10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 07/07/2021
QB365 provides detailed and simple solution for every
Book back Questions in class 10 Social Science Subject. It will helps to get more idea about question pattern in every Book back questions with solution.
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
2.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
3.
சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.
4.
ஆளுநரின் பல்வேறு அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
5.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
1.
தனக்கேயுரிய நீதிவரையறை
1. சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
2. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
3. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி விசாரிக்க முடியும்.
மேல்முறையீட்டு நீதி வரையறை
1. உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
2. நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை,
பேராணை அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. அவை
1. ஆட்கொணர்வு நீதிப் பேராணை
2. கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை
3. தடையுறுத்தும் நீதிப் பேராணை
4. தகுதி வினவும் நீதிப் பேராணை
5. ஆவணக் கேட்பு பேராணை
மேற்பார்வை அதிகாரம்
1. இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர்நீதிமன்றம் பெற்றுள்ளது.
2. கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.
3. பொதுச்சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.
4. பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.
5. ஷெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்
உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனால் உயர்நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.
2.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
1. மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
2. சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
3. நிதிக் கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
4. முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
5. மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
6. மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
7. ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
8. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
9. ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
3.
சட்டமன்ற அதிகாரங்கள்:
1. அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை இயற்றலாம். பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
2. ஆனால், அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும் பொழுது, மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
3. மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநிலச் சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேறுகிறது.
நிதி அதிகாரங்கள்:
1. சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
2. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரம் பெற்றுள்ளது.
3. பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகள் விதிக்க முடியாது.
நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:
1. அமைச்சரவையானது சட்ட மன்றத்திற்குப் பொறுப்பானது.
2. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
3. அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
4.
மாநில நிர்வாகத் தலைவராக ஆளுநர் பின்வரும் அதிகாரங்களையும் பணிகளையும் பெற்றுள்ளனர்.
நிர்வாக அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்பு மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்குகிறது. இவற்றை ஆளுநர் நேரடியாகவோ அல்லது அவரின் கீழுள்ள அலுவலர்கள் மூலமோ செயற்படுத்தலாம் ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர். அவரது பெயராலே அனைத்து நிர்வாகமும் செய்யப்படுகின்றன.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் மற்றும் பணிகளாவன :
(i) மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
(ii) முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
(iii) மாநிலத்தின் அரசு வழக்கறிஞரை நியமனம் செய்து அவரது ஊதியத்தையும் நிர்ணயம் செய்கிறார்.
(iv) ஆளுநர் மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
(v) மாநில தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்து அவரது பணிக்காலம் பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
(vi) குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்.
சட்டமன்ற அதிகாரங்கள்:
(i) ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தை கூட்டவும், சட்ட மன்றத்தை கலைக்கவும் உரிமை பெற்றுள்ளனர்.
(ii) சட்டமன்றக் கூட்டத்தின் முதல் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார்.
(iii) நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
(iv) ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
நிதி அதிகாரங்கள் :
(i) ஆண்டு நிதி அறிக்கை (வரவு-செலவு) திட்டத்தை சட்டமன்றத்தில் அறிமுகம் செய்ய காரணமாகிறார்.
(ii) மாநில சட்டமன்றத்தில் மாநில நிதியமைச்சர் மூலம் துணை வரவு செலவு திட்டத்தை தேவைப்பட்டால் சமர்பிக்கிறார்.
(iii) ஆளுநரின் முன் அனுமதியுடன் பண மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
(iv) ஆளுநரின் பரிந்துரையின்றி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது.
(v) அரசின் எதிர்பாரா செலவுகளுக்காக ஆளுநர் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும்.
நீதித் துறை அதிகாரங்கள் :
(i) மாநில அட்டானி - ஜெனரலை நியமனம் செய்கிறார்.
(ii) கீழ் நீதிமன்றங்களின் நீதிபதிகளை நியமனம் செய்கிறார்.
(iii) உயர் நீதி மன்றங்களின் நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வினை செய்கிறார்.
(iv) ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
நிர்ணயிக்கப்பட்ட அதிகாரங்கள் :
(i) குடியரசுத் தலைவரின் ஆலோசனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
(ii) மாநிலத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்கிறார்.
(iii) சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது தோல்வியுறும் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.
(iv) மற்றும் சட்டமன்றத்தில் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்தால், ஆளுநர் அமைச்சரவையை கலைக்க முடியும்.
அவசரகால அதிகாரங்கள்:
(i) மாநில அரசு அரசியலமைப்பு விதிகளுக்கேற்ப செயல்படவில்லை என்று ஆளுநர் உறுதியாக நம்பினால் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 356ன் கீழ் மாநில அரசை கலைக்க குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்யலாம்.
(ii) ஆளுநர் குடியரசுத் தலைவரின் பிரதிநிதியாக மாநிலத்தை நிர்வாகம் செய்கிறார்.
5.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards