10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.
2.
தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?
3.
வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் என்ன?
4.
தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் வரலாறு பற்றி குறிப்பு வரைக.
5.
தொழில்மயமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள் யாவை?
1.
தொழில் முனைவோரின் பங்கு:
1. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
2. தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றத் தாழ்வுகளை நீக்குகிறார்கள்.
3. இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
4. குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தை செயல்பட வைக்கிறார்கள்.
5. தொழில் முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்ப தகுதிவாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலை வாய்ப்பை வழங்குகிறார்கள் மற்றும் தொழில் நுட்பத்தை மாற்றும் சூழலில் பணியாற்றி மேலும் புத்தாக்கத்தின் மூலம் இலாபத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
6. தொழில் முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருட்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர்.
7. இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுகிறது.
2.
பருத்தி நெசவு ஆலைகள் :
1. இந்தியாவின் மிகப்பெரிய நெசவுத்தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது.
2. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன.
விசைத்தறி நெசவு :
ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிக அளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.
பின்னலாடை :
1. திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது.
2. 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய வெற்றியாளராகத் திகழ்கிறது.
3. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலக சந்தையில் உலகின் தெற்கு அரைக்கோளத்தில் ஒரு சக்திவாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது.
4. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.
வீட்டு அலங்காரப் பொருட்கள் :
மேஜைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்காரப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரைவிரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.
பட்டு மற்றும் கைத்தறி :
பட்டு மற்றும் கைத்தறி புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகள் உள்ளன.
3.
வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:
1. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல்.
2. துறைசார்ந்த சிறப்பு கவனம்.
3. நிறுவனங்களுக்கிடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல்.
4. புத்தாக்கத்தினால் எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம்.
5. பல்வேறு திறமையான தொழிலாளர்கள்.
6. சுய உதவிக்குழுக்கள் செயல்படுதல்.
7. பிராந்திய மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.
போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
4.
தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு:
(i) தமிழ்நாட்டின் காலனித்துவ முன்காலத்தில் ஜவுளி, கப்பல் கட்டுமானம், இருப்பு மற்றும் எஃகு தயாரித்தல் மற்றும் மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில் துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன.
(ii) இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன.
(iii) மேலும் மாநிலத்தில் தொழில்மயமாதலுக்கான அடிப்படையாக விளங்கியது.
காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதல்:
(i) காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலின் இரண்டு காரணிகளில் பெரும்பங்கு வகித்தது.
(ii) முதலாவதாக மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாகவும் இருந்தது.
(iii) இந்த பருத்தி நெசவுத் தொழிலில் விதை நீக்குதல், அழுத்துதல், நெசவு மற்றும் நூற்பு போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்ட வழிவகை செய்தது.
(iv) இரண்டாவதாக இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற் சாலைகள் உருவாக்க காரணமாகவும் இருந்தது.
(v) தென் தமிழ்நாட்டில் வெல்லம் உற்பத்தி தொழிற்சாலையின் வளர்ச்சி மற்றொரு சிறந்த உதாரணமாகும்.
(vi) தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது.
சுதந்திரத்திற்குப்பின் 1990 களின் முற்பகுதியில்:
(i) தொழில் வளர்ச்சியானது சுதந்திரத்திற்குப் பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன.
(ii) சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் ரயில் பெட்டித் தொழிற்சாலையும், திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள் தறிப்பதற்காக பாரத் கனரக மின்சாதன நிறுவனத்தை (BHEL) மத்திய அரசு நிறுவியது.
(iii) 1950 களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது.
(iv) 1973 ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.
(v) கோயமுத்தூர் பகுதியில், ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான பம்ப் குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியை கண்டது.
தமிழ்நாட்டில் தொழில்மயமாதல் தாராளமயமாதல் கட்டம்:
(i) 1990களின் முற்பகுதியில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டத்தில் நடைபெற்ற தொழில் மயமாதலின் இறுதிக்கட்டம் ஆகும்.
(ii) இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள் வளங்களை திரட்டுவதற்கு பொறுப்பேற்க செய்தன.
(iii) வர்த்தக தாராளமயமாக்களின் நடவடிக்கைகள் காரணமாக ஜவுளி, வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி விரைவாக வளரத் தொடங்கியது.
(iv) முதலீடுகளை ஈர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் (MNCS) தமிழகத்தில் குறிப்பாக வாகனத்துறையில் நுழைவதற்கு வழிவகுத்தன.
(v) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிறப்புப் பொருளாதார மாநிலங்களின் (SEZs) வழிகளை பயன்படுத்தி வெற்றியடைந்ததில் ஒரு மாதிரியாக விளங்கிய தமிழ்நாடு பெரிதும் பாராட்டத்தக்கது.
5.
1. ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம். வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன.
2. உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது.
3. அதேபோல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியை சார்ந்தே உள்ளது.
4. நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தி திறனை அளிக்கின்றன.
5. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்திச் செலவும் குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.
6. அத்தகைய பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே வேலைவாய்ப்பை உருவாக்குவது தொழில்மயமாதலின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
7. தொழில் மயமாதலுக்கு நன்மை தருவது தொழில்நுட்ப மாற்றமே ஆகும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்துகொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது உள்ளீடு அதிகரித்து அவர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
8. அதிக வருமானம் அதிகரிப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழிவகுக்கிறது.
9. எனவே தொழில்மயமாதல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் உதவுகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards