10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science ECO - Industrial Clusters in Tamilnadu - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Government and Taxes - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Food Security and Nutrition - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Globalization and Trade - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Gross Domestic Product and its Growth : an Introduction - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - India's International Relations - New Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
HIS - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
சென்டோ (CENTO) என்பது
மணிலா ஒப்பந்தம்
பாக்தாத் ஒப்பந்தம்
வார்சா ஒப்பந்தம்
இவற்றில் ஏதுமில்லை
2.
பனிப்போர் என்ற சொல்லாடலைக் கையாண்டவர்
மார்ஷல்
ஜார்ஜ் ஆர்வெல்
ட்ரூமென்
உட்ரோ வில்சன்
3.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
1979
1989
1990
1991
4.
5.
வம்போவா இராணுவக் கழகத்தின் முதல் இயக்குனர் யார்?
சன் யாட் சென்
ஷியாங் கே-ஷேக்
மைக்கேல் பொரோடின்
சூ-யென்-லாய்
6.
கோர்பசேவ் டிசம்பர் 25 1991 இல் தனது ________ அறிவித்தார்
7.
ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம்______ ஆகும்.
8.
ஜெர்மனி நேட்டோவில் ______ ஆம் ஆண்டு இணைந்தது.
9.
அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபுநாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம்________ ஆகும்
10.
டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர்______ ஆவார்.
11.
i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட நாடுகளில், சோவியத் இராணுவத்தால் 1948 முதல் பொதுவுடைமை அரசுகள் ஏற்படுத்தப்பட்டது.
ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.
iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.
அ) ii) மற்றும் iii) சரி
ஆ) i) மற்றும் ii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) i), ii) மற்றும் iii) சரி
12.
i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1878) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறியப்படுகிறது.
ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.
iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.
அ) i) மற்றும் ii) சரி
ஆ) ii) மற்றும் iii) சரி
இ) i) மற்றும் iii) சரி
ஈ) i) மற்றும் iv) சரி
13.
கியூபாவின் புரட்சி பற்றி எழுதுக
14.
சியாட்டோ (SETO) அல்லது மணிலா ஒப்பந்தம் பற்றி சிறு குறிப்பு வரைக
15.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
16.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
17.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
18.
சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.
19.
அணிசேரா இயக்கம்
அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.
20.
கொரியப்போர்
அ) கொரியப்போரின் போது வட கொரியாவின் அதிபர் யார்?
ஆ) வடகொரிய அதிபரின் தெற்குப்புற எதிரி யார்?
இ) கொரியப் போர் எத்தனை காலம் நீடித்தது?
ஈ) போரின் விளைவாக ஏற்பட்ட மனித உயிரிழப்பு எவ்வளவு?
21.
சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது
22.
அரபு - இஸ்ரேல் போர் பற்றி ஒரு பத்தியளவில் எழுதுக
23.
ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியமானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
24.
சீனாவை ஒரு பொதுவுடைமை நாடாக்க மா சே துங்கின் பங்களிப்பை அளவிடுக.
1.
(b)
பாக்தாத் ஒப்பந்தம்
2.
(a)
மார்ஷல்
3.
(d)
1991
4.
(b)
5.
(b)
ஷியாங் கே-ஷேக்
6.
( )
இராஜினாமாவை
7.
( )
மாஸ்டிரிக்ட்
8.
( )
1955
9.
( )
சென்டோ (அ) பாக்தாத் ஒப்பந்தம்
10.
( )
ஷியாங்-கை-ஷேக்
11.
ஆ) i) மற்றும் ii) சரி
12.
இ) i) மற்றும் iii) சரி
13.
(i) ஐக்கிய அமெரிக்க நாடு மத்திய அமெரிக்காவிலும் (ஹோண்டுரஸ், எல் சல்வதோ, நிகரகுவா, பணாமா, க்வாத்தமாலா), கரீபியப் பகுதியிலும் (கியூபா, டோமினியக் குடியரசு, ஹைதி) கிழக்கு ஆசியாவிலும் (பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தெற்கு வியட்நாம், தாய்லாந்து) தனக்கு துணைக் கோள்களாகச் சுற்றிச் செயல்படும் நாடுகளைக் கொண்டிருந்தது
(ii) இந்நாடுகள் ராணுவ அதிகாரிகளாலும் பெரும் நிலச்சுவான்தார்களாலும் சில சூழ்நிலைகளில் பெரு முதலாளிகளாலும் ஆட்சி செய்யப்பட்டு வந்தன
(iii) இது இந்நாடுகளை அமெரிக்க ஐக்கிய நாட்டின் பொருளாதார உதவியைச் சார்ந்திருக்கும்படி செய்தது. 5 வருடங்களுக்குப் பிறகு கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் சேர்ந்து ஊழல் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்
14.
(i) மணிலா ஒப்பந்தம் 1954 ஐக்கிய அமெரிக்க நாடு பிரான்ஸ், இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
(ii) இவ்வொப்பந்தத்தின் உறுப்பு நாடுகள் இப்பகுதியில் பொதுவுடைமை சிந்தனை பரவுவதையும் அக்கொள்கை செல்வாக்குப் பெறுவதையும் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.
(iii) ஆனால் நாட்டோ கூட்டமைப்பில் இருந்தது போன்று நிரந்தர படைகளையோ ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டையோ சியாட்டோ கொண்டிருக்கவில்லை
15.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரங்கில் முதலாம் உலக நாடுகள் என்றும், சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
16.
1. மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
2. இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
17.
1. ஷியாங் கை ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிடும் விதமாக ஆங்காங்கே பல நிலைகளை அமைத்திருந்தார்.
2. மாவோவும் ஹுனான் பகுதியை விட்டு அகன்று பாதுகாப்பான ஒரு பகுதிக்குச் செல்ல நினைத்தார்.
3. கிட்டத்தட்ட 1933 ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின்மீது முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
4. ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934ல் கிளம்பினர்.
5. அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
6. இவர்களில் 20,000 பேர் மட்டும் 1935 இன் பிற்பகுதியில் 6000 மைல்களைக் கடந்து ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
7. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
18.
1. மஞ்சு வம்சத்தின் சிதைவு பேரரசின் பாதுகாவலராயிருந்த பேரரசியார் டோவேஜரின் மரணத்தோடு துவங்கியது.
2. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்பட்டனர்.
3. உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911 ஆம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மடங்குகளில் பரவியது.
4. மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினர்.
19.
அ) 1961 - பெல்கிரேடில் கூடியது
ஆ) டிட்டோ (யுகோஸ்லோவியா) நாசர் (எகிப்து), நேரு (இந்தியா), நுக்ருமா (கானா), சசுகர்ணோ (இந்தோனேசியா)
இ) புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் 1955 - ம் ஆண்டு பாண்டுங்கில் (இந்தோனேசியா) கூடி இரு வல்லரசு அணிகளிலும் சேரக்கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தின. மேலும் அவை காலனிய ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் எவ்வடிவம் எடுத்தாலும் அதை எதிர்த்து நிற்பது என்ற முடிவு செய்தன
ஈ) அமைதியோடு இணைந்திருந்தால், அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல், எந்த அணியோடும் இராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல், எந்த வல்லரசுக்கும் தத்தம் நாட்டிற்குள் இராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல் போன்றவையே ஆகும்
20.
கிம் இல் சுங்
ஆ) சிங்மென் ரீ
இ) மூன்று ஆண்டுகள்
ஈ) இப்போரால் ஏற்பட்ட மனித உயிரிழப்பு எண்ணிக்கையில் அளவிட முடியாததாய் இருந்தது
21.
(i) மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ம் ஆண்டு பேரரசின் பாதுகாவலாயிருந்த பேராசிரியர் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர். உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது
(ii) மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தலாயினர்.
(iii) இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகியிருந்தார்.
(iv) அவர்களில் டாக்டர் சன் யாட் சென்னும் ஒருவர் சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையவும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(v) ஆனால் மஞ்சு அரசின் நிர்வாகத்தில் முன்பு அமைச்சராகப் பணியாற்றிய யுவான்-ஷி-கே வடபகுதி நவீன இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருந்தார்.
(vi) அவர், சிறு வயது பேரரசர் பதிவுயேறக் காரணமாக இருந்தவர்களை வலியுறுத்தி பேரரசரைப் பதவியை விட்ட விலகச் செய்யும் முயற்சியில் வெற்றிகண்டார். அங்கு ஒரு குடியரசும் ஏற்படுத்தப்பட்டது.
22.
(i) வெர்செல்ஸ் உடன்படிக்கையின் (1919) மூலம் துருக்கிய அரபுப் பேரரசை உருவாக்க நிர்பந்திக்கப்பட்டது.
(ii) பிரான்ஸ் நாடு சிரியாவையும் லெபனானையும் ஒருங்கிணைக்கவும் பிரிட்டன் நாடு ஈராக், பாலஸ்தீன், ஜோர்டான் ஆகிய நாடுகளை ஒருங்கிணைக்கவும் ஏற்பாடானது
(iii) முதலாம் உலகப்போருக்குப் பின் சுதந்திரத்தை எதிர்பார்த்த அரேபியர்கள் இவ்வேறுபாட்டால் அதிர்ச்சியடைந்தார்
(iv) சீயோனிய இயக்க தலைவர்களுக்கு பிரிட்டன் நாடு பாலஸ்தீனத்தின் பகுதிகளை யூதக் குடியிருப்புகளுக்கு வழங்க உறுதியளித்தது
(v) யூதர்கள் அரேபியரின் எந்த ஒரு கிளர்ச்சியையும் பிரிட்டனுடன் சேர்ந்து ஒடுக்க உறுதியளித்தனர்
(vi) வசதியான அரேபியரிடம் விலைபேசி நிலங்களைப் பெற்றுக் கொண்ட யூதர்கள் அங்கே பல தலைமுறைகளாக வேளாண்மை செய்து வந்தவர்களை விரட்டியதால் அரேபியர்களின் வெறுப்புணர்ச்சியும் எதிர்ப்பும் மிகுந்தது
(vii) 1945 அக்டோபர் திங்கள் கடைசியில் யூதத் திரை மறைவு அமைப்புகளான இர்கூன் ஸ்வாய் லூமி (சீயோனியத் துணை இராணுவ அமைப்பு) ஸ்டென் காங்கும் (சீயோனிய பயங்கரவாத அமைப்பு) தொடர்ச்சியாக பயங்கரவாதத் தாக்குதல்களை பெருமளவில் தொடுத்தன
(viii) இருப்புப் பாதைகள், பாலங்கள், விமானத் தளங்கள், அரசு அலுவலங்கள் போன்றவை வெடி வைத்துத் தாக்கப்பட்டன
(ix) பிரிட்டிஷ் அரசு பிரச்சனையை ஐக்கிய சபைக்கு எடுத்துச் சென்று தீர்வு கோரியது. ஐ.நா சபையும் அதற்கு உடன்பட்டு பிரிவினை சம்மதித்தது.
(x) பிரிட்டன் தனது துருப்புகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்தபோது அங்கு மீண்டும் சண்டை மூண்டது
(xi) இஸ்ரேலியர்கள் ஜெருசலேமுக்குச் செல்லும் முக்கிய சாலையை வெற்றிகரமாகக் கைப்பற்றி அதை மீட்க அரேபியர்கள் மேற்கொண்டப் பல முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தனர்
23.
ஐரோப்பிய குழுமம்:
1. 1949 இல் பத்து நாடுகள் லண்டனில் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்க கையொப்பமிட்டன. இதன் தலைமையகம் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது.
2. அதன்மூலம் ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும், ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்டு சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்குச் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும், கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுவதுமாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.
ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:
1. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
2. அதன் மூலம் ஐரோப்பியப் பொதுச்சந்தையை பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தின.
ஐரோப்பிய பொருளாதார சமூகம் :
1. இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
2. சந்தைப் போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
3. பொதுவான விவசாயக் கொள்கையையும், பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும் இவ்வமைப்பு உருவாக்கியது.
ஒற்றை ஐரோப்பியர் சட்டம்:
1. ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1987 இல் நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்ட வடிவம் கொடுத்தது.
2. மேலும் அது உறுப்பு நாடுகளை வெளியுறவுக் கொள்கையில் அதிகமான ஒத்துழைப்பை நாடியது.
ஐரோப்பிய ஒன்றியம்:
1. 1992ல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
2. பொதுவான நிதிக் கொள்கையும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் (யூரோ) முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நிர்வகிக்கும் பொது நிறுவனங்களும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
3. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை பிரெஸெல்ஸ் (பெல்ஜியத்தின்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
24.
மா சே துங்:
1. மா சே துங் தென்கிழக்கு சீனாவில் உள்ள ஹூனான் நகரில் பிறந்தார்.
2. ஹூனான் நகரை மையமாகக் கொண்டு தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய அவர் ஒரு முழு பொதுவுடைமைவாதியாக மாறியிருந்தார்.
3. கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் கை-ஷேக் இருந்தபோது பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும், மா சே - துங்கும் இருந்தனர்.
விவசாயிகளை வழிநடத்திய மாவோ:
1. கோமிங்டாங்கின் கட்டுப்பாடு நகரங்களின் மீது கடுமையாக இருந்ததை மாவோ உணர்ந்தார். அதனால் அவர் விவசாயிகளை ஒன்றிணைக்க முயன்றார்.
2. கோமிங்டாங்கிற்கும் பொதுவுடைமை கட்சிக்கும் இடையே நிலவிய உறவு முறிந்ததும் மாவோவின் தலைமையில் சில நூறு விவசாயிகள் காடுகள் சூழ்ந்த மலைப்பகுதிகளில் ஏழு ஆண்டுகள் பதுங்கியிருந்தனர்.
3. கோமிங்டாங்கால் அக்காட்டு மலைப்பகுதியில் நுழைய முடியாத அதே வேளையில் மாவோவின் படை பெருகிக்கொண்டே சென்றது.
4. ஷியாங் கை-ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிட்டார். எனவே மாவோ ஹூனான் பகுதியை விட்டு அகன்று ஒரு பாதுகாப்பான பகுதிக்கு செல்ல நினைத்தார்.
நீண்ட பயணம்:
1. 1933 ஆம் ஆண்டுவாக்கில் சீனப் பொதுவுடைமை கட்சியின் மீது முழுக்கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
2. அவர் 1934 இல் 1,00,000 இராணுவத்தினருடன் ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்தார். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
3. இப்பயணத்தில் பங்கு பெற்றோர் தொடர்ச்சியாக கடும் தொந்தரவிற்கும் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டனர்.
4. இறுதியில் 6,000 மைல்களைக் கடந்து 1935 இன் பிற்பகுதியில் ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
5. மேற்கொண்டு அவர்களோடு மற்ற பொதுவுடைமைவாதப் படைகளும் சேர்ந்து கொண்டன.
6. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
7. கோமிங்டாங் அரசு விவசாயிகளை உள்ளடக்கிய போர் வீரர்களின் அதிருப்தியை சம்பாதித்த வேளையில் மாவோ நடுத்தர வர்க்கத்தின் ஆதரவைப் பெற கடுமையாக முயற்சித்தார்.
மாவோவின் வெற்றி:
1. மாவோ ஒருபுறம் கொரில்லாப் போர் முறையைக் கடைபிடித்துக் கொண்டே மறுபுறம் பெயரளவிலான இராணுவ நகர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
2.ஷியாங் கை - ஷேக்கின் இராணுவம் வேகமாக உதிரத் துவங்கியது. சீனாவின் பெருவாரியான பகுதிகள் 1948 இல் பொதுவுடைமைவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
சீன மக்கள் குடியரசு
1. 1949 இல் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு பீகிங் நகரில் கூடியது. அம்மாநாடு நடுவண் ஆட்சிக்குழுவைத் தேர்ந்தெடுத்து அதற்கு மா சே - துங்கை தலைவராக நியமித்தது.
2. சீனாவில் மா சே - துங்கின் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி நிறுவப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science CIV - India's Foreign Policy - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - State Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Central Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Indian Constitution - New Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards