10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு முடிவுறா பெருக்குத் தொடரின் முதல் உறுப்பு 8 மற்றும் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் \(\frac{32}{3}\) எனில் அதன் பொது விகிதம் காண்க.
2.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் பொது விகிதம் 5 மற்றும் முதல் 6 உறுப்புகளின் கூடுதல் 46872 எனில், அதன் முதல் உறுப்பைக் காண்க.
3.
a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமையும் எனில் 3a, 3b, 3c ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் அமையும் எனக் காட்டுக.
4.
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க
(i) 3, 7, 11,.....40 உறுப்புகள் வரை
(ii) 102, 97, 92,... 27 உறுப்புகள் வரை
(iii) 6 + 13 + 20+...+97
5.
x, 10, y, 24, z என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில், x, y, z ஆகியவற்றின் மதிப்புக் காண்க.
6.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் ஒன்பதாவது உறுப்பின் ஒன்பது மடங்கும், பதினைந்தாவது உறுப்பின் பதினைந்து மடங்கும் சமம் எனில் இருபத்து நான்காவது உறுப்பின் ஆறு மடங்கானது பூச்சியம் என நிறுவுக.
7.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொது உறுப்புகளையுடைய கூட்டுத் தொடர்வரிசைகளின் முதல் உறுப்பு மற்றும் பொது வித்தியாசம் காண்க.
(i) tn = -3 + 2n
(ii) tn = 4 - 7n
8.
தீர்க்க: 5x ≡ 4 (மட்டு 6)
9.
பின்வருவனவற்றிற்குப் பொருந்தக்கூடிய குறைந்தபட்ச மிகை x-ஐக் காண்க.
(i) 67 + x ≡ 1 (மட்டு 4)
(ii) 98 ≡ (x + 4) (மட்டு 5)
10.
A = {1,3,5}, B = {2,3} எனில்
(i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
(ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
(iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.
11.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் (m + 1) வது உறுப்பானது (n + 1) வது உறுப்பின் இரு மடங்கு எனில், (3m + 1) வது உறுப்பானது (m + n + 1) வது உறுப்பின் இரு மடங்கு என நிறுவுக.
12.
பின்வரும் சமன்பாடுகளை நிறைவு செய்யக்கூடிய குறைந்தபட்ச மிகை முழு x -ன் மதிப்பைக் காண்க.
(i) 71 ≡ x (மட்டு 8)
(ii) 78 + x ≡ 3 (மட்டு 5)
(iii) 89 ≡ (x+3) (மட்டு 4)
(iv) 96 ≡ \(\frac{x}{7}\) (மட்டு 5)
(v) 5x ≡ 4 (மட்டு 6)
13.
(i) A x (B U C) = (A x B) U (A x C)
(ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C) என்பனவற்றைச் சரிபார்க்க.
14.
பின்வரும் n-வது உறுப்புகளைக் கொண்ட தொடர்வரிசைகளின் முதல் நான்கு உறுப்புகளைக் காண்க.
an = 2n2 - 6
15.
3 + 1 + \(\frac { 1 }{ 3 } \) +...∞ என்ற தொடரின் கூடுதல் காண்க.
16.
16, 11, 6, 1,.... என்ற கூட்டுத் தொடர்வரிசையில் –54 என்பது எத்தனையாவது உறுப்பு?
17.
இன்று செவ்வாய் கிழமை, என்னுடைய மாமா 45 நாள்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். என்னுடைய மாமா எந்தக் கிழமையில் வருவார்?
18.
முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?
19.
\(8,7,\frac { 1 }{ 4 } ,6\frac { 1 }{ 2 } ,5\frac { 3 }{ 4 } \) ... என்ற கூட்டுத் தொடர்வரிசையின் முதல் 15 உறுப்புகளின் கூடுதல் காண்க.
20.
104 ≡ x (மட்டு 19) என்றவாறு அமையும் x மதிப்பைக் கணக்கிடுக.
21.
n ஒர் இயல் எண் எனில், எந்த n மதிப்புகளுக்கு 4n ஆனது 6 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்?
22.
7 x 5 x 3 x 2 + 3 என்பது ஒரு பகு எண்ணா? உனது விடையை நியாயப்படுத்துக.
1.
முதல் உறுப்பு a = 8
\(S_{\infty} =\frac{32}{3}\)
பெருக்குத் தொடா் வரிசையின் முடிவிலி வரை கூடுதல்
\(S_\infty =\frac{a}{1-r} \)
\(\frac{32}{3} =\frac{8}{1-r} \) \(\Rightarrow\) \(32(1-r) =24 \)
\(1-r =\frac{24}{32} \)\(=\frac{3}{4} \)
\(1-\frac{3}{4} =r \) \(\Rightarrow\) \(\frac{1}{4} =r\)
பொது விகிதம் \(r=\frac{1}{4}\)
2.
கொடுக்கப்பட்டது: r = 5 மற்றும் S6 = 46872
பெருக்குத்தொடரில் முதல் n உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_{\mathrm{n}} =\frac{a\left(r^{\prime \prime}-1\right)}{r-1} \)
\(46872 =\frac{a\left(5^6-1\right)}{5-1} \) \(=a \frac{(15625-1)}{4}=a \times \frac{15624}{4} \)
\(=a \times 3906 \)
\(\frac{46872}{3906} =a \) \(\Rightarrow\) \(\mathrm{a} =12\)
∴ பெருக்குத்தொடரின் முதல் உறுப்பு a = 12
3.
a, b, c என்பன கூட்டுத் தொடர்வரிசையில் அமையும் என்பதால்,
\(\mathrm{t}_2-\mathrm{t}_1 =\mathrm{t}_3-\mathrm{t}_2 \)
\(\mathrm{~b}-\mathrm{a} =\mathrm{c}-\mathrm{b} \)
\(\mathrm{b}+\mathrm{b} =\mathrm{c}+\mathrm{a} \) \(\Rightarrow\) \(2 \mathrm{~b} =\mathrm{a}+\mathrm{c}\)
3 -இன் அடுக்கிற்கு மாற்ற
\(3^{2 b} =3^{a+c} \) \(\Rightarrow\) \(3^{b+b} =3^{a+c} \)
\(3^b \cdot 3^b =3^a \cdot 3^c \) \(\Rightarrow\) \(\frac{3^b}{3^a} =\frac{3^c}{3^b}\)
எனவே \(3^{\mathrm{a}}, 3^{\mathrm{b}}, 3^{\mathrm{c}}\) என்பன பெருக்குத் தொடர் வரிசையில் அமையும்.
4.
(i) 3, 7, 11,.........40 உறுப்புகள் வரை
கூட்டுத் தொடரின் முதல் n உறுப்புகளின் கூடுதல்
\(S_n=\frac{n}{2} \times[2 a+(n-1) d]\)
இங்கு t2 - t1 = 7 - 3 = 4 மற்றும் t3 - t2 = 11 - 7 = 4
\(\therefore t_2-t_1=t_3-t_2\)
எனவே இது a = 3 மற்றும் d = 4 உடைய ஒரு கூட்டுத் தொடராகும்.
\(\therefore S_{40} =\frac{40}{2}[2(3)+(40-1)(4)] \)
\(=20[6+(39 \times 4)]=20[6+156] \)
\(=20[162]=3240\)
முதல் 40 உறுப்புகளின் கூடுதல் = 3240
(ii) 102, 97, 92,.. 27 உறுப்புகள் வரை
இங்கு \(\mathrm{t}_2-\mathrm{t}_1=97-102=-5\)
\(t_3-t_2=92-97=-5 \)
\(t_2-t_1=t_3-t_2\)
எனவே இது a = 102 மற்றும் d = -5 உடைய ஒரு கூட்டுத் தொடராகும்.
முதல் n உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_{\mathrm{n}} =\frac{n}{2}[2 a+(n-1) d] \)
\(\mathrm{S}_{27} =\frac{27}{2}[2(102)+(27-1)(-5)] \)
\(=\frac{27}{2}[204+26(-5)] \)
\(=\frac{27}{2}[204-130] \)
\(=\frac{27}{2} \times 74 \)
\(=27 \times 37\) = 999
முதல் 27 உறுப்புகளின் கூடுதல் = 999
(iii) 6 + 13 + 20+......+97
இங்கு t2 - t1 = 13 - 6 = 7 மற்றும்
t3 - t2 = 20 - 13 = 7
\(\therefore\) t2 - t1 = t3 - t2
\(\therefore\) இது a = 6 மற்றும் d = 7 உடைய ஒரு கூட்டுத் தொடராகும்.
\(\therefore\) கூடுதல் \(\mathrm{S}_{\mathrm{n}}=\frac{n}{2}(a+l)\)
\(\mathrm{n}=\left(\frac{l-a}{d}\right)+1=\left(\frac{97-6}{7}\right)+1\)
\(=\frac{91}{7}+1=13+1=14\)
எனவே \(S_n=\frac{14}{2}(6+97)=7 \times 103 \) = 721
\(6+13+20+\ldots+97 =721\)
5.
\(t_1=x, t_2=10, t_3=y, t_4=24, t_5=z \) என்க.
x, 10, y, 24, z என்பன கூட்டுத்தொடர் வரிசையில் உள்ளன
∴ அடுத்தடுத்த இரு உறுப்புகளின் வேறுபாடு சமமாகும்
\(t_2-t_1=t_3-t_2=t_4-t_3 \)
\(10-x=24-y=d \)
மேலும் \(t_4-t_2=2 d \)
\(24-10=2 \mathrm{~d} \) \(\Rightarrow\) \(14=2 \mathrm{~d} \)
\(d=\frac{14}{2}=7 \)
\(10-x=24-y=7\)
10 - x = 7 எனில், x = 10 - 7 = 3
24 - y = 7 எனில், y = 24 - 7 = 17
மேலும் z - 24 = 7 எனில், z = 24 + 7 = 31
∴ x = 3 ; y = 17 ; z = 31.
6.
கூட்டுத்தொடர் வரிசையின் n ஆவது உறுப்பு \(t_n=a+(n-1) d\) கணக்கின்படி
9வது உறுப்பின் 9 மடங்கு = 15வது உறுப்பின் 15 மடங்கு
\(9 \times t_9 =15 \times t_{15} \)
\(9[a+(9-1) d] =15[a+(15-1) d] \)
\(9(a+8 d) =15(a+14 d) \)
\(9 a+72 d =15 a+210 d \)
\(15 a+210 d-9 a-72 d =0 \)
\(6 a+138 \mathrm{~d} =0 \)
\(6(a+23 d) =0 \)
\(6[a+(24-1) d] =0 \)
\(6 \times t_{24} =0 \)
∴ 24 ஆவது உறுப்பின் 6 மடங்கு = 0
7.
(i) tn = -3 + 2n
கூட்டுத்தொடர் வரிசையின் n - வது உறுப்பு
tn = -3 + 2n
\(\mathrm{n}=1\) எனில், \(\mathrm{t}_1 =-3+2(1)=-3+2 \)
\(\mathrm{a}=\mathrm{t}_1 =-1 \)
\(\mathrm{n}=2\) எனில்,\(\mathrm{t}_2 =-3+2(2)=-3+4 \)
\(\mathrm{t}_2 =1\)
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=1-(-1)\)
= 1 + 1 = 2
∴ முதல் உறுப்பு a = -1; பொது வித்தியாசம் d = 2
(ii) \(\mathrm{t}_{\mathrm{n}}=4-7 \mathrm{n}\)
கூட்டுத்தொடர் வரிசையின் n-வது உறுப்பு \(t_n=4-7 n\)
\(\mathrm{n}=1\) எனில், \(\quad \mathrm{t}_1=4-7(1)=4-7=-3 \)
\(\mathrm{a}=\mathrm{t}_1=-3 \)
\(\mathrm{n}=2 \) எனில், \(\quad \mathrm{t}_2=4-7(2)=4-14=-10\)
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=-10-(-3)\)
= -10 + 3 = - 7
முதல் உறுப்பு a = - 3; பொது வித்தியாசம் d = - 7
8.
5x ≡ 4(மட்டு 6)
\(5 \mathrm{x}-4 =6 \mathrm{k}, \mathrm{k} \) என்பது ஒரு முழு.
\(\mathrm{x} =\frac{6 k+4}{5} \)
\(\mathrm{k}=1,6,11,16 \ldots\) என பிரதியிட
6k + 4 ஆனது 5 ஆல் வகுபடும்
\(\therefore \quad \mathrm{x}=\frac{6(1)+4}{5} =\frac{10}{5}=2 \)
\(\mathrm{x}=\frac{6(6)+4}{5} =\frac{40}{5}=8 \)
\(\mathrm{x}=\frac{6(11)+4}{5} =\frac{70}{5}=14 \)
\(\mathrm{x}=\frac{6(16)+4}{5} =\frac{100}{5}=20\)
எனவே 2,8,14,20,.... என்பது தீர்வு ஆகும்.
9.
(i) 67 + x ≡ 1 (மட்டு 4)
67 + x - 1 = 4n, இங்கு n என்பது ஏதேனும் ஒரு முழு
66 + x = 4n
66 + x என்பது 4 –யின் மடங்கு
66 ஐ விட அதிகமான 4 -யின் மடங்கு 68. எனவே x-யின் குறைந்தபட்ச மதிப்பு 2 ஆகும்.
(ii) 98 ≡ (x + 4) (மட்டு 5)
98 - (x + 4)= 5n, n என்பது ஏதேனும் ஒரு முழு
94 - x = 5n
94 - x என்பது 5 –யின் மடங்கு
94 ஐ விடக் குறைவான 5 -யின் மடங்கு 90. எனவே x- யின் குறைந்தபட்ச மதிப்பு 4 ஆகும்.
10.
A = {1,3,5} ,B = {2,3} எனக் கொடுக்கப்பட்டுள்ளன.
(i) A x B = {1,3,5} x {2,3} = {(1,2), (1,3), (3,2), (3,3), (5,2), (5,3)} .......(1)
B x A = {2,3} x {1,3,5} = {(2,1), (2,3), (2,5), (3,1), (3,3), (3,5)} .......(2)
(ii) (1) மற்றும் (2) -ன் மூலமாக A x B ≠ B x A ஏனெனில் (1,2) ≠ (2,1), (1,3) ≠ (3,1)...
(iii) n(A) = 3; n(B) = 2.
(1) மற்றும் (2)-லிருந்து நாம் காண்பது, n (A x B) = n (B x A) = 6;
n (A) x n (B) = 3 x 2 = 6 மற்றும் n (B) x n (A) = 2 x 3 = 6
எனவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B) = 6.
ஆகவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B).
11.
கொடுக்கப்பட்டது: (m + 1) - வது உறுப்பு = 2 \(\times\)(n + 1) - வது உறுப்பு
tm+1 = 2 \(\times\) tn + 1
a + (m + 1 - 1)d = 2[a + (n + 1 - 1)d]
a + md = 2a + 2nd \(\Rightarrow\) md = a + 2nd .........(1)
tm+n+1 = a + (m + n + 1-1)d
= a + md + nd
= a + a + 2nd + nd (\(\because\) (1) லிருந்து)
tm+n+1 = 2a + 3nd ..........(2)
t3m+1 = a + (3m + 1 - 1) d = a + 3d
= a + 3 (a + 2nd) (\(\because\) (1) லிருந்து)
= 4a + 6nd = 2 (2a + 3nd)
t3m+1 = 2 \(\times\)tm+n+1 (\(\because\) (2) லிருந்து)
எனவே நிறுவப்பட்டது.
12.
(i) 71 ≡ x (மட்டு 8) என்பதை
71 - x = 8 n
அதாவது 71 - x என்பது 8 இன் மடங்கு. x = 1 எனில், 71 - x = 70, 8 இன் மடங்கு அல்ல.
8 இன் மடங்காக அமையும் 71 க்கு அருகில் உள்ள எண் 64 .
71 லிருந்து 64 ஐப் பெற 7 ஐக் கழிக்க வேண்டும்.
\(\therefore\) x = 7
தேவையான எண் x = 7
(ii) 78 + x ≡ 3(மட்டு 5)
78 + x - 3 = 5n
75 + x = 5n
x = 5 எனில், 75 + 5 = 80 என்பது 5 இன் மடங்கு
\(\therefore\) தேவையான எண் x = 5
(iii) 89 ≡ (x + 3) (மட்டு 4)
89 - (x + 3) = 4 n
89 - x - 3 = 4n \(\Rightarrow\) 86 - x = 4n
x = 2 எனில் 86 - 2 = 84 என்பது 4 இன் மடங்கு.
\(\therefore\) தேவையான எண் x = 2
(iv) \(96 \equiv \frac{x}{7}\) (மட்டு 5)
\(\left(96-\frac{x}{7}\right)=5 n \)
\(\Rightarrow\) \(\frac{672-x}{7}=5 n\)
\(\therefore\) x = 7 எனில் \(\frac{672-7}{7}=\frac{665}{7}\)
= 95 என்பது 5 இன் மடங்கு
\(\therefore\) தேவையான எண் x = 7
(v) 5x ≡ 4 (மட்டு 6)
\(5 \mathrm{x}-4=6 \mathrm{n}\)
x = 2 எனில் 5(2) - 4 = 10 - 4
= 6 என்பது 6 இன் மடங்கு
\(\therefore\) x = 2.
தேவையான எண் x = 2
13.
(i) A x (B U C) = (A x B) U (A x C)
B U C = (0,1) U (1,2) = {0,1,2}
A x (B U C) = {2,3) x {0,1,2} = {(2,0),(2,1)(2,2)(3,0)(3,1),(3,2) ..(1)
A x B = {2,3} x {0,1} = {(2,0),(2,1),(3,0),(3,1)}
A x C = {2,3} x {1,2} = {(2,1),(2,2),(3,1)(3,2)}
(A x B) U (A x C) = {(2,0),(2,1),(3,0),(3,1)} U {(2,1),(2,2),(3,1),(3,2)}
= {(2,0),(2,1),(2,2),(3,0),(3,1),(3,2)} ...(2)
(1) மற்றும் (2)-லிருந்து, A x (B U C) = (A x B) U (A x C) என்பது சரிபார்க்கப்பட்டது.
(ii) A x (B \(\cap\) C) = (A x B) \(\cap\) (A x C)
B ∩ C = {(0,1) ∩ {1,2} = {1}
A x (B ∩ C) = {2,3} x {1} = {(2,1),(3,1)} .....(3)
A x B = {2,3} x {0,1} = {(2,0), (2,1), (3,0), (3,1)}
A x C = {2,3} x {1,2} = {(2,1), (2,2), (3,1), (3,2)}
(A x B) ∩ (A x C)= {(2,0), (2,1), (3,0), (3,1)} ∩ {(2,1), (2,2), (3,1), (3,2)}
= {(2,1), (3,1)} .....(4)
(3) மற்றும் (4), A x (B ∩ C) = (A x B) ∩ (A x C) என்பது சரிபார்க்கப்பட்டது.
14.
\(a_n=2 n^2-6 \)
n-ஆவது உறுப்பு
\(a_n=2 n^2-6\)
∴ முதல் உறுப்பு
\(a_1=2(1)^2-6=-4\)
இரண்டாவது உறுப்பு
\(a_3=2(2)^2-6=2\)
மூன்றாவது உறுப்பு
\(a_3=2(3)^2-6=12\)
நான்காவது உறுப்பு
\(a_1=2(4)^2-6=26\)
∴ முதல் நான்காவது உறுப்புகள் = -4, 2, 12, 26,...
15.
இங்கு a = 3, r = \(\frac { { t }_{ 2 } }{ { t }_{ 1 } } =\frac { 1 }{ 3 } \)
பெருக்குத் தொடர்வரிசையின் முடிவுறா உறுப்புகள் வரை கூடுதல் S∞ = \(\frac { a }{ 1-r } =\frac { 3 }{ 1-\frac { 1 }{ 3 } } =\frac { 9 }{ 2 } \).
16.
\(16,11,6,1, . . . . .\) என்பது தரப்பட்ட கூட்டுத்தொடர் வரிசை
இங்கு \(\mathrm{a}=16, \mathrm{~d}=11-16=-5\)
கூட்டுத்தொடர் வரிசையின் 'n' வது உறுப்பு
\(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
\(\mathrm{t}_{\mathrm{n}} =-54\) எனில்
\(-54 =16+(\mathrm{n}-1)(-5) \)
\(-54-16 =(\mathrm{n}-1)(-5) \)
\(\frac{-70}{-54} =\mathrm{n}-1 \)
14 = n - 1
14 + 1 = n
\(\mathrm{n} =15\)
∴ 16, 11, 6, 1,...... இன் 15 ஆவது உறுப்பு - 54.
17.
இன்று செவ்வாய்க் கிழமை, அதற்கான எண் 2. மாமா 45 நாட்களுக்கு பின் வருவதால் 2 -உடன் 45 ஐக் கூட்டி மட்டு 7 காண வேண்டும்.
ஏனெனில் 1 வாரம் = 7 நாட்கள்
2 + 45 (மட்டு 7) ☰ 47 (மட்டு 7)
☰ 5 (மட்டு 7)
5 என்பது வெள்ளிக் கிழமையைக் குறிக்கும். எனவே மாமா வெள்ளிக் கிழமையில் வருவார்
18.
7 மணியிலிருந்து 100 மணி நேரத்திற்குப் பின்வரும் நேரம் காண மட்டு 24 ஐப் பயன்படுத்துவோம்.
முற்பகல் 7 மணி + 100 (மட்டு 24) = முற்பகல் 7 மணி + 4 மணி = முற்பகல் 11 மணி
∴ முற்பகல் 7 மணியிலிருந்து 100 மணி நேரத்திற்கு பின் வருவது முற்பகல் 11 மணி ஆகும்.
19.
இங்கு முதல் உறுப்பு a = 8, பொது வித்தியாசம் \(d=7 \frac{1}{4}-8=-\frac{3}{4}\),
கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn = \(\frac { n }{ 2 } \left[ 2a+(n-1)d \right] \)
S15 = \(\frac { 15 }{ 2 } \left[ 2\times 8+(15-1)\left( -\frac { 3 }{ 4 } \right) \right] \)
S15 = \(\frac { 15 }{ 2 } \left[ 16-\frac { 21 }{ 2 } \right] =\frac { 165 }{ 4 } \)
20.
102 = 100 ≡ 5 (மட்டு 19)
104 = (102)2 ≡ 52 (மட்டு 19)
104 ≡ 25 (மட்டு 19)
104 ≡ 6 (மட்டு 19) (ஏனெனில், 25 ≡ 6 (மட்டு 19))
எனவே, x = 6.
21.
n ஓர் இயல் எண் எனில், \(4^n=(2)^{2 n}\)
\(\therefore\) 2 ஆனது 4n இன் ஒரு காரணி, மேலும் 2 ஒரு பகா எண்.
அடிப்படை எண்ணியல் தேற்றத்தின்படி இந்த காரணிப்படுத்துதலானது ஒரே முறையில் அமையும். எனவே 4n இன் மதிப்பு 4 அல்லது 6 என்ற இலக்கங்களைக் கொண்டே எப்போதும் முடியும். அதாவது n ஒற்றை எண் எனில் 4n ஆனது 4 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும். n இரட்டை எண் எனில் 4n ஆனது 6 என்ற இலக்கத்தைக் கொண்டு முடியும்.
22.
ஆம். கொடுக்கப்பட்ட எண் ஒரு பகு எண்ணாகும், ஏனெனில்,
7 x 5 x 3 x 2 + 3 = 3 x (7 x 5 x 2 + 1) = 3 x 71
கொடுக்கப்பட்ட எண்ணானது இரு பகா எண்களின் பெருக்கற்பலனாகக் காரணிப்படுத்தப்படுவதால், அது ஒரு பகு எண்ணாகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards