10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science ECO - Industrial Clusters in Tamilnadu - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Government and Taxes - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Food Security and Nutrition - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Globalization and Trade - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Gross Domestic Product and its Growth : an Introduction - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - India's International Relations - New Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.
2.
ஒரு ஒலி மூலமானது 50 மீவி-1 திசைவேகத்தில் ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி நகருகிறது. கேட்குநரால் உணரப்படும் ஒலி மூலத்தின் அதிர்வெண்ணானது 1000 Hz ஆகும். அந்த ஒலி மூலமானது ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை விட்டு விலகிச் செல்லும் போது உணரப்படும் தோற்ற அதிர்வெண் என்ன?(ஒலியின் திசைவேகம் 330 மீவி-1)
3.
கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ளப் பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை அவர் காண விரும்பினால் பயன்படுத்தப்படவேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன?
4.
மோல்களின் எண்ணிக்கையிலிருந்து நிறையைக் கணக்கிடுதல்.
1. 0.3 மோல் அலுமினியம் (Al ன் அணுநிறை = 27)
2. S.T.P இல் 2.24 லிட்டர் SO2
3. 1.51 x 1023 மூலக்கூறு நீர்
4. 5 x 1023 மூலக்கூறு குளுக்கோஸ்
5.
1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.
6.
1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பைக் கணக்கிடுக.
7.
மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc-ஐ கணக்கிடுக.
8.
500 கி. கரைசலில் 10% (w/w); யூரியா நீர்க் கரைசலைப் பெறத் தேவையான யூரியாவின் நிறையை கணக்கிடுக.
9.
புவியின் மேற்பரப்பின் மையத்தில் இருந்து எந்த உயரத்தில் புவியின் ஈர்ப்பு முடுக்கமானது, புவிமேற்பரப்பு ஈர்ப்பு முடுக்கத்தின் 1/4 மடங்காக அமையும்?
1.
HCl என்பது வலிமை மிகுந்த அமிலம் என்பதால் முழுவதும் அயனியாக மாறும் கீழ்கண்டவாறு.
HCI(aq)➝H+(aq)+CI-(aq)
மேற்கண்ட செயலில் ஒரு மோல் HCl ஒரு மோல் H+ அயனிகளை தரும். ஆகையால், H+ அயனியின் செறிவானது ஹைட்ரோ குளோரிக் (HCl) அமில செறிவுக்கு சமம். (0.001 M அல்லது 1.0 x 10-3 மோல் லி-1.)
pH = -log10[H+] = -log1010-3
= -(-3 x log1010)
= -(-3 x 1) = 3
pH = 3
2.
\(n'=\left( \frac { V }{ V-{ V }_{ s } } \right) n\)
\(100=\left( \frac { 330 }{ 330-50 } \right) n\)
\(n=\left( \frac { 1000\times 280 }{ 330 } \right) \)
n= 848.48 Hz
ஒலி மூலத்தின் உண்மையான அதிர்வெண் 848.48 Hz ஆகும். ஒலி மூலமானது கேட்குநரை விட்டு விலகிச் செல்லும்போது உள்ள தோற்ற அதிர்வெண்ணிற்கானச் சமன்பாடு
\(n'=\left( \frac { V }{ V+{ V }_{ s } } \right) n\)
\(=\left( \frac { 330 }{ 330+50 } \right) \times 848.48\)
n = 736.84Hz.
3.
தரப்பட்டவை: x = 4 மீ மற்றும் y = 20 மீ.
பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் குவியத்தொலைவு
\(f=\frac { xy }{ x-y } \)
\(f=\frac { 4\times 20 }{ 4-20 } =\frac { 80 }{ -16 } =-5\) மீ
பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் திறன் \(=\frac { 1 }{ f } =-\frac { 1 }{ 5 } =-0.2D\)
4.
1. 0.3 மோல் அலுமினியம் (Al ன் அணுநிறை = 27)

நிறை = மோல்களின் எண்ணிக்கை x அணுநிறை
நிறை = 0.3 x 27 = 8.1 கி
2. S.T.P இல் 2.24 லிட்டர் SO2
மூலக்கூறு நிறை = 32 + (16 x 2) = 32 + 32 = 64 கி

நிறை = மோல்களின் எண்ணிக்கை x மூலக்கூறு நிறை
நிறை = 0.1 x 64 = 6.4 கி
3. 1.51 x 1023மூலக்கூறு நீர்
நீரின் மூலக்கூறு நிறை = 18 கி

= \(\frac { 1.51\times { 10 }^{ 23 } }{ 6.023\times { 10 }^{ 23 } } =\frac { 1 }{ 4 } \) = 0.25 மோல்
நிறை = மோல் x மூலக்கூறு நிறை
நிறை = 0.25 x 18 = 4.5 கி
4. 5 x 1023 மூலக்கூறு குளுக்கோஸ்
குளுக்கோஸின் மூலக்கூறு நிறை = 180 கி

நிறை = \(\frac { \left( 180\times 5\times { 10 }^{ 23 } \right) }{ 6.023\times { 10 }^{ 23 } } \) = 149.43 கி
5.
R1 = 1 Ω, R2 = 2 Ω, R3 = 4 Ω Current I1 = 1 A
1 Ω மின் தடைக்கு எதிராக இருக்கும் மின்னழுத்த வேறுபாடு = I1 R1 = 1 × 1 = 1 V
இங்கு மின்தடைகள் இணையாக இருப்பதால் மூன்று மின்தடைக்கு எதிராகவும் சமமான மின்னழுத்த வேறுபாடே இருக்கும்.
எனவே 2 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம்
\(\frac { V }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ 2 } =0.5A\)
இதுபோல 4 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம் \(\frac { V }{ { R }_{ 3 } } =\frac { 1 }{ 4 } =0.25A\)
6.
நீரில் HNO3 பிரியும் முறை :
HNO3(aq)➝H+(aq)+NO-3(aq)
கரைசலில் ஒரு மோல் நைட்ரிக் அமிலம், ஒரு H+ அயனியை தருகிறது. எனவே 1.0 x 10-4 மோலார் நைட்ரிக் அமிலம் 1.0 x 10-4 மோல் H+ அயனியை தருகிறது.
[H+] = 1.0 x 10-4 மோல் லிட்டர்-1
pH = -log10[H+]
= -log10[1.0 x 10-4]
= - (-4) log10 10 = 4 \(\times\) 1
pH = 4
1.0 x 10-4 மோலார் செறிவுள்ள HNO3 கரைசலின் pH மதிப்பு 4.
7.
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4 P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ.மீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின் படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
\({ v }_{ 2 }=\frac { { P }_{ 1 } }{ { P }_{ 2 } } \times { v }_{ 1 }\)
\(=\frac { P }{ 4P } \times { 20 }\) செ.மீ3
V2 = 5 செ.மீ3
8.
யூரியாவின் நிறை = \(\frac {10\times 500}{100 }\)
தேவையான யூரியாவின் நிறை = 50 கி
9.
புவிமேற்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g
புவிமையத்தில் இருந்து கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் Rʹ = R + h
அவ் உயரத்தில் புவி ஈர்ப்பு முடுக்கம் g' = g/4
R’ உயரத்தில் ஈர்ப்பு முடுக்கம் = g’ = GMm/ (R’)2
புவிப்பரப்பில் ஈர்ப்பு முடுக்கம் = g = GMm/ (R)2
\(\frac { g }{ g' } =\left( \frac { R' }{ R } \right) ^{ 2 }={ \left( \frac { R+h }{ R } \right) }^{ 2 }={ \left( 1+\frac { h }{ R } \right) }^{ 2 }\)
\(4=\left( 1+\frac { h }{ R } \right) ^{ 2 },\)
\(2=1+\frac { h }{ R } \)
h = R.
கணக்கீடு செய்ய வேண்டிய உயரம் R' = R + h
h = R ஆதலால்
Rʹ = 2R
புவியின் மையத்தில் இருந்து, புவி ஆரத்தை போல் இருமடங்கு தொலைவில், ஈர்ப்பு முடுக்க மதிப்பு புவிப்பரப்பின் முடுக்கத்தைப்போல் 1/4 மடங்காக அமையும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science CIV - India's Foreign Policy - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - State Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Central Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Indian Constitution - New Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards