10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Science Subject. It willhelps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
சூசனின் தகப்பனார், மிகவும் சோர்வடைந்து அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார். மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், அவரது இரத்த சர்க்கரை அளவைப் பராமாரிக்க தினமும் ஊசி மூலம் மருந்து செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டார். அவருக்கு இந்நிலை ஏற்படக் காரணமென்ன? இதனை தடுக்கும் வழி முறைகளைக் கூறுக.
2.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
3.
செந்திலுக்கு, அதிக இரத்த அழுத்தம், பிதுங்கிய கண்கள் மற்றும் அதிகமான உடல் வெப்ப நிலை உள்ளது. இந்நிலைக்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பியை அடையாளம் கண்டு அதில் சுரக்கும் எந்த ஹார்மோன், இந்நிலைக்குக் காரணம் எனக் கண்டறிந்து எழுதுக.
4.
ஜப்பானில் நெற்பயிரானது ஜிப்ரல்லா பியூஜிகுராய் என்னும் பூஞ்சையால் ஏற்பட்ட பக்கானே நோயினால் பாதிக்கப்பட்டது. அதற்குக் காரணம் இப்பூஞ்சை உற்பத்தி செய்த ஹார்மோன் என முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
அ. இந்த செயல்முறையில் சம்பந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.
ஆ. இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது?
இ. இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக.
5.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
1.
1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (பாலியூரியா) என்னும் அறிகுறி இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு மிகவும் அதிகரிக்கும் போது ஏற்படும்.
2. டயாபடீஸ் மெலிடஸ் என்னும் நோய் உள்ளவர்களிடம் காணப்படும்.
3. சீரான உடற்பயிற்சி, சிறந்த உணவுக்கட்டுப்பாடு முதலியவற்றின் மூலம் டயாபடீஸ் மெலிடஸ் நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கலாம்.
2.
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
3.
இதற்குக் காரணமான நாளமில்லாச் சுரப்பி தைராய்டு சுரப்பி ஆகும். காரணமான ஹார்மோன் தைராய்டு ஹார்மோன் ஆகும். செந்திலின் நிலைக்கு காரணம் கிரேவின் நோய் ஆகும். ஹைபர் தைராய்டிசம் நிலையில் தைராய்டு ஹார்மோன்களின் அதிகரித்த சுரப்பின் காரணமாக கிரேவின் நோய் உண்டாகிறது.
4.
அ) இந்த செயல்முறையில் சம்பந்தப்பட்ட ஹார்மோனை அடையாளம் காண்க.
ஜிப்ரல்லின்கள்
ஆ) இந்த ஹார்மோனின் எப்பண்பு இந்த நோயை விளைவித்தது?
இந்த நோயை விளைவிக்கக் காரணமான செயல்திறன் வாய்ந்த பொருள் ஜிப்ரல்லிக் அமிலம் என அடையாளம் காணப்பட்டது.
இ) இந்த ஹார்மோனின் இரண்டு பணிகளைக் கூறுக
1. தாவரங்கள் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, அது கணுவிடைப்பகுதியின் அசாதாரண நீட்சியைத் தூண்டுகிறது. எ.கா மக்காச்சோளம் மற்றும் பட்டாணி
2. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றது. இதற்கு போல்டிங் என்று பெயர் ஆகும்.
5.
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது;
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards