10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
f : [-5, 9] ⟶ R என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது

என வரையறுக்கப்படுகிறது எனில், 2f(4) + f(8) காண்க.
2.
சரிவகம் ABCD AB||CD, E மற்றும் F என்பன முறையே இணையற்ற பக்கங்கள் AD மற்றும் BC -ன் மீது அமைந்துள்ள புள்ளிகள், மேலும் EF||AB என அமைந்தால் \(\frac { AE }{ ED } =\frac { BF }{ FC } \) என நிறுவுக
3.
ஓர் அலைபேசி மின்கலத்தின் சக்தி 100% இருக்கும்போது (battery power) அலைபேசியைப் பயன்படுத்த தொடங்குகிறோம். x மணி நேரம் பயன்படுத்திய பிறகு மீதி இருக்கும் மின்கலத்தின் சக்தி y சதவீதம் (தசமத்தில்) ஆனது y = − 0.25x + 1 ஆகும்
(i) எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு மின்கலத்தின் சக்தி 40% ஆகக் குறைந்திருக்கும் எனக் காண்க.
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு எவ்வளவு?
4.
f ஆனது R-லிருந்து R-க்கு ஆன சார்பு. மேலும் அது f(x) = 3x - 5 என வரையறுக்கப்படுகிறது. (a, 4) மற்றும் (1, b) எனக் கொடுக்கப்பட்டால் a மற்றும் b -யின் மதிப்புகளைக் காண்க.
5.
ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால்
(i) \(\\ \frac { f(0)+f(1) }{ 2 } \) -ஐக் காண்க.
(ii) f(x) = 0 எனில், x ஐக் காண்க.
(iii) f (x) = x எனில் x ஐக் காண்க.
(iv) f(x) = f(1 - x) எனில் x ஐக் காண்க.
6.
7.
ஒரு விமானம் G-யிலிருந்து 24° கோணத்தைக் தாங்கி 250 கி.மீ தொலைவிலுள்ள H-ஐ நோக்கிச் செல்கிறது. மேலும் H-லிருந்து 55° விலகி 180 கி.மீ தொலைவிலுள்ள J-ஐ நோக்கிச் செல்கிறது எனில்,
G - ன் கிழக்கு திசையிலிருந்து H ன் தொலைவு என்ன?
\(\left( \begin{matrix} sin{ 24 }^{ \circ }=0.40476sin{ 11 }^{ \circ }=0.1908 \\ cos{ 24 }^{ \circ }=0.9135cos{ 11 }^{ \circ }=0.9816 \end{matrix} \right) \)
8.
2 மீ உயரமுள்ள மனிதர் ஒரு மரத்தின் உயரத்தைக் கணக்கிட விரும்புகிறார். மரத்தின் அடியிலிருந்து 20 மீ தொலைவில் B என்ற புள்ளியில் ஒரு கண்ணாடி கிடைமட்டமாக மேல் நோக்கி வைக்கப்படுகிறது. கண்ணாடியிலிருந்து 4 மீ தொலைவில் C என்ற புள்ளியில் நிற்கும் மனிதர் மரத்தின் உச்சியின் பிரதிபலிப்பைக் கண்ணாடியில் காண முடிகிறது எனில், மரத்தின் உயரத்தைக் காண்க. (மரத்தின் அடி, கண்ணாடி, மனிதர் ஒரே நேர்க்கோட்டில் உள்ளதாகக் கொள்க).
9.
பல மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்தில் P, Q, R என்ற மூன்று மரங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன. ABC என்ற முக்கோணத்தில் BC -யின் மீது P-யும், AC-யின் மீது Q-வும், AB-யின் மீது R -ம் புள்ளிகளாக உள்ளன. மேலும் BP = 2 மீ, CQ = 3 மீ, RA = 10 மீ, PC = 6 மீ, QA = 5 மீ, RB = 2 மீ ஆகும். மரங்கள் P, Q, R ஒரே நேர்கோட்டில் அமையுமா எனச் சோதிக்கவும்.

10.
ஒரு விமானம் விமான நிலையத்தை விட்டு மேலெழுந்து வடக்கு நோக்கி 1000 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. அதே நேரத்தில் மற்றொரு விமானம் அதே விமான நிலையத்தை விட்டு மேலெழுந்து மேற்கு நோக்கி 1200 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. 1½ மணி நேரத்திற்குப் பிறகு இரு விமானங்களுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வளவு இருக்கும்?

11.
ஒரு பெண் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 6.6 மீ தொலைவிலுள்ள கண்ணாடியில் விளக்கு கம்ப உச்சியின் பிரதிபலிப்பைக் காண்கிறாள். 1.25 மீ உயரமுள்ள அப்பெண் கண்ணாடியிலிருந்து 2.5 மீ தொலைவில் நிற்கிறாள். கண்ணாடியானது வானத்தை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பெண், கண்ணாடி மற்றும் விளக்கு கம்பம் ஆகியவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக எடுத்துக் கொண்டால், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க.
12.
படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

13.
ஒரு பெண்ணின் வயது அவரது சகோதரியின் வயதைப் போல இருமடங்கு ஆகும். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இரு வயதுகளின் பெருக்கற்பலன் 375 எனில், சகோதரிகளின் தற்போதைய வயதைக் காண்க.
14.
அடிப்படை எண்ணியல் தேற்றத்தைப் பயன்படுத்தி 408 மற்றும் 170 என்ற எண்களின் மீ.பொ.ம மற்றும் மீ.பொ.வ காண்க.
15.
f(x) = x2, g(x) = 3x மற்றும் h(x) = x - 2 எனில், (f o g) o h = f o(g o h) என நிறுவுக.
16.
fog = gof எனில் k-ன் மதிப்பைக் காண்க.
(i) f(x) = 3x + 2, g(x) = 6x - k
(ii) f(x) = 2x - k, g(x) = 4x + 5
17.
f: N ⟶ N என்ற சார்பானது f(x) = 3x + 2, x∈N என வரையறுக்கப்பட்டால்
(i) 1, 2, 3 -யின் நிழல் உருக்களைக் காண்க
(ii) 29 மற்றும் 53-யின் முன் உருக்களைக் காண்க.
(iii) சார்பின் வகையைக் காண்க.
18.
கொடுக்கப்பட்ட படமானது ஒரு வளாகத்தில் புதிய வாகன நிறுத்தம் ஏற்படுத்த அமைக்கப்பட்ட பகுதியைக் காட்டுகிறது. இதை அமைப்பதற்கு ஒரு சதுர அடிக்கு ₹1300 செலவாகும் என மதிப்பிடப்படுகிறது. எனில், வாகன நிறுத்தம் ஏற்படுத்துவதற்குத் தேவையான மொத்தச் செலவைக் கணக்கிடவும்.
19.
R என்ற ஒரு உறவு {(x,y) / y = x + 3, x ∈ {0,1,2,3,4,5}} எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பகத்தையும் வீச்சகத்தையும் கண்டறிக.
20.
A = {x ∈ W | x < 2}, B = {x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
(i) A x (B U C) = (A x B) U (A x C)
(ii) A x (B ⋂ C) = (A x B) ⋂ (A x C)
(iii) (A U B) x C = (A x C) U (B x C)
21.
A = {5,6}, B = {4,5,6}, C = {5,6,7} எனில், A x A = (B x B) ∩ (C x C) எனக் காட்டுக.
22.
கொடுக்கப்பட்ட படத்தில் AB||CD||EF. AB = 6 செ.மீ, CD = x செ.மீ, EF = 4 செ.மீ, BD = 5 செ.மீ மற்றும் DE = y செ.மீ எனில், x மற்றும் y -யின் மதிப்பு காண்க.

23.
A(6, 4), B(-5, -1) மற்றும் C(1, 9) -ஐ முனைகளாகக் கொண்ட ΔABC-யின் முனை A-யிலிருந்து வரையப்படும்
(i) நடுக்கோட்டின் சமன்பாட்டைக் காண்க
(ii) குத்துக் கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
24.
சுருக்குக.
(i) \(\cfrac { { 2a }^{ 2 }+5a+3 }{ { 2a }^{ 2 }+7a +6} \div \cfrac { { a }^{ 2 }+6a+5 }{ -{ 5a }^{ 2 }-35a-50 } \)
(ii) \(\cfrac { { b }^{ 2 }+3b-28 }{ { b }^{ 2 }+4b+4 } \div \cfrac { { b }^{ 2 }-49 }{ { b }^{ 2 }-5b-14 } \)
(iii) \(\frac{x+2}{4 y} \div \frac{x^2-x-6}{12 y^2} \)
(iv) \(\cfrac { { 12t }^{ 2 }-22t+8 }{ 3t } \div \cfrac { 3{ t }^{ 2 }+2t-8 }{ { 2t }^{ 2 }+4t } \)
25.
ΔABC -யின் பக்கங்கள் AB, BC மற்றும் AC ஆகியவற்றின் நடுப்புள்ளிகள் முறையே P(11, 7), Q(13.5, 4) மற்றும் R(9.5, 4) என்க. முக்கோணத்தின் முனைப் புள்ளிகள் A, B மற்றும் C காண்க. மேலும் ΔABC -யின் பரப்பை ΔPQR -யின் பரப்புடன் ஒப்பிடுக.
1.
\(2 \mathrm{f}(4)+\mathrm{f}(8)=2\left[5(4)^2-1\right]+[3(8)-4] \)
\(=2[80-1]+[24-4] \)
\(=158+20=178 \quad[\because 2 \leq 4<66 \leq 8 \leq 9]\)
2.
தரப்பட்டுள்ளது: ABCD என்ற சரிவகத்தில் \(\mathrm{DC} || \mathrm{AB}\) மற்றும் \(\mathrm{EF} || \mathrm{AB}\)
நிரூபிக்க வேண்டியது: \(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
அமைப்பு: AC ஐ இணைக்கும் கோடு. EF ஐ G இல் சந்திக்கிறது.
நிரூபணம்:
ΔADC இல்
\(\mathrm{EG} || \mathrm{DC} \)
\(\Rightarrow \frac{A E}{E D}=\frac{A G}{G C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (1) }
ΔABC இல்
\(\frac{A G}{G C}=\frac{B F}{F C}\) [தேல்ஸ் தேற்றத்தின்படி] ... (2)
(1) மற்றும் (2) லிருந்து,
\(\frac{A E}{E D}=\frac{B F}{F C}\)
3.
(i) மின்கலச் சக்தி 40% எனில், நேரத்தைக் கணக்கிட, y = 0.40 என எடுத்துக் கொள்க.
0.40 = −0.25x + 1 ⇒ 0.25x = 0.60
x = \(\frac {0.60}{0.25}\) = 2.4 மணி
(ii) மின்கலம் தனது முழுச் சக்தியை இழந்துவிட்டால் y = 0 எனக் கிடைக்கும்.
எனவே , 0 = −0.25x + 1 ⇒ 0.25x = 1 எனவே , x = 4 மணி.
∴ நான்கு மணி நேரத்திற்குப் பின்பு அலைபேசியின் மின்கலம் தனது முழுச் சக்தியையும் இழக்கிறது.
4.
f(x) = 3x - 5, f = {(x, 3x - 5) |x ∈ R} என எழுதலாம்.
(a, 4) எனில், a-யின் நிழல் உரு 4. அதாவது, f(a) = 4
3a - 5 = 4 லிருந்து a = 3
(1, b) எனில், 1 -யின் நிழல் உரு b. அதாவது, f(1) = b
3(1) – 5 = b எனவே, b = –2
5.
f(x) = 2x - 3
(i) \(\frac{f(0)+f(1)}{2} =\frac{[2(0)-3]+[2(1)-3]}{2} \)
\(=\frac{0-3+2-3}{2} \)
\(=\frac{2-6}{2} \)
\(=\frac{-4}{2}=-2\)
(ii) கொடுக்கப்பட்டது:
f (x) = 0
\(\therefore\) 2x - 3 = 0
2x = 3 \(\Rightarrow\) x = 3/2
(iii) கொடுக்கப்பட்டது:
f (x) = x
2x - 3 = x
2x -.x = 3 \(\Rightarrow\) x = 3
(iv) கொடுக்கப்பட்டது:
f(x) = f(1 - x)
2x - 3 = 2(1 - x) - 3
2x - 3 = 2 - 2x - 3
2x + 2x = 2 - 3 + 3
4x = 2 \(\Rightarrow\) x = 2/4 = 1/2
6.
7.
செங்கோண Δ GOH-ல்,
sin 24° = \(\frac { OH }{ GH } \)
0.4067 = \(\frac { OH }{ 250 } \); OH = 101.68
G-ன் கிழக்கு திசையிலிருந்து H-ன் தொலைவு 101.68 கி.மீ.
8.
CP ஆனது 2 மீ உயரமுள்ள மனிதா் என்க. AT என்பது மரத்தின் உயரம் என்க.
∆CBP மற்றும் ∆ABT இல்
\(\angle C=\angle A=90^{\circ}.\)
\(\mathrm{CA} \perp \mathrm{PC}\) மற்றும் \(\mathrm{CA} \perp \mathrm{TA}\)
\(\angle C B P=\angle A B T \ [\therefore \angle C B P\) என்பது \(\angle A B T\) இன் எதிரொளிப்புக் கோணம்]
∴ AA வடிவொப்புமை விதிமுணைப்படி,
\(\triangle C B P \sim \triangle A B T \)
\(\therefore \quad \frac{C B}{A B} =\frac{B P}{B T}=\frac{C P}{A T} \)
\(\frac{C B}{A B} =\frac{C P}{A T} \)
\(\frac{4}{20} =\frac{2}{A T} \)
\(A T =\frac{2 \times 20}{4}=10\) மீ
∴ மரத்தின் உயரம் = 10 மீ.
9.
மெனிலாஸ் தேற்றத்தின்படி P, Q, R என்ற மரங்கள் ஒரே நேர்கோட்டில் அமைய வேண்டுமெனில்,
\(\cfrac { BP }{ PC } \times \cfrac { CQ }{ QA } \times \cfrac { RA }{ RB } =1\) ஆக அமைய வேண்டும். ...(1)
கொடுக்கப்பட்டது BP = 2 மீ, CQ =3 மீ, RA = 10 மீ, PC = 6 மீ, QA = 5 மீ மற்றும் RB = 2 மீ
மதிப்புகளை (1) –யில் பிரதியிட \(\cfrac { BP }{ PC } \times \cfrac { CQ }{ QA } \times \cfrac { RA }{ RB } =\cfrac { 2 }{ 6 } \times \cfrac { 3 }{ 5 } \times \cfrac { 10 }{ 2 } =\cfrac { 60 }{ 60 } =1\)
எனவே, மரங்கள் P, Q, R ஒரே நேர்கோட்டின் மீது அமைந்துள்ளன.
10.
முதல் விமானம் O -வில் இருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி A என்ற இடத்திற்குச் செல்கிறது என்க. (தொலைவு = வேகம் × நேரம்)
எனவே \(OA=\left( 100\times \cfrac { 3 }{ 2 } \right) \)கி.மீ = 1500 கி.மீ
இரண்டாவது விமானம் O -வில் இருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி B என்ற இடத்திற்குச் செல்கிறது என்க
எனவே \(OB=\left( 1200\times \cfrac { 3 }{ 2 } \right) \)= 1800 கி.மீ
கணக்கிடப்பட வேண்டிய தேவையான தொலைவு BA ஆகும்.
செங்கோணம் AOB யில் AB2 = OA2 + OB2
AB2 = (1500)2 + (1800)2 = 1002(152 + 182)
= 1002 x 549 = 1002 x 9 x 61
\(AB=100\times 3\times \sqrt { 61 } =300\sqrt { 61 } \) கி.மீ.
11.

ஒளி பிரதிபலிப்பு விதியின் படி ∠i = ∠r
∠i +∠ACB = ∠r + ∠ECD = 90o
∠ECD = \(\angle A C B\)
∠B = ∠D = 90o
\(\triangle A B C \sim \triangle D B E\) (AA விதியின் படி)
\(\frac{A B}{D B}=\frac{B C}{DC} \)
\(\frac{A B}{1.25}=\frac{66}{2.5} \)
\(\mathrm{AB}=1.25\times=\frac{66}{2.5}=3.3\) மீ
∴ விளக்குக்கம்பத்தின் உயரம் = 3.3 மீ.
12.
\(\Delta CAB\) மற்றும் \(\Delta CED\) -யில், \(\angle C\) பொதுவானது,\(\angle A=\angle CED\)
எனவே, \(\Delta CAB\sim \Delta CED\) (AA விதிமுறைப்படி)
ஆகவே,\(\cfrac { CA }{ CE } =\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \)
\(\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \) ⇒ \(\cfrac { 9 }{ x } =\cfrac { 10+2 }{ 8 } \) எனவே, \(x=\cfrac { 8\times 9 }{ 12 } \)= 6 செ.மீ.
13.
பெண்ணின் சகோதரியின் தற்போதைய வயது 'x' என்க.
∴ பெண்ணின் வயது 2x.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது (x + 5) மற்றும் (2x + 5)
கொ.பா: (x + 5)(2x + 5) = 375
சுருக்க \(2 \mathrm{x}^2+15 \mathrm{x}-350=0\)
\(2 \mathrm{x}^2-20 \mathrm{x}+35 \mathrm{x}-350=0 \)
\(2 x(x-10)+35(x-10)=0 \)
\((x-10)(2 x+35)=0 \)
\(x=10,-\frac{35}{2} \therefore \mathrm{x}=10\)
\(\left[\because \mathrm{x}=\frac{-35}{2}\right.\) என்பது சாத்தியமல்ல]
∴ பெண்ணின் தற்போதைய வயது 20 வருடங்கள் மற்றும் பெண்ணின் சகோதரியின் வயது 10 வருடங்கள்.
14.
அடிப்படை எண்ணியல் தேற்றத்தின்படி அனைத்து இயல் எண்களையும் பகா எண்களின் பெருக்கற்பலனாகக் காரணிப்படுத்த இயலும்.
எனவே 408 மற்றும் 170 ஐக் காரணிப்படுத்த,
\(408=2^3 \times 3^1 \times 17^1 \)
\(170=2^1 \times 5^1 \times 17^1\)
408, 170 இன் மீ.பொ.வ \(=2^1 \times 17^1=34\)
மேலும் மீ.பொ.வ × மீ.பொ.ம = இரு எண்களின் பெருக்கற்பலன்
34 x மீ.பொ.ம = 408 x 170
மீ.பொ.ம. \(=\frac{408 \times 170}{34}=2040\)
\(\therefore\) 408, 170 இன் மீ.பொ.வ = 34;
408, 170 இன் மீ.பொ.ம = 2040
15.
\(\mathrm{f}(\mathrm{x}) =\mathrm{x}^2, \mathrm{~g}(\mathrm{x})=3 \mathrm{x}, \mathrm{h}(\mathrm{x})=\mathrm{x}-2 \)
\(f \circ g =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}(3 \mathrm{x}) \)
\(=(3 \mathrm{x})^2=9 \mathrm{x}^2 \)
\((f \circ g) \circ \mathrm{h}=(f \circ g)[\mathrm{h}(\mathrm{x})]=(f \circ g)[\mathrm{x}-2] \)
\(= 9(\mathrm{x}-2)^2 \)
\(g \circ h=\mathrm{g}[\mathrm{h}(\mathrm{x})] =\mathrm{g}[\mathrm{x}-2]=3(\mathrm{x}-2) \)
\(f \circ(g \circ h)\) \(=\mathrm{f}[3(\mathrm{x}-2)] =[3(\mathrm{x}-2)]^2=9(\mathrm{x}-2)^2 \)
\(\therefore (f \circ g) \circ h= f \circ(g \circ h)\) நிறுவப்பட்டது.
16.
(i) \(f(x)=3 x+2, g(x)=6 x-k \)
\(f \circ g(x)=f[g(x)]=f(6 x-k) \)
\(=3(6 \mathrm{x}-\mathrm{k})+2 \)
\(=18 \mathrm{x}-3 \mathrm{k}+2 \)
\(g \circ f(x)=g[f(x)]=g(3 x+2)\)
= 6 (3x + 2) - k
\(=18 \mathrm{x}+12-\mathrm{k}\)
கொடுக்கப்பட்டது
\(f \circ g =g \circ f \)
\(\therefore \quad 18 x-3 k +2=18 x+12-k \)
\(3 k-k =-12+2 \)
2k = -10 \(\Rightarrow\) k = -5
(ii) \(\mathrm{f}(\mathrm{x})=2 \mathrm{x}-\mathrm{k}, \mathrm{g}(\mathrm{x})=4 \mathrm{x}+5 \)
\(f \circ g(x) =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})]=\mathrm{f}[4 \mathrm{x}+5] \)
\(=2(4 \mathrm{x}+5)-\mathrm{k} \)
\(=8 \mathrm{x}+10-\mathrm{k} \)
\(g \circ f =\mathrm{g}[\mathrm{f}(\mathrm{x})]=\mathrm{g}(2 \mathrm{x}-\mathrm{k})=4(2 \mathrm{x}-\mathrm{k})+5 \)
\(=8 \mathrm{x}-4 \mathrm{k}+5\)
கொடுக்கப்பட்டது,
\(f \circ g =g \circ f \)
\(\therefore \quad 8 \mathrm{x}+ 10-\mathrm{k}=8 \mathrm{x}-4 \mathrm{k}+5 \)
\(4 \mathrm{k}-\mathrm{k} =5-10 \)
3k = -5 \(\Rightarrow\) k = -5 / 3
17.
f: N ⟶ N என்ற சார்பானது f(x) = 3x + 2, என வரையறுக்கப்பட்டுள்ளது.
(i) x = 1 எனில், f(1) = 3(1) + 2 = 5
x = 2 எனில், f(2) = 3(2) + 2 = 8
x = 3 எனில், f(3) = 3(3) + 2 = 11
1, 2, 3 -யின் நிழல் உருக்கள் முறையே 5, 8, 11 ஆகும்.
(ii) 29-யின் முன் உரு x எனில் f(x) = 29. எனவே 3x + 2 = 29
3x = 27 ⇒ x = 9
இதைப்போலவே, 53-யின் முன் உரு x எனில், f(x) = 53. எனவே, 3x + 2 = 53
3x = 51 ⇒ x = 17
எனவே, 29 மற்றும் 53-யின் முன் உருக்கள் முறையே 9 மற்றும் 17 ஆகும்.
(iii) N -யின் வெவ்வேறு உறுப்புகளுக்குத் துணை மதிப்பகத்தில் வெவ்வேறு நிழல் உருக்கள் உள்ளன. எனவே, f ஆனது ஒன்றுக்கு ஒன்றான சார்பாகும்.
f -யின் துணை மதிப்பகமானது N.
வீச்சகம் f = {5, 8, 11, 14, 17,....} ஆனது N-ன் தகு உட்கணமாகும்.
எனவே, f ஆனது மேல்சார்பு இல்லை.
அதாவது, f உட்சார்பு ஆகும்.
எனவே, f ஆனது ஒன்றுக்கு ஒன்றான மற்றும் உட்சார்பு ஆகும்.
18.
A(2, 2), B(5, 5), C(4, 9) மற்றும் D(1, 7) என்பது நாற்கர வடிவ வாகன நிறுத்தத்தின் முனைப் புள்ளிகள் ஆகும்.
வாகன நிறுத்தத்தின் பரப்பு = \(\frac 12\) ச.அலகுகள்
= \(\frac 12\) {(10 + 45 + 28 + 2) - (10 + 20 + 9 + 14)}
= \(\frac 12\) {85 - 53}
= \(\frac 12\) (32) = 16 சதுர அடிகள்.
வாகன நிறுத்தத்தின் பரப்பு = 16 சதுர அடிகள்
ஒரு சதுர அடி அமைக்க ஆகும் செலவு = ₹1300
வாகன நிறுத்தம் அமைக்க ஆகும் மொத்தச் செலவு = 16 × 1300 = ₹20800
19.
கொடுக்கப்பட்ட கணம்
\(=\{(\mathrm{x}, \mathrm{y}) / \mathrm{y}=\mathrm{x}+3, x \in\{0,1,2,3,4,5\}\}\)
x = 0 எனும்போது, y = 0 + 3 = 3
x = 1 எனும்போது, y = 1 + 3 = 4
x = 2 எனும்போது, y = 2 + 3 = 5
x = 3 எனும்போது, y = 3 + 3 = 6
x = 4 எனும்போது, y = 4 + 3 = 7
x = 5 எனும்போது, y = 5 + 3 = 8
\(\therefore\) உறவு \(\mathrm{R}=\{(0,3),(1,4),(2,5),(3,6),(4,7),(5,8)\}\)
மதிப்பகம் R ={0, 1, 2, 3, 4, 5}
வீச்சகம் = {3, 4, 5, 6,7, 8}
20.
கொடுக்கப்பட்டது
\(\mathrm{A}=\{x \in \mathbb{W} \mid x<2\} \Rightarrow \mathrm{A}=\{0,1\} \)
\(\mathrm{C}=\{3,5\}\)
(i) \(A \times(B \cup C)=(A \times B) \cup(A \times C) \)
\(B \cup C=\{2,3,4,5\} \)
\(A \times(B \cup C)=\{0,1\} \times\{2,3,4,5\} \)
\(=\{(0,2),(0,3),(0,4),(0,5), (1,2),(1,3),(1,4),(1,5)\} \quad \ldots(1) \)
\(\mathrm{A} \times \mathrm{B}=\{0,1\} \times\{2,3,4\} \)
\(=\{(0,2),(0,3),(0,4), (1,2),(1,3),(1,4)\} \)
\(\mathrm{A} \times \mathrm{C}=\{0,1\} \times\{3,5\} \)
\(=\{(0,3),(0,5),(1,3),(1,5)\} \)
\((A \times B) \cup(A \times C)=\{(0,2),(0,3),(0,4),(0,5),(1,2),(1,3),(1,4),(1,5)\} \quad \ldots(2) \)
(1)
\(A \times(B \cup C)=(A \times B) \cup(A \times C)\) என்பது தெளிவாகிறது.
எனவே, சரிப்பார்க்கப்பட்டது.
(ii) \(A \times(B \cap C)=(A \times B) \cap(A \times C) \)
\(A=\{0,1\}, B=\{2,3,4\}, C=\{3,5\} \)
\(B \cap C=\{3\} \)
\(A \times(B \cap C)=\{0,1\} \times\{3\} \)
\(=\{(0,3),(1,3)\} \quad \dots (1) \)
\(A \times B=\{(0,2),(0,3),(0,4),(1,2),(1,3),(1,4)\} \)
\(A \times C=\{(0,3),(0,5),(1,3),(1,5)\} \)
\((A \times B) \cap(A \times C)=\{(0,3),(1,3)\} \quad \dots (2)\)
(1)
\(A \times(B \cap C)=(A \times B) \cap(A \times C)\) என்பது தெளிவாகிறது.
எனவே சரிபார்க்கப்பட்டது.
(iii) \((A \cup B) \times C=(A \times C) \cup(B \times C)\)
\(A=\{0,1\}, B=\{2,3,4\}, C=\{3,5\} \)
\((A \cup B)=\{0,1,2,3,4\} \)
\((A \cup B) \times C=\{0,1,2,3,4\} \times\{3,5\} \)
\(=\{(0,3),(0,5),(1,3),(1,5),(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \quad \dots(1) \)
\(\mathrm{A} \times \mathrm{C}=\{0,1\} \times\{3,5\} \)
\(=\{(0,3),(0,5),(1,3),(1,5)\} \)
\(B \times C=\{2,3,4\} \times\{3,5\} \)
\(=\{(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \)
\((A \times C) \cup(B \times C)=\{(0,3),(0,5),(1,3),(1,5),(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \ldots(2)\)
(1)
\((A \cup B) \times C=(A \times C) \cup(B \times C)\) என்பது தெளிவாகிறது.
எனவே, சரிபார்க்கப்பட்டது.
21.
A = {5, 6}, B = {4, 5, 6}, C = {5, 6, 7}
LHS: A x A = {5, 6} x {5, 6}
= {(5, 5), (5, 6), (6, 5),(6, 6)}
RHS:
B x B = {4, 5, 6} x {4, 5, 6}
= {(4, 4), (4, 5), (4, 6), (5, 4), (5, 5) (5, 6), (6, 4), (6, 5), (6, 6)}
C x C = {5, 6, 7} x {5, 6, 7}
= {(5, 5), (5, 6), (5, 7), (6, 5), (6, 6), (6,7), (7, 5), (7, 6), (7, 7)}
\((B \times B) \cap(C \times C) =\{(5,5),(5,6),(6,5),(6,6)\}\)
\(\therefore \text { LHS } =\text { RHS } \)
\(A \times A =(B \times B) \cap(C \times C) \) நிறுவப்பட்டது.
22.
AB || CD || EF என தரப்பட்டுள்ளது.
AB = 6 செ.மீ, BD = 5 செ.மீ, EF = 4 செ.மீ, CD = x செ.மீ, DE = y செ.மீ
ΔECD மற்றும் ΔEAB இல்
ㄥCED = ㄥAEB [பொதுக்கோணம்]
ㄥECD = ㄥEAB [ஒத்த கோணங்கள்] }
\(\triangle E C D \sim \triangle E A B\)
[ AA வடிவொப்புமை விதிமுறைப்படி] ....(1)
\(\therefore \quad \frac{E C}{E A}=\frac{C D}{A B}\)
[∵ வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் விகிதசமம்] .
\(\frac{E C}{E A}=\frac{x}{6}\) ...(2)
ΔACD மற்றும் ΔAEF இல்
ㄥCAD = ㄥEAF [பொதுக்கோணம்]
ㄥACD = ㄥAEF [ஒத்த கோணங்கள்]
\(\triangle A C D \sim \triangle AEF\) [AA விதிமுறைப்படி]
\(\frac{A C}{A E}=\frac{C D}{E F}\)
[∴ வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்கள் விகித சமம்] .
\(\therefore \ \frac{A C}{A E}=\frac{x}{4} , \ldots \text { (3) } \)
\((2)+(3) \Rightarrow \frac{E C}{E A}+\frac{A C}{A E}=\frac{x}{6}+\frac{x}{4} \)
\(\frac{E C+A C}{A E} =\frac{4 x+6 x}{24} \)
\(\frac{E C+A C}{A E} =\frac{4 x+6 x}{24} \)
\(\frac{A E}{A E} =\frac{10 x}{24} \)
\(1=\frac{10 x}{24} \)
\(x=\frac{24}{10}=\frac{12}{5}\) செ.மீ
(1) இலிருந்து \(\triangle E C D \sim \triangle E A B\)
\(\frac{D C}{A B} =\frac{E D}{E B} \)
\(\frac{x}{6} =\frac{y}{5+y} \)
\(\Rightarrow \frac{12 / 5}{6} =\frac{y}{5+y} \ \because \times=\frac{12}{5} \)
\(\frac{12}{5 \times 6} =\frac{y}{5+y} \)
\(12(5+y) =30 \mathrm{y} \)
\(60+12 y =30 \mathrm{y} \)
\(60 =30 \mathrm{y}-12 \mathrm{y} \)
\(18 \mathrm{y} =60 \)
\(y=\frac{60}{18} \)
\(y=\frac{10}{3} \) செ.மீ
23.
கொடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் A(6, 2), B(-5, -1) மற்றும் C(1, 9)
A வழிச்செல்லும் நடுக்கோடு
D என்பது BC-ன் நடுப்புள்ளி என்க.
BC-ன் நடுப்புள்ளி \(=\mathrm{D}\left(\frac{x_1+x_2}{2}, \frac{y_1+y_2}{2}\right) \)
\(=\mathrm{D}\left(\frac{-5+1}{2}, \frac{-1+9}{2}\right) \)
\(=\mathrm{D}(-2,4)\)
AD என்பது நடுக்கோடு
AD-ன் சமன்பாடு \(\Rightarrow\) \(\frac{y-y_1}{y_2-y_1} =\frac{x-x_1}{x_2-x_1} \)
\(\frac{y-2}{4-2} =\frac{x-6}{-2-6} \)
\(\frac{y-2}{2} =\frac{x-6}{-8} \)
\(-4 y+8 =x-6 \)
\(x+4 y-14 =0\)
A வழிச் செல்லும் குத்துக்கோடு
'A' வழிச்செல்லும் நடுக்கோடு BC-க்கு செங்குத்தாகவும் உள்ளது.
இப்போது, BC - ன் சாய்வு \(=\frac{y_1-y_2}{x_1-x_2}=\frac{-1-9}{-5-1}=\frac{-10}{-6}=\frac{5}{3}\)
\(\therefore\) குத்துக்கோட்டின் சாய்வு \(=-\frac{3}{5}\)
A(6, 2) என்ற புள்ளி வழிச்செல்வதும், சாய்வு - \(\frac{3}{5}\) கொண்டதுமான குத்துக்கோட்டின் சமன்பாடு
\(y-y_1 =m\left(x-x_1\right) \)
\(y-2 =-\frac{3}{5}(x-6) \)
\(5 y-10 =-3 x+18 \)
\(3 x+5 y-28 =0\)
24.
(i) \(\frac{2 a^2+5 a+3}{2 a^2+7 a+6} \div \frac{a^2+6 a+5}{-5 a^2-35 a-50} \)
\(=\frac{2 a^2+5 a+3}{2 a^2+7 a+6} \times \frac{-5\left(a^2+7 a+10\right)}{a^2+6 a+5} \)
\(=\frac{(2 a+3)(a+1)}{(2 a+3)(a+2)} \times \frac{-5(a+5)(a+2)}{(a+5)(a+1)} \) = -5
(ii) \(\frac{b^2+3 b-28}{b^2+4 b+4} \div \frac{b^2-49}{b^2-5 b-14} \)
\(=\frac{b^2+3 b-28}{b^2+4 b+4} \times \frac{b^2-5 b-14}{b^2-49} \)
\(=\frac{(b+7)(b-4)}{(b+2)^2} \times \frac{(b-7)(b+2)}{(b-7)(b+7)} \)
\(=\frac{b-4}{b+2}\)
(iii) \(\frac{x+2}{4 y} \div \frac{x^2-x-6}{12 y^2} \)
\(=\frac{x+2}{4 y} \times \frac{12 y^2}{x^2-x-6} \)
\(=\frac{x+2}{4 y} \times \frac{12 y^2}{(x-3)(x+2)} \)
\(=\frac{3 y}{x-3}\)
(iv) \(\frac{12 t^2-22 t+8}{3 t} \div \frac{3 t^2+2 t-8}{2 t^2+4 t} \)
\(=\frac{2\left(6 t^2-11 t+4\right)}{3 t} \times \frac{2 t(t+2)}{3 t^2+2 t-8} \)
\(=\frac{2(3 t-4)(2 t-1)}{3 t} \times \frac{2 t(t+2)}{(3 t-4)(t+2)} \)
\(=\frac{4(2 t-1)}{3}\)
25.
கொடுக்கப்பட்டுள்ளது: P, Q, R என்பன முக்கோணத்தின் பக்கங்களின் நடுப்புள்ளிகள். முக்கோணம் ABC-ன் முனைப்புள்ளிகள் \(\mathrm{A}\left(\mathrm{x}_1, \mathrm{y}_1\right), \mathrm{B}\left(\mathrm{x}_2, \mathrm{y}_2\right)\) மற்றும் \(\mathrm{C}\left(\mathrm{x}_3, \mathrm{y}_3\right)\) என்க.
P என்பது AB-ன் நடுப்புள்ளி
\(\left(\frac{x_1+x_2}{2}, \frac{y_1+y_2}{2}\right)=(11,7)\)
ஒத்த கெழுக்களைச் சமன்படுத்த
\(\mathrm{x}_1+\mathrm{x}_2=22\) ...(1) மற்றும்
\(\mathrm{y}_1+\mathrm{y}_2=14\) ....(2)
Q என்பது BC-ன் நடுப்புள்ளி
\(\left(\frac{x_2+x_3}{2}, \frac{y_2+y_3}{2}\right)=(13.5,4) \)
\(\mathrm{x}_2+\mathrm{x}_3=27 \) ....(3)
\(\mathrm{y}_2+\mathrm{y}_3=8\) ....(4)
R என்பது AC-ன் நடுப்புள்ளி
\(\left(\frac{x_1+x_3}{2}, \frac{y_1+y_3}{2}\right)=(9.5,4) \)
\(x_1+x_3=19 \) ....(5)
\(y_1+y_3=8\) ....(6)
(1), (3) மற்றும் (5) ஆகியவற்றைத் தீர்க்க,
\(\mathrm{x}_1=7, \mathrm{x}_2=15\) மற்றும் \(\mathrm{x}_3=12\)
(2), (4) மற்றும் (6) ஆகியவற்றைத் தீர்க்க கிடைப்பது, \(y_1=7, y_2=7\) மற்றும் \(y_3=1\)
∴ முனைப்புள்ளிகள் A(7, 7), B(15, 7) மற்றும் C(12, 1)
ΔABC -ன் பரப்பளவு = \(\frac{1}{2}[x_1(y_2-y_3)+x_2(y_3-y_1)+x_3(y_1-y_2)]\) ச.அலகுகள்
= \(\frac{1}{2}\)[7(7−1)+15(1−7)+12(7−7)]
\(=\frac{1}{2}[42-90]=\frac{1}{2}(-48)=-24\)
= 24 சதுர அலகுகள்
[∵ பரப்பளவு குறை எண்ணாக இருக்க இயலாது]
ΔPQR ன் பரப்பளவு
\(=\frac{1}{2}[11(4-4)+13.5(4-7)+9.5(7-4)] \)
\(=\frac{1}{2}[0-40.5+28.5]=\frac{-12}{2}=-6\)
பரப்பளவு = 6 சதுர அலகுகள்
[∵ பரப்பளவு குறை எண்ணாக இருக்க இயலாது]
∴ ΔABC -ன் பரப்பளவு = 4 (ΔPQR ன் பரப்பளவு)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards