10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
2.
'உலக வர்த்தக அமைப்பு' பற்றி எழுதுக.
3.
தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகர்களை பற்றி சுருக்கமாக விளக்குக.
4.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
5.
உலகமயமாக்கல் வரலாற்றை சுருக்கமாக எழுதுக.
1.
உலகமயமாக்கலின் சவால்கள்:
1. உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
2. வளர்ந்துவரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
3. உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில் முறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
4. இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
5. உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
6. மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல் நலக்குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
7. உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
2.
உலக வர்த்தக அமைப்பு (WTO)
1. 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலக வர்த்தக அமைப்பை (WTO) அமைப்பதற்கு காட் (GATT) உறுப்பு நாடுகள் உருகுவே சுற்றின் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
2. இந்த அமைப்பை அமல்படுத்திட 104 உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டது. WTO உடன்படிக்கை ஜனவரி 1, 1995 முதல் நடைமுறைக்கு வந்தது.
3. தற்போது உலக வர்த்தக அமைப்பில் 164 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனிவாவில் அமைந்துள்ளது.
WTO வின் குறிக்கோள்கள்:
1. அயல் நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்.
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்.
7. முழு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல் என்பனவாகும்.
3.
தென்னிந்திய வர்த்தகம்:
1. வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், விரிவுபடுத்தவும் வணிகர்கள் தென்னிந்திய வர்த்தகக் குழுக்களை உருவாக்கினார்கள்.
2. இந்திய கலாச்சாரத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வழிகளாக வர்த்தகக் குழுக்கள் இருந்தன.
3. தென்னிந்தியாவில் வர்த்தகம் சோழர்கள் ஆதிக்கத்திலிருந்து பின்பு அது பல்லவர்கள் ஆதிக்கத்திற்கு மாறியது.
ஆரம்பகால வர்த்தகர்கள்:
1. கலிங்க வர்த்தகர்கள் சிவப்பு வண்ணக்கல் அலங்கார பொருட்களை வர்த்தகத்திற்குக் கொண்டு வந்தனர்.
2. ஆரம்ப நாட்களில் பருத்தி ஆடையை தென்கிழக்கு ஆசியாவிற்கு கொண்டு வந்து வர்த்தகம் செய்தனர்.
ஐரோப்பிய வணிகர்கள்:
வாஸ்கோடா காமாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரீக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது.
போர்ச்சுக்கீசியர்கள்:
1. வாஸ்கோடகாமாவின் தலைமையின் கீழ் போர்ச்சுகீசியர்கள் மே 17, 1498 இல் கள்ளிக்கோட்டைக்கு வாணிபத்திற்காக வந்தனர்.
2. 1502 இல் வாஸ்கோடகாமாவின் இரண்டாவது பயணத்தினால் இந்தியாவில் கள்ளிக்கோட்டை, கொச்சின் மற்றும் கண்ணனூர் ஆகிய இடங்களில் வர்த்தக நிறுவனங்கள் நிறுவுவதற்கு வழிவகுத்தது.
3. ஆரம்பத்தில் இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் தலைநகராக கொச்சின் இருந்தது.
டச்சுக்காரர்கள்:
1. 1596இல் இருந்து டச்சுக்காரர்கள் பல பயணங்கள் மேற்கொண்டு, டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தை 1602 இல் உருவாக்கினர்.
2. அட்மிரல் வான்டெர் ஹகேன் என்பவரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், பெத்தபோலி (நிஜாம்பட்டினம்), தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டன.
3. 1610ம் ஆண்டில் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழவேற்காட்டில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினார். பழவேற்காடு டச்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்தது.
ஆங்கிலேயர்கள்:
1. 1600 ல் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு நிறுவனம் தொடங்குவதற்கு எலிசபெத் ராணியால் பட்டயம் வழங்கப்பட்டது.
2. தென்கிழக்கு கடற்கரையில் 1611ல் மசூலிப்பட்டினத்திலும், 1626ல் பழவேற்காடு அருகிலும், ஆங்கிலேயர்கள் வணிகத் தளங்களை நிறுவினார்.
3. ஆங்கிலேயர்கள் சென்னையில் செயின்ட் ஜார்ஜ் என அழைக்கப்படும் ஒரு வலுவான கோட்டையைக் கட்டினர்.
4. கோரமண்டல கடற்கரையிலுள்ள மசூலிப்பட்டினம் ஆங்கிலேய குடியேற்றத்தின் தலைமையிடமாக மாறியது.
டேனிஷ்காரர்கள்:
1. டேனிஷ்காரர்கள் 1616 இல் இந்தியாவிற்கு வருகை புரிந்து டேனிஸ் கிழக்கு இந்திய நிறுவனம் ஒன்றை உருவாக்கினர்.
2. 1620ம் ஆண்டில் டிராங்குபாரை தரங்கம்பாடி (தமிழ்நாடு) தலைமையிடமாக நிறுவியது.
பிரெஞ்சுக்காரர்கள்:
1. இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்கள் 1666ஆம் ஆண்டில் கோல்கொண்டாவின் சுல்தானிடம் அனுமதி பெற்று, முதல் பிரெஞ்சு தொழிற்சாலையை நிறுவினர்.
2. 1701 ல் பாண்டிச்சேரி பிரெஞ்சின் தலைமையிடமாக மாறியது.
4.
MNC யின் பரிணாம வளர்ச்சி:
1. கிழக்கு இந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவுக்கு வந்தது. அதன் பிறகு அரசியல் ரீதியாக நாடெங்கிலும் பரவலாக ஆதிக்கம் செலுத்தியது.
2. 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருட்களைக் கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
3. 1950களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையிலும் ஈடுபட்டது. தற்போது, இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளன. இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும்.
4. இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.
MNCயின் நன்மைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
2. பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
3. பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.
MNCயின் தீமைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
2. பன்னாட்டு நிறுவனங்களினால் சுற்றுச்சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
3. ஒரு புரவலன் நாட்டின் பொருளாதாரத்தில், பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
5.
உலகமயமாக்கல் வரலாற்றின் மூன்று நிலைகள்.
1. தொன்மையான உலகமயமாக்கல்
2. இடைப்பட்ட உலகமயமாக்கல்
3. நவீன உலகமயமாக்கல்
தொன்மையான உலகமயமாக்கல்:
1. சுமேரிய மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் இடையேயான வர்த்தக உறவுகள் உலகமயமாக்கல் என்ற வடிவத்தை மூன்றாம் நூற்றாண்டுகளிலேயே உருவாக்கியது என்று ஆண்ட்ரே குந்துர் ஃபிராங்க் வாதிட்டார்.
2. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் கலாசாரத்தின் ஆரம்ப வடிவம் தொன்மையான உலகமயமாக்கல் என்று கிரேக்க காலத்தின் போது அழைக்கப்பட்டது.
3. ரோம பேரரசுக்கும், பார்த்தியன் பேரரசுக்கும் மற்றும் ஹன் வம்சத்துக்கும் இடையேயான வர்த்தகத் தொடர்பு உலகமயமாக்கலின் ஆரம்ப வடிவமாகும்.
4. மேலும் இப்பேரரசுகளுக்கிடையிலான வணிக உறவுகளால் "பட்டு சாலையின்" (Silk Route) வளர்ச்சியை ஊக்கப்படுத்தியது.
இடைப்பட்ட உலகமயமாக்கல்:
1. 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் முதலில் போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் கடல் வழி வாணிபம் மேற்கொண்டனர்.
2. உலகமயமாக்கல் 17ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் 1600 ல் தனியார் நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டது. இது முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது.
3. மேலும் டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (1602) உருவாக்கப்பட்டு வாணிபம் நடைபெற்றது
நவீன உலகமயமாக்கல்:
1. 19ம் நூற்றாண்டில் உலகமயமாக்கலின் வருகை நவீன வடிவத்தை நெருங்கியது.
2. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளைக் கொண்டிருந்தன.
3. அவை, இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
4. 20ம் நூற்றாண்டில் வணிக உற்பத்தியில் அதிக பங்கினை பெற்றிருந்ததுடன், சேவைகள் வர்த்தகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்தி வணிகத்தில் எழுச்சியுற்றிருந்தது ஆகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards