11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th English Supplementary - 3 - The First Patient (Play) Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 3 - Forgetting Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 2 - The Queen of Boxing Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Poem - 1 - Once Upon A Time Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th English Prose - 1 - The Portrait of a Lady Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Tamil Computing Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
பின்வரும் விவரங்களிலிருந்து திரு.ஜோசப் அவர்களின் வங்கி அறிக்கையின் படியான இருப்பினை 2018 மார்ச் 31 -ல் காண்க.
1. 2018 மார்ச் 31 - ல் ரொக்க ஏட்டின் படியான வங்கியிருப்பு ரூ 11,500
2. விடுத்த காசோலைகள் பணமாக்கப்படாதவை ரூ 1,750
3. வங்கியில் செலுத்திய காசோலைகள் 31 மார்ச் 2018 - ல் தீர்வு செய்யப்படாது ரூ 2,150.
4. வாங்கி வசூல் செய்த முதலீடுகள் மீது வட்டி ரூ 275 குறித்து ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
5.உள்ளூர் காசோலை நேரடியாக வங்கியில் செலுத்தியது. ரூ 250 குறித்து எட்டில் பதிவு இல்லை .
6. வங்கி அறிக்கையின்படி வங்கிக் கட்டணம் ரூ 95/
2.
ரொக்க ஏட்டின் நன்மைகள் யாவை?
3.
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச் 31 - ல் திரு முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு ரூ 5,000
2. வங்கிக் கட்டணம் ரூ 120 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 2, 000 காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
4. ஏற்கனவே ரூ 9,000 - க்கு விடுத்த காசோலைகளில் ரூ 7,600 - க்கான காசோலைகள் மட்டுமே வங்கியில் முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
5. வாங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்கா தாயம் ரூ 800 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
6. 31.03.08 - க்கு முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க ஏட்டில் பதியவில்லை.
4.
குறிப்பு வரைக : அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு ஆ) செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு
5.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள் யாவை?
6.
பொறுப்புகளின் வகைகளை எழுதுக..
7.
தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
8.
அகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.
9.
இருப்பாய்வு தயாரிக்கும் முறைகளை விளக்குக.
10.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
11.
2015 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்வின்படி சம்பளம் கொடுத்தது ரூ 1,50,000, மார்ச் 2005 க்கான சம்பளம் ரூ4,000 இன்னமும் கொடுபடவில்லை. உரிய சரிக்கட்டுப்பதிவு தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெறும் எனக் காட்டுக.
12.
கணினிமையக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஏதேனும் மூன்றினைத் தருக
13.
2017, டிசம்பர் 31 ஆம் நாளன்று, கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்குத் தேவையான சரிக்கட்டுப்பதிவுகள் தருக.
(i) கொடுபட வேண்டிய சம்பளம் ரூ 1200
(ii) கொடுபட வேண் டிய வாடகை ரூ 300
(iii) முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் ரூ 450
(iv) முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி ரூ 400
(v) போக்கெழுத வேண்டிய வாராக்கடன் ரூ 200.
14.
பின் வரும் நடவடிக்கைகளை எந்த துணை ஏட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுக.
(அ) ரொக்கத்திற்கு சரக்கு விற்றது
(ஆ) கடனுக்கு சரக்கு விற்றது
(இ) கடனுக்கு சரக்கு வாங்கியது
(ஈ) உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது.
(உ) சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு.
(ஊ) கடனுக்கு சொத்துகள் வாங்கியது
15.
உரிமையாளர் ஆயுள்மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம், கணக்கியலில் எவ்வாறு பதியப்படுகிறது?
16.
நடவடிக்கைகள் குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எவ்வாறு எடுத்தெழுதப்படுகின்றது?
17.
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
| (அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | ரூ 60,000 |
| (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது | ரூ 20,000 |
| (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது | ரூ 15,000 |
| (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது | ரூ 500 |
18.
‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.
19.
எதிர்ப் பதிவை உதாரணத்துடன் விளக்குக.
20.
கணக்கியலின் பிரிவுகளை சுருக்கமாக கூறுக.
1.
| ரொக்க ஏட்டின் படி வங்கியிருப்பு | 11,500 | |
| கூட்டுக: | ||
| காசோலை விடுத்தும் பணமாக்கப்படாதவை | 1,750 | |
| முதலீடுகள் மீதான வட்டி (வ) | 275 | |
| வங்கியில் நேரடியாக செலுத்தியது | 250 | |
| 2,275 | ||
| 13,775 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாதவை | 2,150 | |
| வங்கிக் கட்டணம் | 95 | |
| 2,245 | ||
| வங்கி அறிக்கையின்படி வங்கியிருப்பு | 11,530 |
2.
1. ரொக்க நடவடிக்கைகள் முதற்குறிப்பேட்டில் பதிவதற்கு பதிலாக பேரேட்டுக் கணக்கின் அமைப்பை ஒத்துள்ள ரொக்க ஏட்டில் நேரடியாக பதிவுதால் நேரமும், உழைப்பும் சேமிக்கப்படுகின்றன.
2. எந்த நேரத்தில் நிறுவன உரிமையாளர் ரொக்கம் மற்றும் வங்கி இருப்பை அறிய முடியும்.
3. ரொக்க ஏட்டைத் தொடர்ந்து இருப்புக் கட்டுவதால் கையிருப்பு ரொக்கத்தை அறிய முடியும். ரொக்க இருப்பில் முரண்பாடு ஏதேனும் இருப்பின், அதை கண்டுபிடித்துச் சரி செய்ய வேண்டும்.
4.திறமையான ரொக்க மேலாண்மைக் கொள்கையை உருவாக்க ரொக்க ஏடு பெரிதும் உதவுகிறது.
3.
| ரொக்க ஏட்டின்படி வங்கியிருப்பு | 6,120 | |
| கூட்டுக: | ||
| காசோலை விடுத்தும் இன்னும் முன்னிலைப்படுத்தப்படாதவை | 1,400 | |
| வங்கி வரவு வைத்த பங்காதாயம் | 800 | |
| 2,200 | ||
| (-) | ||
| 8,320 | ||
| கழிக்க: | ||
| வங்கியில் செலுத்தியும் வசூல் ஆகாத காசோலைகள் | 2,000 | |
| வங்கி கட்டணம் (பற்று) | 120 | |
| காசோலை அவமதிக்கப்பட்டது | 1,200 | |
| 3,320 | ||
| (-) | ||
| வங்கி அறிக்கையின்படி வரவிருப்பு | 5,000 |
4.
அ) பெருதற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு :
பெருதற்குரிய மாற்றுச்சீட்டு என்பது எழுதப்பட்ட மாற்றுச்சீட்டின் பணம் பெரும் தன்மையை குறிக்கும் கடன் விற்பனை நடைபெறும் போது சரக்கினை அளிப்பவர்.சர்க்கினை பெறுவர்(கடனாளிகள்)மீது ஒரு குறிப்பிட்ட காலத்தவணையில் மாற்றுச்சீட்டினை எழுதுவார்.இது வணிக நிர்வாணத்திற்கு பெறுதற்குரிய மாற்றுச்சீட் டு என்றும் கடனாளிகளுக்கு அதாவது யார் தொகையை செலுத்த ஏற்றுக்கொண்டாரோ அவருக்கு செலுத்தற்குரிய மாற்றுச்சிட்டாக அமையும்
| பெரும் நாள் | மாற்றுச் சீட்டினை (ஏற்குநர்) |
தவணைக் காலம் | பெறுதற்குரிய நாள் | பே.ப.எ | தொகை (ரூ) | குறிப்பு |
|---|---|---|---|---|---|---|
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) | (vii) |
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு ஏடு:
மாற்றுச்சீட்டு யாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதோ அவர்களது பெயர், தொகை , செலுத்த வேண்டிய தேதி போன்ற விவரங்கள்செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டில் பதியப்படும்.ஒவ்வொரு நபரின் மாற்றுச்சீட்டு ஏற்கும்பொது அதற்குரிய தொகை செலுத்தற்கூறிய மாற்றுச்சீட்டு ஏட்டில் பற்று வைக்கப்படுகிறது.மாற்றுச்சீட்டின் படிவம் பின்வருமாறு.
| பெரும் நாள் | மாற்றுச் சீட்டினை எழுதுநர் (கடனீ ந்தோர) |
தவணைக் காலம் | பெறுதற்குரிய நாள் | பே.ப.எ | தொகை (ரூ) | குறிப்பு |
|---|---|---|---|---|---|---|
| (i) | (ii) | (iii) | (iv) | (v) | (vi) | (vii) |
5.
அடக்கவிலைக் கருத்துகளின் குறைபாடுகள்:
அ) பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும், போது சொத்துக்களைப் புராதன அடக்க விலையில் மதிப்பிடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
(ஆ) புராதன அடக்க விலையில் சொத்துகள் பதிவு செய்யப்பட்டால், வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
(இ) மனித வளங்கள் போன்ற அடக்க விலையில் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
6.
பொறுப்புகள் அல்லது உரிமையாளர் பங்குகள் வணிக நிறுவனத்தின் மீது கோரப்பட்ட உரிமைகள் ஆகும்.இவை வணிக நிறுவனம் வெளியாட்கள் (புற நிதி)மற்றும் உரிமையாளர்களுக்கு (உடமையாளர் நிதி/அக நிதி)கொடுக்க வேண்டிய தொகையை குறிக்கிறது.
பொறுப்புகள் அதன் தன்மையைப் பொறுத்து கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(அ)நிலை அல்லது நீண்ட காலப் பொறுப்புகள்.
ஒரு வருடம் அல்லது அதற்கு மேலான காலத்திற்குள் செலுத்தப்பட வேண்டிய பொறுப்புகள் நீண்டகாலப் பொறுப்புகள் எனப்படும்.
(ஆ) நடப்பு அல்லது குறுகிய கலாப் பொறுப்புகள்
ஒரு இயக்க சுழற்சிக்குள் அல்லது ஒரு வருட காலத்திற்குள் செலுத்த எதிர்பார்க்கும் செலவுகள் நடப்பு அல்லது குறுகிய காலப் பொறுப்புகள் ஆகும்.இவற்றில் வங்கி மேல்வரைப்பற்று , கடனீந்தோர், செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு,கொடுப்பட வேண்டிய செலவுகள் முதலியன உள்ளடங்கும்.
(இ) நிகழ்வடையாப் பொறுப்புகள்
இவ்வகைப் பொறுப்புகள் இருப்புநிலைக் குறிப்பு தயாரிப்பின் போது பொறுப்புகளாக உறுதிப்படுத்தப்படாதவை ஆகும்.இவ்வகை பொறுப்புகள் நிகழாம் அல்லது நிகழாமல் இருக்கலாம்
7.
1.சொத்தின் ஆரம்ப அடக்கவிலை
1. சொத்தின் ஆரம்ப அடக்கவிலையானது சொத்தினை வாங்குவதற்கும் அல்லது சொத்தினை உருவாக்குவதற்கு செலவழித்த தொகை ஆகும்.
2.சொத்து பழைய சொத்தாக இருக்கும் நிலையில். அச்சொத்தினைப் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக, ஆரம்ப நிலையில் மேற்கொள்ளப்படும் பழுது பார்புச் செலவுகளும் சொத்தின் ஆரம்ப அடக்கவிலையில் சேரும்.
2.சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம்
நிறுவனத்தில்,சொத்துகள் எவ்வளவு காலத்திற்கு பயன்படுத்த முடியுமோ அக்காலம் சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்புக் காலம் எனப்படுகிறது.
3.சொத்தின் இறுதி மதிப்பு
சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் முடிந்த பிறகு அச் சொத்தினை விற்பதால் கிடைக்கும் தொகையை இது குறிக்கிறது. இது இறுதி மதிப்பு எனவும் எஞ்சிய மதிப்பு எனவும், அழைக்கப்படுகிறது.
4.பிற காரணிகள்
மேற்கூறிய காரணிகள் மட்டுமல்லாமல் சட்டரீதியான வழிமுறைகள், தொழில்நுட்ப காரணிகள் போன்றவை தேய்மானத் தொகையை நிர்ணயிக்கின்றன.
8.
அகப் பயனீட்டாளர்கள்:
அகப்பயனீட்டாளர்கள் என்பவர்கள் வணிக நிறுவனத்தின் உரிமையாளர்கள், நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் ஆவார்கள்.
(i) உரிமையாளர்கள்:
வணிக நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் மூலதனத்தொகையை அளிப்பவர்களே உரிமையாளர்கள் எனப்படுகின்றனர்.
(ii) நிர்வாகம்:
(1) பெரும்பாலான முடிவுகளை நிர்வாகம் எடுப்பதற்கு கணக்கியலின் விவரங்கள் அடிப்படையாக இருக்கின்றன.
(2) வணிகச் செயல்பாடுகளின் திட்டமிடுதல் மற்றும் கட்டுப்பாட்டிற்கு நிர்வாகத்திற்கு பல முக்கியமான நிதிசார்ந்தத் தகவல்கள் தேவைப்படுகின்றன.
(3) நிதி நிலை கணக்கியலில் தயாரிக்கப்படும் நிதியியல் அறிக்கைகள் மற்றும் பிற அறிக்கைகள் நிர்வாகத்திற்க்கான தகவல்களை அளிக்கின்றன.
(iii) பணியாளர்கள்:
பணியாளர்கள் தங்களது ஊதியம், பணியாற்றும் சூழ்நிலைகள், ஓய்வு பலன்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் வணிகத்தின் இலாபம் ஈட்டும் திறன், வணிகத்தின் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அறிய ஆர்வமாக இருப்பார்கள்.
9.
ஒரு இருப்பாய்வு கீழ்க்கண்ட முறைகளில் தயாரிக்கப்படுகிறது.
(i) இருப்பு முறை:
இம்முறையில் ஒவ்வொரு பேரே ட்டுக் கணக்குகளிலிருந்து கிடைக்கப்பேற்றை, பற்று அல்லது வரவு இருப்பிற்கு ஏற்ப உரிய கணக்கிற்கு எதிரே இருப்பாய்வில் பதியப்படுகிறது.
(ii) மொத்தத் தொகை முறை:
இம் முறையில்,பற்றுப் பக்கத்திலுள்ள பேரேட்டுக் கணக்குகளின் மொத்த தொகையும் மற்றும் வரவுபக்கத்திலுள்ள பேரேடுக்கணக்குகளின் மொத்த தொகையும் கணக்கிடப்பட்டு, இருப்பாய்வில் பதியப்படுகின்றன.
(iii) மொத்தத் தொகை மற்றும் இருப்பு முறை:
இம்முறை மொத்தத் தொகை முறை மற்றும் இருப்பு முறை ஆகியவற்றை ஒன்று சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலப்பின் முறையாகும். இம்முறையில் மொத்தம் நான்கு பத்திகள் உள்ளன. அவை,
(அ) பேரேட்டுக் கணக்குகளின் பற்றுப் பக்கங்களின் மொத்தம்.
(ஆ) பேரேட்டுக் கணக்குகளின் வரவுப் பக்கங்களின் மொத்தம்
(இ) பேரேட்டுக்கணக்குகளின் பற்று இருப்பு
(ஈ) பேரேட்டுக் கணக்குகளின் வரவு இருப்பு என்பதாகும். இம்முறையும் வழக்கத்தில் இல்லை.
10.
கணக்கியல் செயல்முறையில் பின்வரும் எந்த நிலையிலும் பிழைகள் நிகழலாம்:
I குறிப்பெட்டுப்பதிவு நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(iii) விதிப் பிழை
II பேரேட்டில் எடுத்தெழுதும் நிலையில்
இந்த நிலையில், கீழ்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழைகள்
(அ) முழு விடு பிழைகள்
(ஆ) பகுதி விடு பிழைகள்
(ii) செய் பிழைகள்
(அ) தவறான கணக்கில் எடுத்து எழுதுதல்
(ஆ) தவறான தொகையை எடுத்து எழுதுதல்
(இ) தவறான பக்கத்தில் எடுத்து எழுதுதல்
III இருப்புக்கட்டல் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) கணக்கில் தவறாவறாகக் கூட்டுதல்
(ii) கணக்கில் தவறாவறாக இருப்புக்கட்டுதல்
IV இருப்பாய்வு தயாரிக்கும் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) தவறான தொகையைப் பதிவு செய்தல்
(இ) இருப்பாய்யில் தவறான பத்தியில் பதிவு செய்தல்
11.
சரிகட்டுப் பதிவு
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ |
வரவு ரூ |
|---|---|---|---|---|
| 2015 | ||||
| மார்ச் 31 | சம்பளம் க/கு ப | 4,000 | ||
| கொடுபட வேண்டிய சம்பளம் க/கு (கொடுபட வேண்டிய சம்பளம் குறித்து) | 4,000 |
| விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
விவரம் | தொகை ரூ |
தொகை ரூ |
|---|---|---|---|---|---|
| சம்பளம் க/கு | 1,50,000 | ||||
| கூட்டுக: | |||||
| கொடுபட வேண்டியது | 4,000 | 1,54,000 | |||
| பொறுப்புகள் | தொகை ரூ |
சொத்துகள் | தொகை ரூ |
|---|---|---|---|
| கொடுபட வேண்டிய சம்பளம் | 4,000 |
12.
கணினிமயக் கணக்கியல் முறையின் முக்கிய குறைபாடாக இருப்பதுயாதெனில் அவை இயங்குகின்ற சூழலைச் சார்ந்திருப்பதாகும். அவைகளில் சிலவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்.
(i) அதிகப்படியான நிறுவுதல் செலவு:
அவ்வப்போது கிடைக்கக்கூடிய புதிய பாதிப்புகள் கொண்டு கணினியின் வன்பொருள் மாற்றப்படுவதன் தேவையும் மற்றும் மென்பொருளை மேம்படுத்துவதன் அவசியமும் ஏற்படுகின்றது. எனவே, அதிகப்படியான நிறுவுதல் செலவு ஏற்படுகிறது.
(ii) பயிற்சி அளித்தலின் செலவுகள்:
கணினிமயக் கணக்கியல் முறையை பயனுள்ளதாகவும், திறனுடனும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வன்பொருளின் மற்றும் மென்பொருளின் புதிய பாதிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும். இவை சிறப்பு பயிற்சியின் தேவையினை ஏற்படுத்துகிறது. ஆகவே, பணியாளர்களின் பயிற்சிக்காக செலவு செய்யப்படுகின்றது.
(iii) வேலையின்மையென அச்சம்:
கண்னிமயக் கணக்கியல் முறையை அறிமுகப்படுத்துவதனால், பணியாளார்கள் தனது வேலை பறிபோகலாம் என பாதுகாப்பற்றதாக கருதி, கணினி சார்ந்த வேலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை.
13.
| நாள் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| 2017, டிச 31 | சம்பளக் க/கு கொடுபட வேண்டிய சம்பளக் க/கு (கொடுபட வேண் டிய சம்பளம் சரிக்கட்டப்பட்டது) |
ப | 1,200 | 1,200 | |
| டிச. 31 | வாடகைக் க/கு கொடுபட வேண்டிய வாடகை க/கு (கொடுபட வேண்டிய வாடகை சரிக்கட்டப்பட்டது) |
ப | 300 | 300 | |
| டிச. 31 | முன்கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமக் க/கு காப்பீட்டு முனைமக் க/கு (முன்கூட்டிச் செலுத்திய காப்பீடு சரிக்கட்டப்பட்டது) |
ப | 450 | 450 | |
| டிச. 31 | முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி க/கு முதலீடுகள் மீதான வட்டி க/கு (முதலீடுகள் மீதான கூடியுள்ள வட்டி சரிக்கட்டப்பட்டது) |
ப | 400 | 400 | |
| டிச. 31 | வாராக்கடன் க/கு பற்பல கடனாளிகள் க/கு (வாராக்கடன் போக்கெழுதியது) |
ப | 200 | 200 |
14.
| அ) | ரொக்கத்திற்கு சரக்கு விற்றது | இந்த நடவடிக்கை விற்பனை ஏட்டில் பதியப்படுவதில்லை |
| ஆ) | கடனுக்கு சரக்கு வாங்கியது. | இந்த நடவடிக்கை கொள்முதல் ஏட்டில் பதியப்படுகிறது. |
| இ) | கடனுக்கு சரக்கு வாங்கியது | இந்த நடவடிக்கை கொள்முதல் ஏட்டில் பதியப்படுகிறது. |
| ஈ) | உரிமையாளர் சரக்குகளை தனது சொந்த பயன்பாட்டிற்காக எடுத்தது. | இந்த நடவடிக்கை கொள்முதல் திருப்ப ஏட்டில் பதியப்படுகின்றன. |
| உ) | சரக்கு அளித்தோருக்கு உடனடியாக பணம் பெறாமல் திருப்பிய சரக்கு. | இந்த நடவடிக்கை கொள்முதல் திருப்ப ஏட்டில் பதியப்படுகின்றன. |
| ஊ) | கடனுக்கு சொத்துகள் வாங்கியது | இந்த நடவடிக்கை கொள்முதல் ஏடுகளில் பதியப்படுவதில்லை |
15.
1. உரிமையாளர் ஆயுள் மீது செலுத்தப்பட்ட காப்பீட்டு முனைமம் வணிகச் செலவு அல்ல உரிமையாளரின் தனிப்பட்ட செலவினம்.
2. வியாபாரத் செலவின்மையால் இது செலவாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
3. ஆனாலும் இதற்குரிய தொகை வணிக நிறுவனத்திலிருந்து செலவிடப்பட்டதால் எடுப்பாக கருத வேண்டும்.
இதற்கான குறிப்பிட்டு பதிவு
எடுப்பு க/கு பற்று
ரொக்க க/கு வரவு
16.
குறிப்பேட்டிலிருந்து பேரேட்டிற்கு எடுத்தெழுதப்படும் முறைகள்:
(i) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கை காண்க. அக்கணக்கு எகனாவே துவங்கப்படவில்லை என்றால் அப்பேரேட்டை துவக்க வேண்டும். கணக்கின் பெயரை மேல்பகுதியில் நடுவில் எழுதவேண்டும்.
(ii) கணக்கின் பற்றுப்பக்கத்தில் நாள் பத்தியில் நடவடிக்கை நிகழ்ந்த நாளைக்கு குறிப்பிட வேண்டும்.
(iii) விவரப்பத்தியில் குறிப்பேட்டில் வரவு வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரைப் பதிய வேண்டும்.
(iv) குறிப்பேட்டில் பற்றுத் தொகை பத்தியில் உள்ள இக்கணக்கிற்குரிய தொகையினை, தொகை பத்தியில் பதிய வேண்டும்.
(v) குறிப்பேட்டில் வரவு வைக்கப்டுள்ள கணக்கை கண்டறியவும். அவ்வாறு இல்லை என்றால் அக்கணக்கை பேரேட்டில் புதிதாக துவங்க வேண்டும். கணக்கின் பெயரை மேல் பகுதியின் நடுவில் எழுத வேண்டும்.
(vi) குறிப்பேட்டில் பற்று வைக்கப்பட்டுள்ள கணக்கின் பெயரை விவரப்பத்தியில் எடுத்து எழுத வேண்டும். அதற்குரிய தொகையை தொகைப் பத்தியில் எழுத வேண்டும்.
17.
| நடவடிக்கைகள் | சொத்துகள் | முதல் ரூ |
||
|---|---|---|---|---|
| ரொக்கம் ரூ |
சரக்கிருப்பு ரூ |
|||
| (i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது | +60,000 | +60,000 | ||
| சமன்பாடு | +60,000 | = | +60,000 | |
| (ii) ரொக்கக் கொள்முதல் | +20,000 | +20,000 | ||
| சமன்பாடு | +40,000 | +20,000 | = | +60,000 |
| (iii) ரொக்க விற்பனை | +15,000 | -10,000 | +5,000 | |
| சமன்பாடு | +55,000 | +10,000 | = | +65,000 |
| (iv) வாடகை ரொக்கமாக செலுத்தியது | -500 | -500 | ||
| சமன்பாடு | +54,500 | +10,000 | = | +64,500 |
18.
நிறுவன தொடர்ச்சி கருத்து:
இது ஒரு அடிப்படை கருத்து.இதன்படி ஒரு வணிக நிறுவனம் தொடராக கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயலாற்றும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இக்கருத்தின் அடிப்படையில்:
1. சொத்து மற்றும் பொறுப்புகளை மதிப்பீடு செய்தல்
2. நிலைச் சொத்தின் மீதான தேய்மானம்.
3. கொடுப்பட வேண்டிய மற்றும் முன்கூட்டிச் செய்த செலவுகள்.
4. பெறபடவேண்டிய மற்றும் கூடியுள்ள வருமானம்.
போன்றவைகளின் கணக்கியல் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, பொதுவாக சொத்துக்கள் புராதான அடக்கவிலையில் (Historical Cost) பதிவு செய்யப்படுகின்றன.சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
19.
ஒரு நடவடிக்கையில் ரொக்கம் மற்றும் வாங்கி என்ற இரு கணக்குகளும்தொடர்பு பெற்றிருந்தால் அந்நடவடிக்கையின் இரு தன்மைகளும் ரொக்க ஏட்டில் பதியப்படுகின்றன.அவ்வாறு ஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகள், ரொக்க ஏட்டில் பதியப்பட்டால் அது எதிர்ப்பதிவு எனப்படும்.
உதாரணம்:
1. வங்கியில் பணம் செலுத்தியது
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள வாங்கிப் பத்தியிலும் மற்றும் வரவுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் பத்தியிலும் பதியப்படும்.
2. வங்கியிலிருந்து அலுவலக செலவுகளுக்காக பணம் எடுத்து:
இது ரொக்க ஏட்டில் பற்றுப் பக்கத்தில் உள்ள ரொக்கப் புத்தியிலும் மற்றும் வரவு பக்கத்தில் உள்ள வாங்கிப் புத்தியிலும் பதியப்படும்.
20.
நிதிநிலைக் கணக்கியல்:
கணக்கேடுகளில் வணிக நடவடிக்கைகளைப் பதிந்து குறிப்பிட்ட காலத்தில் இயக்க முடிவைக் குறிப்பிட்ட தேதியில் நிதிநிலைமை அறியும் வகையில் விவரங்களைத் தரும் வழிமுறையை இது குறிக்கின்றது.
அடக்கவிலைக் கணக்கியல்:
உற்பத்தி செய்த பொருள் அல்லது நிறுவனம் ஏற்ற பணியின் அடக்க விலையைக் கணிக்கத் தேவையான விவரங்களைச் சேகரித்தல், வகைப்படுத்துதல் மற்றும் உற்பத்தி அடக்க விலையைக் கணக்கிடல் போன்ற செயல்களைக் கொண்ட கணக்கியல் அடக்கவிலைக் கணக்கியல் ஆகும்.
மேலாண்மைக் கணக்கியல் மற்றும் அடக்கவிலைக் கணக்கியல் மூலம் கிட்டிய விவரங்களின் உதவியோடு கொள்கை வடிவமைத்தல், திட்டமிடுதல், கட்டுப்படுத்துதல் மற்றும் முடிவெடுத்தல் போன்ற மேலாண்மைப் பணிகளை நிறைவேற்ற உதவும் கணக்கியல் மேலாண்மைக் கணக்கியல் எனப்படும்.
சமூகப் பொறுப்பு கணக்கியல்:
இது வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் கணக்கியல் தகவல்களை சமூகத்தின் பார்வையில் வழங்குவதாகும். இதில் வணிகத்தில் ஏற்பட்ட சமூக அடக்கவிலை (சுற்றுப்புறமாசு) மற்றும் சமூக நலன் சார்ந்த நன்மைகள் (வேலை வாய்ப்பு உருவாக்குதல்) போன்றவை தெரிவிக்கப்படும்.
மனித வளக் கணக்கியல்:
இது ஒரு நிறுவனம், அதன் மனித வளத்தில் செய்த முதலீடுகளை இனம் காணுதல், அளவிடுதல் மற்றும் அறிவித்தல் ஆகியவற்றைச் சார்ந்ததாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Computer Applications Computer Ethics and Cyber Security Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications JavaScript Functions Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Control Structure in JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Computer Applications Introduction to JavaScript Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards