10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020 ( 10th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Question 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ______ என அழைத்தனர்
சார்
சுவாமி
அண்ணா
அய்யா
2.
______ ல் ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமாக மாறியது
1915
1920
1930
1925
3.
ராஜாராம் மோகன்ராய் இறந்தபிறகு அவருடைய பணிகளை ________ கவனித்தார்.
கேசவ் சந்திர சென்
ஈஸ்வர சந்திர வித்யாசகர்
M.G. ராணடே
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
4.
சென்டோ (CENTO) என்பது
மணிலா ஒப்பந்தம்
பாக்தாத் ஒப்பந்தம்
வார்சா ஒப்பந்தம்
இவற்றில் ஏதுமில்லை
5.
வெர்செயில்ஸ் உடன்படிக்கை கையெழுத்திட்ட ஆண்டு ______
1918
1925
1919
1935
6.
தென் அமெரிக்காவில் அஸ்டெக்குகள் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.
250
200
300
100
7.
ஷாண்டுங் மாகாணத்தில் சீனாவிற்கு ஜெர்மனியால் வழங்கப்பட்ட கியாச்சவ் பகுதியை _______ கைப்பற்றிக்கொண்டது
ஜப்பான்
துருக்கி
ஸ்பெயின்
இத்தாலி
8.
எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
1827
1829
1826
1927
9.
சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
செப்டம்பர் 1959
செப்டம்பர் 1949
செப்டம்பர் 1954
செப்டம்பர் 1944
10.
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
கவாசாகி
டோக்கியோ
ஹிரோஷிமா
நாகசாகி
11.
12.
எந்தநாடு முதல் உலகப்போருக்கு பின்னர் தனித்திருக்கும் கொள்கையைக் கைக்கொண்டது?
பிரிட்டன்
பிரான்ஸ்
ஜெர்மனி
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
13.
வைகுண்ட சுவாமிகளின் சீர்திருத்தங்கள் பற்றி சிறு குறிப்புத் தருக
14.
இராஜாராம் மோகன்ராய் பற்றி சிறுகுறிப்பு வரைக
15.
பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமனின் வரையறை எழுதுக
16.
கடன் குத்தகை திட்டம் என்றால் என்ன?
17.
போப்பாண்டவருடன் முசோலினி செய்து கொண்ட ஒப்பந்தம் பற்றி சுருக்கி எழுதவும்
18.
சிறு குறிப்பு தருக.
(i) டானென்பர்க் போர்
(ii) மார்ன் போர்
19.
ஒடுக்கப்பட்டோரின் நலன்களுக்காகப் போராடிய அய்யன்காளியின் பாத்திரத்தை மதிப்பீடு செய்க.
20.
மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
21.
பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
22.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
23.
தியோபந்த் இயக்கம்
அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் யாவை ?
இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கள் சமய ஆணையைப் பிறப்பித்தனர்?
24.
ஸ்டாலின் கிரேடு போர்
அ) ஜெர்மனி ஸ்டாலின் கிரேடை எப்போது தாக்கியது?
ஆ) ஸ்டாலின் கிரேடின் முக்கிய உற்பத்திப் பொருள்கள் யாவை?
இ) ஸ்டாலின் கிரேடைத் தாக்குவதற்கு ஹிட்லர் தீட்டிய திட்டத்தின் பெயரென்ன?
ஈ) ஸ்டாலின் கிரேடு போரின் முக்கியத்துவமென்ன?
25.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
26.
பால்கன் போர்கள்
அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?
27.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
28.
சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது
29.
பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்
30.
போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்
31.
சர்வதேச சங்கத்தின் அமைப்பும் உறுப்புகளும் பற்றி விவரிக்கவும்
32.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
33.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
34.
உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
நேச நாடுகள்
35.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
36.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
1917 - ரஷ்யப் புரட்சி
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்
1.
(d)
அய்யா
2.
(b)
1920
3.
(d)
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்
4.
(b)
பாக்தாத் ஒப்பந்தம்
5.
(c)
1919
6.
(b)
200
7.
(a)
ஜப்பான்
8.
(b)
1829
9.
(b)
செப்டம்பர் 1949
10.
(c)
ஹிரோஷிமா
11.
(c)
12.
(d)
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
13.
(i) வைகுண்ட சுவாமிகளும் உருவ வழிபாட்டை எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் தெய்வங்களுக்கெனக் கோவில்களைப் பெற்றிருக்கவில்லை
(ii) தங்கள் தெய்வங்களை மேன்மைப்படுத்தும் பொருட்டு களிமண்ணால் அல்லது செங்கலால் சிறிய பிரமிடுகளைக் கட்டி அவற்றுக்குத் தாந்துபூசி வெள்ளையடித்து வைத்திருந்தனர்
(iii) அவ்வடிவங்களை வழிபடுவது அநாகரிகமான பழக்கம் என வைகுண்டர் கருதினார். விலங்குகளை வணங்குவதையும் அவர் நிராகரித்தார்
(iv) வழிபாட்டின்போது மக்கள் ஆடுகள், சேவல்கள், கோழிகள், ஆகியவற்றை பலி கொடுத்தனர். இத்தகையச் சமய சடங்குகளைக் கண்டனம் செய்த வைகுண்ட சுவாமிகள் விலங்குகளைப் பலியிடுவதற்கு எதிராக இயக்கம் நடத்தினார்
14.
(i) இராஜாராம் மோகன்ராய் (1772 - 1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்
(ii) ஒரு பெரும் அறிஞரான அவர் தனது தாய்மொழியான வங்காளமொழியில் புலமைபெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அராபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்
(iii) இராஜாராம் மோகன்ராய் பொருளற்ற சமயசடங்குகளையும் கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார்.
(iv) சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பலதாரமணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர் அவற்றிற்கு எதிராகக் சட்டங்கள் இயற்றும்படி அரசாங்கத்திற்கு மனுச்செய்தார்
(v) அவருடைய செயல்பாடுகள் கவர்னர்ஜெனரல் வில்லியம் பெண்டிங்கை 1829 இல் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்து சட்டமியற்ற கட்டாயப்படுத்தியதில் முக்கிய பாத்திரம் வகித்தது
15.
(i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சோவியத் நாட்டில் விடுவிக்கப்பட்ட நாடுகளில், அந்நாடு 1948 முதல் பொதுவுடைமை அரசுகளை ஏற்படுத்தியிருந்தது
(ii) ஐக்கிய நாட்டின் குடியரசு தலைவரான ட்ரூமென் பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன்மொழிந்தார்
(iii) சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பொதுவுடைமை கருத்தை பரப்ப தீர்மானமாக இருந்தது
16.
(i) 1941 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் கடன் குத்தகை திட்டத்தைத் தொடங்கினார் அதன்படி கடன் எனும் பெயரில் ஆயுதங்கள், உணவுப் பண்டங்கள், ராணுவ உபகரணங்கள், ஏனைய பொருட்கள் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்படும்
(ii) அவை பயன்படுத்திய பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும். இத்திட்டம் மிகப்பெருமளவிற்கு இங்கிலாந்தின் வளங்களைப் பெருக்கியது. 1941 - 1945 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உதவியின் மதிப்பு 46.5 பில்லியன் டாலர்களாகும்.
17.
(i) பாசிஸம் கட்சிக்கென ஒரு மரியாதையைப் பெறுவதற்காக, வாட்டிகன் நகரத்தை ஒரு சுதந்திர அரசாக அங்கீகரிப்பதின் மூலம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் முசோலினி வெற்றி பெற்றார்
(ii) இதற்கு கைமாறாக திருச்சபை இத்தாலிய அரசை அங்கீகரித்தது, ரோமன் கத்தோலிக்கச் சமயநம்பிக்கை இத்தாலியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மதபோதனைகள் செய்வதற்கு ஆணையிடப்பட்டது
(iii) மேற்சொல்லப்பட்டவற்றை சரத்துக்களாகக் கொண்ட லேட்டரன் உடன்படிக்கை 1929 இல் கையெழுத்தாயிற்று
18.
(i) டானென்பர்க் போர்:
ரஷ்யப் படைகள் கிழக்குப் பிரேஷ்யாவின் மீது படையெடுத்தன. டானென்பர்க் போரில் ரஷ்யா பேரிழப்புகளைச் சந்தித்தது. இருந்த போதிலும் இப்போர் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி மேற்குப்போர் முனையில் பிரெஞ்சுப் படைகள் மீதான அழுத்தத்தைக் குறைத்ததால் அவர்களால் படையெடுத்து வரும் ஜெர்மனியரைத் துரத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள முடிந்தது
(ii) மார்ன் போர்:
மார்ன் போரில் 1914 செப்டம்பர் திங்களின் தொடக்கத்தில் பிரெஞ்சுப்படைகள் ஜெர்மனியரை வெற்றி பெற்றன. இப்படியாகப் பாரிஸ் கைப்பற்றப்பட்டது. மார்ன் போரானது பதுங்குழிப் போரின் தொடக்கமாகும்
19.
(i) அய்யன்காளி 1863 இல் திருவனந்தபுரத்திலுள்ள வெங்கனூரில் பிறந்தார். அப்போது அப்பகுதி திருவிதாங்கூர் அரசரின் ஆட்சி பகுதியாகும்
(ii) குழந்தையாய் இருக்கும்போது அவர் சந்தித்த பாகுபாடு அவரைச் சாதி எதிர்ப்பியக்கத்தின் தலைவராக மாற்றியது. பின்னர் அவர் பொது இடங்களுக்குச் செல்லுதல், பள்ளிகளில் கல்வி கற்க இடம்பெறுதல் போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினார்
(iii) ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்ட மேல்சாதியினர் மட்டுமே அணியும் ஆடைகளை இவர் அணிந்தார்
(iv) மேல்சாதியினர் பயன்படுத்திய ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டிருந்தப் பொது சாலைகளில், சவால்விடும் வகையில் காளைகள் பூட்டப் பெற்ற வண்டியில் அவர் பயணம் செய்தார்
20.
1. ஷியாங் கை ஷேக் பொதுவுடைமைவாதிகளைச் சுற்றி முற்றுகையிடும் விதமாக ஆங்காங்கே பல நிலைகளை அமைத்திருந்தார்.
2. மாவோவும் ஹுனான் பகுதியை விட்டு அகன்று பாதுகாப்பான ஒரு பகுதிக்குச் செல்ல நினைத்தார்.
3. கிட்டத்தட்ட 1933 ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின்மீது முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
4. ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 1,00,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934ல் கிளம்பினர்.
5. அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
6. இவர்களில் 20,000 பேர் மட்டும் 1935 இன் பிற்பகுதியில் 6000 மைல்களைக் கடந்து ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
7. 1937 ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஒரு கோடி மக்களின் தலைவராக மாவோ அங்கீகரிக்கப்பட்டார்.
21.
1. சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை அதனால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
2. "கூட்டுப்பாதுகாப்பு" எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.
3. இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.
22.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
23.
அ) பழமைவாத முஸ்லிம் உலமாக்கள்
ஆ) குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளை பரப்பதல் செய்தல், இஸ்லாம் அல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல் என்பனவாகும்
இ) முகமது குவாஸிம் நானோதவி (1832 - 1880), ரஷித் அகமத் கங்கோகி (1826 - 1905) ஆகியோரின் தலைமையில் 1866 - ல் உத்திரபிரதேசத்தில் சஹரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்
ஈ) தியோபந்த் உலோமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான 'தி யுனைடெட் பேட்ரியாடிக் அசோசியேசன்' (The United Patriotic Association). முகமதன் ஆங்கிலோ - ஓரியண்டல் அசோசியேஷன் (The Mohammedan Anglo - Oriental Association) ஆகிய அவற்றிற்கு எதிரான சமய ஆணையைப் பிறப்பித்தது
24.
அ) 1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்களில் ஜெர்மானியர் ஸ்டாலின் கிரேடைத் தாக்கினர்
ஆ) ஸ்டாலின் கிரேடு ஆயுதங்களையும் டிராக்டர்களையும் உற்பத்தி செய்யும் முக்கிய தொழில் நகரமாகும்
இ) ஜெர்மனியின் போர் திட்டமிடல் வல்லுனர்கள் ஃபால் புளு (Operation Blue) எனும் திட்டத்தின்படி இந்நகரைக் கைப்பற்றி விடலாம் என நம்பின
ஈ) ஜெர்மனி நகரைக் கைப்பற்றிவிட்டால் தெற்கு ரஷ்யாவுடனான சோவியத்தின் போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுவிடும். மேலும் சாகஸஸ் பகுதியிலுள்ள எண்ணெய் வயல்களை சென்றடைவதற்கு ஜெர்மன் படைகளுக்கு ஸ்டாலின் கிரேடு வசதியாக இருக்கும்
25.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
26.
அ) மாசிடோனியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் கிரீஸ், செர்பியா, பல்கேரியா பின்னர், மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இடையே போட்டிகள் நிலவின. 1912 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் என்ற அமைப்பை உருவாக்கின
ஆ) (i) பால்கன் கழகம் முதல் பால்கன் போரில் (1912 - 1913) துருக்கிய படைகளைத் தோற்கடித்தன
(ii) 1913 ஆம் ஆண்டு மே மாதம் லண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. மாசிடோனியாவை ஏனைய பால்கன் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன
(iii) துருக்கி, கான்ஸ்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் கொண்ட அரசாகச் சுருக்கப்பட்டது
இ) துருக்கியப் படைகள்
ஈ) 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.
27.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
28.
(i) மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ம் ஆண்டு பேரரசின் பாதுகாவலாயிருந்த பேராசிரியர் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர். உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது
(ii) மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தலாயினர்.
(iii) இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகியிருந்தார்.
(iv) அவர்களில் டாக்டர் சன் யாட் சென்னும் ஒருவர் சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையவும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(v) ஆனால் மஞ்சு அரசின் நிர்வாகத்தில் முன்பு அமைச்சராகப் பணியாற்றிய யுவான்-ஷி-கே வடபகுதி நவீன இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருந்தார்.
(vi) அவர், சிறு வயது பேரரசர் பதிவுயேறக் காரணமாக இருந்தவர்களை வலியுறுத்தி பேரரசரைப் பதவியை விட்ட விலகச் செய்யும் முயற்சியில் வெற்றிகண்டார். அங்கு ஒரு குடியரசும் ஏற்படுத்தப்பட்டது.
29.
(i) பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட் ஜான் மேனார்டு கெயின்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உற்ற குழந்தையாகும்
(ii) இவ்வமைப்பு 1945 - இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப் பெற்றது தற்போது 189 நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
(iii) இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாக இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டளவில் நிதிசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவையாகும்.
(iv) இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனினில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடிவதில்லை.) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல் செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது
(v) இந்நடவடிக்கை பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் அவை மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது
30.
(i) இங்கிலாந்தின் காலனிகளான நோட்டால் கேப் காலனி ஆகிய இரண்டிற்கும் சுதந்திர போயர் நாடுகளான டிரான்ஸவால் மற்றும் ஆரஞ்சு சுதந்திர அரசு ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக நட்புறவு நிலவவில்லை
(ii) 1886 இல் டிரான்ஸ்வால் பகுதியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் ஆங்கிலேயச் சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர்
(iii) இவர்களை வெறுத்த போயர்கள் இவர்களை யுட்லேண்டர்ஸ் என்றே குறிப்பிட்டனர். குடியேறியவர் மீது அதிக வரிகளை விதித்த போயர்கள் அவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் மறுத்தனர்
(vi) யுட்லேண்டர்ஸின் அரசியல் உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகளேதும் ஏற்படவில்லை
31.
அமைப்பும் உறுப்புகளும்:
(i) சர்வதேச சங்கத்திற்கான கூட்டு ஒப்பந்த ஆவணம் பாரிஸ் அமைதி மாநாட்டில் தயார் செய்யப்பட்டு முதல் உலகப் போருக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கைகளும் சேர்க்கப்பட்டது
(ii) சவால்கள் நிறைந்த இப்பணி குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் கொடுத்த அழுத்தத்தால் நிறைவேறியது
(iii) இவ்வமைப்புக்கான அரசியல் அமைப்பு விதிகளை வடிவமைப்பதில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளின் ஆலோசனை மேலோங்கியிருந்தன. இச்சமயம் ஐந்து உறுப்புகளைக் கொண்டிருந்தன
(iv) அவை பொதுச்சபை செயற்குழு செயலகம், பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு என்பனவாகும். ஒவ்வொரு உறுப்பு நாடும் பொதுச் சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
(v) இச்சபை பொதுவான கொள்கைகள் குறித்து விவாதித்தது. ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவாக இருத்தல் அவசியமாகும். செயற்குழுவே முடிவுகளை செயல்படுத்தும் அமைப்புகளாகும்
(vi) பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளே தொடக்கத்தில் இச்சபையின் நிரந்தர உறுப்பினர் என அறிவிக்கப்பட்டது
(vii) சர்வதேச சங்கத்தின் செயலகம் ஜெனீவாவில் அமைந்திருந்தது. அதன் முதல் பொதுச் செயலாளர் பிரிட்டனைச் சேர்ந்த எரிக் டிரம்மாண்ட் ஆவார்
(viii) பன்னாட்டு நீதிமன்றமானது தீ ஹேக் நகரில் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்றம் பதினைந்து நீதிபதிகளை கொண்டிருந்தது. பொது மாநாட்டில் ஒவ்வொரு உறுப்பும் நாட்டிலிருந்து நான்கு உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்
32.
ஐ.நா. சபை
1. அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவிடவும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்திடவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2. ஐ.நா சபையின் சாசனத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
3. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுச்சபை:
1. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
2. இவ்வமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும், முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சபை:
1. பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும், மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு. எந்த முடிவையும் இதன்மூலம் தடுத்துவிடலாம்.
நிர்வாக அமைப்பு:
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
2. இதன்பொதுச்செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3. பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐ.நா சபையை நடத்துகிறார்.
4. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா. சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது.
5. பொருளாதார மற்றும் சமூகமன்றம் ஐ.நா.சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
ஐ.நா.வின் இதன் முக்கியத் துணைஅமைப்புகள்
1. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - (FAO)
2. உலக சுகாதார நிறுவனம் - (WHO)
3. ஐ.நா. வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு - (UNESCO)
4. ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் - (UNICEF)
5. ஐ.நா. வளர்ச்சி திட்டம் - (UNDP)
ஐ.நா வின் செயல்பாடுகள்:
1. கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா. சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
2. 1960 களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும்.
3. மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐ.நா. சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
4. ஐ.நா. வின் அமைதிப்படை உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அடிப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய ராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
33.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
34.
35.
36.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards