10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/05/2022
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
2.
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?
3.
சுயராஜ்ஜியம் வேண்டியோர் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் இடையே மோதல் ஏன் இருந்தது?
4.
ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார் ?
5.
ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
1.
1. பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ் மற்றும் அவரது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
2. பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று பெயர் மாற்றம் செய்தனர்.
3. லாலா லஜ்பதிராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
4. 1929இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K.தத்தும் வீசினார்கள்.
5. எவரையும் காயப்படுத்தும் நோக்கில் அந்தக் குண்டு எறியப்படவில்லை.
6. ராஜகுருவும், பகத்சிங்கும் கைதுசெய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களை ஈர்த்ததால் அவர் பிரபலமடைந்தார்.
2.
1. சர் ஜான் சைமன் தலைமையிலான இந்தக் குழுவில் ஏழு உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இக்குழுவில் இந்தியர்கள் எவரும் இடம்பெறாமல் அனைவரும் வெள்ளையர்களாகவே இடம் பெற்றனர்.
2. இந்தியர் ஒருவர் கூட உறுப்பினராக இல்லாத காரணத்தால் இந்தியர்கள் ஆத்திரமும் அவமானமும் அடைந்தனர். தங்கள் அரசியல் சாசனத்தை நிர்ணமிக்க தங்களுக்கு உரிமை இல்லாத நிலை கண்டு கொதித்தனர்.
3. காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்லீக் உள்ளிட்ட அனைத்து இந்தியப் பிரிவுகளும் சைமன் குழுவினை புறக்கணிப்பது என முடிவு செய்தது.
3.
(i) காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. அவை மாற்றத்தை விரும்புவோர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பாதவர்கள் என இரண்டு பிரிவுகள் ஆகும்.
(ii) மோதிலால் நேரு. சி.ஆர்.தாஸ் ஆகியோர் தலைமையிலான காங்கிரசார் தேர்தலில் போட்டியிட்டு சட்ட பேரவைக்குள் நுழைய வேண்டும் என்று விரும்பினார்கள்.
(iii) சட்டப் பேரவைகளில் பங்கேற்று பணியாற்றுவதன் மூலம் மட்டுமே தேசநலன்கள் மேம்படும் என்றும், இரட்டை ஆட்சியில் பங்கேற்பதன் மூலம் தான் காலனி ஆதிக்க அரசை பாதிப்படைய வைக்க முடியும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
(iv) அவர்களே மாற்றத்தை விரும்புவோர் என்று அழைக்கப்பட்டனர். வல்லபாய் பட்டேல், சி.ராஜகோபாலாச்சாரி உள்ளிட்ட காந்தியடிகளைத் தீவிரமாகப் பின்பற்றிய பலர் மாற்றத்தை விரும்பாதவர்களாக அரசுடன் ஒத்துழையாமை இயக்கத்தை தொடர விரும்பினார்கள்.
4.
1. ஒத்துழையாமை இயக்கம், ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்க 1920 ஆகஸ்ட் முதல் நாளில் காந்தியடிகளால் தொடங்கப்பட்டது.
2. ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்தபோது உத்திரப்பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் 1922இல் நடைபெற்ற வன்முறை நிகழ்வால் காந்தியடிகள் மனம் வருந்தினார்.
3. ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க. அதனை 1922ஆம் ஆண்டு திரும்பப் பெற்றார்.
5.
1. அமிர்தசரஸில் உள்ள ஜாலியன்வாலாபாக்கில் 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ரௌலட் சட்டத்திற்கு எதிரான ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
2. ஆயிரக்கணக்கான கிராம மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
3. இக்கூட்டம் பற்றி அறிந்தவுடன் அந்த இடத்தை பீரங்கி வண்டி மற்றும் ஆயுதமேந்திய வீரர்களுடன் ஜெனரல் ரெஜினால்டு டயர் சுற்றி வளைத்தார்.
4. உயர்ந்த மதில்களுடன் அமைந்த அந்த மைதானத்துக்கு இருந்த ஒரே வாயில் பகுதியை ஆக்கிரமித்த ஆயுதமேந்திய வீரர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினர்.
5. துப்பாக்கிக் குண்டுகள் தீரும் வரை தொடர்ந்து 10 மணித்துளிகளுக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது. 379 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். ஓராயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
6. இது ஜாலியன் வாலாபாக் படுகொலை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியர்களைக் கொதித்தெழச் செய்தது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards