன. |
24.
| வ.எண் | வடகிழக்கு பருவக் காற்று | தென்மேற்கு பருவக்காற்று |
| 1 | இக்காற்று நிலப்பகுதியில் இருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது. | இக்காற்று இந்தியப் பெருங்கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுகிறது. |
| 2 | வடகிழக்குப் பருவக்காற்றின் காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையாகும் | தென்மேற்குப் பருவக் காற்றின் காலம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். |
| 3 | இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகாவின் உட்பகுதிகள் நல்ல மழையைப் பெறுகின்றன. | இப்பருவக்காற்றின் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுகள், வடகிழக்கு இந்தியப் பகுதிகள் குறிப்பாக மேகாலயா நல்ல மழையைப் பெறுகின்றன. |
25.
| வ.எண் | வானிலை | காலநிலை |
| 1 | வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும். | காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும். |
| 2 | வெப்பம், மழைப்பொழிவு, ஈரப்பதம், காற்று, அழுத்தம் ஆகியவை ஒரு இடத்தின் வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும். | அட்சரேகை பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை காரணிகள் ஆகும். |
26.
காரணம்: புவிப்பரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக உள்ளன.
27.
காரணம்: இந்தியாவின் பெரும் பகுதி அயன மண்டலப்பகுதியில் அமைந்துள்ளது.
இமயமலைகள் மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து, இந்திய துணைக் கண்டத்தை வெப்பப்பகுதியாக வைத்திருக்கிறது.
இதனால் இந்தியா அயன (வெப்ப) மண்டல பருவக்காற்றுக் காலநிலையைப் பெற்றுள்ளது.
28.
இந்தியாவின் உயிர்கோள காப்பகங்கள்: இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் 11 காப்பகங்கள் (மன்னார் வளைகுடா, நந்தாதேவி, நீலகிரி, நாக்ரேக், பச்மாரி, சிம்லிபால், சுந்தரவணம், அகத்திய மலை பெரிய நிக்கோபார், கஞ்சன் ஜங்கா மற்றும் அமர்கண்டாக்) யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்க்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
| வ.எண் | உயிர்க்கோள காப்பகங்கள் | மாநிலம் |
| 1 | அச்சனக்மார்-அமர்கண்டாக் | மத்திய பிரதேசம் சத்தீஸ்கர் |
| 2 | அகத்தியமலை | கேரளா |
| 3 | திப்ரு செய்கொவா | அசாம் |
| 4 | திகேங் திபங் | அருணாச்சல பிரதேசம் |
| 5 | பெரிய நிக்கோபார் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
| 6 | மன்னார் வளைகுடா | தமிழ்நாடு |
| 7 | கட்ச் | குஜராத் |
| 8 | கஞ்சன்ஜங்கா | சிக்கிம் |
| 9 | மானாஸ் | அசாம் |
| 10 | நந்தா தேவி | உத்தரகாண்ட் |
| 11 | நீலகிரி | தமிழ்நாடு |
| 12 | நாக்ரெக் | மேகாலயா |
| 13 | பச்மாரி | மத்தியப் பிரதேசம் |
| 14 | சிம்லிபால் | ஒடிசா |
| 15 | சுந்தரவனம் | மேற்கு வங்காளம் |
| 16 | குளிர் பாலைவனம் | இமாச்சலப் பிரதேசம் |
| 17 | சேஷாலம் | ஆந்திரப் பிரதேசம் |
| 18 | பன்னா | மத்தியப் பிரதேசம் |
29.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
30.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards