10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 29/10/2019
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
1930 ஜனவரி 26
1929 டிசம்பர் 26
1946 ஜூன் 16
1947 ஜனவரி 15
2.
WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
159
164
148
128
3.
இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்
சிமெண்ட்
ஆபரணங்கள்
தேயிலை
பெட்ரோலியம்
4.
இந்தியாவில் முதல் சணல் ஆலை நிறுவப்பட்ட இடம்
கொல்கத்தா
மும்பை
அகமதாபாத்
பரோடா
5.
இந்தியாவில் அதிகம் நெல் விளையும் மாநிலம்_____
பஞ்சாப்
மகாராஷ்டிரா
உத்தரப்பிரதேசம்
மேற்கு வங்காளம்
6.
நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.
கோடைக்காலம்
குளிர்க்காலம்
மழைக்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
7.
இந்தியாவின் தென்கோடி முனை _____.
அந்தமான்
கன்னியாகுமரி
இந்திராமுனை
காவரட்தி
8.
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.
குடியரசுத் தலைவர்
மக்களவை
பிரதம அமைச்சர்
மாநிலங்களவை
9.
விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
மகாதேவ் கோவிந்த் ரானடே
தேவேந்திரநாத் தாகூர்
ஜோதிபா புலே
அய்யன்காளி
10.
நமது அடிப்படை கடமைகளை______ இடமிருந்து பெற்றோம்.
அமெரிக்க அரசியலமைப்பு
கனடா அரசியலமைப்பு
ரஷ்யா அரசியலமைப்பு
ஐரிஷ் அரசியலமைப்பு
11.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?
ஹபீஸ் அல்-ஆஸாத்
யாசர் அராபத்
நாசர்
சதாம் உசேன்
12.
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
ரஷ்யர்கள்
அரேபியர்கள்
துருக்கியர்கள்
யூதர்கள்
13.
தென் அமெரிக்காவின் விடுதலையைத் ததுரிதப்படுத்தியது எது?
அமெரிக்கா அளித்த உதவி
நெப்போலியனின் படையெடுப்புகள்
சைமன் பொலிவரின் பங்கேற்பு
பிரெஞ்சுப் புரட்சி
14.
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
டெல்வில்லி
ஆரஞ்சு நாடு
அடோவா
அல்ஜியர்ஸ்
15.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
16.
தொழில் முனைவு என்றால் என்ன?
17.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.
18.
களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
19.
தனி நபர் வருமானம் என்றால் என்ன?
20.
கால்நடைகள் என்றால் என்ன?
21.
’வானிலையியல்’ வரையறு
22.
மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
23.
முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.(அல்லது) இரண்டாம் உலகப்போரின் போது முத்து துறைமுகம் தாக்கப்பட்டு நிகழ்வு எங்கனம் முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது?
24.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
25.
தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?
26.
GST யின் அமைப்பை எழுதுக.
27.
தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்
28.
உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.
29.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
30.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
31.
பல்நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக
32.
33.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க
34.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?
35.
அணிசேரா இயக்கம்
அ) அணிசேரா இயக்கத்தின் முதல் மாநாடு எங்கே எப்போது நடைபெற்றது?
ஆ) முதல் மாநாட்டில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்கள் யாவர்?
இ) அணிசேரா இயக்கத்தின் குறிக்கோள்கள் என்ன?
ஈ) அணிசேரா இயக்கத்தின் பெல்கிரேட் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இரு அடிப்படைக் கோள்களைக் கூறுக.
36.
பனிப்போர்
அ) இரண்டாம் உலகப்போருக்குப்பின் உருவான இரு இராணுவப்பிரிவுகளைப் பற்றிக் கூறுக.
ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை உருவாக்கியவர் யார்? அதை முதலில் பயன்படுத்தியவர் யார்?
இ) நேட்டோவின் உருவாக்கத்திற்கு சோவியத் ரஷ்யாவின் பதிலடி யாது?
ஈ) எவ்வகைப் பட்டியில் வார்சா உடன்படிக்கை கலைக்கப்பட்டது?
1.
(a)
1930 ஜனவரி 26
2.
(b)
164
3.
(d)
பெட்ரோலியம்
4.
(a)
கொல்கத்தா
5.
(d)
மேற்கு வங்காளம்
6.
(a)
கோடைக்காலம்
7.
(b)
கன்னியாகுமரி
8.
(b)
மக்களவை
9.
(a)
மகாதேவ் கோவிந்த் ரானடே
10.
(c)
ரஷ்யா அரசியலமைப்பு
11.
(b)
யாசர் அராபத்
12.
(d)
யூதர்கள்
13.
(b)
நெப்போலியனின் படையெடுப்புகள்
14.
(c)
அடோவா
15.
"கருப்பு பணம்" என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப்பணமாகும். வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ஆகும்.
16.
தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும். இவை ஒன்றை உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
17.
1) ஆப்கானிஸ்தான்
2) பாகிஸ்தான்
3) சீனா
4) பூடான்
5) நேபாளம்
6) வங்காளதேசம்
7) மியான்மர்
8) இலங்கை
9) மாலத்தீவு
18.
1. ஆற்காட்டு நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு அனுப்பி திருநெல்வேலிக்குச் செல்லும் படையை பலப்படுத்தினார்.
2. கம்பெனியின் 1000 சிப்பாய்களோடு நவாபால் அனுப்பப்பட்ட 600க்கும் மேற்பட்ட படைவீரர்களையும் மாபூஸ்கான் பெற்றார்.
3. மேலும் கர்நாடகப் பகுதியிலிருந்து குதிரைப்படை மற்றும் காலாட்படையின் ஆதரவும் மாபூஸ்கானுக்கு இருந்தது.
4. மாபூஸ்கான் களக்காடு பகுதியில் தனது படைகளை நிலைநிறுத்தும் முன்பாக திருவிதாங்கூரின் 2000 வீரர்கள் பூலித்தேவரின் படைகளோடு இணைந்தனர்.
5. களக்காட்டில் நடைபெற்றப் போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டன.
19.
1. தனிநபர் வருமானம் (தலா வருமானம்) என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
2. நாட்டு வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் தனிநபர் வருமானம் (தலா வருமானம்) பெறப்படுகிறது.
தனிநபர் வருமானம் (தலா வருமானம்) = நாட்டு வருமானம்/மக்கள் தொகை
20.
1. கால்நடைகள் இந்தியாவின் விவசாயத்தோடு ஒருங்கிணைந்த கூறுகள் ஆகும். கால்நடைகளின் பல்வேறு வகைப் பயன்பாடுகள் காரணமாக இவை சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
2. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அளிப்பதன் மூலம் இவை உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
3. வேளாண்மை பொய்க்கும் பொழுது வேலை வாய்ப்பையும், வருவாயையும் அளிக்கின்றன. மேலும் நிலத்தை உழுவதற்கும், பயிர்களுக்கு உரம் அளிப்பவையாகவும் அவை விளங்குகின்றன.
21.
வானிலையியல்:
வானிலையின் பல்வேறு கூறுகளைப் பற்றி குறிப்பாக வானிலை முன்னறிவிப்பு பற்றிய ஒரு அறிவியல் பிரிவு வானிலையியல் எனப்படும்.
22.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைமையில் கூடிய முதலாளித்துவ நாடுகள் உலக அரங்கில் முதலாம் உலக நாடுகள் என்றும், சோவியத் நாட்டின் தலைமையில் கூடிய பொதுவுடைமை நாடுகள் இரண்டாம் உலக நாடுகள் என்றும் அழைக்கப்பட்டன. இவ்விரு பிரிவிலும் சேராமல் வெளியிலிருந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்டன.
23.
1. 1941 டிசம்பரில் ஹவாயிலுள்ள அமெரிக்கக் கப்பற்படைத் தளமான முத்துத் துறைமுகத்தின் மீது ஜப்பானிய விமானப்படைகள் முன்னறிவிப்பின்றி பெரும் தாக்குதலைத் தொடர்ந்தன.
2. இத்தாக்குதலில் பல போர்க்கப்பல்களும் போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
3. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஜப்பான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. சீனாவும் பிரிட்டனும் அமெரிக்காவுடன் இணைந்தன.
4. இதனால் ஆசிய பசிபிக் போரும் ஐரோப்பியப் போரும் ஒன்றிணைந்து ஒரு பொதுக் காரணத்திற்கான போராக மாறியது.
24.
மூவர் கூட்டு நாடுகள்: இங்கிலாந்து (பிரிட்டன்), பிரான்ஸ், ரஷ்யா
25.
1. ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம். வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன.
2. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது.
3. அதேபோல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியை சார்ந்தே உள்ளது.
4. நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தி திறனை அளிக்கின்றன.
5. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்திச் செலவும் குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.
6. அத்தகைய பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே வேலைவாய்ப்பை உருவாக்குவது தொழில்மயமாதலின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
7. தொழில் மயமாதலுக்கு நன்மை தருவது தொழில்நுட்ப மாற்றமே ஆகும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது உள்ளீடு அதிகரித்து அவர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
8. அதிக வருமானம் அதிகரிப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழிவகுக்கிறது.
9. எனவே தொழில்மயமாதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் உதவுகிறது.
26.
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST) (மாநிலத்திற்குள்) :
1. மதிப்புக் கூட்டு வரி (VAT)
2. ஆடம்பர வரி
3. பரிசுச் சீட்டு வரி
4. விற்பனை வரி
5. கொள்முதல் வரி
6. பொழுதுபோக்கு வரி
7. மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்
மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST) (மாநிலத்திற்குள்) :
1. மத்திய சுங்கத்தீர்வை
2. கூடுதல் கட்டணம்
3. சேவை வரி
4. எதிர் வரி
5. கல்விக் கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி}
6. கூடுதல் ஆயத்தீர்வை
ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST) (மாநிலங்களுக்கு இடையே) :
1. நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன.
5%, 12%, 18% மற்றும் 28%
2. காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
27.
கோடைப்பருவம்:
1. தமிழ்நாட்டின் கோடைக்காலம் மார்ச் முதல் மே வரையாகும். இக்காவத்தில் சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
2. இக்காலத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம் கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. பொதுவாக வெப்பநிலையானது 30°Cலிருந்து 40°C வரை வேறுபடுகிறது.
3. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழைமூலமும், வெப்பச் சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
குளிர்காலம்:
1. தமிழகத்தின் குளிர்காலம் ஜனவரி முதல் பிப்ரவரி வரை ஆகும். இக்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
2. இப்பருவத்தில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
3. கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை. தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
4. மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°Cக்கும் குறைவாக உள்ளது.
5. நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது. இக்குறைந்த வெப்பநிலை அடர்மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
28.
உலகமயமாக்கல் வரலாற்றின் மூன்று நிலைகள்.
1. தொன்மையான உலகமயமாக்கல்
2. இடைப்பட்ட உலகமயமாக்கல்
3. நவீன உலகமயமாக்கல்
தொன்மையான உலகமயமாக்கல்:
1. சுமேரிய மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கியது என்று ஆண்ட்ரே குந்துர் ஃபிராங்க் வாதிட்டார்.
2. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தின் ஆரம்ப வடிவம் தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க காலத்தின் போது அழைக்கப்பட்டது.
3. ரோம பேரரசுக்கும், பார்த்தியன் பேரரசுக்கும் மற்றும் ஹன் வம்சத்துக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பு உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவமாகும்.
4. மேலும் இப்பேரரசுகளுக்கிடையிலான வணிக உறவுகளால் "பட்டு சாலையின்" (Silk Route) வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.
இடைப்பட்ட உலகமயமாக்கல்:
1. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் முதலில் போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் கடல் வழி வாணிபம் மேற்கொண்டனர்.
2. உலகமயமாக்கல் 17ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் 1600 ல் தனியார் நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டது. இது முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது.
3. மேலும் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (1602) உருவாக்கப்பட்டு வாணிபம் நடைபெற்றது
நவீன உலகமயமாக்கல்:
1. 19ம் நூற்றாண்டில் உலகமயமாக்கலின் வருகை நவீன வடிவத்தை நெருங்கியது.
2. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டிருந்தன.
3. அவை, இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
4. 20ம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள் வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்தது ஆகும்.
29.
சாலைகளின் வகைகள்:
1. தேசிய நெடுஞ்சாலைகள்
2. மாநில நெடுஞ்சாலைகள்
3. மாவட்டச் சாலைகள்
4. கிராமச் சாலைகள்
5. எல்லைப்புறச் சாலைகள்
6. தங்க நாற்கரச் சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள்
1. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கிய அமைப்பாகும். இது நாட்டின் எல்லைகள், மாநிலத் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள் இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
2. இச்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
3. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH4 ஆகும். இது உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
4. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை இணைக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகள்:
1. மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, மாநில தலை நகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும், அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
2. இந்த மாநில நெடுஞ்சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாவட்டச் சாலைகள்:
1. மாவட்ட சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
2. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
கிராமச்சாலைகள்:
1. கிராமச் சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
2. இவை பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. இவைகளை கிராமப் பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.
எல்லைப்புறச்சாலைகள்:
1. எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாகும்.
2. இவைகள் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பு 1960இல் நிறுவப்பட்டது.
4. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
5. எல்லைப்புறச் சாலை நிறுவனத்தால் உலகிலேயே உயரமான (4270 மீ) எல்லைப்புற சாலை லடாக்கிலுள்ள லேவிலிருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
தங்க நாற்கரச்சாலை:
5846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி-கொல்கத்தா-சென்னை-மும்பை-புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வட -தென் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் :
வடதென் பகுதி இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைப்பதாகும்
கிழக்கு மேற்கு பகுதி இணைக்கும் வகையில் குஜராத் போர்பந்தரையும் அசாம் மாநிலத்தில் சில்சரையும் இணைப்பதாகும்.
விரைவுச் சாலை :
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளை கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
எ.கா: மும்பை - பூனா விரைவுச்சாலை
பன்னாட்டு நெடுஞ்சாலை:
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன சாலை பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
30.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
31.
பல்நோக்கு திட்டம்;
1. பல்நோக்குத்திட்டம் என்பது ஒரு அறிவியல் முறையிலான நீர்வள மேலாண்மைத் திட்டமாகும்.
2. ஆற்றின் குறுக்கே பல்வேறு நோக்கங்களுக்காக அணையைக் கட்டுவதால் இது பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
3. நீர்ப்பாசனம், நீர்மின் உற்பத்தி, குடிநீர், வெள்ளத்தடுப்பு, தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குதல், மீன்வள மேம்பாடு மற்றும் நீர் வழிப் போக்குவரத்து போன்றவை இதன் பல்வேறு நோக்கங்களாகும்.
ஹிராகுட் திட்டம்:
1. இத்திட்டம் மகாநதியின் மீது 1948 ல் தொடங்கப்பட்டு 1957ல் முடிக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 83 கோடியாகும்.
2. இத்திட்டத்தின் கீழ் மகாநதியின் மீது ஒரிசாவில் ஒரு நீண்ட அணை கட்டப்பட்டது. அது 4.8 கி.மீ நீளமும், 61 மீட்டர் உயரமும் உடையது. இந்த அணைக்கட்டுதான் உலகின் மிக நீண்ட அணைக்கட்டு ஆகும்.
3. இந்த அணை சுமார் 810 கோடி கியூபிக் மீட்டர் நீரைத் தேக்கிவைக்கும் திறன் கொண்டது. இத்திட்டத்தின் கீழ் 9 மின்நிலையங்கள் கட்டப்பட்டு 347.5 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
4. வெள்ளத் தடுப்பு, ஒரிசாவின் இயற்கை வள பாதுகாப்பு, நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்தியை நோக்கமாகக் கொண்டது இத்திட்டமாகும்.
5. இத்திட்டத்தின் மூலம் 52,609 சதுரகிலோமீட்டர் பரப்பளவு நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.
பக்ரா நங்கல் திட்டம்:
1. பக்ராநங்கல் இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்குத்திட்டம் ஆகும். சிந்து நதியின் துணையாறாகிய சட்லஜ் ஆற்றின் குறுக்கே பக்ரா என்னும் இடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது.
2. இத்திட்டத்தினால் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலபிரதேசம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயன்பெறுகின்றன.
3. பக்ரா நங்கல் திட்டம் உலகின் பெரிய புவி ஈர்ப்பு அணை ஆகும்.
4. பக்ரா அணைக்குக் கீழாக நங்கல் என்னுமிடத்தில் ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இதுவும் சட்லஜ் ஆற்றின் மீதே அமைந்துள்ளது.
5. பக்ராவில் 2 மின்சக்தி நிலையங்களும், நங்கலில் 2 மின்சக்தி நிலையங்களும் உள்ளன.
6. பக்ராநங்கல் திட்டத்தினால் 52,609 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுள்ள விவசாய நிலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது.
7. 1500 மெகாவாட் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
32.
33.
ஐ.நா. சபை
1. அனைத்து நாடுகளிலும் அமைதி நிலவிடவும் மக்கள் தங்கள் வாழ்வை அச்சமின்றி சுதந்திரமாக வாழ்ந்திடவும் ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2. ஐ.நா சபையின் சாசனத்தில் 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் 51 நாடுகள் கையெழுத்திட்டன.
3. தற்போது ஐக்கிய நாடுகள் சபை 193 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சிறியதோ அல்லது பெரியதோ, ஐக்கிய நாடுகள் சபையில் சமமான வாக்குகளைப் பெற்றுள்ளது.
பொதுச்சபை:
1. பொதுச்சபை எனும் அமைப்பில் ஒவ்வொரு நாடும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றது.
2. இவ்வமைப்பு ஆண்டுக்கு ஒருமுறை கூடி நாடுகளின் நலன் சார்ந்த அம்சங்களும், முரண்பாடுகளுக்கான காரணங்களும் விவாதிக்கப்படுகின்றன.
பாதுகாப்பு சபை:
1. பாதுகாப்பு சபையானது 15 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2. அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இச்சபையின் நிரந்தர உறுப்பினர்களாவர். ஏனைய பத்து உறுப்பினர்கள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
3. ஒவ்வொரு நிரந்தர உறுப்பினருக்கும், மறுப்பாணை அதிகாரம் (veto power) உண்டு. எந்த முடிவையும் இதன்மூலம் தடுத்துவிடலாம்.
நிர்வாக அமைப்பு:
1. ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாட்டு அங்கமாகத் திகழ்வது செயலகம் ஆகும்.
2. இதன்பொதுச்செயலாளர், பொதுச்சபையில், பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
3. பொதுச் செயலாளர் தனது காபினெட் உறுப்பினர்கள், ஏனைய அதிகாரிகள் ஆகியோரின் துணையோடு ஐ.நா சபையை நடத்துகிறார்.
4. பன்னாட்டு நீதிமன்றம் ஐ.நா. சபையின் நீதி நிர்வாகக் கிளையாகும். இது நெதர்லாந்திலுள்ள தி ஹேக்கில் அமைந்துள்ளது.
5. பொருளாதார மற்றும் சமூகமன்றம் ஐ.நா.சபையின் ஐந்தாவது அங்கமாகும்.
ஐ.நா.வின் இதன் முக்கியத் துணைஅமைப்புகள்
1. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு - (FAO)
2. உலக சுகாதார நிறுவனம் - (WHO)
3. ஐ.நா. வின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு - (UNESCO)
4. ஐ.நா. குழந்தைகள் நிதி நிறுவனம் - (UNICEF)
5. ஐ.நா. வளர்ச்சி திட்டம் - (UNDP)
ஐ.நா வின் செயல்பாடுகள்:
1. கடந்த பல பத்தாண்டுகளில் உலகம் எதிர்கொண்ட, மாறிவரும் பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா. சபை தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது.
2. 1960 களில் காலனியாதிக்க நீக்கம் முக்கியப் பிரச்சனையாகும்.
3. மனித உரிமைகள், அகதிகள் பிரச்சனை, பருவகால மாற்றம், பாலினச் சமத்துவம் ஆகியன தற்போது ஐ.நா. சபையின் செயல்பாட்டு வளையத்தினுள் உள்ளன.
4. ஐ.நா. வின் அமைதிப்படை உலகம் முழுவதிலும் மோதல்கள் அரங்கேறியப் பல்வேறு பகுதிகளில் அடிப்படை பணி செய்துள்ளது. அதன் முக்கியப் பகுதியாக உள்ள இந்திய ராணுவம் உலகின் பல்வேறு பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளது.
34.
வல்லரசுகளின் இரு அணிகள்:
1. 1900 இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
2. ஒரு முகாமில் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி இத்தாலி ஆகியன 1882 இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
3. மற்றொரு முகாமில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்:
1. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை:
1. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் ஆக்கிரமிப்பு ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
2. ஜெர்மனியின் கடற்படை விரிவுபடுத்தப்பட்டது.
3. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கியது.
4. இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
1. பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
2. 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
3. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல்:
1. 1908 இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
2. ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.
பால்கன் போர்கள்:
1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல், பொருளாதாரச் சூழலைச் சாதகமாகக் கொண்டு கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களைத் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன.
2. மாசிடோனியா பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே மாசிடோனியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பால்கன் நாடுகளுக்கிடையே போட்டி நிலவியது.
3. 1912 ஆம் ஆண்டு பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன் போரில் துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தது.
உடனடிக் காரணம்:
1. 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
2. ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
3. ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு எதிராகப் போர் செய்ய திட்டமிட்டது.
4. பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கியதால் இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.
35.
அ) 1961 - பெல்கிரேடில் கூடியது
ஆ) டிட்டோ (யுகோஸ்லோவியா) நாசர் (எகிப்து), நேரு (இந்தியா), நுக்ருமா (கானா), சசுகர்ணோ (இந்தோனேசியா)
இ) புதிதாக அரசியல் சுதந்திரம் பெற்ற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் 1955 - ம் ஆண்டு பாண்டுங்கில் (இந்தோனேசியா) கூடி இரு வல்லரசு அணிகளிலும் சேரக்கூடாது என்பதை தீவிரமாக வலியுறுத்தின. மேலும் அவை காலனிய ஆதிக்கமும் ஏகாதிபத்தியமும் எவ்வடிவம் எடுத்தாலும் அதை எதிர்த்து நிற்பது என்ற முடிவு செய்தன
ஈ) அமைதியோடு இணைந்திருந்தால், அமைதியையும் பாதுகாப்பையும் முன்னிறுத்தப் பாடுபடல், எந்த அணியோடும் இராணுவக் கூட்டுறவுக் கொள்ளாமல் இருத்தல், எந்த வல்லரசுக்கும் தத்தம் நாட்டிற்குள் இராணுவ நிலைகள் ஏற்படுத்த அனுமதி வழங்காமல் இருத்தல் போன்றவையே ஆகும்
36.
அ) ஐக்கிய அமெரிக்க நாடு சோவியத் நாடு
ஆ) பனிப்போர் என்ற சொல்லாடலை முதன்முறையாக ஜார்ஜ் ஆர்வெல் (1945) என்ற ஆங்கில எழுத்தாளர் கையாண்டார்
இ) நேட்டோவின் ஒப்பந்தம் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னும் கலைக்கப்படாமல், முன்னாளைய வார்சா ஒப்பந்த உறுப்பினர் நாடுகள் ஏழையும் உள்ளடக்கியது
ஈ) 1991 - ல் வார்சா ஒப்பந்தத்தை சோவியத்தின் பிளவு முடிவுக்குக் கொண்டு வந்தது
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards