11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
செலவுகளின் வகைப்பாடுகளை எழுதுக.
2.
நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?
3.
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
4.
வருவாயினச் செலவு என்றால் என்ன?
5.
6.
பின்வரும் செலவுகளை முதலின, வருவாயினச் செலவுகள் என வகைப்படுத்துக.
(i) ரூ 3,200 பின்வருமாறு இயந்திரத்தின் மீது செலவழிக்கப்பட்டது.
(அ) உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க சேர்க்கப்பட்ட கூடுதல் இயந்திரத்தின் மதிப்பு ரூ 2,000
(ஆ) கவனக்குறைவால் ஏற்பட்ட பழுதினைச் சரி செய்ய ரூ 1,200 செலவழிக்கப்பட்டது.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க, அதன் இயந்திரத்தைப் புதுப்பிக்க மேற்கொண்ட செலவு ரூ 25,000.
7.
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150.
8.
பின்வரும் செலவினங்கள் முதலினம், வருவாயினம், மற்றும் நீள்பயன் வருவாயினச் செலவுகளா எனக் கூறுக.
(i) புதிய இயந்திரம் வாங்கியதற்கான ஏற்றிச்செல் கட்டணம், மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 1,000
(ii) அலுவலக வாடகைச் செலுத்தியது ரூ 2,000
(iii) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ரூ 5,000
(iv) ஐந்து வருடங்களுக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட மோட்டார் வாகனம் மீதான வாடகை, ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படுகிறது.
9.
பின்வருபவை முதலினச் செலவா, வருவாயினச் செலவா அல்லது நீள்பயன் வருவாயினச் செலவா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) புதிய பொருளை அறிமுகப்படுத்துவதற்காகச் செய்யப்பட்ட விளம்பரச்செலவுகள் ரூ 10 கோடி
(ii) புதிய இயந்திரத்தைக் கொள்முதல் செய்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுவுவதற்கானச் செலவு.
(iii) புதிதாக இயந்திரம் வாங்கியதன் மீதான ஏற்றிச் செல் செலவு, காப்பீட்டுக் கட்டணம் மற்றும் வண்டிக் கட்டணம்.
10.
பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
(ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
(iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000.
1.
செலவுகளைப் பின்வருமாறு மூன்று வகைகளாப் பிரிக்கலாம். அவை
1. முதலினச் செலவு
2. வருவாயினச் செலவு
3. நீள்பயன் வருவாயினச் செலவு
2.
நடப்பாண்டில் மேற்கொள்ளப்பட்ட வருவாயினத் தன்மையுள்ள ஒரு செலவின் பயன், எதிர் வரும் ஆண்டு அல்லது ஆண்டுகளுக்கும் கிடைக்குமானால் அச்செலவு நீள்பயன் வருவாயினச் செலவு ஆகும்.
3.
(i) வணிகத்தின் வழக்கமான நடைமுறைகளிலிருந்து பெறக்கூடிய வருமானங்கள் வருவாயின வரவுகளாகும்.
(ii) இது திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது. இவ்வாறு பெறப்படும் தொகையானது பொதுவாக சிறிய அளவிலான தொகையாக இருக்கும்.
உதாரணங்கள்
1. சரக்கு விற்பதனால் கிடைக்கும் தொகை
2. முதலீடுகள் மீது பெற்ற வட்டி
4.
(i) வணிக நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டிற்கான செலவும், வருவாய் ஈட்டும் திறனைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளப்படும் செலவும் வருவாயினச் செலவு எனப்படும். இச்செலவு திரும்பத் திரும்ப நிகழும் தன்மையுடையது.
(ii) வருவாயினச் செலவு வருவாயுடன் தொடர்புடையது அல்லது குறிப்பிட்ட கணக்காண்டோடு தொடர்புடையது.
(iii) உதாரணமாக, கொள்முதல் மீதானச் செலவு ஒரு வருவாயினச் செலவு.
5.
6.
(i) (அ) கூடுதல் இயந்திரத்தைச் சேர்க்க செலவழித்த தொகை ரூ 2,000 முதலினச் செலவாகும்.
(ஆ) பழுதுபார்ப்புச் செலவு ரூ 1,200 வருவாயினச் செலவாகும்.
(ii) வாகனத்தின் எரிபொருள் திறனை அதிகரிக்க இயந்திரத்தைப் புதுப்பித்தது முதலினச் செலவாகும்.
7.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக் கட்டியதற்கானத் தொகை ரூ 5,000 முதலினச் செலவாகும்.
(ii) பழைய மகிழுந்து வாங்கியது மற்றும் அதை உடனடியாக பழுதுபார்ப்புச் செய்த செலவு மொத்தம் ரூ 32,000 முதலினச் செலவாகும்.
(iii) புதிய தொழிற்சாலைக்கான வண்ணம் பூசியதற்கானச் செலவு ரூ 10,000 முதலினச் செலவாகும்.
(iv) ஏற்றிச் செல் செலவு வண்டிக்கட்டணம் மற்றும் நிறுவுகைச் செலவு முதலினச் செலவாகும்.
(v) பழைய வாகனம் வாங்கி உடனடியாக பழுதுபார்த்தது ரூ 150 முதலினச் செலவாகும்.
8.
(i) இயந்திரம் வாங்கி, நிறுவுவதற்கான செலவுகள் ரூ 1,000 முதலினச் செலவாகும்.
(ii) அலுவலக வாடகை செலுத்தியது ரூ 2,000 வருவாயினச் செலவு.
(iii) இயந்திரம் இயக்குபவருக்கான கூலி செலுத்தியது ரூ 5,000 வருவாயினச் செலவு.
(iv) ஐந்து வருடங்களுக்கு அமர்த்தப்பட்ட வாகனம் மீதான வாடகை, ஒவ்வொரு வருடமும் செலுத்தப்படும் போது அது ஒரு வருவாயினச் செலவாகும்.
9.
(i) பேரளவிலான விளம்பரச் செலவின் பயன் ஒன்றிற்கு மேற்பட்ட கணக்காண்டுகளுக்கு நீடிக்கும். இச்செலவு புலனாகும் / புலனாகாச் சொத்துக்களை உருவாக்கவில்லையென்றாலும் இது நீள்பயன் வருவாயினச் செலவாகும்.
(ii) இயந்திரத்தைப் பயன்படுத்த தயாராக்குவதற்கு செய்யப்படும் செலவுகள் முதலினச் செலவுகளில் அடங்கும்.
(iii) இயந்திரம் வாங்கி, அதனைத் தோழிற்சாலைக்கு கொண்டு வந்து பயன்படுத்தும் வரையிலான செலவுகள் முதலினச் செலவுகளாகும்.
10.
(i) தொழிலை நடத்துவதற்கான உரிமம் பெறுவதற்காகச் செய்த செலவு என்பதால், இச்செலவு முதலினச் செலவாகும்.
(ii) தற்காலிக குடிசைகள் உட்பட , தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு முதலினச் செலவாகும்.
(iii) வாங்கிய பழைய இயந்திரத்தின் மீதான துவக்கப் பராமரிப்புச் செலவு என்பது நீண்டகால பலனைத் தருவதால் இது ஒரு முதலினச் செலவாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards