11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
முதன்மைப் பதிவேடுகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
நடவடிக்கை என்றால் என்ன/ அதன் வகைகளை எழுதி விளக்குக.
2.
இரட்டைப்பதிவு முறை என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
3.
ஆள்சார் கணக்கின் மூன்று வகைகளைக் கூறுக.
4.
கணக்கியல் சமன்பாட்டு முறையில் கணக்குகளை பதிவு செய்யும் முறையினை சுருக்கமாக விளக்குக.
5.
ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 80,000 |
| (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது | ரூ 10,000 |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | ரூ 6,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் | ரூ 8,000 |
6.
ஷியாம் எனும் எழுதுபொருள் வியாபாரியின் குறிப்பேட்டில் 2017 ஆகஸ்ட் மாதத்திற்குரிய நடவடிக்கைகளை பதிவு செய்க.
| ஆகஸ்டு | |
| 1 | ரொக்கம் ரூ 4,00,000 மற்றும் சரக்கிருப்பு ரூ 5,00,000 -த்துடன் தொழில் தொடங்கியது |
| 2 | A என்பவருக்கு சரக்கு விற்பனை செய்து நிகழ் நேர மொத்த தீர்வகம் (RTGS) மூலமாக ரொக்கம் பெற்றது ரூ 2,50,000 |
| 3 | Z என்பவருக்கு கடன் விற்பனை செய்தது ரூ 20,000 |
| 5 | Z என்பவர் மீது எழுதிய ரூ 20,000க்கான மாற்றுச் சீட்டினை அவர் ஏற்பு செய்தார். |
| 8 | Z என்பவரிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டு வங்கியில் தள்ளுபடி செய்தது ரூ 19,000 |
| 10 | M என்பவருக்கு கடன் விற்பனை செய்தது ரூ 12,000 |
| 12 | மாதிரி சரக்குகள் இலவசமாக கொடுத்தது ரூ 2000 |
| 16 | அலுவலகத் தேவைக்காக சரக்குகள் எடுத்தது ரூ 5,000 |
| 17 | M என்பவர் நொடிப்பு நிலையடைந்ததால், ஒரு ரூபாய்க்கு 80 காசுகள் வீதம் ரொக்கம் பெற்று, அவர் கணக்குத் தீர்க்கப்பட்டது. |
| 20 | வங்கியில் தள்ளுபடி செய்த Z என்பவரின் மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது. |
7.
பின்வரும் நடவடிக்கைகளைக் கொண்டு கணக்கியல் சமன்பாட்டினை உருவாக்கவும்.
(i) ரொக்கம் ரூ 80,000 மற்றும் சரக்குகள் ரூ 75,000 கொண் டு வியாபாரம் தொடங்கப்பட்டது.
(ii) சண்முகத்திற்கு கடனுக்கு சரக்கு விற்றது ரூ 50,000.
(iii) சண்முகத்திடமிருந்து ரூ 49, 000 பெற்றுக் கொண் டு அவரது கணக்குத் தீர்க்கப்பட்டது.
(iv) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 3,000.
(v) ரூ 1,000 மதிப்புள்ள சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது.
(vi) காப்பீட்டு முனைமம் செலுத்தியது ரூ 3,000.
(vii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 500.
8.
பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
(i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
(ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
(iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
(iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
(v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
(vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400
9.
எடுப்புக் கணக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது
சொத்து கணக்கு
ஆள்சார் கணக்கு
பெயரளவு கணக்கு
பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
10.
ஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.
பற்றுத்தன்மை
வரவுத்தன்மை
ரொக்கத்தன்மை
இவற்றில் ஏதும் இல்லை
11.
உரிமையாளரால், வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தொகை வரவு வைக்கப்படும் கணக்கு
எடுப்புகள் கணக்கு
ரொக்கக் கணக்கு
முதல் கணக்கு
கொள்முதல் கணக்கு
12.
கணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது?
இரட்டைத் தன்மை
நிலைத்தன்மை
நிறுவனத் தொடர்ச்சி
நிகழ்வுத்தன்மை
13.
14.
குறிப்பேடு என்றால் என்ன?
15.
இரட்டைப் பதிவு கணக்கியல் முறையின் பொன்னான விதிகளைத் தருக.
16.
ஆள்சார் கணக்குகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
17.
சொத்து கணக்கு என்றால் என்ன?
18.
கணக்கியல் சமன்பாடு என்றால் என்ன?
19.
ஆதார ஆவணங்கள் என்றால் என்ன?
20.
வருவாய் கணக்கு
21.
பொறுப்பு கணக்கு
22.
முதல்
23.
கணக்கியல் சமன்பாடு
24.
ஆதார ஆவணங்கள்
25.
(அ) சொத்து கணக்கு
(ஆ) பொறுப்பு கணக்கு
(இ) வருவாய் கணக்கு
(ஈ) ஆள்சார் கணக்கு
26.
(அ) குறிப்பேடு
(ஆ) வாராக்கடன்
(இ) பேரேடு
(ஈ) இருப்பாய்வு
27.
கூற்று (A) : பற்றுக்குறிப்பு என்பது தமது வாடிக்கையாளரால் திருப்பி அனுப்பப்படும் சரக்கு குறித்த ஒரு அறிக்கை ஆகும்.
காரணம் (R) : காசோலை என்பது ஒரு மாற்றத்தக்க ஆவணம்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
28.
கூற்று (A) : நிதிசார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள் ஆதார ஆவணங்கள் ஆகும்.
காரணம் (R) : ரொக்கச் சீட்டு இடாப்பு, பற்றுக் குறிப்பு, சம்பளப் பட்டியல், போன்றவைகள் ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(ஆ) (A) மற்றும் (A) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(இ) (A) சரி ஆனால் (R) தவறு
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
1.
நடவடிக்கை என்பது பணம் அல்லது பணமதிப்பை (சரக்கு அல்லது சேவை அல்லது ஆலோசனை) ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரிமாற்றம் செய்யும் நிகழ்வாகும். நடவடிக்கைகளை ரொக்க நடவடிக்கை, வங்கி நடவடிக்கை மற்றும் கடன் நடவடிக்கை என்று வகைப்படுத்தலாம்.
(i) ரொக்க நடவடிக்கை:
ஒரு நடவடிக்கை நிகழும் போது உடனடியாக பணம் செலுத்துதல் அல்லது பெறுதல் நிகழ்ந்தால் அது ரொக்க நடவடிக்கை ஆகும்.
(ii) வங்கி நடவடிக்கை:
ஒரு நடவடிக்கையில் வங்கி சம்பந்தப்பட்டிருந்தால், அது வங்கி நடவடிக்கை ஆகும்.
(iii) கடன் நடவடிக்கை:
ஒரு வணிக நடவடிக்கையில் உடனடியாக பணப்பரிமாற்றம் நடைபெறவில்லையெனில், அதனைக் கடன் நடவடிக்கை என்கிறோம்.
2.
ஒவொரு நடவடிக்கையும் பணம் அல்லது பணமதிப்பு சம்பந்தப்பட்ட இரண்டு தன்மைகளை கொண்டுள்ளன. மதிப்பினை பெறுதல் ஒரு தன்மையாகவும், அதே மதிப்பில் செலுத்துதல் இன்னொரு தன்மையாகவும் இருக்கும். அனைத்து நடவடிக்கைகளிலும் உலா இந்த இரு தன்மைகளும் கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுவதால் இரட்டைப் பதிவு முறை எனப்படும்.
இரட்டைப் பதிவு முறையின் நன்மைகள்:
(i) துல்லியத் தன்மை
இரட்டைத் தன்மை முறையில் வணிகத்தின் அனைத்து நடவடிக்கைகளும், இரு தன்மைகளோடு கணக்கேடுகளில் பதிவு செய்யப்படுகின்றன.இது கணக்கியலின் துல்லியத் தன்மை பரிசோதிக்க உதவுகிறது.
(ii) வணிக முடிவுகளை உறுதிப்படுத்துதல்
வணிகத்தில் ஏற்படும் செலவுகள், இழப்புகள், வருவாய் இலாபங்கள் , சொத்துக்கள், பொறுப்புகள் போன்ற விவரங்களை உடனுக்குடன் பெற முடியும்.இதன் உதவியால் ஒரு குறிப்பிட்ட கணக்காண்டின் நிகர இலாபம் அல்லது நிகர நட்டம் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் நிதி நிலையினை கணக்கிட முடியும்.
(iii) ஒப்பீட்டு ஆய்வு
வணிக நிறுவனங்களின் தற்கால முடிவுகளை முந்திய ஆண்டுகளின் முடிவுகளோடும், மேலும் வேறு பல நிறுவனங்களின் முடிவுகளோடு ஒப்பீட்டு பார்க்க முடியும்.
(iv) பொதுவான ஏற்புத்தி தன்மை:
இம்முறையில் கணக்கினை பதிவு செய்வதை நிதி நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பலரும் ஏற்றுக் கொள்கின்றனர்.ஏனெனில், இது ஒரு முறையான, அறிவியல் பூர்வமான கணக்கு பராமரிப்பு முறையாகும்.
3.
ஆள்சார் கணக்கு:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்குகள் எனப்படும்.இது தனி நபர், சட்டமுறை அமைப்பு, பிரதி நிதிதித்துவ அமைப்பு எனப் பிரிக்கப்படுகிறது.
(a) தனிநபர் கணக்கு:
தனி மனிதர் சார்புடைய கணக்குகளாகும்.எ.கா: ரமேஷ் கணக்கு, ராதா கணக்கு.
(b) சட்டமுறை ஆள்சார் கணக்கு:
ஆட்களின் குழு அல்லது அமைப்பு அல்லது சங்கம் சார்புடைய கணக்குகளாகும்.
எ.கா: வங்கி க/கு HMT Ltd., க/கு காப்பீட்டுக் கழகம். கணக்கு போன்றவை.
(iii) பிரதிநிதித்துவ அமைப்பு
இது இயற்கை அல்லது செயற்கை தன்மையுடைய நபரையோ அல்லது குழுவையோ குறிக்கிறது.
எ.கா.: கொடுப்பட வேண்டிய சம்பளக் கணக்கு, முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு கணக்கு போன்றவை.
4.
அ. முதல் அதிகரிக்கும் போது, சொத்து அதிகரித்தல்:
முருகன் ரூ.50,000/- முதல் போட்டு தொழில் தொடங்கினார்.
விளைவுகள்
ரொக்கம் உள்வருதல் - சொத்தின் மதிப்பு அதிகரிப்பு
முதல் போடப்பட்டது - முதல் அதிகரிப்பு
சொத்துக்கள் = முதல் + பொறுப்புகள்
(ரொக்கம்) 50,000/- = 50,000(முதல்) பொறுப்புகள்
50,000/- = 50,000/-
ஆ. பொறுப்புகள் குறையும் போது, சொத்துக்களும் குறைதல்.
கடனீந்தோர்க்கு திருப்பிச் செலுத்திய தொகை ரூ.10,000/-
ரொக்கம் வெளிச்செல்லுதல் - சொத்தின் மதிப்பு குறைதல்
கடனீந்தோர் பணம் பெறுதல் - பொறுப்பின் மதிப்பு குறைதல்
முதல் பொறுப்புகள் - சொத்துக்கள்
பொறுப்புகள் (-10,000/-) = சொத்துக்கள் (-10,000/-)
-10,000/- = -10,000/-
5.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் | |||
|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கருப்பு ரூ |
அறைகலன் | கடனீந்தோர் ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +80,000 | +80,000 | ||||
| சமன்பாடு | +80,000 | = | +80,000 | |||
| (ii) கடன் கொள்முதல் | +10,000 | +10,000 | ||||
| சமன்பாடு | +80,000 | +10,000 | = | +80,000 | +10,000 | |
| (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது | -6,000 | +6,000 | ||||
| சமன்பாடு | +74,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +10,000 |
| (iv) கடனீந்தோருக்கு அளித்தரொக்கம் | -8,000 | -8,000 | ||||
| சமன்பாடு | +66,000 | +10,000 | +6,000 | = | +80,000 | +2,000 |
6.
| நாள் | விவரம் | பே.ப.எண் | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017 ஆக 1 | ரொக்கக் க/கு | ப | 4,00,000 | ||
| சரக்கிருப்பு க/கு | ப | 5,00,000 | |||
| ஷியாம் முதல் க/கு | 9,00,000 | ||||
| (ரொக்கம் மாற்றும் சரக்கிருப்புடன் தொழில் தொடங்கியது) | |||||
| 2 | வங்கி க/கு | ப | 2,50,000 | ||
| விற்பனை க/கு | 2,50,000 | ||||
| (கடன் விற்பனை செய்து நிக்ழநேர மொத்த தீர்வகம் மூலம் ரொக்கம் பெற்றது) | |||||
| 3 | Z க/கு | ப | 20,000 | ||
| விற்பனை க/கு | 20,000 | ||||
| (கடன் விற்பனை செய்தது) | |||||
| 5 | Z க/கு | ப | 20,000 | ||
| மாற்றுச் சீட்டு க/கு | 20,000 | ||||
| (மாற்றுச் சீட்டினை Z ஏற்பு செய்தார்) | |||||
| 8 | வங்கி க/கு | ப | 19,000 | ||
| தள்ளுபடி க/கு | ப | 1,000 | |||
| மாற்றுச் சீட்டு க/கு | 20,000 | ||||
| (மாற்றுச் சீட்டு வங்கியில் தள்ளுபடி செய்தது) | |||||
| 10 | M க/கு | ப | 12,000 | ||
| விற்பனை க/கு | 12,000 | ||||
| (கடன்விற்பனை செய்தது) | |||||
| 12 | விற்பனை மேம்பாட்டுச் செலவுகள் க/கு | ப | 2,000 | ||
| கொள்முதல் க/கு | 2,000 | ||||
| (சரக்குகள் மாதிரியாக வழங்கப்பட்டது) | |||||
| 16 | ஆலுவலகச் செலவுகள் க/கு | ப | 5,000 | ||
| கொள்முதல் க/கு | 5,000 | ||||
| (அலுவலகத் தேவைக்காக கரக்குகள் எடுத்தது) | |||||
| 17 | வங்கி க/கு(12,000\(\times\) 0.80) | ப | 9,600 | ||
| வராக்கடன் க/கு | ப | 2,400 | |||
| M க/கு | 12,000 | ||||
| (M கணக்கு தீர்க்கப்பட்டது) | |||||
| 20 | Z க/கு | 20,000 | |||
| வங்கி க/கு | 20,000 | ||||
| (மாற்றுச் சீட்டை வங்கி நிராகரித்தது) |
7.
| வ.எண் | நடவடிக்கை | ரொக்கம் ரூ | சரக்கிருப்பு ரூ | முன்கூட்டி செலுத்திய செலவுகள் ரூ | கடனாளர்கள் ரூ | மொத்த சொத்துகள் ரூ | = | மொத்த பொறுப்புகள் ரூ | முதல் ரூ | கடனீந்தோர் ரூ |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| i) | ரொக்க மற்றும் சரக்கு கொண்டு தொழில் தொடங்கியது | +80,000 | +75,000 | +1,55,000 | ||||||
| இருப்புகள் | +80,000 | +75,000 | +1,55,000 | |||||||
| சமன்பாடு | +1,55,000 | = | +1,55,000 | |||||||
| ii) | கடன் விற்பனை | -50,000 | +50,000 | |||||||
| இருப்புகள் | +80,000 | +25,000 | +50,000 | +1,55,000 | ||||||
| சமன்பாடு | +1,55,000 | = | +1,55,000 | |||||||
| iii) | சண்முகத்திடம் இருந்து பெற்ற ரொக்கம் | +49,000 | +49,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +25,000 | +50,000 | +2,04,000 | ||||||
| சமன்பாடு | +2,04,000 | = | +2,04,000 | |||||||
| iv) | கொடுபட வேண்டிய சம்பளம் | -3,000 | +3,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +25,000 | +50,000 | +2,01,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,04,000 | = | +2,04,000 | |||||||
| (v) | சரக்குகள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது இருப்புகள் | -1,000 | -1,000 | |||||||
| இருப்புகள் | +1,29,000 | +24,000 | +50,000 | +2,00,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,03,000 | = | +2,03,000 | |||||||
| vi) | காப்பீட்டு முனைமம் செலுத்தியது | -3,000 | -3,000 | |||||||
| இருப்புகள் | +1,26,000 | +24,000 | +50,000 | +1,97,000 | +3,000 | |||||
| சமன்பாடு | +2,00,000 | = | +2,00,000 | |||||||
| vii) | முன்கூட்டி செலுத்திய காப்பீட்டு முனைமம் | +500 | +500 | |||||||
| இருப்புகள் | +1,26,000 | +24,000 | +500 | +50,000 | +1,97,500 | +3,000 | ||||
| சமன்பாடு | +2,00,500 | = | +2,00,500 |
8.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
பொறுப்புகள் ரூ |
||||
|---|---|---|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
இயந்திரம் ரூ |
கடனாளர்கள் ரூ |
||||
| (i) ரொக்கம் சரக்கிருப்பு மற்றும் இயந்திரத்துடன் தொழில் தொடங்கியது | +20,000 | +12,000 | +8,000 | +40,000 | |||
| சமன்பாடு | +20,000 | +12,000 | +8,000 | +40,000 | |||
| (ii) கடன் கொள்முதல் | +7,000 | +7,000 | |||||
| சமன்பாடு | +20,000 | +19,000 | +8,000 | +40,000 | +7,000 | ||
| (iii) இரமணியின் கணக்கு தீர்க்கப்பட்டது | -6,900 | +100 | -7,000 | ||||
| சமன்பாடு | +13,100 | +19,000 | +8,000 | +40,000 | |||
| (iv) கடன் விற்பனை | -5,400 | +6,000 | +600 | ||||
| சமன்பாடு | +13,100 | +13,600 | +8,000 | +6,000 | +40,700 | ||
| (v) ரொக்கம் பெற்று இராஜன் கணக்கு முடிக்கப்பட்டது | +5,800 | -6,000 | -200 | ||||
| சமன்பாடு | +18,900 | +13,600 | +8,000 | +40,500 | |||
| (vi) கொடுபட வேண்டிய கூலி | -400 | +400 | |||||
| சமன்பாடு | +18,900 | +13,600 | +8,000 | +40,100 | +400 | ||
9.
(b)
ஆள்சார் கணக்கு
10.
(b)
வரவுத்தன்மை
11.
(b)
ரொக்கக் கணக்கு
12.
(a)
இரட்டைத் தன்மை
13.
(d)
14.
நடவடிக்கைகள் நிகழ்ந்த நாள் வரிசையில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உரிய பற்று வைக்க வேண்டிய கணக்கின் பெயர், தொகை மற்றும் விளக்க குறிப்புடன் பதிவு செய்யும் கணக்குப் பதிவேடு குறிப்பேடு எனப்படும்.
15.
| வ.எண் | கணக்கு | பற்றுத் தன்மை | வரவுத் தன்மை |
|---|---|---|---|
| 1. | ஆள்சார் கணக்கு | பெருவருக்கு பற்று | தருபவருக்கு வரவு |
| 2. | சொத்து கணக்கு | உள்வருவனவற்றிற்கு பற்று | வெளிச்செல்பவை வரவு |
| 3. | பெயரளவுக் கணக்கு | செலவுக்கும் நட்டத்திற்கும் பற்று | வருமானத்திற்கும், ஆதாயத்திற்கும் வரவு |
16.
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். இது
1. தனி நபர்
2. சட்டமுறை அமைப்பு
3. பிரதிநிதித்துவ அமைப்பு
என மூன்று வகையாக பிரிக்கப்படும்.
17.
வணிக நிறுவனத்திற்கு சொந்தமான மற்றும் உடைமைகள் சார்ந்த கணக்குகள் சொத்து கணக்குகள் எனப்படுகின்றன.
சொத்துக் கணக்கானது:
(i) புலனாகும் சொத்து கணக்கு:
பார்க்க கூடிய மற்றும் தொட்டுணரக்கூடிய சொத்துக்கள். எ.கா .: நிலம், கட்டிடம்
(ii) புலனாக சொத்து கணக்கு:
பார்க்க முடியாத மற்றும் தொட்டுணர முடியாத சொத்துக்கள்.எ.கா.: நற்பெயர், காப்புரிமை என இருவகைப்படும்.
18.
1. நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், முதல் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்பினை சமன்பாட்டு முறையில் வெளிப்படுத்துவதே கணக்கியல் சமன்பாடு எனப்படும்.
2. இரட்டைப்பதிவு முறையின் கீழ் ஒவ்வொரு நடவடிக்கையும் இரண்டு தன்மைகளை பெற்றிருக்கும். இது சொத்துக்கள், பொறுப்புகள் அல்லது முதல் போன்றவற்றில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் சமன்பாடு முழுமை அடைந்து சமமாகிறது.
19.
1. நிதி சார்ந்த நடவடிக்கைகளின் உண்மையான சான்றுகளை வெளிப்படுத்தும் ஆவணங்கள், ஆதார ஆவணங்கள் ஆகும்.
2. இந்த ஆவணங்கள் நடவடிக்கைகளின் தன்மை, தேதி, தொகை தொடர்புடைய நபர்கள் போன்ற விவரங்களை வெளிப்படுத்தும்.
3. ரொக்கச்சீட்டு, இடாப்பு, பற்றுக்குறிப்பு, வரவுக் குறிப்பு, செலுத்துச் சீட்டு, சம்பளப்பட்டியல், கூலிப்பட்டியல் காசோலைப் பட்டியல் போன்றவை ஆதார ஆவணங்களில் உள்ளடங்கும்.
20.
வாடகை பெற்றது
21.
கடனீந்தோர்
22.
உரிமையாளரின் பங்களிப்பு
23.
கணிதவியல் வெளிப்பாடு
24.
சான்றுச்சீட்டு
25.
(ஈ) ஆள்சார் கணக்கு
காரணம்:
ஆட்கள் சார்புடைய கணக்குகள் ஆள்சார் கணக்கு எனப்படும். ஏனைய மூன்றும் கணக்கியல் சமன்பாட்டின்படி கணக்குகளின் வகைகள் ஆகும்.
26.
(ஆ) வாராக்கடன்
காரணம்:
கடனாளிகளிடமிருந்து திரும்பப் பெற இயலாத கடன் வாராக்கடன் எனப்படும். ஏனைய மூன்றும் நிறுவனத்தின் இலாப அல்லது நட்டத்தை அறிய உதவும் எடுகளாகும்.
27.
(ஈ) (A) தவறு ஆனால் (R) சரி
28.
(அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards