10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தமிழ் நாட்டின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை சுருக்கமாக விளக்குக.
2.
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.
3.
பொது விநியோக முறையை விவரிக்கவும்.
4.
குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.
5.
பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.
1.
1) மனித ஆரோக்கியத்திலும், நல்வாழ்விலும் ஊட்டச்சத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.
2) தேசிய அளவில் அதிக பொருளாதார வளர்ச்சி இருந்தபோதிலும், மக்கள் தொகையின் ஊட்டச்சத்து அளவுகள் போன்ற மனித வளர்ச்சி குறிகாட்டிகளில் மேம்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு மெதுவாகவே உள்ளன.
3) ஏராளமான இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள். கணிசமான எண்ணிக்கையிலான இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் எடை குறைவாகவும், இரத்த சோகை மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடுகளாலும் பாதிக்கப்படுகின்றனர்.
4) இந்தப் பிரச்சனைகளை நீக்குவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சுகாதார மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services), மதிய உணவுத் திட்டம், இனப்பெருக்க மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்கள் (Reproductive and Child Health Programmes), மற்றும் தேசிய கிராமப்புற சுகாதாரப் பணி (National Rural Health Mission) போன்ற திட்டங்களில் கணிசமான வளங்களை கொண்டு வருகின்றன.
5) ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இளம் பருவப் பெண்கள் ஆகியோரின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வருவதில் தமிழகம் ஒரு முன்னோடி பங்கைக் கொண்டுள்ளது.
6) ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான தமிழக அரசின் அடுத்தடுத்த பட்ஜெட் செலவினங்கள் நாட்டிலேயே மிக அதிகமாகும். ICDS திட்டம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் ஆகியவற்றின் செயல்திறன் நாட்டின் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன.
7) 'ஒரு ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத தமிழ்நாடு' ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதற்காக மாநிலத்தின் நீண்டகால பல துறைக் கொள்கைகளை செயல்படுத்துகிறது.
8) தமிழ்நாட்டில், 434 குழந்தைகள் மேம்பாட்டுத் தொகுதிகளில் (385 கிராமப்புற, 47 நகர்ப்புற மற்றும் 2 பழங்குடியினர்) 54,439 குழந்தை மையங்கள் (49,499 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 4,940 சிறு அங்கன்வாடி மையங்கள்) மூலம் ICDS செயல்படுத்தப்படுகிறது.
9) அணுகப்படாத பகுதிகளுக்கு நிலையான விரிவாக்கம், ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் பாதுகாப்பு, குழுக்களின் பாதுகாப்பு, மேம்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் சேவைகளின் விரிவாக்கம் ஆகியவற்றுடன், ICDS இப்போது உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது மற்றும் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கான ஒரு மாதிரியாகும்.
10) சேவைகள் நோக்கம் கொண்ட பயனாளிகளை அடைவதை உறுதி செய்வதற்காக, இந்த திட்டம் உலகமயமாக்கப்பட்டு, சுகாதாரம், கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்றவற்றைக் கையாளும் தொடர்புடைய துறைகளுடன் ஒன்றிணைக்கப்படுகிறது.
2.
வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் :
1. அதிக மக்கள் தொகை
2. அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தல்
3. பொருட்களுக்கான தேவை
4. பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது
5. பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு
6. வறுமை மற்றும் சமத்துவமின்மை
அதிக மக்கள் தொகை:
1. இந்தியாவில் அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் உள்ளது. அதிக மக்கள் தொகை அதிக தேவைக்கு வழிவகுக்கிறது. ஆனால் அளிப்பு தேவைக்கு சமமாக இல்லை.
2. எனவே சாதாரண விலை நிலை, அதிகமாக இருக்கும். இது குறிப்பாக கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை பாதிக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரித்தல்:
1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிலையான வளர்ச்சியும், இந்திய பொருளாதாரத்தில் வளர்ச்சி வாய்ப்புகளும் இருந்த போதிலும், அத்தியாவசிய பொருட்களின் விலையில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
2. விலைகளின் தொடர்ச்சியான உயர்வு வாங்கும் சக்தியை குறைத்து, ஏழை மக்களை மோசமாக பாதிக்கிறது.
பொருட்களுக்கான தேவை:
1. பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்போது, பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. அதனால் வாங்கும் சக்தி பாதிக்கப்படுகிறது.
2. பொருட்களின் விலை நாணய மதிப்பை பாதிக்கிறது:
3. விலை அதிகரிக்கும்போது, வாங்கும் திறன் குறைந்து இறுதியாக நாணயத்தின் மதிப்பு குறைகிறது. மாறாக இது நேர்மாறானது.
பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு:
1. பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பு குறையும் பொழுது, பொருட்களின் விலை அதிகரிக்கிறது.
2. ஆகையால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
வறுமை மற்றும் சமத்துவமின்மை:
இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. 10% இந்தியர்களுக்குச் சொந்தமான வருமானம் மற்றும் சொத்துக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது சமுதாயத்தின் வறுமை நிலையை அதிகரிக்க வழி வகுக்கிறது. பொதுவாக வறுமையாலும் மற்றும் செல்வத்தின் சமமற்ற வழங்குதலாலும் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
3.
உலகளாவிய பொது வழங்கல் முறை:
1. தமிழ்நாடு உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டது. இம்முறையின் கீழ் குடும்ப வழங்கல் கார்டு பெற்றிருப்பவர்கள் அனைவருக்கும் பொது வழங்கல் முறையின் மூலம் உணவுத் தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
2. தமிழ்நாடு அரசு உலகளாவிய பொது வழங்கல் முறையின் மூலம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசியை வழங்குகிறது.
இலக்கு பொது வழங்கல் முறை:
1. இந்தியாவில் தமிழ்நாடு நீங்கலாக மற்ற மாநிலங்களில் "இலக்கு பொது வழங்கல் முறை" செயல்பாட்டில் இருந்தது.
2. இலக்கு பொது வழங்கல் முறையில் பயனாளிகள் சில அளவுகோல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மட்டுமே உரிமைகள் வழங்கப்படுகின்றன. மீதமுள்ளவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை.
மானியம்:
மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பொது வழங்கல் மூலம் வழங்கப்படும் பொருட்களுக்கு மானியம் வழங்குகின்றன. மானியத்தின் நிலை மற்றும் அளவு மாநிலங்களுக்கிடையே வேறுபடுகிறது.
தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம்:
1. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் 2013இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 50% நகர்புற குடும்பங்களையும் மற்றும் 75% கிராமப்புற குடும்பங்களையும் உள்ளடக்கியது ஆகும்.
2. இந்தக் குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுகோலின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமைக் குடும்பங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த நாட்டின் முன்னுரிமை குடும்பங்களுக்கு தற்பொழுது பொது வழங்கல் முறை மூலம் வழங்கப்படும் உணவைப் பெறும் உரிமை உண்டு.
3. மத்திய அரசு அரிசியை கிலோவிற்கு Rs 3 என்ற விகிதத்திலும், கோதுமை கிலோவிற்கு Rs 2 என்ற விகிதத்திலும், தினை கிலோவிற்கு Rs 1 என்ற விகிதத்திலும் NFSA கீழ் வழங்கப்படுகிறது.
4.
1. குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அந்த பயிரின் சாகுபடியில் பல்வேறு செலவுகளை கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட பயிருக்கு நிபுணர் குழுவால் ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
2. குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவித்த பின்னர், இந்த பயிர்கள் பரவலாக வளர்க்கப்படும் இடங்களில் அரசு கொள்முதல் மையங்களைத் திறக்கும். எனினும் அந்த விவசாயிகள் தங்கள் பயிர், விளைபொருட்களுக்கு சிறந்த விலையைப் பெற்றால் திறந்த சந்தையில் விற்றுக் கொள்ளலாம்.
3. மறுபுறம் திறந்தவெளி சந்தையில் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட குறைவாக இருந்தால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்பதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விலையை (MSP) பெறுவார்கள்.
5.
1. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியா ஒரு திட்டமிட்ட வளர்ச்சியின் மாதிரியை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் விவசாயத்தில் கவனம் செலுத்தியது.
2. இந்தியாவில் ஏற்பட்ட தொடர்ச்சியான வறட்சி, உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்க தள்ளப்பட்டது. இருப்பினும், அப்பொழுது இருந்த அந்நிய செலாவணி இருப்பு, திறந்த சந்தை கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கவில்லை.
3. பணக்கார நாடுகளிலிருந்து உணவு தானியங்களை சலுகை விலையில் கோரவேண்டியிருந்தது. 1960களின் முற்பகுதியில் அமெரிக்கா தனது பொது சட்டம் 480 (பி.எல் 480) திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு உதவியது.
4. அதிக மக்கள் தொகையைக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு நாடு புரட்சிக்கான சாத்தியமான தேர்வாளராக கருதப்பட்டது. எனவே அமெரிக்க நிர்வாகம் ஃபோர்டு அறக்கட்டளை போன்ற மனிதநேய அமைப்புகள் உணவு உற்பத்தியை அதிகரிக்க கோதுமை மற்றும் அரிசியின் உயர் ரக விளைச்சல் வகைகளுக்கான திட்டத்தை வகுத்து அறிமுகப்படுத்தியது.
5. இந்த திட்டம் நீர்ப்பாசனம் உறுதி செய்யப்பட்ட இடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. திட்டங்களின் முடிவுகள் உறுதி செய்யப்பட்டதால், அதிக எண்ணிக்கையிலான மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டது.
6. இவ்வாறு, பசுமைப்புரட்சி நாட்டில் தோன்றி உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற வழிவகுத்தது. உயர் ரக விதைகளான (HYV) அரிசி மற்றும் கோதுமை உணவுத் தானியங்கள் பயிரிடப்பட்ட பகுதியில் உற்பத்தியை அதிகரித்தது. மேலும் முக்கிய தானிய பயிர்களின் விளைச்சலும் அதிகரித்தது.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards