10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/08/2019
இயக்க விதிகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
2.
இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 மீ.வி-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
3.
5 கிகி நிறையுள்ள பொருளொன்றின் நேர்கோட்டு உந்தம் 2.5 கிகி மீவி-1 எனில் அதன் திசைவேகத்தை கணக்கிடுக.
4.
ராக்கெட் ஏவுதலில் _______ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
அ மற்றும் இ
5.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
6.
ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 \(\times\) 104 N
98 \(\times\) 104 டைன்
980 டைன்
7.
100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில் ______ அளவாக இருக்கும்.
8.
மகிழுந்தின் சக்கரத்தின் சுழற்சி வேகத்தினை மாற்ற _______ பயன்படுகிறது.
9.
மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் _______ குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் ______ குறியிலும் குறிக்கப்படுகிறது.
10.
புவியினை சுற்றிவரும் விண்வெளி மையத்தில் உள்ள விண்வெளி வீரர், புவிஈர்ப்பு விசை இல்லாததால் எடையிழப்பை உணர்கிறார்.
11.
திருகுமறை (Screw) ஒன்றினை குறைந்த கைப்பிடி உள்ள திருகுக்குறடு (spanner) வைத்து திருகுதல், நீளமான கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதானதாகும்.
12.
விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு மிதக்கிறார்?
13.
கிரிகெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தினை பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
14.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
1.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
2.
நிறை விகிதம் = 3 : 4
m1 : m2 = 3 : 4
முடுக்கம் a2 = 12 மீ.வி-2
F = ma
F1 = m1a1 = 3a1
F2 = m2a2 = 4 x 12 = 48 N
F = F1 = F2
3a1= 48
a1 = \(\frac{48}{3}\) = 16 மீ.வி-2
தேவைப்படும் முடுக்கம் = 16 மீ.வி-2.
3.
தரவுகள்:
நிறை (m) = 5 கிகி
நேர்கோட்டு உந்தம் (p) = 2.5 கிகி மீவி-1
சூத்திரம்:
நேர்கோட்டு உந்தம் (p)=நிறை (m) \(\times\) திசைவேகம் (v)
திசைவேகம் = நேர்கோட்டு உந்தம் / நிறை = 2.5/5
= 0.5 மீ வி-1
4.
(d)
அ மற்றும் இ
5.
(d)
M
6.
(c)
98 \(\times\) 104 டைன்
7.
( )
980 N
8.
( )
பற்சக்கரங்கள்
9.
( )
எதிர், நேர்
10.
தவறு.
சரியான விடை :1) அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால், எடை இழப்பை உணர்கிறார்.
2) விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
11.
தவறு:
சரியான விடை: திருகுமறை ஒன்றினை நீளமான கைப்பிடி உள்ள திருகுக்குறடு வைத்து திருகுதல் குறைந்த கைப்பிடி கொண்ட திருகுக்குறடினை வைத்து திருகுதலை விட எளிதாகும்.
12.
1. விண்கலம் மிக அதிக சுற்றியக்க திசைவேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதால் அவர் அக்கலத்துடன் இணைந்து சம வேகத்தில் நகர்கிறார்.
2. அவரது முடுக்கம் விண்கல முடுக்கத்திற்கு சமமாக இருப்பதால் அவர் தடையின்றி விழும் நிலையில் உள்ளார். அப்போது அவரது தோற்ற எடை மதிப்பு சுழியாகும்.
3. எனவே அவர் அக்கலத்துடன் எடையற்ற நிலையில் காணப்படுகிறார். விண்வெளி வீரர் உண்மையில் மிதப்பதில்லை.
13.
1. கிரிக்கெட் விளையாட்டில், வேகமாக வரும் பந்தினைப் பிடிக்க, விளையாட்டு வீரர் கையினை பின்னோக்கி இழுப்பதால் அவர் மோதல் காலத்தை அதிகரிக்கிறார்.
2. இது அவரது கையில் பந்து ஏற்படுத்தும் கணத்தாக்கு விசையின் அளவை குறைக்கிறது.
14.
திருகுக்குறடு நீளமான கைப்பிடியை கொண்டதாக இருந்தால் சிறிதளவே திருப்புத்திறன் விசையை செலுத்தி பயன்பாட்டை எளிதாக்கலாம்.
விசையின் திருப்புத்திறன் \(\tau\) = F x d
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards