10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.
2.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
3.
தீவிர வேளாண்மை மற்றும் கலப்பு வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.
4.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
5.
6.
இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.
7.
அரேபியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையே மூண்ட 1967 மற்றும் 1973ஆம் ஆண்டு போர்களைப் பற்றி ஒரு கட்டுரை வரைக.
8.
9.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
10.
லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.
1.
மக்கள்தொகை பரவல்:
1. 'மக்கள் தொகைப் பரவல்' என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. இப்பரவல் வளங்களின் பரவலுக்கேற்ப சீரற்று காணப்படுகிறது.
2. நிலப்பரப்பு, காலநிலை, மண், நீர் பரப்புகள், கனிம வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நாட்டின் மக்கள் தொகைப் பரவலைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாகும்.
3. தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான வேளாண் பிரதேசங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது.
4. மலைப்பிரதேசங்கள். வறண்ட நிலப்பகுதிகள், வனப்பகுதிகள், தொலைதூரப்பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும், மக்களற்றும் காணப்படுகிறது.
5. உத்திரப்பிரதேசம் மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகும். சிக்கிம் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். யூனியன் பிரதேசங்களிடையே புதுடெல்லி அதிக மக்கள் தொகையுடன் காணப்படுகிறது.
மக்களடர்த்தி
1. மக்களடர்த்தி என்பது சராசரியாக ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.
2. உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் மிகக்குறைந்த மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சல பிரதேசமும் உள்ளன.
3. யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் உள்ளன.
2.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகள்:
1. ஹுக்ளி ஆற்றுப் பகுதியில் சணல் பயிரிட உகந்த காலநிலை, மண்வளம் மற்றும் நீர்ப்பாசன வசதி போதுமான அளவு உள்ளது.
2. சணல், குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு இழைப்பயிர். இம்மூலப்பொருள் ஹுக்ளி ஆற்றுப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
3. ஆலைக்குத் தேவையான மலிவான தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து கிடைக்கின்றனர்.
4. சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஹுக்ளி ஆற்றுப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன.
5. கொல்கத்தா துறைமுகம் அருகில் அமைந்துள்ளதால் குறைந்த செலவில் பொருட்களை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக உள்ளது.
6. வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் போன்ற வசதிகளையும் இப்பகுதி பெற்றுள்ளது.
7. தொழிற்சாலைக்குத் தேவையான நீர் ஹுக்ளி நதியிலிருந்து கிடைக்கிறது.
3.
தீவிர வேளாண்மை
1. தீவிர வேளாண்மை எனப்படுவது இயந்திரங்கள் மற்றும் பல்வேறு நவீன யுக்திகள் மூலம் உற்பத்தியை அதிகப்படுத்துவதாகும்.
2. சிறிய நிலத்தில் பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் இரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தி அதிகபட்ச விளைச்சலை பெறுவது இதன் நோக்கமாகும்.
3. இந்த இயந்திரமயமாக்கல் மற்றும் தீவிரப்படுத்துதல் மூலம் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையை குறிப்பாக பசுக்கள், பன்றிகள், கோழிகள் போன்ற விலங்குகளை பெரிய பண்ணைகள் மூலம் வளர்க்க வழிவகை செய்கிறது.
4. இந்தியாவில் பஞ்சாப், இராஜஸ்தானின் சில பகுதிகள், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசப் பகுதிகளில் இத்தீவிர வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.
கலப்பு வேளாண்மை :
கலப்பு வேளாண்மை என்பது பயிரிடுதலுடன் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாகும். விவசாயிகளின் பல தேவைகளை இது பூர்த்தி செய்கிறது.
4.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
5.
6.
ராமகிருஷ்ண பரமஹம்சர்:
1. இராமகிருஷ்ண பரமஹம்சர் பஜனைப் பாடல்களை மனமுருகிப் பாடுவதைப் போன்ற வழிமுறைகள் மூலம் பேரின்ப நிலையை அடைந்து அந்நிலையில் ஆன்மரீதியாக கடவுளோடு ஒன்றிணைவதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
2. அவர் கடவுளின் திருவிளையாடல்கள் முடிவற்றவை என அறிவித்தார்.
3. அவருடைய கருத்தின்படி அனைத்து மதங்களும் உலகளாவிய, எல்லோருக்குமான மூலக்கூறுகளைக் கொண்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் அவை வீடுபேற்றிற்கு இட்டுச் செல்லும்.
4. சேவையே தேவை மனிதர்களுக்குச் செய்யப்படும் சேவையே கடவுளுக்குச் செய்யப்படும் சேவையாகும் என்றார்.
5. இராமகிருஷ்ணருடைய முதன்மையான சாதனை பகுத்தறிவுக் கருத்துக்களின்பால் அதிருப்தியுற்றிருந்த கல்வியறிவு பெற்ற இளைஞர்களைத் தன்பால் ஈர்த்தது ஆகும்.
சுவாமி விவேகானந்தர்:
1. சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ணரின் கருத்துக்களால் கவரப்பட்டார்.
2. அவர் நடைமுறை வேதாந்தமான மனிதகுலத்திற்கு தொண்டுசெய்தல் எனும் கோட்பாட்டினைப் பரிந்துரைத்தார்.
3. பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிர் அளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
4. அவருடைய சிந்தனைகள் மேலைநாடுகளின் சாதனைகளைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்த இந்தியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாய் அமைந்தது.
5. 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்து சமயம் பற்றியும் பக்திமார்க்கத் தத்துவம் குறித்தும் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அவருக்குப் பெரும்புகழ் தந்தது.
6. விவேகானந்தரின் செயலாக்கமிக்க கருத்துகள் மேற்கத்திய கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை ஏற்படுத்தியது.
7. சுவாமி விவேகானந்தர் 'ராமகிருஷ்ணா மிஷன்' எனும் அமைப்பை உருவாக்கினார். இவ்வியக்கம் மக்களுக்குக் கல்வியறிவு வழங்குவது, மருத்துவ உதவி, இயற்கைச் சீற்றங்களின்போது நிவாரணப் பணிகளை மேற்கொள்வது போன்ற சமூகப்பணிகளிலும் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளது.
7.
அரபு - இஸ்ரேல் போர் (1967):
1. பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு உருவானது முதல் சிரியா, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகளில் பதுங்கியிருந்த பாலஸ்தீனிய கொரில்லாப் படைகள் இஸ்ரேலைத் தாக்கி வந்தன. இஸ்ரேல் பதிலடி கொடுத்து வந்தது.
2. இஸ்ரேல் ஜோர்டானின் அல் - சமூ என்ற கிராமத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்தியது.
3. சிரியாவுடன் நடந்த வான்வெளித் தாக்குதலில் ஆறு சிறிய மிக் ரகப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
4. சிரியாவுக்கு ஆதரவு கொடுக்க விழைந்த நாசர் எகிப்தின் படைகளை சினாய் மலையில் கொண்டு வந்து நிறுத்தினார்.
5. மேலும் அக்கபா வளைகுடாவை வளைத்து அங்கு இஸ்ரேலியக் கப்பல்கள் நுழைய முடியாதபடி நாசர் செய்தார்.
6. ஜோர்டானின் மன்னர் ஹுசைன் எகிப்தோடு இராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஈராக்கும் இக்கூட்டணியில் இணைந்தது.
இஸ்ரேலின் தாக்குதல்:
1. அரபு நாடுகளை நாசர் ஒன்றிணைக்க மேற்கொண்ட முயற்சியைத் தொடர்ந்து, இஸ்ரேல் எதிர்பாராத தாக்குதல் ஒன்றை தொடுத்து எகிப்தின் 90 சதவீத விமானப் படையை தரைமட்டமாக்கியது.
2. மற்றொரு தாக்குதலில் சிரியாவின் விமானப் படையும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது.
3. மூன்றே நாட்களில் இஸ்ரேலியர்கள் காஸா பகுதியையும் சினாய் தீபகற்பத்தின் முழுமையையும் கைப்பற்றி பெரும் வெற்றியைக் குவித்தனர்.
4. ஐ.நா தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்தியது. சிரியா அதற்கு சம்மதிக்கவில்லை. இஸ்ரேல் சிரியாவுக்குச் சொந்தமான கோலன் ஹைட்ஸைத் தாக்கிக் கைப்பற்றியது. இதனால் சிரியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது.
அரபு இஸ்ரேல் போர் (1973);
1. தங்களின் படைகளை ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கோடு எகிப்தின் அதிபர் அன்வர் சாதத்தும், சிரியாவின் அதிபர் ஹபீஸ் அல் - ஆஸாத்தும் ஒரு இரகசிய ஒப்பந்தத்தை 1973 ல் ஏற்படுத்திக் கொண்டனர்.
2. சாதத் சினாய் மலையை விட்டு இஸ்ரேல் விலகினால் தாம் அமைதி உடன்படிக்கைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் இணங்கவில்லை.
3. ஆகவே எகிப்தும் சிரியாவும் யோம்கிப்பூர் சமய விடுமுறையன்று ஒரு எதிர்பாராத திடீர் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தனர்.
4. இத்தாக்குதலில் இஸ்ரேல் கடும் பின்னடைவைச் சந்தித்தபோதும் அதனால் அரபுப்படைகளைப் புறந்தள்ள முடிந்தது.
5. இப்போரினால் அரேபியர்கள் எந்த லாபமும் பெற முடியவில்லை.
6. இப்பிரச்சனையில் நடுவராகச் செயல்படும் போர்வையில் அமெரிக்க ஐக்கிய நாடு தனது ஆதிக்கத்தை அரபு நாடுகள் மீதும் அங்குள்ள எண்ணெய்க் கிணறுகள் மீதும் நிறுவியது.
8.
9.
மாகாணங்களில் இரட்டையாட்சி:
1. இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடானது 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
2. 1919 இல் இந்திய அரசுச் சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
3. அச்சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபைகளுக்கும் மாற்று அதிகாரங்களின் பட்டியலின் கீழ் வரும் சில துறைகளை இந்திய அமைச்சர்களே நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.
4. இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
தொழில்மயமாக்குதலில் குறைபாடுகள்:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. 1929 ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்து பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
3. 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒப்புக்கொண்டன.
4. இந்திய அரசு பின்பற்றிய அந்நியச் செலவாணி மாற்றுக் கொள்கை காலனி அரசுக்கும் மக்களுக்குமிடையே பதற்றமான நிலை ஏற்படுத்தியது. இது ஆங்கில அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கம்:
1. பொருளாதாரப் பெருமந்தத்தினால் வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
2. ஆனால் விவசாயிகள் நிலத்திற்கு கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
3. விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத்தூண்டியது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:
1. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
2. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. இருந்தபோதிலும் காங்கிரஸ் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
10.
1. சோவியத்துகளில் மென்ஷ்விக்குகள் ஆதிக்கம் செலுத்த சிறுபான்மையினரான போல்ஷ்விக்குகள் அச்சமுற்றவர்களாகவும் முடிவெடுக்க இயலாதவர்களாகவும் இருந்தனர். லெனினின் வருகையால் இச்சூழ்நிலை மாறியது.
2. ரஷ்யப் புரட்சி வெடித்தபோது லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார்.
3. அனைத்து அதிகாரங்களும் சோவியத்திற்கே என்ற அவரது முழக்கம் தொழிலாளர்களையும் தலைவர்களையும் கவர்ந்தது.
4. போர்க்காலத்தில் ஏற்பட்டிருந்த பற்றாக்குறைகளால் பெருந்துயரங்களுக்கு உள்ளாகியிருந்த மக்கள் "ரொட்டி, அமைதி, நிலம்" எனும் முழக்கத்தால் கவரப்பட்டனர்.
5. தற்காலிக அரசு இரண்டு முக்கியத் தவறுகளைச் செய்தது.
i) நிலங்களின் மறுவிநியோகம் குறித்த கோரிக்கையின் மீது எடுக்கப்படவேண்டிய முடிவைத் தள்ளிவைத்தது.
ii) போரைத் தொடர்வதென எடுக்கப்பட்ட முடிவு.
6. ஏமாற்றமடைந்த விவசாய ராணுவ வீரர்கள் தங்கள் பொறுப்புகளைக் கைவிட்டு நில அபகரிப்பில் ஈடுபடலாயினர். இது பெட்ரோகிரேடில் போல்ஷ்விக்குகளின் தலைமையில் நடைபெற்ற எழுச்சியை மேலும் தீவிரப்படுத்தியது.
7. அரசு "பிராவ்தா" -வை தடைசெய்து போல்ஷ்விக்குகளை கைது செய்தது.
8. டிராட்ஸ்கியும் கைது செய்யப்பட்டார்.
9. அக்டோபர் திங்களில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழுவை உடனடிப் புரட்சி குறித்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டார்.
10. டிராட்ஸ்கி ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்தார். நவம்பர் 7ஆம் நாள் முக்கியமான அரசுக்கட்டிடங்கள்.
11. குளிர்கால அரண்மனை, பிரதம மந்திரியின் தலைமை அலுவலகங்கள் ஆகியவை உட்பட அனைத்தும் ஆயுதம் ஏந்திய ஆலைத் தொழிலாளர்களாலும் புரட்சிப்படையினராலும் கைப்பற்றப்பட்டன.
12. 1917 நவம்பர் 8ஆம் நாள் ரஷ்யாவில் புதிய கம்யூனிஸ்ட் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. போல்ஷ்விக் கட்சிக்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி எனப் புதுப்பெயரிடப்பட்டது.
13. போரிலிருந்து விலகாமல் இருந்ததே தற்காலிக அரசின் வீழ்ச்சிக்குக் காரணம் என லெனின் நினைத்தார், எனவே உடனடியாக விலகினார்.
14. புதிய அரசை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
15. 1918 இல் பிரெஸ்ட் - லிடோவஸ்க் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards