10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தமிழ் நாட்டிலுள்ள மண் வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக
2.
பாலைவனமாதல் என்றால் என்ன? தமிழ்நாட்டில் பாலைவனமாதலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து விவரி.
3.
தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்
4.
காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.
5.
தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.
1.
மண் வகைகள்:
தமிழ்நாட்டில் காணப்படும் மண்ணை அதன் தன்மைகளைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
அவை
1) வண்டல் மண்,
2) கரிசல் மண்,
3) செம்மண்,
4) சரளை மண்,
5) உவர் மண் என்பவனவாகும்.
வண்டல் மண்:
1. வண்டல் மண் ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகின்றது. வண்டல் மண் ஒரு வளம் மிகுந்த மண்ணாகும்.
2. தமிழ்நாட்டில் ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் கடற்கரையோரப் பகுதிகளில் இம்மண் காணப்படுகிறது.
3. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம், கடலூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இவ்வகை மண் அதிகம் காணப்படுகிறது.
கரிசல் மண்:
1. தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் கரிசல்மண் உருவாகிறது. இது ரீகர் மண் (Regur Soli) என்றும் அழைக்கப்படுகிறது.
2. இம்மண்ணில் பருத்தி நன்கு வளர்வதால் இது பருத்தி மண் என்றும் அழைக்கப்படுகிறது.
3. மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரிசல் மண் பெருமளவில் காணப்படுகிறது.
செம்மண்:
1. தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் செம்மண் பரவியுள்ளது.
2. இம்மண் குறிப்பாக மாநிலத்தின் மத்திய மாவட்டங்களில் காணப்படுகின்றது.
3. இம்மண் சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகின்றது.
சரளை மண்:
1. சரளை மண்ணானது அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்படுவதால் உருவாகிறது. இது ஒரு வளமற்ற மண்ணாகும்.
2. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளிலும், நீலகிரி மலையின் சில பகுதிகளிலும் இம்மண் காணப்படுகின்றது.
உவர் மண் :
1. தமிழ்நாட்டின் சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே இம்மண் காணப்படுகிறது. வேதாரண்யப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் உவர்மண் காணப்படுகிறது.
2. டிசம்பர் 26, 2004இல் ஏற்பட்ட சுனாமி அலைகள் அதிக அளவு மணல் படிவுகளை தமிழக கடற்கரைப் பகுதிகளில் படிய வைத்துள்ளன. இதனால் கடற்கரையில் சிலபகுதிகள் பயிரிட உகந்ததாக இல்லை.
2.
1) பாலைவனமாதல் என்பது, வறண்ட, ஓரளவு வறண்ட அல்லது ஈரப்பதம் குறைவாக உள்ள பகுதிகள், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைவதைக் குறிக்கும்.
2) மனிதச் செயற்பாடுகளே இதற்கு முதன்மையாக காரணமாகக் கூறப்படுகின்றது.
3) தற்காலத்தில் பாலைவனமாதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது.
4) இது வழக்கமாக மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்ப்படுவதைக் காட்டிலும் வேகமானதாகும்.
தமிழ்நாட்டில் பாலைவனமாதல் பாதிக்கப்பட்ட பகுதிகள் :
1) தமிழ்நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று பாலைவனமாதலாகும்.
2) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலா வரைபடத்தின்படி மொத்த நிலப்பரப்பில் சுமார் 12சதவீத நிலப்பகுதி பாலைவனமாதல் மற்றும் நில சீரழிவுடையதாதல் என்ற இருநிலை கண்டறியப்பட்டுள்ளது.
3) தேனி மற்றும் இராஜபாளையம் பகுதிகளில் சுமார் 1200 ஹெக்டர் நிலம் காற்றாடி மணல் படிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
3.
கோடைப்பருவம்:
1. தமிழ்நாட்டின் கோடைக்காலம் மார்ச் முதல் மே வரையாகும். இக்காவத்தில் சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிகழ்வதால் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது.
2. இக்காலத்தில் பூமத்திய ரேகையிலிருந்து வெப்பநிலையானது படிப்படியாக அதிகரிக்கிறது. தமிழகம் கடகரேகைக்கு தென்பகுதியில் அமைந்திருப்பதால் அதிக வெப்பநிலையைப் பெறுகின்றது. பொதுவாக வெப்பநிலையானது 30°Cலிருந்து 40°C வரை வேறுபடுகிறது.
3. இப்பருவத்தில் குறிப்பாக மே மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன்பருவ மழைமூலமும், வெப்பச் சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது.
குளிர்காலம்:
1. தமிழகத்தின் குளிர்காலம் ஜனவரி முதல் பிப்ரவரி வரை ஆகும். இக்காலத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது.
2. இப்பருவத்தில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் சாய்வான சூரியக்கதிர்களைப் பெறுகின்றன. ஆதலால் இம்மாதங்களில் காலநிலை சற்று குளிராகக் காணப்படுகிறது.
3. கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுவதில்லை. தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலையானது 15°C முதல் 25°C வரை மாறுபடுகிறது.
4. மலைவாழிடங்களில் குளிர்கால வெப்பநிலையானது சில நேரங்களில் 5°Cக்கும் குறைவாக உள்ளது.
5. நீலகிரியில் சில பள்ளத்தாக்குகளில் வெப்பம் 0°C ஆகவும் பதிவாகிறது. இக்குறைந்த வெப்பநிலை அடர்மூடுபனி மற்றும் மூடுபனி உருவாகக் காரணமாகிறது. இப்பருவத்தில் வறண்ட வானிலையே நிலவுகிறது.
4.
காவிரியின் உற்பத்தி:
1. காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது.
2. தமிழ்நாட்டில் சுமார் 416 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையாக உள்ளது.
நீர்வீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கம் :
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
துணையாறுகள்:
1. பவானி
2. அமராவதி
3. நொய்யல்
ஸ்ரீரங்கம் தீவு:
1. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொள்ளிடம் (கொளேருன்) என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது. இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது.
2. சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ஸ்ரீரங்கம் தீவை உருவாக்குகின்றன.
காவிரி டெல்டா :
1. கிராண்ட் அணைகட் என்றழைக்கப்படும் கல்லணை காவேரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
2. இந்த ஆறு கல்லணையைக் கடந்தபின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கியுள்ளது.
3. காவிரி டெல்டாப் பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப் பின்னல் அமைப்பு "தென்னிந்தியாவின் தோட்டம்" என்று அழைக்கப்படுகிறது. பின்னர் கடலூருக்கு தெற்கே வங்கக் கடலில் கலக்கிறது.
5.
தமிழகப் பீடபூமிகள்:
தமிழ்நாட்டிலுள்ள பீடபூமி மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. ஏறக்குறைய முக்கோண வடிவத்தில் சுமார் 60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது
பாரமஹால் பீடபூமி:
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பாரமஹால் 'பீடபூமியானது மைசூர் பீடபூமியின் ஒரு பகுதியாகும். இந்த பீடபூமியில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன.
கோயம்புத்தூர் பீடபூமி:
1. கோயம்புத்தூர் பீடபூமி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இப்பீடபூமி சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
2. கோயம்புத்தூர் பீடபூமியின் உயரம் 150 மீட்டர் முதல் 450 மீட்டர் வரை மாறுபடுகிறது. மோயர் ஆறு இப்பீடபூமியை மைசூர் பீடபூமியில் இருந்து பிரிக்கிறது.
3. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் இப்பீடபூமியில் பள்ளத்தாக்குகளை உருவாக்கி உள்ளன.
சிகூர் பீடபூமி:
நீலகிரி பகுதிகளில் பல மலையிடைப் பீடபூமிகள் காணப்படுகின்றன. சிகூர் பீடபூமி அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மதுரை பீடபூமி:
மதுரை பீடபூமி, மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம் வரை நீண்டுள்ளது. வைகை மற்றும் தாமிரபரணி வடிநிலப் பகுதிகள் இப்பீடபூமியில் அமைந்துள்ளன.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards