10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வரும் இருபடிச் சமன்பாடுகளின் மூலங்களின் தன்மையைக் காண்க
9x2 - 24x + 16 = 0
2.
மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்டுள்ளது. இருபடிச் சமன்பாடுகளைக் காண்க.
\(\cfrac { 5 }{ 3 } ,4\)
3.
மூலங்களின் கூடுதல் மற்றும் பெருக்கல் கீழ்க்காணுமாறு கொடுக்கப்பட்டுள்ளன எனில், அவற்றுக்குத் தகுந்த இருபடிச் சமன்பாடுகளைக் கண்டறிக.
\(-\cfrac { -3 }{ 5 } ,-\cfrac { 1 }{ 2 } \)
4.
பின்வருவனவற்றின் வர்க்கமூலம் காண்க.
\(\cfrac { 121\left( a+b \right) ^{ 8 }\left( x+y \right) ^{ 8 }\left( b-c \right) ^{ 8 } }{ 81\left( b-c \right) ^{ 4 }\left( a-b \right) ^{ 12 }\left( b-c \right) ^{ 4 } } \)
5.
கீழ்க்கண்ட கோவைக்கு விலக்கப்பட்ட மதிப்புகள் இருப்பின் அவற்றைக் காண்க: \(\cfrac { { x }^{ 2 }+6x+8 }{ { x }^{ 2 }+x-2 } \)
6.
If, \(A=\left( \begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 1 \\ 3 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 2 \\ 1 \end{matrix}\begin{matrix} 0 \\ 3 \end{matrix} \right) \) எனில் AB மற்றும் BA-ஐக் காண்க. மேலும் AB = BA என்பது சரியா என ஆராய்க.
7.
\(A=\left( \begin{matrix} 7 & 8 & 6 \\ 1 & 3 & 9 \\ -4 & 3 & -1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) \) எனில், 2A + B -ஐக் காண்க
8.
-2, -4, -6,...-100 என்ற கூட்டுத் தொடர்வரிசையில் இறுதி உறுப்பிலிருந்து 12-வது உறுப்பைக் காண்க.
9.
x + 6, x + 12 மற்றும் x + 15 என்பன ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள் எனில், x-யின் மதிப்பைக் காண்க.
10.
ஒரு சினிமா அரங்கின் முதல் வரிசையில் 20 இருக்கைகளும் மொத்தம் 30 வரிசைகளும் உள்ளன. அடுத்தடுத்த ஒவ்வொரு வரிசையிலும் அதற்கு முந்தைய வரிசையைவிட இரண்டு இருக்கைகள் கூடுதலாக உள்ளன. கடைசி வரிசையில் எத்தனை இருக்கைகள் இருக்கும்?
11.
3 + k, 18 - k, 5k + 1 என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில், k-யின் மதிப்புக் காண்க.
12.
தீர்க்க : x4 - 13x2 + 42 = 0
13.
3x ≡ 1 (மட்டு 15) என்ற சமன்பாட்டிற்கு எத்தனை முழு எண் தீர்வுகள் உள்ளன எனக் காண்க.
14.
m மற்றும் n இயல் எண்கள் எனில், எந்த m-யின் மதிப்புகளுக்கு 2n x 5m என்ற எண் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
15.
6n ஆனது, n ஓர் இயல் எண் என்ற வடிவில் அமையும் எண்கள் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியுமா? உனது விடைக்குக் காரணம் கூறுக.
16.
17.
ஒற்றை முழுக்களின் வர்க்கமானது 4q + 1, (இங்கு q ஆனது முழுக்கள்) என்ற வடிவில் அமையும் எனக் காட்டுக.
18.
நம்மிடம் 34 கேக் துண்டுகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 5 கேக்குகள் மட்டுமே வைக்க இயலுமெனில் கேக்குகளை வைக்க எத்தனை பெட்டிகள் தேவை மற்றும் எத்தனை கேக்குகள் மீதமிருக்கும் எனக் காண்க.
19.
விகிதமுறு கோவைகளை எளிய வடிவில் சுருக்குக.
(i) \(\frac { x-3 }{ { x }^{ 2 }-9 } \)
(ii) \(\cfrac { { x }^{ 2 }-16 }{ { x }^{ 2 }+8x+16 } \)
20.
x2 + 6x - 4 = 0 -யின் மூலங்கள் \(\alpha ,\beta \) எனில் கீழ்க்கண்டவற்றை மூலங்களாகக் கொண்ட இருபடிச் சமன்பாட்டைக் காண்க.
\({ \alpha }^{ 2 }\) மற்றும் \({ \beta }^{ 2 }\).
21.
தீர்க்க: 3x - 2 ≡ 0 (மட்டு 11)
22.
எந்த மிகை முழுவின் வர்க்கத்தையும் 4 ஆல் வகுக்கும்போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும் என நிறுவுக.
23.
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எந்த முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதைச் சோதிக்கவும் மேலும் x –யின் மதிப்பு காண்க.
(i)
.png)
(ii)
.png)
24.
9, 15, 21, 27,.....,183 என்ற கூட்டுத் தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
1.
9x2 - 24x + 16 = 0
இங்கு, a = 9, b = -24, c = 16
தன்மைகாட்டி,\(\Delta ={ b }^{ 2 }-4ac=\left( -24 \right) ^{ 2 }-4\left( 9 \right) \left( 16 \right) =0\)
\(\Delta =0\)
எனவே, சமன்பாட்டின் மூலங்கள் மெய் மற்றும் சமம்.
2.
மூலங்களின் கூடுதல் = 5/3
மூலங்களின் பெருக்கல் = 4
இருபடிச் சமன்பாட்டின் பொது வடிவம் x2 - (மூலங்களின் கூடுதல்) x + மூலங்களின் பெருக்கல் = 0
∴ x2 - \(\frac{5}{3}\)x + 4 = 0
3x2 - 5x + 12 = 0
3.
\({ x }^{ 2 }-\left( -\cfrac { 3 }{ 5 } \right) x+\left( -\cfrac { 1 }{ 2 } \right) =0\Rightarrow \cfrac { { 10x }^{ 2 }+6x-5 }{ 10 } =0\)
⇒ 10x2 + 6x - 5 = 0
4.
\(\frac{121(\mathrm{a}+\mathrm{b})^8(x+y)^8(b-c)^8}{81(b-c)^4(a-b)^{12}(b-c)^4}\) ன் வர்க்கமூலம்
\(=\sqrt{\frac{121(a+b)^8(x+y)^8(b-c)^8}{81(b-c)^4(a-b)^{12}(b-c)^4}} \)
\(=\sqrt{\frac{121(a+b)^8(x+y)^8}{81(a-b)^{12}}} \)
\(=\frac{11}{9} \mid \frac{(a+b)^4(x+y)^4}{(a-b)^6}|\)
5.
\(\frac{x^2+6 x+8}{x^2+x-2}=\frac{(x+2)(x+4)}{(x+2)(x-1)} \)
\(=\frac{x+4}{x-1}\)
x = 1 எனும்போது, கோவை வரையறுக்க இயலாததாகிறது.
∴ விலக்கப்பட்ட மதிப்பு 1.
6.
A என்ற அணியின் வரிசை 2 x 2. B என்ற அணியின் வரிசை 2 x 2 எனவே, 2 x 2 என்ற வரிசையுடைய AB என்ற அணி வரையறுக்கப்படுகிறது.
\(AB=\left( \begin{matrix} 2 & 1 \\ 1 & 3 \end{matrix} \right) \times \left( \begin{matrix} 2 & 0 \\ 1 & 3 \end{matrix} \right) =\left( \begin{matrix} 4+1 & 0+3 \\ 2+3 & 0+9 \end{matrix} \right) =\left( \begin{matrix} 5 & 3 \\ 5 & 9 \end{matrix} \right) \)
BA = \(\left[ \begin{matrix} 2 & 0 \\ 1 & 3 \end{matrix} \right] \times \left[ \begin{matrix} 2 & 1 \\ 1 & 3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4+0 & 2+0 \\ 2+3 & 1+9 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 4 & 2 \\ 5 & 10 \end{matrix} \right] \)
எனவே, \(AB\neq BA\)
7.
அணி A-யும் அணி B-யும் 3 x 3 எனும் ஒரே வரிசை உடையதால் 2A + B-லிருந்து வரையறுக்கப்படுகிறது.
\(2A+B=\left( \begin{matrix} 7 & 8 & 6 \\ 1 & 3 & 9 \\ -4 & 3 & -1 \end{matrix} \right) +\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) =\left( \begin{matrix} 14 & 16 & 22 \\ 2 & 6 & 18 \\ -8 & 6 & -2 \end{matrix} \right) +\left( \begin{matrix} 4 & 11 & -3 \\ -1 & 2 & 4 \\ 7 & 5 & 0 \end{matrix} \right) \)
= \(\left( \begin{matrix} 18 & 27 & 9 \\ 1 & 8 & 22 \\ -1 & 11 & -2 \end{matrix} \right) \)
8.
இறுதி உறுப்பிலிருந்து 12 -வது உறுப்பு காண வேண்டும். எனவே இறுதி உறுப்பை முதல் உறுப்பாக அமைக்க.
i.e., - 100, ..., -6, - 4, - 2 என்பது தேவையான கூட்டுத் தொடர்
முதல் உறுப்பு a = -100
\(\mathrm{d} =-4-(-6)=-4+6=2 \)
\(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
\(\mathrm{t}_{12} =-100+(12-1)(2) \)
= -100 + 22 = -78
இறுதி உறுப்பிலிருந்து 12 -வது உறுப்பு = -78.
9.
x + 6, x + 12 மற்றும் x + 15 பெருக்குத் தொடர் வரிசையின் தொடர்ச்சியான மூன்று உறுப்புகள்
எனில்
\(\frac{t_2}{t_1} =\frac{t_3}{t_2} \)
\(i.e., \quad \frac{x+12}{x+6} =\frac{x+15}{x+12} \)
\((x+12)^2 =(x+6)(x+15) \)
\(x^2+24 x+144 =x^2+6 x+15 x+90 \)
\(x^2+24 x+144-x^2-6 x-15 x-90=0 \)
\(24 x-21 x+144-90 =0 \)
\(3 x+54 =0 \) \(\Rightarrow\) \(3 x =-54 \)
\(x =\frac{-54}{3}=-18\)
10.
முதல் வரிசையில் உள்ள இருக்கைகள் t1 = 20
இரண்டாவது வரிசையில் உள்ள இருக்கைகள் \(t_2=20+2=22\)
∴ 30 வது வரிசையில் உள்ள இருக்கைகள் t30 என்க. ஒவ்வொரு அடுத்தடுத்த வரிசையிலும் 2 இருக்கைகள் கூடுதலாக உள்ளன. எனவே \(t_1, t_2, \ldots . t_{30}\) ஒரு கூட்டுத்தொடர் வரிசையை அமைக்கும். அதாவது
20, 22, 24,..... 30 உறுப்புகள் வரை
இங்கு \( \mathrm{a} =20 ; \mathrm{d}=2 \)
\(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
\(\mathrm{t}_{30} =20+(30-1)(2)=20+29 \times 2 \)
= 20 + 58 = 78
∴ கடைசி வரிசையில் 78 இருக்கைகள் இருக்கும்.
11.
3 + k, 18 - k, 5k + 1 என்பன கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
\(t_1=3 + k, t_2=18-k, t_3 = 5 k+1\)
∴ அடுத்தடுத்த இரு உறுப்புகளின் வித்தியாசம் சமமாகும்.
\(i.e., t_2-t_1 =t_3-t_2 \)
\((18-k)-(3+k) =(5 k+1)-(18-k) \)
\(18-k-3-k =5 k+1-18+k \)
\(15-2 k =6 k-17 \)
\(15+17 =6 k+2 k \)
\(32 =8 k \) \(\Rightarrow\) \(k =\frac{32}{8}=4\)
12.
x2 = a என்க. ஆகவே,(x2)2 - 13x2 + 42 = a2 - 13a + 42 = (a - 7)(a - 6)
(a − 7)(a − 6) = 0 ⇒ a = 7 அல்லது 6.
a = x2 எனவே x2 = 7 ⇐ \(x=\pm \sqrt { 7 } \) மற்றும் x2 = 6 ⇐,\(x=\pm \sqrt { 6 } \)
எனவே, \(x=\pm \sqrt { 7 } ,\pm \sqrt { 6 } \) மூலங்கள் ஆகும்.
13.
3x ≡ 1 (மட்டு 15) என்பதை
3x - 1 = 15k, k என்பது ஏதேனும் ஒரு முழு என எழுதலாம்.
3x = 15k + 1
x = \(\frac { 15k+1 }{ 3 } \)
x = \(5k+\frac { 1 }{ 3 } \)
5k என்பது ஒரு முழு எண் என்பதால், \(5k+\frac { 1 }{ 3 } \) என்பது ஒரு முழு எண் அல்ல. எனவே இச்சமன்பாட்டிற்கு முழு எண் தீர்வே இல்லை.
14.
\(2^{\mathrm{n}} \times 5^{\mathrm{m}}\) என்ற எண்ணை எடுத்துக் கொள்வோம்.
இந்த பெருக்கற்பலனின் ஒரு காரணி 2 ஆகையால் \(2^{\mathrm{n}} \times 5^{\mathrm{m}}\) என்பது இரட்டை எண் [ ஏனெனில் m, n இயல் எண்கள்]
ஆனால் 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும் எண்கள் ஒற்றை எண்களாகும். இது முரண்பாடாகும். எனவே m-இன் எந்த மதிப்புக்கும் \(2^{\mathrm{n}} \times 5^{\mathrm{m}}\) ஆனது 5 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியாது.
15.
6n = (2 x 3)n = 2n x 3n என்பதால்,
2 என்பது 6n -யின் ஒரு காரணியாகும்.
எனவே, 6n ஓர் இரட்டைப்படை எண் ஆகும். ஆனால், கடைசி இலக்கம் 5 –யில் முடியும் எண்கள் அனைத்தும் ஒற்றைப்படை எண்கள் ஆகும் .
ஆகவே, 6n -யின் கடைசி இலக்கம் 5 என முடிய வாய்ப்பில்லை.
16.
17.
x என்பது ஓர் ஒற்றை முழுக்கள் என்க. எந்தவொரு ஒற்றை முழுக்களுக்கும் ஏதேனும் ஓர் இரட்டை முழுக்களை விட ஒன்று அதிகமாக இருக்கும் என்பதால், x = 2k + 1, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழுக்கள்.
x2 = (2k + 1)2
= 4k2 + 4k + 1
= 4k(k + 1) + 1
= 4q + 1. இங்கு, q = k(k + 1) என்பது ஒரு முழுக்கள்.
18.
30 கேக்குகளை வைக்க 6 பெட்டிகள் தேவைப்படுகின்றன. அதில் 4 கேக்குகள் மீதமிருக்கும். கேக்குகளைப் பெட்டிகளில் வைக்கும் இம்முறையைப் பின்வருமாறு புரிந்து கொள்ளலாம்.
| 34 | = | 5 | x | 6 | + | 4 |
| மொத்த கேக்குகளின் எண்ணிக்கை |
= | ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
x | பெட்டிகளின் எண்ணிக்கை |
+ | மீதமுள்ள கேக்குகளின் எண்ணிக்கை |
| \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | \(\downarrow \) | |||
| (வகுபடும் எண்) a |
= | (வகுக்கும் எண்) b |
(ஈவு) q |
+ | (மீதி) r |
19.
(i) \(\cfrac { x-3 }{ { x }^{ 2 }-9 } =\cfrac { x-3 }{ (x+3)(x-3) } =\cfrac { 1 }{ x+3 } \)
(ii) \(\cfrac { { x }^{ 2 }-16 }{ { x }^{ 2 }+8x+16 } =\cfrac { (x+4)(x-4) }{ \left( x+4 \right) ^{ 2 } } =\cfrac { x-4 }{ x+4 } \)
20.
கொ.ப : சமன்பாடு \(x^2+6 x-4=0\)
\(a x^2+b x+c=0\) உடன் ஒப்பிட, \(a=1, b=6, c=-4\)
α, β என்பன மூலங்கள்
∴ மூலங்களின் கூடுதல் = α + β
\(=-\frac{b}{a}=-\frac{6}{1}=-6\)
மூலங்களின் பெருக்கல் = αβ
\(=\frac{c}{a}=-\frac{4}{1}=-4\)
கொ.ப : மூலங்கள் α2 மற்றும் β2 மூலங்களின் கூடுதல் \(=\alpha^2+\beta^2\)
\(=(\alpha+\beta)^2-2 \alpha \beta\)
\(=(-6)^2-2(-4) \) = 44
மூலங்களின் பெருக்கல் \(=\alpha^2 \beta^2\)
\(=(\alpha \beta)^2 \)
\(=(-4)^2=16\)
∴ இருபடிச் சமன்பாடு :
x2 - (மூலங்களின் கூடுதல்) x + மூலங்களின் பெருக்கல் = 0
\(x^2-44 x+16=0\)
21.
3x - 2 ≡ 0 (மட்டு 11)
3x - 2 = 11k, இங்கு k ஒரு முழு
\(3 \mathrm{x} =11 \mathrm{k}+2 \)
\(\mathrm{x} =\frac{11 \mathrm{k}+2}{3}\)
k = 2,5,8,11,........, என நாம் பிரதியிட
11k + 2 ஆனது 3 ஆல் வகுபடும்.
\(\therefore \mathrm{x}=\frac{11(2)+2}{3}=\frac{24}{3}=8 \)
\(x=\frac{11(5)+2}{3}=\frac{57}{3}=19 \)
\(x=\frac{11(8)+2}{3}=\frac{90}{3}=30 \)
\(x=\frac{11(11)+2}{3}=\frac{123}{3}=41\)
∴ 8, 19, 30, 41,........ என்பது தீர்வு ஆகும்
22.
அனைத்து மிகை முழுக்களும் ஒற்றை எண்ணாகவோ அல்லது இரட்டை எண்ணாகவோ இருக்கும்
இரட்டை எண் எனில், a = 2q.
ஒற்றை எண் எனில், a = 2q + 1
நிலை (i) : a = 2q எனில்
a2 = (2q)2 = 4q2
\(\therefore\) 4 ஆல் வகுக்க மீதி 0 ஆகும்
நிலை (ii) : a = 2q + 1 எனில்
a2 = (2q + 1)2 = 4q2 + 4q + 1
= 4q (q + 1) + 1
a2 = 4m + 1 இங்கு m = q (q + 1) ஒரு முழு எனவே a2 ஆனது 4q + 1 என்ற வடிவில் உள்ளது அது 4 ஆல் வகுக்கப்படும்போது 1 மீதி தருகிறது
எனவே மிகை முழுவின் வர்க்கத்தை 4 -ஆல் வகுக்கும்போது மீதி 0 அல்லது 1 மட்டுமே கிடைக்கும்.
23.
(i) \(\triangle A B C\) மற்றும் \(\triangle A D E\) இல் \(\angle A\) பொதுவானது
\(\frac{A E}{E C}=\frac{2}{3 \frac{1}{2}}=\frac{2}{\frac{7}{2}}=\frac{2 \times 2}{7}=\frac{4}{7} \)
\(\frac{A D}{D B}=\frac{3}{5}\)
இங்கு \(\frac{4}{7} \neq \frac{3}{5}\)
\(\frac{A E}{E C} \neq \frac{A D}{D B}\)
ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமாக இல்லை.
\(\therefore \triangle ABC\) மற்றும் \(\triangle A D E\) வடிவொத்த முக்கோணங்கள் அல்ல.
(ii) \(\triangle C P Q\) மற்றும் \(\triangle C A B\) இல் \(\angle C\) பொதுவானது.
\(\angle P Q C=180^{\circ}-110^{\circ}=70^{\circ}\)
[\( \because \angle P Q C\) மற்றும் \(\angle P Q B\) ஆகியவை நேரிய கோண இணை]
\(\angle A B C =70^{\circ} \)
\(\therefore \angle B A C =\angle Q P C\)
[∵ முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180o]
\(\angle P C Q =180^{\circ}-\left(\angle Q P C+70^{\circ}\right) \)
\(\therefore \angle A B C =\angle P Q C=70^{\circ}\)
\(\angle C\) பொதுவானது, \(\angle B A C=\angle Q P C\)
∴ AA விகிதமுறைப்படி, \(\triangle A B C \sim \triangle \angle P Q C\)
∴ ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\frac{A B}{P Q} =\frac{B C}{Q C} \)
\(\frac{5}{x} =\frac{6}{3} \)
\({[\because \mathrm{BC}=\mathrm{BQ}} +\mathrm{QC}=3+3=6] \)
\(\mathrm{x} =\frac{5}{6} \times 3=2.5 \quad \therefore \mathrm{x}=2.5\)
24.
9, 15, 21, 27, ..., 183 என்பது தரப்பட்ட கூட்டுத்தொடர் வரிசை
a = 9, d = 15 - 9 = 6
கடைசி உறுப்பு l = 183
l = a + (n - 1)d
183 = 9+ (n - 1)(6)
183 - 9 = (n - 1)6
174 = (n - 1) 6
\(\frac{174}{6} =n-1 \)
29 = n - 1
n = 29 + 1 = 30
∴ கூட்டுத்தொடர் வரிசையின் உறுப்புகளின் எண்ணிக்கை 30 ஆகும்
30 ஓர் இரட்டை எண்
உறுப்புகள் நடு உறுப்புகளாகும்.
அதாவது, 15வது, 16வது உறுப்புகள் நடு உறுப்புகளாகும்.
\(t_{15} =9+(15-1)(6) \)
\(=9+14 (6)=9+84 \)
t15 = 93
\(t_{16} =9+(16-1)(6) \)
\(=9+15(6)=9+90 \)
\(t_{16} =99\)
நடு உறுப்புகள் t15 = 93 மற்றும் t16 = 99
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards