10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
HIS - 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இராஜராம் மோகன்ராய் 1828 ஆம் ஆண்டு ________ நிறுவினார்.
ஆரிய சமாஜம்
பிரம்ம சமாஜம்
பிரார்த்தன சமாஜம்
இராமகிருஷ்ண மிஷன்
2.
‘சத்யார்த்தபிரகாஷ்’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
தயானந்த சரஸ்வதி
அயோத்தி தாசர்
அன்னி பெசன்ட்
நாராயண குரு
3.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
மகாதேவ் கோவிந்த் ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
ஜோதிபா புலே
அய்யன்காளி
4.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
பாபா தயாள் தாஸ்
பாபா ராம்சிங்
குருநானக்
ஜோதிபா புலே
5.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
1827
1829
1826
1927
6.
_______ பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலக் கல்வியும் மேலை அறிவியலும் அறிமுகம் செய்யப்படுவதை முழுமையாய் ஆதரித்தார்
7.
_____ கேரளாவின் சாதியக் கட்டுமானத்தில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டு வந்தது.
8.
______ அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.
9.
சத்யார்த்த பிரகாஷ் எனும் நூல்_______ நேர்மறைக் கொள்கைகளைப் பட்டியலிடுகிறது
10.
சத்யசோதக் சமாஜத்தை தொடங்கியவர்______ ஆவார்
11.
சுவாமி சாரதானந்தா
12.
R.C. பண்டர்சர்
13.
தேவேந்திரநாத்
14.
ஈஸ்வர் சந்திரவித்யாசாகர்
15.
பாபா தயாள்தாஸ்
16.
அயோத்தி தாசர் இலங்கை சென்றபோது நடந்த நிகழ்வு என்ன?
17.
சீர்திருத்த இயக்கங்களுக்கும், சமய இயக்கங்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?
18.
சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
19.
இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக
20.
ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.
21.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
22.
ராமலிங்க அடிகள்
அ) ஜீவகாருண்யம் என்றால் என்ன?
ஆ) அருட்பா என்றால் என்ன?
இ) சமரச வேத சன்மார்க்க சத்ய சங்கத்தின் முக்கியப் பங்களிப்பை குறிப்பிடுக.
ஈ) தனது இலவச உணவகத்தை அவர் எங்கே அமைத்திருந்தார் ?
23.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
24.
25.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
1.
(b)
பிரம்ம சமாஜம்
2.
(a)
தயானந்த சரஸ்வதி
3.
(a)
மகாதேவ் கோவிந்த் ரானடே
4.
(b)
பாபா ராம்சிங்
5.
(b)
1829
6.
( )
இராஜாராம் மோகன்ராய்
7.
( )
நாராயண குரு அய்யன்காளி
8.
( )
சிங்சபா
9.
( )
ஒரு கடவுள் வழிபாடு, உருவ வழிபாட்டை நிராகரித்தல் பிராமணர் மேலாதிக்கம், சமூக நடைமுறைகள் ஆகியவற்றை மறுத்தல்
10.
( )
ஜோதிபா புலே
11.
குருகுலம்
12.
பிராத்தனா சமாஜம்
13.
ஆதி பிரம்மசமாஜம்
14.
விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்
15.
நிரங்கரி இயக்கம்
16.
(i) அயோத்தி தாசர் 1898 இல் இலங்கை சென்ற அவர் அங்கே பௌத்தத்தைத் தழுவினார்
(ii) அதே ஆண்டில் பௌத்தமதத்தின் வழியே பகுத்தறிவின் அடிப்படையிலான சமத்துவத்தைக் கட்டமைப்பதற்காக சாக்கிய பௌத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவினார்
(iii) பிராமணர்களால் இழிவு படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் என்பவர்களே உண்மையான பௌத்தர்கள் என அவர் வாதிட்டார்
17.
| சீர்திருத்த இயக்கங்கள் | சமய இயக்கங்கள் | |
| i) | சீர்திருத்த இயக்கம் என்பது மிகவும் ஆழமானது சமூக மற்றும் அறிவுசார் விழிப்புணர்வை உள்ளடக்கியது | சமய இயக்கங்கள் என்பது சமயங்களை மீட்டு எடுப்பது என்பதாகும் |
| ii) | பிரம்ம சமாஜம் பிராத்தனை சமாஜம், அலிகார் இயக்கம் போன்றவை சீர்திருத்த இயக்கங்களும் எடுத்துக்காட்டாகும் | ஆரிய சமாஜம் ராமகிருஷ்ணா மிஷன், தியோபந்த் இயக்கம் போன்ற சமயப் புத்தெழுச்சி மீட்டெடுப்பு இயக்கங்களாகும் |
18.
(i) சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
(ii) விவேகானந்தரின் செயலூக்கம் மிக்க சித்தாந்தம் மேலைக்கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்
19.
1. ராமலிங்க சுவாமிகள் உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
2. அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
3. அவர் 1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
4. 1866 இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867 இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
20.
(i) அய்யன்காளி 1863 இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சி பகுதியாகும்
(ii) குழந்தையாய் இருக்கும்போது அவர் சந்தித்த பாகுபாடு அவரைச் சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது. பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம்பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்
(iii) ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்ட மேல்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார்
(iv) மேல்சாதியினர் பயன்படுத்திய ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்தப் பொது சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப் பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்
21.
1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
2. அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர் அவருக்கு இணை யாருமில்லை.
3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவதையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
22.
அ) ராமலிங்க அடிகள் அன்பையும் இரக்கத்தையும் செடி கொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களின் மேலும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றாகும்
ஆ) திருவருட்பா
இ) சமரச சுத்தசன்மார்க்க சத்ய சங்கம் எனும் அமைப்பை நிறுவி தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில்கொண்டு 1867ல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை நிறுவினார்
ஈ) வடலூர்
23.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
24.
25.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலை நாட்டுக் கல்வியினால் மக்கள் மேற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல் , சமத்துவம் , சுதந்திரம் , தேசியம் மற்றும் மனிதாபிமானம் போன்ற கருத்துகளால் மிகவும் கவரப்பட்டனர் .
இவர்கள் மீது கிறிஸ்துவ மதத்தின் தாக்கமும் ஏற்பட்டது.
இராஜா ராம்மோகன் ராய் பங்கிம் சந்திர சட்டர்ஜி, K.C.சென் போன்ற சீர்திருத்தவாதிகள் மக்களுக்கு உற்சாகமூட்டினார்.
மேற்கத்திய தாராள சிந்தனையில் பரவியதும் சமூக பண்பாட்டு விழிப்புணர்வு தோன்றியது.
இந்தியா பண்பாட்டில் இருந்த குறைகளை களைந்து இந்தியாவின் பழம்பெரும் கலாச்சார புகழை மீண்டும் கொண்டுவர விரும்பினார்.
அவர்கள் பல்வேறு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களைத் தோற்றுவித்தனர்.
இதன் மூலம் இந்தியா சமுதாயத்திலிருந்து குறைகளை களைய முற்பட்டனர்.
இத்தகைய சூழலில் தோன்றிய சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards