10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Social Science Tamil Medium Book Back and Creative Important Question All Chapter 2019-2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_________ என்பார் குழந்தைத் திருமணம் பழக்கத்திற்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டுமென இயக்கம் நடத்தினார்
பெர்ரம்ஜி மல்பாரி
பெரோசா மேத்தா
தீன்சா வாச்சா
பாபாரம் சிங்
2.
______ மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்
அய்யன்காளி
ராஜாராம் மோகன்ராய்
நாராயண குரு
சையது அகமது கான்
3.
பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்
ஆரிய சமாஜம்
பிராத்தனை சமாஜம்
தியோபந்த் இயக்கம்
அலிகார் இயக்கம்
4.
கோமிஸ்டாங்கின் தலைவர்
ஷியாங் கே - ஷேக்
மா - சே - துங்
யுவான் - ஷி - கே
நாசர்
5.
1941 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் _________ படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன
இங்கிலாந்து
ஆப்பிரிக்கா
ஜெர்மன்
இத்தாலி
6.
தென் அமெரிக்காவில் அஸ்டெக்குகள் _______ ஆண்டுகள் தங்கள் பேரரசை ஆட்சி செய்தனர்.
250
200
300
100
7.
பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு _______
1917
1918
1919
1924
8.
நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
பாபா தயாள் தாஸ்
பாபா ராம்சிங்
குருநானக்
ஜோதிபா புலே
9.
10.
அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
கவாசாகி
டோக்கியோ
ஹிரோஷிமா
நாகசாகி
11.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
ஆங்கிலேயர்
ஸ்பானியர்
ரஷ்யர்
பிரெஞ்சுக்காரர்
12.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
13.
அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?
14.
பிரம்மஞான இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? எங்கு?
15.
சோவியத் நாட்டின் பிளவு பற்றி குறிப்பு வரைக
16.
வின்ஸ்டன் சர்ச்சிலின் எழுச்சியூட்டும் உரையை பற்றி நீ அறிந்தது என்ன?
17.
நல்ல அண்டை வீட்டுக்காரன் - குறிப்பு தருக
18.
இருபதாம் நூற்றாண்டை வரலாற்று ஆசிரியர்கள் ஏன் நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அழைத்தனர்?
19.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
20.
கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?
21.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
22.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
23.
தியோபந்த் இயக்கம்
அ) இவ்வியக்கத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் யார்?
ஆ) இவ்வியக்கத்தின் இரண்டு முக்கியக் குறிக்கோள்கள் யாவை ?
இ) தியோபந்த் பள்ளியை நிறுவியவர் யார்?
ஈ) யாருக்கு எதிராக தியோபந்த் உலோமாக்கள் சமய ஆணையைப் பிறப்பித்தனர்?
24.
பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
ஆ) பேரழிவு என்றால் என்ன?
இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?
25.
இந்தோ-சீனாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம்
அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?
26.
ஜெர்மன் பேரரசர்
அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?
27.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
28.
பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக
29.
பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்
30.
முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.
31.
சர்வதேச சங்கத்தின் அமைப்பும் உறுப்புகளும் பற்றி விவரிக்கவும்
32.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
33.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?
34.
உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
ஹிரோஷிமா, நாகசாகி, ஹவாய் தீவு, மாஸ்கோ, சான் பிரான்சிஸ்கோ
35.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
36.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
1917 - ரஷ்யப் புரட்சி
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்
1.
(a)
பெர்ரம்ஜி மல்பாரி
2.
(c)
நாராயண குரு
3.
(b)
பிராத்தனை சமாஜம்
4.
(a)
ஷியாங் கே - ஷேக்
5.
(c)
ஜெர்மன்
6.
(b)
200
7.
(c)
1919
8.
(b)
பாபா ராம்சிங்
9.
(b)
10.
(c)
ஹிரோஷிமா
11.
(b)
ஸ்பானியர்
12.
(a)
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
13.
(i) அலிகார் இயக்கம் சர் சையத் அகமத்கான் 1875 ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதி ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்
(ii) அலிகார் இயக்கம் எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியைப் மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்திய முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
(iii) 1920 இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்து வந்த சந்ததியினரைச் சேர்ந்தோரைக் கொண்ட ஒரு கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது
14.
(i) மேடம் H.P பிளாவட்ஸ்கி (1831 - 1891) மற்றும் H.S. ஆல்காட் (1832 - 1907) ஆகியோரால் நிறுவப்பெற்ற பிரம்மஞானசபை முக்கிய பங்கு வகித்தது
(ii) 1875இல் அமெரிக்காவில் நிறுவப்பட்ட இவ்வமைப்புப் பின்னர் 1886 இல் இந்தியாவில் சென்னை அடையாறுக்கு மாற்றப்பட்டது
15.
(i) உலக அரசியலில் 1970களிலும் 1980களில் முற்பகுதிகளிலும் சோவியத் நாடு மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தது.
(ii) எனினும் அதன் பொருளாதாரம் நலிவடையவும் முதலாம் உலக நாடுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமலும் தேங்கியது
(iii) 1980 களில் இறுதியில் சோவியத் நாடு இனவெறி கட்டவிழ்ப்பினாலும் பிராந்திய உணர்வின், புதிய தேசிய உணர்வின் பிறப்பிலும் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அதனால் சோவியத் நாட்டின் பிளவு ஏற்படலாயிற்று
16.
(i) நாம் நமது தீவைக் காப்போம் கொடுக்க வேண்டிய விலை என்னவாக இருந்தாலும் கடற்கரைகளில் நாம் போரிடுவோம்
(ii) நாம் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் போரிடுவோம் நாம் ஒரு போதும் சரணடைய மாட்டோம். 1940 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய எழுச்சியூட்டும் ஜெர்மானியப் படையெடுப்பு பற்றிய அச்சம் நிலவிய அத்தருணத்தில் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாய் அமைந்தது
17.
1933க்குப் பின்னர் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் தன்னுடைய நல்ல அண்டை வீட்டுக்காரன் கொள்கையில் அமெரிக்கா வேறு எந்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாது என்று கூறியதோடு லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குப் பொருளாதார தொழில் நுட்ப உதவிகளைச் செய்யவும் ஒத்துக் கொண்டது
18.
(i) உலக வரலாற்றில் 1914 ம் ஆண்டு ஒரு திருப்பு முனையாகும். 1789 ஆம் ஆண்டில் தொடங்கி அரசியல் சமூக செயல்பாடுகள், 1914 இல் வெடித்த முதல் உலகப்போரில் உச்சத்தை அடைந்து இருபதாம் நூற்றாண்டினுடைய போக்கின் வடிவத்தைத் தீர்மானித்தது.
(ii) ஆகையால் வரலாற்றாசிரியர்கள் இதனை நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என அழைத்தனர்.
19.
1. ஜோதிபா பூலே 1852 இல் ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
2. சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
3. பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
4. ஜோதிபா பூலே பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
5. ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவிதிரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
20.
1. கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த மக்களைக் கொண்ட ஒரு படை பே ஆஃப் பிக்ஸ் வளைகுடாவில் ஏப்ரல் 1961ல் இறக்கியது. அதே வேளையில் காஸ்ட்ரோவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கோடு அதன் விமான தளங்களை ஐக்கிய அமெரிக்க நாடுகள் குண்டு வீசித் தாக்கியது.
2. அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் கியூபாவைச் சுற்றிவளைத்தன. சோவியத் நாடு கியூபாவில் அணுசக்தியோடு இணைக்கப்பட்ட ஏவுகணைகளை ரகசியமாக நிறுவப்போவதாய் கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசிற்கு உளவுத்துறை தகவல் கொடுத்தது.
3. இறுதியாக சோவியத் நாட்டின் குடியரசுத்தலைவர் குருசேவ் ஏவுகணைகளைத் திரும்பப் பெற உறுதியளித்ததால் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
21.
1. ஆரவாரமான நாட்டுப்பற்று - இங்கிலாந்து
2. அதிதீவிரப்பற்று - பிரான்ஸ்
3. வெறிகொண்ட நாட்டுப்பற்று - ஜெர்மனி
22.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
23.
அ) பழமைவாத முஸ்லிம் உலமாக்கள்
ஆ) குரான் மற்றும் ஷரியத்தின் உண்மையான போதனைகளை பரப்பதல் செய்தல், இஸ்லாம் அல்லாத அயல்கூறுகளுக்கு எதிராகப் புனிதப்போர் செய்யும் உணர்வுகளை ஊக்குவித்தல் என்பனவாகும்
இ) முகமது குவாஸிம் நானோதவி (1832 - 1880), ரஷித் அகமத் கங்கோகி (1826 - 1905) ஆகியோரின் தலைமையில் 1866 - ல் உத்திரபிரதேசத்தில் சஹரன்பூரில் ஒரு பள்ளியை நிறுவினார்
ஈ) தியோபந்த் உலோமா, சையத் அகமத்கானுடைய அமைப்புகளான 'தி யுனைடெட் பேட்ரியாடிக் அசோசியேசன்' (The United Patriotic Association). முகமதன் ஆங்கிலோ - ஓரியண்டல் அசோசியேஷன் (The Mohammedan Anglo - Oriental Association) ஆகிய அவற்றிற்கு எதிரான சமய ஆணையைப் பிறப்பித்தது
24.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர்
ஆ) இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இனஅழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப் படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது
இ) குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்டின் விதவை மனைவியார் தலைமை வகித்தார்
ஈ) ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும் மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு எடுக்கும் எந்த முடிவையும் தடுப்பாணை மூலம் ஒரு உறுப்பினர் தடுத்துவிடலாம்
25.
அ) காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்
ஆ) இந்தோ - சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் கம்போடியா, லாவோஸ் வியட்நாம்
இ) சீனத் தலைநிலப் பகுதியிலிருந்து பரவிய கம்யூனிச சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியத்திலிருந்து இந்தோ - சீனாவின் கணிசமான செல்வம் காலனியாதிக்க சக்திக்கே பயன்படுவதை பலர் உணர்ந்தனர்
ஈ) இந்தோ - சீனாவில் வியட்நாம் தேசியக் கட்சியே இருந்த அரசியல் கட்சிகளில் முக்கியமானது
26.
அ) ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் இரக்கமற்ற, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவர்
ஆ) ஜெர்மனியின் வெற்றிகொண்ட நாட்டுப்பற்று (kultur) என அழைக்கப்படுகிறது
இ) (i) மொராக்கோவில் பிரான்ஸ் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது.
(ii) எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.
ஈ) (i) கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் காலனிகளும், நேசநாடுகளால் தாக்கப்பட்டன
(ii) இக்காலனிகள் அனைத்தும் ஜெர்மனியில் இருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் அவைகளால் உடனடியாக எவ்வித உதவியையும் பெற முடியாமல் போனதாலும் நேசநாடுகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டது
27.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
28.
(i) ஜெர்மானிய மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு) கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத் தரத்தில் எதிரொலித்தன.
(ii) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம் செழித்தோங்கியது.
(iii) அதற்கு பதிலாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
(iv) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ, சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்கு பெரும் சிரமம் இருந்தது.
(v) இதனால் கிழக்கு பெர்லின் மக்கள் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர் மேற்கு பெர்லினிலோ ரஷ்யா தன்மீது எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது
(vi) இச்சூழலில் 1961 - ல் கிழக்கு ஜெர்மனி ஒரு சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மேற்கு பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது
(vii) காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டு பயங்கர ஆயுதங்களின் துணையோடு கடுமையான கண்காணிப்பு பணியில் மூலம் கிழக்கிலிருந்து மக்கள் நுழைவது தவிர்க்கப்பட்டு வந்தது
(viii) ரஷ்யாவின் கட்டுப்பாட்டு 1980களின் நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9 நவம்பர், 1949ம் ஆண்டில் துவக்கத்தில் காஸா முனை தவிர்த்து எகிப்து, பாலஸ்தீன் எல்லை வரை நீண்ட நெகேவ் பகுதியை (பாலைவன பகுதியாகவும், அரைகுறை பாலைவனப் பகுதியாகவும் திகழும் தெற்கு இஸ்ரேலியப் பகுதி) இஸ்ரேலியர்கள் தங்கள் வசப்படுத்தினர்
(ix) இஸ்ரேலுடன் அரபு நாடுகள் தனித்தனியாக 1947 ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூன் வரை ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைகளின் கீழ் இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்துக்கு நாடுகளுக்குமிடையே தற்காலிகமான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது
(x) இஸ்ரேலைப் பொறுத்த வரையில் இக்கால கட்டத்தில் நிகழ்ந்த போர்கள் யாவும் அதன் சுதந்திரவேட்கையின் வெளிப்பாடாகவும்,சுதந்திர போராகவும் நினைவு கொள்ளப்பட்டது
(xi) அரேபியர்களைப் பொறுத்தமட்டில் பலரும் இப்போர்களினால் அகதிகளாக இடம்பெயர வேண்டிய இருந்ததால் அது நக்பா (பேரழிவு) என அழைக்கப்பட்டது
(xii) அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு உடனடியாக ஐ.நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற மேற்கத்திய சக்திகளுக்கு அவர்கள் வழங்கிய ஆயுதங்களும் நீதிக்கும் மாற்றாக விசுவாசத்தை வெளிப்படுத்தவே இஸ்ரேல் வலுவாக கட்டியெழுப்பப்பட்டது என்று உறுதியாகிறது
(xiv) 1989இல் கூடிய மக்கள் கூட்டம் அதை தகர்க்கத் துவங்கியது. ஜெர்மனி 3 அக்டோபர் 1990 அன்று முறையாக இணைக்கப்பட்டது. பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத் தடை என்பதை தாண்டிய ஒரு விஷயமாகும்.
(xv) அது முதலாளித்துவத்திற்கும், பொதுவுடமைக்கும் இடையே இருந்த பிளவை அடையாளப்படுத்தக்கூடிய ஒன்று.
(xvi) பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26 டிசம்பர் 1991இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
29.
(i) பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட் ஜான் மேனார்டு கெயின்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உற்ற குழந்தையாகும்
(ii) இவ்வமைப்பு 1945 - இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப் பெற்றது தற்போது 189 நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
(iii) இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாக இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டளவில் நிதிசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவையாகும்.
(iv) இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனினில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடிவதில்லை.) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல் செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது
(v) இந்நடவடிக்கை பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் அவை மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது
30.
(i) இத்தாலியில் 1924 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னர் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன
(ii) சோசலிஸ்டுகளின் தலைவரான மாட்டியொட்டி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை. எனக் கேள்வி எழுப்பியதால் அவர் கொலை செய்யப்பட்டார்
(iii) இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக முசோலினி எதிர்க்கட்சிகளைத் தடை செய்து பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்தினார்
(iv) எதிர்க்கட்சி தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைவைக்கப்பட்டனர். 1929 இல் இரண்டாம் டியூஸ் (தலைவர்) எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட முசோலினி சட்டங்களை இயற்றும் அதிகாரத்துடன் சர்வாதிகாரியானார்.
(v) வேலை நிறுத்தங்களையும் ஆலை மூடல்களையும் தடைசெய்து சட்டங்கள் இயற்றினார். தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும் இடம் கழகங்கள் உருவாக்கப்பட்டன
இவ்வமைப்பு ஊதியம் வெளியிட நிலைமைகள் ஆகியவை குறித்து முடிவு செய்யும். மீதியுள்ள மக்களில் பெரும் பகுதியினர் அவர்கள் செய்து வரும் பணியின் அடிப்படையில் பல கழகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்
(vi) இக்கழகங்கள் பின்னர் தேசியக்கூட்டமைப்புகளாக ஆக்கப்பட்டு கழகங்களுக்கான அமைச்சரின் பாராளுமன்றம் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாகப் பாசிஸ்டுக் கட்சியின் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது
(vii) இவ்வேறுபாடு பொருளாதாரத்தின் மீதான முசோலினியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டுக்கு துணை நின்றதுடன் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவராக மற்றபிற அதிகாரத்தைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது
31.
அமைப்பும் உறுப்புகளும்:
(i) சர்வதேச சங்கத்திற்கான கூட்டு ஒப்பந்த ஆவணம் பாரிஸ் அமைதி மாநாட்டில் தயார் செய்யப்பட்டு முதல் உலகப் போருக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கைகளும் சேர்க்கப்பட்டது
(ii) சவால்கள் நிறைந்த இப்பணி குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன் கொடுத்த அழுத்தத்தால் நிறைவேறியது
(iii) இவ்வமைப்புக்கான அரசியல் அமைப்பு விதிகளை வடிவமைப்பதில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆகிய நாடுகளின் ஆலோசனை மேலோங்கியிருந்தன. இச்சமயம் ஐந்து உறுப்புகளைக் கொண்டிருந்தன
(iv) அவை பொதுச்சபை செயற்குழு செயலகம், பன்னாட்டு நீதிமன்றம், பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு என்பனவாகும். ஒவ்வொரு உறுப்பு நாடும் பொதுச் சபையில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
(v) இச்சபை பொதுவான கொள்கைகள் குறித்து விவாதித்தது. ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவாக இருத்தல் அவசியமாகும். செயற்குழுவே முடிவுகளை செயல்படுத்தும் அமைப்புகளாகும்
(vi) பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளே தொடக்கத்தில் இச்சபையின் நிரந்தர உறுப்பினர் என அறிவிக்கப்பட்டது
(vii) சர்வதேச சங்கத்தின் செயலகம் ஜெனீவாவில் அமைந்திருந்தது. அதன் முதல் பொதுச் செயலாளர் பிரிட்டனைச் சேர்ந்த எரிக் டிரம்மாண்ட் ஆவார்
(viii) பன்னாட்டு நீதிமன்றமானது தீ ஹேக் நகரில் அமைக்கப்பட்டது. இந்நீதிமன்றம் பதினைந்து நீதிபதிகளை கொண்டிருந்தது. பொது மாநாட்டில் ஒவ்வொரு உறுப்பும் நாட்டிலிருந்து நான்கு உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்
32.
ஐ.நா. சபை
1. அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவிடவும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்திடவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2. ஐ.நா சபையின் சாசனத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
3. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுச்சபை:
1. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
2. இவ்வமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும், முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சபை:
1. பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும், மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு. எந்த முடிவையும் இதன்மூலம் தடுத்துவிடலாம்.
நிர்வாக அமைப்பு:
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
2. இதன்பொதுச்செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3. பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐ.நா சபையை நடத்துகிறார்.
4. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா. சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது.
5. பொருளாதார மற்றும் சமூகமன்றம் ஐ.நா.சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
ஐ.நா.வின் இதன் முக்கியத் துணைஅமைப்புகள்
1. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - (FAO)
2. உலக சுகாதார நிறுவனம் - (WHO)
3. ஐ.நா. வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு - (UNESCO)
4. ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் - (UNICEF)
5. ஐ.நா. வளர்ச்சி திட்டம் - (UNDP)
ஐ.நா வின் செயல்பாடுகள்:
1. கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா. சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
2. 1960 களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும்.
3. மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐ.நா. சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
4. ஐ.நா. வின் அமைதிப்படை உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அடிப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய ராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
33.
வல்லரசுகளின் இரு அணிகள்:
1. 1900 இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
2. ஒரு முகாமில் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி இத்தாலி ஆகியன 1882 இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
3. மற்றொரு முகாமில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்:
1. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை:
1. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் ஆக்கிரமிப்பு ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
2. ஜெர்மனியின் கடற்படை விரிவுபடுத்தப்பட்டது.
3. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கியது.
4. இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
1. பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
2. 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
3. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல்:
1. 1908 இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
2. ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.
பால்கன் போர்கள்:
1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல், பொருளாதாரச் சூழலைச் சாதகமாகக் கொண்டு கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களைத் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன.
2. மாசிடோனியா பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே மாசிடோனியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பால்கன் நாடுகளுக்கிடையே போட்டி நிலவியது.
3. 1912 ஆம் ஆண்டு பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன் போரில் துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தது.
உடனடிக் காரணம்:
1. 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
2. ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
3. ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு எதிராகப் போர் செய்ய திட்டமிட்டது.
4. பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கியதால் இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.
34.
35.
36.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards