10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every book back questions in class 10 Maths subject.It will helps to get more idea about question pattern in every book back questions with solution.
latest Book back Questions10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
f : [-5, 9] ⟶ R என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது

என வரையறுக்கப்படுகிறது எனில், \(\frac { 2f(-2)-f(6) }{ f(4)+f(-2) } \) காண்க
2.
f என்ற சார்பானது;

என வரையறுக்கப்பட்டால் f(-1.5) மதிப்புகளைக் காண்க.
3.
கீழே கொடுக்கப்பட்ட வரைபடம் சார்பைக் குறிக்கின்றனவா எனத் தீர்மானிக்கவும். விடைகளுக்கான காரணத்தையும் கொடுக்கவும்.

4.
1 + 6 + 62+...6n > 5000 என்றவாறு அமையும் மிகச் சிறிய மிகைமுழு எண் n காண்க.
5.
முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடக்கூடிய சிறிய எண் எது?
6.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 7 -வது உறுப்பு −1 மற்றும் 16 -வது உறுப்பு 17 எனில், அதன் பொது உறுப்பைக் காண்க.
7.
1230 மற்றும் 1926 ஆகிய எண்களை வகுக்கும்போது மீதி 12 -ஐத் தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் காண்க.
8.
f (x) = 2x + 5 என்க. x ≠ 0 எனில், \(\frac { f(x+2)-f(2) }{ x } \) -ஐக் காண்க.
9.
B x A = {(-2,3), (-2,4), (0,3), (0,4), (3,3), (3,4)} எனில், A மற்றும் B ஆகியவற்றைக் காண்க.
10.
A = {x ∈ W| x < 2}, B = {x∈N |1 < x ≤ 4} மற்றும் C = {3,5} எனில் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சமன்பாடுகளைச் சரிபார்க்க.
(A U B) x C = (A x C) U (B x C)
11.
கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (f o g) o h = f o(g o h) எனக் காட்டுக.
f(x) = x2, g(x) = 2x மற்றும் h(x) = x + 4
12.
பின்வருவனவற்றிற்கு A x B, A x A மற்றும் B x A ஐக் காண்க.
A = B = {p, q}
13.
ஒரு பெருக்குத் தொடர்வரிசையின் 9-வது உறுப்பு 32805 மற்றும் 6-வது உறுப்பு 1215 எனில், 12-வது உறுப்பைக் காண்க.
14.
281 ஐ 17 ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதி காண்க.
15.
24,15,36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.
16.
13824 = 2a x 3b எனில், a மற்றும் b -யின் மதிப்பைக் காண்க.
17.
70004 மற்றும் 778 ஆகிய எண்களை 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதியைக் காண்க.
18.
A = {1, 2} , B = {1,2,3,4} , C = {5, 6} மற்றும் D = {5,6,7,8} எனில், A x C ஆனது B x D உட்கணமா எனச் சரிபார்க்க.
19.
f = {(1,2), (2,2), (3,2), (4,3), (5,4)} என்ற சார்பினை
(i) அம்புக்குறி படம்
(ii) அட்டவணை
(iii) வரைபடம் மூலமாகக் குறிக்கவும்.
20.
ஒரு துகள் ‘t’ (மணியில்) கால அளவில் கடந்த தூரமானது (கி.மீட்டரில்) S(t)=\(\frac { { t }^{ 2 }+t }{ 2 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துகள்
(i) மூன்றரை மணி
(ii) 8 மணி மற்றும் 15 நிமிடங்கள் கால அளவிற்குப் பின் கடந்த தொலைவுகளைக் கண்டறிக.
21.
தடயவியல் விஞ்ஞானிகள், தொடை எலும்புகளைக் கொண்டு ஒருவருடைய உயரத்தை (செ.மீட்டரில்) கணக்கிடுகிறார்கள். அவர்கள் பொதுவாக, h(b) = 2.47b + 54.10 என்ற சார்பை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். இங்கு, b ஆனது தொடை எலும்பின் நீளமாகும்.
(i) h ஆனது ஒன்றுக்கு ஒன்றானதா எனச் சரிபார்க்க.
(ii) தொடை எலும்பின் நீளம் 50 செ.மீ எனில், அந்த நபரின் உயரத்தைக் காண்க.
(iii) நபரின் உயரம் 147.96 செ.மீ எனில், அவர் தொடை எலும்பின் நீளத்தைக் காண்க.
22.
கிடைமட்டக்கோடு சோதனையைப் பயன்படுத்தி (படம் 1.35(i), 1.35(ii), 1.35(iii)), கீழ்க்கண்ட சார்புகளில் எவை ஒன்றுக்கொன்றானவை எனக் காண்க.

23.
A = {1,2,3,4,...,45} மற்றும் R என்ற உறவு "A-யின் மீது, ஓர் எண்ணின் வர்க்கம்" என வரையறுக்கப்பட்டால், R-ஐ A x A-யின் உட்கணமாக எழுதுக. மேலும் R-க்கான மதிப்பகத்தையும், வீச்சகத்தையும் காண்க.
24.
படத்தில் காட்டப்பட்டுள்ள (படம்) அம்புக்குறி படமானது P மற்றும் Q கணங்களுக்கான உறவைக் குறிக்கின்றது. இந்த உறவை
(i) கணக்கட்டமைப்பு முறை
(ii) பட்டியல் முறைகளில் எழுதுக
(iii) R -ன் மதிப்பகம் மற்றும் வீச்சகத்தைக் காண்க.

25.
A = {1,2,3}, B = {2,3,5}, C = {3,4} மற்றும் D = {1,3,5} எனில் (A ∩ C) x (B ∩ D) = (A x B) ∩ (C x D) என்பது உண்மையா என சோதிக்கவும்.
1.
\(\frac{2 f(-2)-f(6)}{f(4)+f(-2)} \)
\(f(-2)=6(-2)+1=-12+1=-11\quad [\because-5 \leq-2<2] \)
\(f(6)=3(6)-4=18-4=14 \quad[\because 6 \leq 6<9]\)
\(\mathrm{f}(4)=5(4)^2-1=80-1=79 \quad[\because 2 \leq 4<6] \)
\(\mathrm{f}(-2)=-11 \)
\(\therefore \frac{2 \mathrm{f}(-2)-\mathrm{f}(6)}{\mathrm{f}(4)+\mathrm{f}(-2)}=\frac{2(-11)-14}{79-11} \)
\(=\frac{-22-14}{68}=-\frac{36}{68}=-\frac{9}{17}\)
2.
\(f(-1.5)=-1.5-1=-2.5\quad [\because-3<-1.5<-1]\)
3.
குத்துக்கோடு வளைவரையை ஒரேயொரு புள்ளியில் வெட்டுவதால், இது ஒரு சார்பாகும்
4.
எத்தனை குறைவான உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 5000-ஐத் தாண்டும் என நாம் காண வேண்டும்.
அதாவது எந்தக் குறைவான n மதிப்பிற்கு Sn > 5000 வரும் எனக் காண வேண்டும்.
Sn = \(\frac { a({ r }^{ n }-1) }{ r-1 } =\frac { 1({ 6 }^{ n }-1) }{ 6-1 } =\frac { { 6 }^{ n }-1 }{ 5 } \)
Sn > 5000 ⇒ \(\frac { { 6 }^{ n }-1 }{ 5 } \) > 5000
6n -1 > 25000 ⇒ 6n > 25001
65 = 7776 மற்றும் 66 = 46656 என்பதால்
1 + 6 + 62+...+6n > 5000 என்றவாறு அமையும் மிகச்சிறிய n -ன் மதிப்பு 6 ஆகும்.
5.
தேவையான எண் முதல் 10 இயல் எண்களின் மீ.பொ.ம ஆகும்.
i.e., ( 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ) ன் மீ.பொ.ம
மீ.பொ.ம. \(5 \times 2 \times 3 \times 2 \times 7 \times 2 \times 3=2520\)
∴ முதல் 10 இயல் எண்களால் மீதியின்றி வகுபடும் சிறிய எண் 2520 ஆகும்.
6.
t1,t2,t3,t4,.... என்பது தேவையான கூட்டுத் தொடர்வரிசை என்க.
t7 = -1 மற்றும் t16 = 17 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
a + (7 - 1)d = -1 மற்றும் a + (16 - 1)d = 17
a + 6d = -1 ......(1)
a + 15d = 17 ....(2)
சமன்பாடு (2) -லிருந்து சமன்பாடு (1) ஐ கழிக்க, நாம் பெறுவது 9d = 18 -லிருந்து d = 2. d = 2 எனச் சமன்பாடு (1)-யில் பிரதியிட நாம் பெறுவது, a + 12 = -1. எனவே a = –13
ஆகவே, பொது உறுப்பு tn = a + (n - 1)d
= -13 + (n - 1) x 2 = 2n - 15
7.
இரு எண்களையும் வகுக்கும்போதும் கிடைக்கும் மீதி = 12
\(\therefore\) தேவையான எண் 1230 - 12 மற்றும் 1926 - 12 இன் மீ.பொ.வ ஆகும்.
அதாவது 1218 மற்றும் 1914 இன் மீ.பொ.வ ஆகும்.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையை மீதி பூச்சியம் வரும் வரை மீண்டும் மீண்டும் பயன்படுத்த நாம் பெறுவது
1914 = 1218 x 1 + 696
1218 = 696 x 1 + 522
696 = 522 x 1 + 174
522 = 174 x 3 + 0
\(\therefore\) 1218,1914 இன் மீ.பொ.வ = 174
\(\therefore\) தேவையான எண் 174 .
8.
\(f(x)=2 x+5, x \neq 0 \)
\(\frac{f(x+2)-f(2)}{x}=\frac{[2(x+2)+5-[2(2)+5]}{x} \)
\(=\frac{2 x+4+5-(4+5)}{x} \)
\(=\frac{2 x+9-9}{x} \)
\(=\frac{2 x}{x}=2\)
9.
B x A -லிருந்து எல்லா வரிசைச் சோடிகளின் முதல் உறுப்புகள் B -யையும் மற்றும் இரண்டாம் உறுப்புகள் அனைத்தும் A -யையும் சேர்ந்ததாகும்.
\(\therefore\) A = {3,4}
B = {-2, 0, 3}
10.
\((A \cup B) \times C=(A \times C) \cup(B \times C)\)
\(A=\{0,1\}, B=\{2,3,4\}, C=\{3,5\} \)
\((A \cup B)=\{0,1,2,3,4\} \)
\((A \cup B) \times C=\{0,1,2,3,4\} \times\{3,5\} \)
\(=\{(0,3),(0,5),(1,3),(1,5),(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \quad \dots(1) \)
\(\mathrm{A} \times \mathrm{C}=\{0,1\} \times\{3,5\} \)
\(=\{(0,3),(0,5),(1,3),(1,5)\} \)
\(B \times C=\{2,3,4\} \times\{3,5\} \)
\(=\{(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \)
\((A \times C) \cup(B \times C)=\{(0,3),(0,5),(1,3),(1,5),(2,3),(2,5),(3,3),(3,5),(4,3),(4,5)\} \ldots(2)\)
(1), (2) லிருந்து
\((A \cup B) \times C=(A \times C) \cup(B \times C)\) என்பது
தெளிவாகிறது. எனவே, சரிபார்க்கப்பட்டது.
11.
\(\mathrm{f}(\mathrm{x}) =\mathrm{x}^2, \mathrm{~g}(\mathrm{x})=2 \mathrm{x}, \mathrm{h}(\mathrm{x})=\mathrm{x}+4 \)
\(f \circ g =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x})] \)
\(=\mathrm{f}(2 \mathrm{x})=(2 \mathrm{x})^2=4 \mathrm{x}^2 \)
\((f \circ g) \circ \mathrm{h} =(f \circ g)[\mathrm{h}(\mathrm{x})]=(f \circ g)[\mathrm{x}+4] \)
\(=4(\mathrm{x}+4)^2 \)
\(=4\left(\mathrm{x}^2+8 \mathrm{x}+16\right)=4 \mathrm{x}^2+32 \mathrm{x}+64 \)
\(g \circ h =\mathrm{g}[\mathrm{h}(\mathrm{x})]=\mathrm{g}[\mathrm{x}+4]=2(\mathrm{x}+4) \)
\(f \circ(g \circ h) =\mathrm{f}[\mathrm{g}(\mathrm{h}(\mathrm{x}))]=\mathrm{f}[\mathrm{g}(\mathrm{x}+4)] \)
\(=\mathrm{f}[2(\mathrm{x}+4)]=[2(\mathrm{x}+4)]^2=4(\mathrm{x}+4)^2 \)
\(=4\left(\mathrm{x}^2+8 \mathrm{x}+16\right)=4 \mathrm{x}^2+32 \mathrm{x}+64 \)
\(\therefore(f \circ g) \circ =f \circ(g \circ h)\)
12.
A = B = {p, q}
A x B = {p, q} x {p, q}
= {(p, p), (p, q), (q, p), (q, q)}
A x A = {p, q} x {p, q}
= {(p, p), (p, q), (q, p), (q, q)}
B x A = {p, q} x {p, q}
= {(p, p), (p, q), (q, p), (q, q)}
\(\therefore A \times B =A \times A=B \times A\) என்பதால்
A = B
13.
பெருக்குத் தொடா் வரிசையின்
9வது உறுப்பு \(=ar^{9-1}=32805 \Rightarrow a r^8=32805 \ldots (1)\)
6வது உறுப்பு \(=a r^{6-1}=1215 \Rightarrow a r^5=1215 \quad \ldots (2)\)
\(\frac{(1)}{(2)} \Rightarrow \frac{a r^8}{a r^5}=\frac{32805}{1215} \) \(\Rightarrow \mathrm{r}^3=27 \) ....(3)
∴ பெருக்குத் தொடர் வரிசையின் 12 -வது உறுப்பு
\(t_{12} =a r^{12-1} \) = ar11
= ar8 \(\times\) r3 = 32805 \(\times\) 27
= 765735
(\(\because\) (1) மற்றும் (3) லிருந்து)
பெருக்குத் தொடர் வரிசையின் 12 -வது உறுப்பு = 765735
14.
\(2^5 \equiv 15\) (மட்டு 17) எனக் கொள்வோம்.
\(\left(2^5\right)^2 \equiv 15^2\) (மட்டு 17)
\(2^{10} \equiv 4\) (மட்டு 17)
\(\left(2^{10}\right)^4 \equiv 4^4\) (மட்டு 17)
\(2^{40} \equiv\) 1 (மட்டு 17)
\(\left(2^{40}\right)^2 \equiv 1^2\) (மட்டு 17)
\(2.2^{80} \equiv 2 \times 1 \) (மட்டு 17)
\(2^{81} \equiv 2 \) (மட்டு 17)
281 ஐ 17 ஆல் வகுத்தால் மீதி 2 கிடைக்கும்.
15.
மீ.பொ.ம. \(=3 \times 2 \times 2 \times 2 \times 5 \times 3=360\)
மிகப்பெரிய 6 இலக்க எண் 999999
24, 15 மற்றும் 36 இன் மீ.பொ.ம = 360
999999 ஐ 360 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி = 279 .
\(\therefore\) 24,15, 36 ஆல் வகுபடும் மிகப்பெரிய 6 இலக்க எண் = 999999 - 279 = 999720
எனவே தேவையான எண் = 999720
16.
எனவே 13824 = 29 x 33 , இது 2a x 3b னும் வடிவில் உள்ளது
∴ a = 9, மற்றும் b = 3.
17.
70000 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
70000 ≡ 0 (மட்டு 7)
70000 + 4 ≡ 0 + 4 (மட்டு 7)
70004 ≡ 4 (மட்டு 7)
எனவே 70004 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 4.
777 ஆனது 7 ஆல் வகுபடும் என்பதால்
777 ≡ 0 (மட்டு 7)
777 + 1 ≡ 0 + 1 (மட்டு 7)
778 ≡ 1 (மட்டு 7)
எனவே, 778 ஐ 7 ஆல் வகுக்கக் கிடைக்கும் மீதி 1.
18.
\(A=\{1,2\}, B=\{1,2,3,4\}, C=\{5,6\}, D=\{5,6,7,8\} \)
\(A \times C=\{1,2\} \times\{5,6\} \)
\(=\{(1,5),(1,6),(2,5),(2,6)\} \)
\(B \times D=\{1,2,3,4\} \times\{5,6,7,8\} \)
B × D={(1,5),(1,6),(1,7),(1,8)(2,5),(2,6),(2,7),(2,8)(3,5),(3,6),(3,7),(3,8)(4,5),(4,6),(4,7),(4,8)}
\(\therefore A \times C\) என்பது B x D ன் உட்கணமாகும்.
19.
கொடுக்கப்பட்ட சார்பு
f = {(1, 2), (2, 2), (3, 2), (4, 3), (5, 4)}
(i) அம்புக்குறி படம்
(ii) அட்டவணை வடிவம்
| x | 1 | 2 | 3 | 4 | 5 |
|---|---|---|---|---|---|
| f(x) | 2 | 2 | 2 | 3 | 4 |
(iii) வரைபடம்
20.
துகள் கடந்த தூரமானது S(t)=\(\frac { { t }^{ 2 }+t }{ 2 } \) எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
(i) t = 3.5 மணி. அப்படியானால் S(3.5)=\(\frac { (3.5)^{ 2 }+3.5 }{ 2 } =\frac { 15.75 }{ 2 } \)=7.875
மூன்றரை மணி நேரத்தில் கடந்த தூரம் 7.875 கி.மீ ஆகும்.
(ii) t = 8.25 மணி (0.25 மணி = 15 நிமிடங்கள்).
அப்படியானால், S(8.25)=\(\frac { (8.25)^{ 2 }+8.25 }{ 2 } =\frac { 76.3125 }{ 2 } \)=38.15625
8.25 மணி நேரத்தில் தோராயமாகக் கடந்த தூரம் 38.16 கி.மீ ஆகும்.
21.
(i) h ஆனது ஒன்றுக்கு ஒன்றானதா எனச் சோதிக்க h(b1) = h(b2) எனக் கருதுக.
எனவே, நமக்குக் கிடைப்பது 2.47b1 + 54.10 = 2.47b2 + 54.10
2.47b1 = 2.47b2 ⇒ b1 = b2
எனவே, h(b1) = h(b2) எனில், b1 = b2 ஆகையால், இந்தச் சார்பு ஒன்றுக்கு ஒன்றான சார்பாகும்.
(ii) தொடை எலும்பின் நீளம் b = 50 செ.மீ எனில், அந்த நபரின் உயரமானது
h(50) = (2.47 x 50) + 54.10 =177.6 செ.மீ ஆகும்.
(iii) நபரின் உயரம் 147.96 செ.மீ எனில் h(b) = 147.96 தொடை எலும்பின் நீளமானது 2.47b + 54.10 = 147.96
b = \(\frac { 93.86 }{ 2.47 } \) = 38
ஆகையால், தொடை எலும்பின் நீளமானது 38 செ.மீ ஆகும்.
22.
ஒரு கிடைமட்டக்கோடு, வரைபடம் 1.35(i) மற்றும் படம் 1.35(iii) ஆகியவற்றை அதிகபட்சமாக ஒரே ஒரு புள்ளியில் (P) வெட்டுவதால் இவை ஒன்றுக்கு ஒன்றான சார்பினைக் குறிக்கும்.
வரைபடம் (1.35(ii))-ல் வரையப்பட்ட ஒரு கிடைமட்டக்கோடு P மற்றும் Q ஆகிய இரு புள்ளிகளில் வெட்டுவதால், கொடுக்கப்பட்ட வளைவரை ஒன்றுக்கு ஒன்றான சார்பைக் குறிக்காது.
23.
A = {1,2,3,4, ..., 45}
கொடுக்கப்பட்ட உறவானது “வர்க்கம்” மற்றும் A ல் A \(\rightarrow\) A
\(\mathrm{A} \times \mathrm{A}=\{(1,1),(1,2),(1,3),(1,4) \ldots(45,45)\}\)
1 ன் வர்க்கம் 1 \(\in\) A மற்றும் \((1,1) \in A \times A\)
2 ன் வர்க்கம் 4 \(\in\) A மற்றும் \((4,2) \in A \times A\)
3 ன் வர்க்கம் 9 \(\in\) A மற்றும் \((9,3) \in A \times A\)
4 ன் வர்க்கம் 16 \(\in\) A மற்றும் \((16,4) \in A \times A\)
5 ன் வர்க்கம் 25 \(\in\) A மற்றும் \((25,5) \in A \times A\)
6 ன் வர்க்கம் 36 \(\in\) A மற்றும் \((36,6) \in A \times A\)
7 ன் வர்க்கம் 49 \(\notin\) A.
\(\mathrm{R}=\{(1,1),(4,2),(9,3),(16,4),(25,5),(36,6)\}\)
R ன் மதிப்பகம் = {1,4,9,16,25,36}
R ன் வீச்சகம் = {1,2,3,4,5,6}
24.
(i) R யின் கணகட்டமைப்பு முறை {(x,y) | y = x-2, x ∈ P, y ∈ Q}
(ii) R யின் பட்டியல் முறை = {(5,3),(6,4),(7,5)}
(iii) R யின் மதிப்பகம் = {5,6,7}; R யின் வீச்சகம் = {3,4,5}
25.
\( \mathrm{A}=\{1,2,3\}, \mathrm{B}=\{2,3,5\}, \mathrm{C}=\{3,4\}, \mathrm{D}=\{1,3,5\}\)
\(A \cap C=\{3\} \)
\(B \cap D=\{3,5\}\)
\((A \cap C) \times(B \cap D)=\{3\} \times\{3,5\}\)
= {(3, 3), (3, 5)} ...(1)
\(\mathrm{A} \times \mathrm{B}=\{(1,2),(1,3),(1,5),(2,2)\), (2, 3), (2, 5), (3, 2), (3, 3), (3, 5)}
\(\mathrm{C} \times \mathrm{D}=\{(3,1),(3,3),(3,5),(4,1)(4,3),(4,5)\} \)
\((A \times B) \cap(C \times D)=\{(3,3),(3,5)\}\) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\((A \cap C) \times(B \cap D)=(A \times B) \cap(C \times D)\) என்பது தெளிவாகிறது.
இது உண்மை என நிறுவப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards