10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 10th Standard Social Science Tamil Medium Important Question All Chapter 2020 )
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______ ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவார்
வைகுண்ட சுவாமிகள்
அயோத்தி தாசர்
இராமலிங்க அடிகள்
ஜான்ரத்தினம்
2.
_________ பிராமண எதிர்ப்பியக்கத்தின் தொடக்ககாலத் தலைவர் என்று அறியப்படுகிறார்
நாராயணகுரு
ஜோதிபா பூலே
அய்யன்காளி
அன்னிபெசன்ட்
3.
பிரம்மஞானசபை 1886இல் இந்தியாவில் செயல்பட்ட இடம் ________
சாந்தோம்
நுங்கம்பாக்கம்
மயிலாப்பூர்
அடையார்
4.
கோமிஸ்டாங்கின் தலைவர்
ஷியாங் கே - ஷேக்
மா - சே - துங்
யுவான் - ஷி - கே
நாசர்
5.
மனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது
டிசம்பர் 10
நவம்பர் 10
ஜனவரி 10
ஏப்ரல் 10
6.
மா சே துங்கினால் எழுச்சியூட்டப்பட்ட தலைவர் ________
ஹோ சி மின்
டாக்டர் சன் யாட் சென்
லெனின்
சியாங் - கை - ஷேக்
7.
முதல் உலகப் போரின் மாபெரும் விளைவு ________
பசுமை புரட்சி
பிரெஞ்சுப்புரட்சி
ரஷ்யப் புரட்சி
அமெரிக்க புரட்சி
8.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
மகாதேவ் கோவிந்த் ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
ஜோதிபா புலே
அய்யன்காளி
9.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
1979
1989
1990
1991
10.
ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
சேம்பெர்லின்
வின்ஸ்டன் சர்ச்சில்
லாயிட் ஜார்ஜ்
ஸ்டேன்லி பால்டுவின்
11.
லத்தீன் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக மன்றோ கொள்கையில் திருத்தம் கொண்டு வந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
தியோடர் ரூஸ்வெல்ட்
ட்ரூமென்
ஐசனோவர்
உட்ரோ வில்சன்
12.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
13.
அயோத்தி தாசர் - சிறு குறிப்புத் தருக
14.
பார்சி என்பவர்கள் யார்?
15.
'டாக்டர் சன்யாட் சென்' பற்றி சிறு குறிப்பு வரைக.
16.
வின்ஸ்டன் சர்ச்சிலின் எழுச்சியூட்டும் உரையை பற்றி நீ அறிந்தது என்ன?
17.
இன ஒதுக்கல் கொள்கை என்றால் என்ன?
18.
வெர்டன் போர் விளக்கி எழுதவும்
19.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
20.
மேற்கத்திய நாடுகளின் தேவையின் பொருட்டே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதென்பது சூயஸ் கால்வாய் பிரச்சனையில் உறுதியானது – விளக்குக.
21.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
22.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
23.
அலிகார் இயக்கம்
அ) இவ்வியக்கத்தின் முக்கியக் குறிக்கோள் என்ன?
ஆ) இவ்வியக்கத்தின் ஆன்மாவாகக் கருதப்படுபவர் யார்?
இ) ஆங்கில நூல்கள் ஏன் உருது மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டன?
ஈ) பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்ட கல்லூரியின் பெயரைக் குறிப்பிடுக
24.
பொதுச்சபையும் பாதுகாப்புக் கவுன்சிலும்
அ) பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் நாடுகளை பட்டியலிடுக.
ஆ) பேரழிவு என்றால் என்ன?
இ) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் யார்?
ஈ) மறுப்பாணை அதிகாரம் (தடுப்பாணை) என்றால் என்ன?
25.
இந்தோ-சீனாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டம்
அ) காலனியாதிக்க நீக்கம் எனும் கோட்பாட்டைத் தெளிவுபட விளக்குக.
ஆ) இந்தோ- சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் எவை?
இ) காலனியாதிக்க எதிர்ப்புணர்வுகள் வளர்வதற்கு கம்யூனிசச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
ஈ) இந்தோ- சீனாவின் மைய நீரோட்ட அரசியல் கட்சி எது?
26.
ஜெர்மன் பேரரசர்
அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?
27.
நாராயணகுரு வாழ்க்கைமுறை மற்றும் போதனைகள் பற்றி கூறுக
28.
சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது
29.
ஐக்கிய நாடுகள் சபை பற்றி விரிவாக எழுதவும்
30.
முசோலினியின் கீழ் பாசிஸ்டுகள் என்ற கூற்றினை விளக்கி எழுதவும்.
31.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்
32.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரை வரையவும்.
33.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
34.
உலக வரைபடத்தில் கீழ்கண்டவற்றைக் குறிக்கவும்.
நேச நாடுகள்
35.
உலகவரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்.
1. கிரேட் பிரிட்டன்
2. ஜெர்மனி
3. பிரான்ஸ்
4. இத்தாலி
5. மொராக்கோ
6. துருக்கி
7. செர்பியா
8. பாஸ்னிய
9. கிரீஸ்
10. ஆஸ்திரிய-ஹங்கேரி
11. பல்கேரியா
12. ருமேனியா
36.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1914 - முதல் உலகப்போர் தொடக்கம்
1917 - ரஷ்யப் புரட்சி
1918 - முதல் உலகப்போர் முடிவு
1919 - வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
1920 - பன்னாட்டுச் சங்கம் அமைக்கப்படுதல்
1.
(b)
அயோத்தி தாசர்
2.
(b)
ஜோதிபா பூலே
3.
(d)
அடையார்
4.
(a)
ஷியாங் கே - ஷேக்
5.
(d)
ஏப்ரல் 10
6.
(a)
ஹோ சி மின்
7.
(c)
ரஷ்யப் புரட்சி
8.
(a)
மகாதேவ் கோவிந்த் ரானடே
9.
(d)
1991
10.
(a)
சேம்பெர்லின்
11.
(a)
தியோடர் ரூஸ்வெல்ட்
12.
(a)
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
13.
(i) பண்டிதர் அயோத்தி தாசர் (1845 - 1914) ஒரு தீவிரத் தமிழ் அறிஞரும் சித்த மருத்துவரும், பத்திரிகையாளரும் சமூக அரசியல் செயல்பாட்டாளரும் ஆவர்
(ii) சென்னையில் பிறந்த அவர் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர், சரளமாக பேசக்கூடியவர்
(iii) அதுவரையிலும் உயர்சாதியினரின் ராஜ்ஜியமாக விளங்கிய அச்சு பொது வெளிக்கும் இதழியலை ஒரு கருவியாகக் கொண்டுவிட்டிருந்தது. ஒரு புதிய அறிவைப் பரப்பும் முறையை முன்னெடுத்தார்
14.
பார்சி என்பவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படிப்பறிவு பெற்றிருந்த பார்சிகளின் சமயக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஈரானிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்த ஜொராஸ்டியர்கள்
15.
(i) டாக்டர் சன்யாட் சென் 1866 ஆம் ஆண்டு ஒரு ஏழ்மையான குடும்பத்தில் சான்டன் நகரத்தின் அருகே பிறந்தார்
(ii) இவர் 'சீனாவின் தந்தை' என அழைக்கப் பெற்றார் ஒரு கிறிஸ்தவப் பள்ளிகளில் கல்வி பெற்றதோடு கிறிஸ்தவராக மாறினார். ஹாங்காங் நகரில் மருத்துவ பயிற்சி பெற்றார்
(iii) மஞ்சுக்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு அவ்வெழுச்சி தோற்றத்தால் அவர் நாடு திறந்து வாழும் நிலை ஏற்பட்டது இவர் 1866 முதல் 1925 வரை வாழ்ந்தார்
16.
(i) நாம் நமது தீவைக் காப்போம் கொடுக்க வேண்டிய விலை என்னவாக இருந்தாலும் கடற்கரைகளில் நாம் போரிடுவோம்
(ii) நாம் வயல்வெளிகளிலும், வீதிகளிலும் போரிடுவோம் நாம் ஒரு போதும் சரணடைய மாட்டோம். 1940 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆற்றிய எழுச்சியூட்டும் ஜெர்மானியப் படையெடுப்பு பற்றிய அச்சம் நிலவிய அத்தருணத்தில் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதாய் அமைந்தது
17.
இன ஒதுக்கல் என்பதன் பொருள் தனிமைப்படுத்துதல் அல்லது ஒதுக்கி வைத்தல் என்பதாகும். இது 1947 ஆம் ஆண்டில் தேசியவாதக் கட்சியின் கொள்கையாயிற்று
18.
(i) 1916 ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கிடையே ஜெர்மானியர் பிரான்சின் முக்கியக் கோட்டையான வெர்டனைத் தாக்கினார்
(ii) ஐந்து மாதக் காலம் நடைபெற்ற வெர்டன் போரில் இரண்டு மில்லியன் வீரர்கள் பங்கெடுத்தனர். அவர்களில் சரிபாதி வீரர்கள் கொல்லப்பட்டனர்
(iii) ஜெர்மனியருக்கு எதிரான இங்கிலாந்தின் தாக்குதல் சோம்பி நதிக்கரை அருகே நடைபெற்றது. நான்கு மாத காலம் நடைபெற்ற சோம்பி நதிப்போரின் முதல் நாளில் இங்கிலாந்து 20,000 வீரர்களை இழந்தது. இருந்த போதிலும் வெர்டன் போர் முதல் உலகப்போரில் நேச நாடுகளே வெற்றி பெறும் என்பதை தீர்மானித்தது.
19.
1. ஜோதிபா பூலே 1852 இல் ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
2. சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
3. பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
4. ஜோதிபா பூலே பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
5. ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவிதிரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
20.
சூயஸ் கால்வாய் சிக்கல்:
(i) எகிப்தில் 1952 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கிளர்ச்சியின் மூலமாக கர்னல் நாசர் குடியரசுத் தலைவராக ஆக்கப்பட்டார். அவர் 1956 ஆம் ஆண்டில் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார்
(ii) இராஜதந்திரப் பிரயோகங்கள் பலனளிக்காத நிலையில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்து இராணுவ பலத்தைப் பயன்படுத்த முடிவு செய்தன.
(iii) இச்சூழலில் தனக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக கருதிய இஸ்ரேல் தனது கப்பல் போக்குவரத்து வசதியாக அக்கபா வளைகுடாவை திறந்து விட்டதோடு அதன் மூலம் எகிப்தின் எல்லை மீறிய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது
21.
1. ஆரவாரமான நாட்டுப்பற்று - இங்கிலாந்து
2. அதிதீவிரப்பற்று - பிரான்ஸ்
3. வெறிகொண்ட நாட்டுப்பற்று - ஜெர்மனி
22.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
23.
அ) அலிகார் இயக்கத்தின் முக்கியக் குறிக்கோள் இந்திய முஸ்லீம்கள் தங்கள் சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதாகும்.
ஆ) சர் சையது அகமது கான்
இ) மேலைநாட்டு அறிவியலையும் அரசப் பணிகளையும் ஏற்றுக் கொள்ளும்படி அவர் இஸ்லாமியர்களை வற்புறுத்தினார். அறிவியல் கழகம் ஒன்றை நிறுவிய அவர் ஆங்கில நூல்களைக் குறிப்பாக அறிவியல் நூல்களை உருதுமொழியில் மொழியாக்கம் செய்தார்
ஈ) அலிகார் முகமதிய ஆங்கிலோ - ஓரியண்டல் கல்லூரி
24.
அ) அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர்
ஆ) இரண்டாவது உலகப் போரின் போது ஜெர்மானியர்களால் ஆறு மில்லியன் யூத மக்கள் கொல்லப்பட்ட இனஅழிப்பை விளக்குவதற்கு பேரழிவுப் படுகொலை என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது
இ) குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரூஸ்வெல்டின் விதவை மனைவியார் தலைமை வகித்தார்
ஈ) ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும் மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு எடுக்கும் எந்த முடிவையும் தடுப்பாணை மூலம் ஒரு உறுப்பினர் தடுத்துவிடலாம்
25.
அ) காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்
ஆ) இந்தோ - சீனாவை உருவாக்கிய மூன்று நாடுகள் கம்போடியா, லாவோஸ் வியட்நாம்
இ) சீனத் தலைநிலப் பகுதியிலிருந்து பரவிய கம்யூனிச சிந்தனைகளும் தாக்கத்தை ஏற்படுத்தியத்திலிருந்து இந்தோ - சீனாவின் கணிசமான செல்வம் காலனியாதிக்க சக்திக்கே பயன்படுவதை பலர் உணர்ந்தனர்
ஈ) இந்தோ - சீனாவில் வியட்நாம் தேசியக் கட்சியே இருந்த அரசியல் கட்சிகளில் முக்கியமானது
26.
அ) ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் இரக்கமற்ற, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவர்
ஆ) ஜெர்மனியின் வெற்றிகொண்ட நாட்டுப்பற்று (kultur) என அழைக்கப்படுகிறது
இ) (i) மொராக்கோவில் பிரான்ஸ் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது.
(ii) எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.
ஈ) (i) கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் காலனிகளும், நேசநாடுகளால் தாக்கப்பட்டன
(ii) இக்காலனிகள் அனைத்தும் ஜெர்மனியில் இருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் அவைகளால் உடனடியாக எவ்வித உதவியையும் பெற முடியாமல் போனதாலும் நேசநாடுகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டது
27.
(i) 1854 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏழைப் பெற்றோர்க்கு மகனாக பிறந்த நாராயணகுரு (1854 - 1928) மலையாளம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் அறிஞராகவும், கவிஞராகவும் பரிணமித்தார்.
(ii) அந்நாட்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில்களுக்குள் செல்லமுடியாது. மேல்சாதி மக்கள் வாழும் தெருக்களுக்குள் செல்ல முடியாது. பொது நீர்நிலைகளிலோ கிணறுகளிலோ நீரெடுக்க முடியாது
(iii) ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் மேலாடையணிய அனுமதிக்கப்படவில்லை. பயங்கரமான சாதிக்கொடுமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துயரங்களையும் கண்டு மனம் வெதும்பிய அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகத் தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார்
(iv) அவர்களின் மேம்பாட்டிற்குப் பணியாற்றுவதற்காக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலயோகம் எனும் அமைப்பை உருவாக்கினார்
(v) அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலைக் கட்டிய அவர் அதை அனைவருக்கும் அர்ப்பணித்தார்.
(vi) அவருடைய இயக்கம் கேரள சமூகத்தில் குறிப்பாக ஈழவர்களுக்கிடையில் பெருமாற்றங்கள் நிகழ உந்துசக்தியாய்த் திகழ்ந்தது.
(vii) குமாரன் ஆசான், டாக்டர் பால்பு போன்ற சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் இவருடைய சிந்தனைகளால் தூண்டப்பெற்று இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
28.
(i) மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ம் ஆண்டு பேரரசின் பாதுகாவலாயிருந்த பேராசிரியர் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர். உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது
(ii) மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தலாயினர்.
(iii) இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகியிருந்தார்.
(iv) அவர்களில் டாக்டர் சன் யாட் சென்னும் ஒருவர் சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையவும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(v) ஆனால் மஞ்சு அரசின் நிர்வாகத்தில் முன்பு அமைச்சராகப் பணியாற்றிய யுவான்-ஷி-கே வடபகுதி நவீன இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருந்தார்.
(vi) அவர், சிறு வயது பேரரசர் பதிவுயேறக் காரணமாக இருந்தவர்களை வலியுறுத்தி பேரரசரைப் பதவியை விட்ட விலகச் செய்யும் முயற்சியில் வெற்றிகண்டார். அங்கு ஒரு குடியரசும் ஏற்படுத்தப்பட்டது.
29.
(i) ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்படுவதற்காக முன் முயற்சியை அமெரிக்க ஐக்கிய நாடுகளும் இங்கிலாந்தும் 1941 - இல் அட்லாண்டிக் சாசனத்தின் வழியே வெளியிட்டன.
(ii) இதில் நாஜிகளின் கொடுங்கோன்மை ஒழிக்கப்பட்டப் பின்னர் அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவுமென்றும் அதனால் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமில்லாமல் நிறைவேறாதத் தேவைகளென எதுவுமின்றி சுதந்திரமாக வாழலாம் என உரைக்கப்பட்டிருந்தது
(iii) ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் 1942 - இல் புத்தாண்டு தினத்தன்று அச்சு நாடுகளுக்கு எதிராக (ஜெர்மனி, இத்தாலி ஜப்பான்) போர் செய்து வந்த 26 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது
(iv) ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் 1945 - ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 26 நாள் 61 நாடுகள் கையெழுத்திட்டன. இந்தியா அப்போது சுதந்திர நாடாக இல்லையென்பதால் சாசனத்தில் கையெழுத்திடவில்லை
(v) தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ ஐக்கிய நாடுகள் சபையின் சமமான வாக்குகளை அவை பெற்றுள்ளன
30.
(i) இத்தாலியில் 1924 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்ட பின்னர் பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக 65 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன
(ii) சோசலிஸ்டுகளின் தலைவரான மாட்டியொட்டி தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறவில்லை. எனக் கேள்வி எழுப்பியதால் அவர் கொலை செய்யப்பட்டார்
(iii) இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பொருட்டு எதிர் கட்சியினர் பாராளுமன்றத்தைப் புறக்கணித்தனர். இதன் விளைவாக முசோலினி எதிர்க்கட்சிகளைத் தடை செய்து பத்திரிகைகளைத் தணிக்கைக்கு உட்படுத்தினார்
(iv) எதிர்க்கட்சி தலைவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது சிறைவைக்கப்பட்டனர். 1929 இல் இரண்டாம் டியூஸ் (தலைவர்) எனும் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட முசோலினி சட்டங்களை இயற்றும் அதிகாரத்துடன் சர்வாதிகாரியானார்.
(v) வேலை நிறுத்தங்களையும் ஆலை மூடல்களையும் தடைசெய்து சட்டங்கள் இயற்றினார். தொழிற்சங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும் இடம் கழகங்கள் உருவாக்கப்பட்டன
இவ்வமைப்பு ஊதியம் வெளியிட நிலைமைகள் ஆகியவை குறித்து முடிவு செய்யும். மீதியுள்ள மக்களில் பெரும் பகுதியினர் அவர்கள் செய்து வரும் பணியின் அடிப்படையில் பல கழகங்களாக ஒருங்கிணைக்கப்பட்டனர்
(vi) இக்கழகங்கள் பின்னர் தேசியக்கூட்டமைப்புகளாக ஆக்கப்பட்டு கழகங்களுக்கான அமைச்சரின் பாராளுமன்றம் ஒழிக்கப்பட்டு அதற்கு மாற்றாகப் பாசிஸ்டுக் கட்சியின் மற்றும் கழகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பொன்று உருவாக்கப்பட்டது
(vii) இவ்வேறுபாடு பொருளாதாரத்தின் மீதான முசோலினியின் சர்வாதிகாரக் கட்டுப்பாட்டுக்கு துணை நின்றதுடன் நிர்வாகம் மற்றும் ஆயுதப்படைகளின் தலைவராக மற்றபிற அதிகாரத்தைச் செயல்படுத்தவும் அவருக்கு உதவியது
31.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம்:
(i) தோல்வியடைந்த நாடுகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. அமைதி உடன்படிக்கை கட்டளையிடப்பட்டதாக இருந்தது. அது போரின் ஆதாயங்கள் வெற்றி பெற்றவருக்கே நேசநாடுகளே வெற்றியாளர்கள் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது
(ii) அமைதியை மீட்பதற்காக உட்ரோ வில்சனால் முன் வைக்கப்பட்ட பதினான்கு அம்சத் திட்டம் எனும் கோட்பாடு ஜெர்மனியை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது
(iii) போர் இழப்பீட்டுத் தொகையான 6600 மில்லியன் பவுண்டுகள் ஜெர்மனியின் செலுத்தும் சக்தியைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது
(iv) அரசியல் பொருளாதார ரீதியாக ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டது. ஆனால் ஜெர்மனி தனது கிழக்கெல்லையில் மிகப்பெரும் ரஷ்யா, ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகளுக்குப் பதிலாக தற்போது சிறிய பலவீனமான புதிய நாடுகளை கொண்டிருந்தது
(v) ஜெர்மனியருக்கும் ஆஸ்திரியார்களுக்கும் பல வாக்குறுதிகளை வழங்கிய வில்சன் அவற்றிற்கு துரோகமிழைத்து விட்டார். 1920 ல் வெர்செயல்ஸ் உடன்படிக்கையை செனட் சபை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்த அமெரிக்கா தனித்திருக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது மிகவும் வலுவிழந்த நிலைமையிலிருந்த பிரான்ஸ் மட்டும் இங்கிலாந்தின் நல்லுதவியுடன் ஆற்றல் மிக்க ஜெர்மனியின் வலிமையை எதிர்கொள்ள நேர்ந்தது
32.
அடால்ப் ஹிட்லரின் எழுச்சி:
1. ஹிட்லர் தனது வல்லமை மிக்க சொற்பொழிவாற்றும் திறமையாலும் உணர்ச்சி மிக்கப் பேச்சுக்களாலும் ஜெர்மனியை அதன் ராணுவப் புகழ்மிக்க முந்தைய காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்வதாகவும் கூறி மக்களை தன்பக்கம் ஈர்த்தார்.
2. தேசிய சமதர்மவாதிகள் கட்சியை நிறுவினார். இது நாசிக்கட்சி என்று அழைக்கப்பட்டது.
3. இரண்டு அடிப்படைக் கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு ஹிட்லர் மக்களின் ஆதரவைத் திரட்டினார்.
4. ஒன்று ஜெர்மனியரே சுத்தமான ஆரிய இனத்தவர் எனும் இனஉயர்வு மனப்பாங்கு மற்றொன்று மிக ஆழமான யூத வெறுப்பு ஆகும்.
5. வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் சரத்துகளுக்கு நேரெதிராக ஹிட்லர் ஜெர்மனியின் ராணுவத்தையும் ஆயுதங்களையும் அதிகரிக்கத் துவங்கினார்.
6. ஆயுதப் படைகளுக்கான ஆள் சேர்ப்பு, ராணுவத்திற்குத் தேவைப்படும் ஆயுதங்களையும் ஏனைய இயந்திரங்களையும் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் நிறுவுதல் போன்றவற்றால் ஜெர்மனியின் பொருளாதாரம் புத்துயிர் பெற்றதோடு வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையும் ஹிட்லரால் தீர்த்து வைக்கப்பட்டது.
7. ஹிட்லர் படைநீக்கம் செய்யப்பட்ட மண்டலமாகக் கருதப்பட்ட ரைன்லாந்தின் மீது 1936 இல் படையெடுத்தார்.
8. ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பானுடன் இணைந்து ரோம் - பெர்லின் - டோக்கியோ அச்சு உடன்படிக்கை செய்து கொண்டது.
9. ஹிட்லர் 1938 இல் ஆஸ்திரியா மற்றும் செக்கோஸ்லாவாகியா நாடுகளைக் கைப்பற்றினார்.
10. 1939 ல் போலந்தைத் தாக்கி அதையும் கைப்பற்றினார்.
ஹிட்லரின் வீழ்ச்சி:
1. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தபோதிலும் ஜெர்மனி 1940 இல் நடைபெற்ற பிரிட்டன் போரின் இறுதியில் தோல்வியடைந்தது.
2. 1941 ஆம் ஆண்டு ரஷ்யாவின் மீது படையெடுத்த ஜெர்மனி மின்னல் வேகத்தாக்குதலால் தொடக்கத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இறுதியில் சோவியத் படைகளின் வலுவான எதிர்ப்பு, ரஷ்யாவின் கடுமையான
3. குளிர் ஆகிய காரணங்களால் தோல்வியுற்றது.
4. 1942 இல் நடைபெற்ற போரிலும் ஹிட்லரின் நம்பிக்கைக்கு எதிராக ரஷ்யமக்கள் சோவியத் அரசுக்கு ஆதரவு அளித்ததால் ஜெர்மனி படைகள் மேலும் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
5. 1942 இல் நடைபெற்ற எல் அலாமெய்ன் போரில் ஜெர்மனி நேசநாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
6. 1943 இல் இத்தாலி சரணடைந்தது.
7. 1945 இல் முசோலினி இத்தாலிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்.
8. இத்தொடர் தோல்விகளால் ஹிட்லர் 1945 ஏப்ரலில் தற்கொலை செய்து கொண்டார்.
33.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
34.
35.
36.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards