10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 10th Standard Social Science Tamil Medium Important Question 2019-2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______ ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்
வைகுண்ட சுவாமிகள்
அயோத்தி தாசர்
இராமலிங்க அடிகள்
ஜான்ரத்தினம்
2.
______ பழமைவாத முஸ்லீம் உலோமாக்களால் தொடங்கப்பெற்றது
அலிகார் இயக்கம்
ஆரிய சமாஜ்
தியோபந்த் இயக்கம்
பார்சி இயக்கம்
3.
பிரம்மசமாஜம் இணையாக பம்பாயில் 1867ல் நிறுவப்பட்ட அமைப்பு ______ ஆகும்
ஆரிய சமாஜம்
பிராத்தனை சமாஜம்
தியோபந்த் இயக்கம்
அலிகார் இயக்கம்
4.
கோமிஸ்டாங்கின் தலைவர்
ஷியாங் கே - ஷேக்
மா - சே - துங்
யுவான் - ஷி - கே
நாசர்
5.
இங்கிலாந்தும் _________ ம் 1939 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன
ஜப்பான்
ரஷ்யா
பிரான்ஸ்
ஆஸ்திரியா
6.
மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகத் திரும்பிய நாடுகளும் முதல்நாடு ______ ஆகும்
ஜப்பான்
ஜெர்மனி
இத்தாலி
அமெரிக்கா
7.
பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு _______
1917
1918
1919
1924
8.
சுவாமி ஸ்ரத்தானந்தர் என்பவர் யார்?
சுவாமி விவேகானந்தரின் சீடர்
இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
9.
அரேபியக் கூட்டமைப்பு எவ்விடத்தில் ஏற்படுத்தப்பட்டது.?
கெய்ரோ
ஜோர்டான்
லெபனான்
சிரியா
10.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
சேம்பெர்லின்
வின்ஸ்டன் சர்ச்சில்
லாயிட் ஜார்ஜ்
ஸ்டேன்லி பால்டுவின்
11.
தென்னாப்பிரிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
வெர்வோர்டு
ஸ்மட்ஸ்
ஹெர்சாக்
போதா
12.
13.
வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?
14.
சுத்தி இயக்கம் - குறிப்பு தருக
15.
பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ட்ரூமனின் வரையறை எழுதுக
16.
ஜெர்மனி ஏன் நீர்மூழ்கிக் கப்பற்படையை இங்கிலாந்துக்கு அனுப்பியது
17.
ஹைதி பிரான்ஸ் காலனியர் கட்டுப்பாடுகளை தூக்கி எறிந்த முதல் கரீபிய நாடு - விளக்கவும்
18.
மைய நாடுகளின் பெயர்களை எழுதுக
19.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
20.
கோமின்டாங்கும் 1928ஆம் ஆண்டு சீனாவில் எவ்வாறு நடுவண் அரசை ஏற்படுத்தினார்கள் என்பதை விளக்குக.
21.
ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.
22.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
23.
அலிகார் இயக்கம்
அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
ஈ) பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக
24.
பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
ஆ) பேரழிவு என்றால் என்ன?
இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?
25.
ஹோ சி மின்
அ) ஹோ சி மின் எங்கே பிறந்தார்?
ஆ) ஹோ சி மின் எவ்வாறு நன்கறியப்பட்ட வியட்நாமின் தேசியவாதியானார்?
இ) ஹோ சி மினின் புரட்சிகர இளைஞர் இயக்கம் குறித்து நீவிர் அறிந்ததென்ன?
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ-சீனாவில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
26.
ஏகாதிபத்தியம்
அ) முன்னுரிமை முதலாளித்துவம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
ஆ) ஜப்பான் எவ்வாறு ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வடிவெடுத்தது?
இ) பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுக்கு காலனிகள் ஏன் தேவைப்பட்டன?
ஈ) முதலாளித்துவம் உருவாக்கிய முரண்பாடுகள் யாவை?
27.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
28.
பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக
29.
ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்
30.
முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.
31.
ரஷ்யப் புரட்சியின் விளைவுகள் பற்றி விளக்கவும்
32.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.
33.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
34.
உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
அச்சு நாடுகள்
35.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
36.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
1917 - ரஷ்யப் புரட்சி
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்
1.
(b)
அயோத்தி தாசர்
2.
(c)
தியோபந்த் இயக்கம்
3.
(b)
பிராத்தனை சமாஜம்
4.
(a)
ஷியாங் கே - ஷேக்
5.
(c)
பிரான்ஸ்
6.
(c)
இத்தாலி
7.
(c)
1919
8.
(c)
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
9.
(a)
கெய்ரோ
10.
(a)
சேம்பெர்லின்
11.
(a)
வெர்வோர்டு
12.
(b)
13.
வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப்பிசாசுகளின் ஆட்சியென்றும் கருப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும் விமர்சித்தார்
14.
(i) ஆரிய சமாஜம் பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த மதமாற்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டது. முக்கியக் குறிக்கோள் எதிர்மத மாற்றம் என்பதாகும்
(ii) ஏற்கனவே இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற சுத்தி எனும் சுத்திகரிப்புச் சடங்கை சமாஜம் வகுத்துக் கொடுத்தது
15.
(i) கிழக்கு ஐரோப்பாவில் நாஜிக்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்து சோவியத் நாட்டில் விடுவிக்கப்பட்ட நாடுகளில், அந்நாடு 1948 முதல் பொதுவுடைமை அரசுகளை ஏற்படுத்தியிருந்தது
(ii) ஐக்கிய நாட்டின் குடியரசு தலைவரான ட்ரூமென் பொதுவுடைமை கட்டுக்குள் வைக்க ஒரு வரைவை முன்மொழிந்தார்
(iii) சோவியத் நாடோ கிழக்கு ஐரோப்பா மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பொதுவுடைமை கருத்தை பரப்ப தீர்மானமாக இருந்தது
16.
(i) இங்கிலாந்து தனது பேரரசின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் கடல்வழியாக இறக்குமதி செய்யப்படும் உணவுப்பண்டங்கள் கச்சாப் பொருட்கள் தொழிற்சாலை உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றையே பெரிதும் சார்ந்திருக்கிறது
(ii) இதனை தாக்குவதற்காக ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பற்படையை அனுப்பி பெரும் சேதத்தை ஏற்படுத்தின
(iii) குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிவரும் பயணி கப்பல்களை அவை மூழ்கடித்தன
17.
(i) பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசியல் சுதந்திரம், நிர்வாக சுயாட்சி, பொருளாதார சுயாதிபத்திய உரிமை ஆகிய கோரிக்கைகள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பரவியது
(ii) ஹைதி நாட்டின் அடிமைகள், காலனி மக்கள் ஆகியோருக்கும் ஆங்கிலேய பிரெஞ்சு காலனி ஆதிக்க சக்திகளின் படைகளுக்குமிடையே கொடூரமான போர்கள் நடைபெற்றன
(iii) 1791-1804 காலப்பகுதிகளில் தௌசெயிண்ட் லுவெர்தூரி என்பவரின் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டங்கள் பிரான்சின் காலனியாதிக்க கட்டுப்பாட்டிலிருந்து ஹைதி மக்கள் விடுதலை பெறுவதில் முடிந்தது. இவ்வாறு ஹைதி, அடிமை முறையையும் பிரான்சின் காலனியர் கட்டுப்பாடுகளையும் தூக்கியெறிந்த முதல் கரீபிய நாடாகும்
18.
மைய நாடுகள் அணியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா, ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன
19.
1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
2. அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர் அவருக்கு இணை யாருமில்லை.
3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவதையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
20.
(i) கோமிங்டாங்கின் தலைவராக ஷியாங் - கை - ஷேக் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களாக சூ - யென் - லாயும் மாசேதுங்கும் விளங்கினர்
(ii) பொதுவுடைமை வாதத்தின் தீவிர விமர்சகரான ஷியாங் தனது கட்சிக்குள்ளிருந்த பொதுவுடைமை வாதிகளை முக்கிய பொறுப்புக்களிலிருந்து விடுவித்தார்
(iii) பொதுவுடைமைவாதிகளின் செல்வாக்கோ பெருக்கப் பெற்று அவர்கள் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் தங்கள் இராணுவத்தில் பெருமளவில் சேர்க்கும் நிலை ஏற்பட்டது
(vi) ஷியாங் - கை - ஷேக் சீனாவை படையெடுக்க துவங்கினார். காண்டனில் ஆரம்பித்த அவர் 1925 இன் இறுதியில் ஹான்கோ வரை பிடித்திருந்தார்
21.
1. ரஷ்யப் புரட்சி உலக மக்களின் கற்பனையைத் தூண்டியது.
2. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கப்பட்டன.
3. ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு காலனி நாடுகளை விடுதலைக்காகப் போராட ஊக்குவித்தது.
4. நிலச்சீர்த்திருத்தம், சமூகநலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற இன்றியமையாதவை குறித்த விவாதங்கள் உலகளவில் நடைபெறத் தொடங்கின.
22.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
23.
அ) அலிகார் இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகும்.
ஆ) சர் சையது அகமது கான்
இ) மேலைநாட்டு அறிவியலையும் அரசப் பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல் கழகம் ஒன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்
ஈ) அலிகார் முகமதிய ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரி
24.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர்
ஆ) இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இனஅழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப் படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது
இ) குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்டின் விதவை மனைவியார் தலைமை வகித்தார்
ஈ) ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும் மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு எடுக்கும் எந்த முடிவையும் தடுப்பாணை மூலம் ஒரு உறுப்பினர் தடுத்துவிடலாம்
25.
அ) ஹோசிமின் 1890 இல் டோங்கிங்கில் பிறந்தவர்
ஆ) பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாம் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார். தினசரிகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் குறிப்பாக விசாரணையில் பிரெஞ்சு காலனியாதிக்கம் எனும் சிற்றேடு அவரை நன்கறியப்பட்ட வியட்நாமிய தேசியவாதி ஆக்கியது
இ) ஹோ சி மின் மாஸ்கோ சென்று புரட்சியின் நுட்பங்களைக் கற்றார். 1925 இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்
ஈ) வியட்நாம் விடுதலைச் சங்கம் இந்தோ - சீனாவில் வியட்மின் என்று அழைக்கப்பட்டது
26.
அ) 1870 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஏகாதிபத்தியத்தின் ஒரு முக்கியப் பண்புக் கூறான தொழில், நிதி சக்திகள் இரண்டும் அணி சேர்ந்து சந்தைகளில் தங்களின் பொருட்கள் மற்றும் மூலதனத்திற்கான லாபத்தை தேடும் என்பது பத்தாயிரம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெளிவாக உணரப்பட்டது
ஆ) (i) ஆட்சியாளர்கள் நிலமானிய முறை சிந்தனைகளைக் கொண்டு இருந்தாலும் ஜப்பான் மேலைநாட்டுக் கல்வியையும் இயந்திரத் தொழில்நுட்பத்தையும் ஏற்றுக் கொண்டது
(ii) நவீன ராணுவம், கப்பற்படை ஆகியவற்றுடன் தொழில்துறையில் முன்னேறிய நாடாக ஜப்பான் விளங்கியது.
இ) சந்தை கச்சாப்பொருள் ஆகிய கூற்றுக்கான தேவைகள் வளர்ந்து கொண்டே இருந்தால் சுரண்டுவதற்காகத் தங்கள் பேரசை விரிவாக்கம் செய்ய முதலாளித்துவ நாடுகளுக்கு காலனிகள் தேவைப்பட்டன
ஈ) முதலாளித்துவம் மிகப்பெரிய முரண்களை ஏற்படுத்தின. அம்முரண்கள் அதிக அளவு வறுமை, குடிசைப் பகுதிகள், விண்ணை மூட்டும் கோபுரங்கள், பேரரசுகள் மற்றும் அவற்றைச் சார்ந்திருக்கும் சுரண்டப்பட்ட காலனிகள் போன்றவை ஆகும்
27.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
28.
(i) ஜெர்மானிய மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு) கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத் தரத்தில் எதிரொலித்தன.
(ii) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம் செழித்தோங்கியது.
(iii) அதற்கு பதிலாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
(iv) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ, சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்கு பெரும் சிரமம் இருந்தது.
(v) இதனால் கிழக்கு பெர்லின் மக்கள் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர் மேற்கு பெர்லினிலோ ரஷ்யா தன்மீது எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது
(vi) இச்சூழலில் 1961 - ல் கிழக்கு ஜெர்மனி ஒரு சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மேற்கு பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது
(vii) காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டு பயங்கர ஆயுதங்களின் துணையோடு கடுமையான கண்காணிப்பு பணியில் மூலம் கிழக்கிலிருந்து மக்கள் நுழைவது தவிர்க்கப்பட்டு வந்தது
(viii) ரஷ்யாவின் கட்டுப்பாட்டு 1980களின் நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9 நவம்பர், 1949ம் ஆண்டில் துவக்கத்தில் காஸா முனை தவிர்த்து எகிப்து, பாலஸ்தீன் எல்லை வரை நீண்ட நெகேவ் பகுதியை (பாலைவன பகுதியாகவும், அரைகுறை பாலைவனப் பகுதியாகவும் திகழும் தெற்கு இஸ்ரேலியப் பகுதி) இஸ்ரேலியர்கள் தங்கள் வசப்படுத்தினர்
(ix) இஸ்ரேலுடன் அரபு நாடுகள் தனித்தனியாக 1947 ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூன் வரை ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைகளின் கீழ் இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்துக்கு நாடுகளுக்குமிடையே தற்காலிகமான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது
(x) இஸ்ரேலைப் பொறுத்த வரையில் இக்கால கட்டத்தில் நிகழ்ந்த போர்கள் யாவும் அதன் சுதந்திரவேட்கையின் வெளிப்பாடாகவும்,சுதந்திர போராகவும் நினைவு கொள்ளப்பட்டது
(xi) அரேபியர்களைப் பொறுத்தமட்டில் பலரும் இப்போர்களினால் அகதிகளாக இடம்பெயர வேண்டிய இருந்ததால் அது நக்பா (பேரழிவு) என அழைக்கப்பட்டது
(xii) அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு உடனடியாக ஐ.நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற மேற்கத்திய சக்திகளுக்கு அவர்கள் வழங்கிய ஆயுதங்களும் நீதிக்கும் மாற்றாக விசுவாசத்தை வெளிப்படுத்தவே இஸ்ரேல் வலுவாக கட்டியெழுப்பப்பட்டது என்று உறுதியாகிறது
(xiv) 1989இல் கூடிய மக்கள் கூட்டம் அதை தகர்க்கத் துவங்கியது. ஜெர்மனி 3 அக்டோபர் 1990 அன்று முறையாக இணைக்கப்பட்டது. பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத் தடை என்பதை தாண்டிய ஒரு விஷயமாகும்.
(xv) அது முதலாளித்துவத்திற்கும், பொதுவுடமைக்கும் இடையே இருந்த பிளவை அடையாளப்படுத்தக்கூடிய ஒன்று.
(xvi) பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26 டிசம்பர் 1991இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
29.
(i) ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்காக முன் முயற்சியை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இங்கிலாந்தும் 1941 - இல் அட்லாண்டிக் சாசனத்தின் வழியே வெளியிட்டன.
(ii) இதில் நாஜிகளின் கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்டப் பின்னர் அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவுமென்றும் அதனால் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமில்லாமல் நிறைவேறாதத் தேவைகளென எதுவுமின்றி சுதந்திரமாக வாழலாம் என உரைக்கப்பட்டிருந்தது
(iii) ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் 1942 - இல் புத்தாண்டு தினத்தன்று அச்சு நாடுகளுக்கு எதிராக (ஜெர்மனி, இத்தாலி ஜப்பான்) போர் செய்து வந்த 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
(iv) ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945 - ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 26 நாள் 61 நாடுகள் கையெழுத்திட்டன. இந்தியா அப்போது சுதந்திர நாடாக இல்லையென்பதால் சாசனத்தில் கையெழுத்திடவில்லை
(v) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ ஐக்கிய நாடுகள் சபையின் சமமான வாக்குகளை அவை பெற்றுள்ளன
30.
(i) இத்தாலியில் 1924 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னர் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன
(ii) சோசலிஸ்டுகளின் தலைவரான மாட்டியொட்டி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை. எனக் கேள்வி எழுப்பியதால் அவர் கொலை செய்யப்பட்டார்
(iii) இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக முசோலினி எதிர்க்கட்சிகளைத் தடை செய்து பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்தினார்
(iv) எதிர்க்கட்சி தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைவைக்கப்பட்டனர். 1929 இல் இரண்டாம் டியூஸ் (தலைவர்) எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட முசோலினி சட்டங்களை இயற்றும் அதிகாரத்துடன் சர்வாதிகாரியானார்.
(v) வேலை நிறுத்தங்களையும் ஆலை மூடல்களையும் தடைசெய்து சட்டங்கள் இயற்றினார். தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும் இடம் கழகங்கள் உருவாக்கப்பட்டன
இவ்வமைப்பு ஊதியம் வெளியிட நிலைமைகள் ஆகியவை குறித்து முடிவு செய்யும். மீதியுள்ள மக்களில் பெரும் பகுதியினர் அவர்கள் செய்து வரும் பணியின் அடிப்படையில் பல கழகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்
(vi) இக்கழகங்கள் பின்னர் தேசியக்கூட்டமைப்புகளாக ஆக்கப்பட்டு கழகங்களுக்கான அமைச்சரின் பாராளுமன்றம் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாகப் பாசிஸ்டுக் கட்சியின் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது
(vii) இவ்வேறுபாடு பொருளாதாரத்தின் மீதான முசோலினியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டுக்கு துணை நின்றதுடன் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவராக மற்றபிற அதிகாரத்தைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது
31.
ரஷ்யப் புரட்சியின் விளைவுகள்:
(i) ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியால் குறிப்பிட்ட கால அளவுக்குள் ரஷ்யாவில் எழுத்தறிவின்மையும் வறுமையையும் ஒழிக்க முடிந்தது
(ii) ரஷ்யாவின் தொழிற்துறையும் வேளாண்மையும் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றன
(iii) வாக்குரிமை முதலாக பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டன
(iv) தொழிற்காலைகளும் வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன
(v) நிலம் சமுதாயத்தின் சொத்தாக அறிவிக்கப்பட்டது
(vi) ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன
(vii) போரிலிருந்து விலகாமலிருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என லெனின் நினைத்தார்
(viii) எனவே, அவர் உடனடியாக அமைதிக்கான முயற்சிகளை மேற்கொண்டார்
(ix) மைய நாடுகளின் கடும் நிபந்தனைகள் குறித்துக் கவலை கொள்ளாமல், புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்காக அவர் போரிலிருந்து விலக்கினார்.
(x) 1918 ஆம் ஆண்டு பிரெஸ்ட் - லிடோவ்ஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது
32.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:
1. ஹிட்லர் தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சி மிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி மக்களை தன்பக்கம் ஈர்த்தார்.
2. தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினார். இது நாசிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
3. இரண்டு அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு ஹிட்லர் மக்களின் ஆதரவைத் திரட்டினார்.
4. ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு ஆகும்.
5. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளுக்கு நேரெதிராக ஹிட்லர் ஜெர்மனியின் ராணுவத்தையும் ஆயுதங்களையும் அதிகரிக்கத் துவங்கினார்.
6. ஆயுதப் படைகளுக்கான ஆள் சேர்ப்பு, ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் ஏனைய இயந்திரங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவுதல் போன்றவற்றால் ஜெர்மனியின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதோடு வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையும் ஹிட்லரால் தீர்த்து வைக்கப்பட்டது.
7. ஹிட்லர் படைநீக்கம் செய்யப்பட்ட மண்டலமாகக் கருதப்பட்ட ரைன்லாந்தின் மீது 1936 இல் படையெடுத்தார்.
8. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானுடன் இணைந்து ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு உடன்படிக்கை செய்து கொண்டது.
9. ஹிட்லர் 1938 இல் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லாவாகியா நாடுகளைக் கைப்பற்றினார்.
10. 1939 ல் போலந்தைத் தாக்கி அதையும் கைப்பற்றினார்.
ஹிட்லரின் வீழ்ச்சி:
1. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும் ஜெர்மனி 1940 இல் நடைபெற்ற பிரிட்டன் போரின் இறுதியில் தோல்வியடைந்தது.
2. 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது படையெடுத்த ஜெர்மனி மின்னல் வேகத்தாக்குதலால் தொடக்கத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இறுதியில் சோவியத் படைகளின் வலுவான எதிர்ப்பு, ரஷ்யாவின் கடுமையான
3. குளிர் ஆகிய காரணங்களால் தோல்வியுற்றது.
4. 1942 இல் நடைபெற்ற போரிலும் ஹிட்லரின் நம்பிக்கைக்கு எதிராக ரஷ்யமக்கள் சோவியத் அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஜெர்மனி படைகள் மேலும் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
5. 1942 இல் நடைபெற்ற எல் அலாமெய்ன் போரில் ஜெர்மனி நேசநாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
6. 1943 இல் இத்தாலி சரணடைந்தது.
7. 1945 இல் முசோலினி இத்தாலிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
8. இத்தொடர் தோல்விகளால் ஹிட்லர் 1945 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
33.
1. சோவியத்துகளில் மென்ஷ்விக்குகள் ஆதிக்கம் செலுத்த சிறுபான்மையினரான போல்ஷ்விக்குகள் அச்சமுற்றவர்களாகவும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருந்தனர். லெனினின் வருகையால் இச்சூழ்நிலை மாறியது.
2. ரஷ்யப் புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
3. அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
4. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் "ரொட்டி, அமைதி, நிலம்" எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
5. தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
i) நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்படவேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
ii) போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
6. ஏமாற்றமடைந்த விவசாய ராணுவ வீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர். இது பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
7. அரசு "பிராவ்தா" -வை தடைசெய்து போல்ஷ்விக்குகளை கைது செய்தது.
8. டிராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்.
9. அக்டோபர் திங்களில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டார்.
10. டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார். நவம்பர் 7ஆம் நாள் முக்கியமான அரசுக்கட்டிடங்கள்.
11. குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும் புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
12. 1917 நவம்பர் 8ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப்பெயரிடப்பட்டது.
13. போரிலிருந்து விலகாமல் இருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என லெனின் நினைத்தார், எனவே உடனடியாக விலகினார்.
14. புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
15. 1918 இல் பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
34.
35.
36.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards