10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
“பன்மயம் இராட்சதத் தன்மையை பண்பாகக் கொண்டது” இக்கூற்றை சரியான காரணத்துடன் விவரி.
2.
கவிதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். ‘அவரின் குடும்ப மரபினால் அவர் பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றெடுக்க முடியும்’ என அவர் குடும்ப உறுப்பினர்கள் கூறினர். அவரின் குடும்ப உறுப்பினர்களின் கூற்று உண்மையா? உங்கள் விடையை நியாயப்படுத்துக.
3.
புதை உயிர்ப் படிவங்களின் காலத்தை எவ்வாறு அறிந்து கொள்ள இயலும்?
4.
கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
அ) வீட்டுக் கழிவுகளான காய்கறி கழிவுகள்.
ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம் எனில் எவ்வாறு பாதுகாக்கும்?
5.
மனிதர்களின் HIV பற்றிய புரிதல் மற்றும் நடவடிக்கை, அவர்களின் தெரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து எவ்வாறு மாறுபடுகிறது?
6.
உலர்ந்த தாவரப்பொருளை நீரில் வைக்கும் போது உப்பிவிடும். இதற்கான நிகழ்ச்சி என்ன? வரையறை செய்க.
7.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
8.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
9.
"Hello" என்ற சொல்லை ஒலியுடன் பதிவு செய்யும் நிரலை எழுதுக.
10.
நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன ?
1.
பன்மயம்:
1. இரண்டுக்கு மேற்பட்ட தொகுதி குரோமோசோம்களைக் கொண்ட உயிரினம், பல தொகுதியாக்கும் இயல்பு எனப்படும்.
2. எனவே இறுதியில் கிடைக்கும் தாவரத்தின் அளவு இராட்சதத் தன்மையை பெற்று இருக்கும்.
எ.டு. தர்பூசணி
2.
i) கவிதாவின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றில் உண்மையில்லை. தவறானது.
ii) ஏனெனில் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதும் நாம் தீர்மானிப்பதல்ல.
iii) ஆண்கள் ஒரு X குரோமோசோம்கள் மற்றும் ஒரு Y குரோமோசோம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் இரண்டு X குரோமோசோம்களையே பெற்றிருக்கிறார்கள்.
iv) அண்டமானது x + x என இணைந்தால் xx உயிரி (பெண்) உண்டாகிறது. அண்டமானது x + y என இணைந்தால் ஓங்கு உயிரி (ஆண்) உருவாகிறது.
v) தந்தை உருவாக்கும் விந்தணுவே குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்கிறது. குழந்தையின் பாலினத்தை நிர்ணயிப்பதில் தாய்க்கு எந்த வித பங்கும் இல்லை.
3.
1. படிவங்களின் வயதினை அவற்றில் உள்ள, கார்பன், யுரேனியம், காரீயம் போன்ற கதிரியக்கத் தனிமங்களால் கண்டுபிடிக்கலாம்.
2. உயிரிழந்த தாவரங்களும் விலங்குகளும் கார்பனை உட்கொள்வதில்லை.
3. அதன் பின்பு அவற்றிலுள்ள கார்பன் அழியத் தொடங்குகிறது.
4. உயிரிழந்த தாவரத்தில் அல்லது விலங்கில் உள்ள கார்பன் (C14) அளவைக் கொண்டு அந்த தாவரம் அல்லது விலங்கு எப்போது உயிரிழந்தது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
4.
அ) வீட்டு கழிவுகளான காய்கறி கழிவுகளை வீடுகளிலே குழி அமைத்து மட்க செய்து உரமாக மாற்றலாம்.
ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு உருளைகளை அகற்றுவதற்கு மறுசுழற்சி முறையை பின்பற்றலாம். ஆம் இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்.
5.
1. இரத்த வங்கியிலிருந்து இரத்தம் பெற்று ஏற்றுவதற்கு முன்னர் அக்குறிப்பிட்ட வகை இரத்தமானது HIV சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
2. மருத்துவமனைகளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசிகளை மீண்டும் பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
3. பாதுகாப்பான பாலுறவு.
6.
1. உலர்ந்த தாவரப் பொருளை நீரில் வைக்கும்போது, நீரினை உறிஞ்சி அது உப்புகின்ற நிகழ்ச்சி உள்ளீர்த்தல் எனப்படும்.
2. எடுத்துக்காட்டாக உலர் விதைகள் மற்றும் உலர் திராட்சை நீரை உறிஞ்சி உப்பிவிடும்.
3. ஆனால் நீரில் கரையாது.
7.
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
8.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
9.

1. Script tab-ல் Events option ஐ தேர்வு செய்க.


3. Script tab-ல் looks option ஐ தேர்வு செய்க. Say " " என்ற block ஐ Script area விற்குள் இழுத்து வைக்கவும்

4. Say tab-னுள் “Hello” என்ற வார்த்தையை தட்டச்சு செய்யவும்.

5. Script tab -> Sounds option ஐ தேர்வு செய்க. “Play sound” block ஐ இழுத்து Script Area வினுள் விடவும். Audio file லிருந்து “Hello” sound ஐ தேர்வு செய்யவும்.

6. File menu -> Save தேர்வு செய்க. இப்போது உங்கள் Project சேமிக்கப்படும்.
7. நிரலை இயக்க வலது மேல் ஓரத்தில் உள்ள பச்சை நிறக் கொடியை click செய்யவும்.


10.
படிப்பின்மை, பயம், மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் குறைபாடுகளை தெரிந்து கொள்ளாமை போன்ற காரணங்களினால் அனைத்து மக்களாலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards