11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 10/10/2019
பிழைத் திருத்தம்
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறிய செய்ய வேண்டியன யாவை?
2.
கணக்கியலின் பல்வேறு நிலைகளில் நிகழும் பிழைகளை எழுதுக.
3.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்தபின் கண்டறியப்பட்டன.வித்தியாசத் தொகை அனாமத்துக் கணக்கில் போடப்பட்டுள்ளது.அவற்றைத் திருத்தம் செய்யவும்
அ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை முன் எடுத்து எழுதும் போது ரூ.70 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது
ஆ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை முன் எடுத்து எழுதும் போது ரூ.340 அதிகமாக எடுத்து எழுதப்பட்டுள்ளது
இ) கொள்முதல் ஏட்டின் மொத்தம் முன் எடுத்து எழுதும் போது ரூ.150 அதிகமாகக் எடுத்து எழுதப்பட்டுள்ளது
ஈ) விற்பனை ஏட்டின் கூட்டுதொகையை முன் எடுத்து எழுதும் போது ரூ.200 குறைவாக எடுத்து எழுதப்பட்டுள்ளது
உ) கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகை முன் எடுத்து எழுதும் போது ரூ.350 குறைவாகக் எடுத்து எழுதப்பட்டுள்ளது
4.
இருப்பாய்வு வெளிக்காட்டும் பிழைகள் யாவை?
5.
இருப்பாய்வு வெளிப்படுத்தாத பிழைகள் யாவை?
6.
அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்
7.
விதிப்பிழையைப் பற்றிய குறிப்பை எடுத்துக்காட்டுடன் எழுதவும்.
8.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) அகிலாவுக்கு ரூ.1,520-க்கு கடனுக்கு சரக்கு விற்றற்றது அவர் கணக்கில் ரூ.1,250 எனப் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(ஆ) நரேந்திரனிடம் கடனுக்கு ரூ.5,500-க்கு சரக்கு கொள்ள்முதல் செய்தது, அவர் கணக்கில் ரூ.5,050 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) ரவிவர்மனிடமிருந்து கடனுக்கு ரூ.404-க்கு அறைகலன் வாங்கியது, அறைகலன் கணக்கில் ரூ.440 எனப் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.2,000 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது, பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(உ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.899 முன் எடுத்து எழுதும் போது ரூ.989 என எழுதப்பட்டுள்ளது
9.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
(அ) அங்கப்பனுக்கு ரூ.500 செலுத்தியது தவறுதலாக அங்கண்ணன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) அறைகலன் ரூ.750-க்கு விற்றது, விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) பாக்யா பாக்யாவிடமிருந்து சரக்கு ரூ.2,100-க்கு வாங்கியது, தவறுதலாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(ஈ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக் கணக்கில் பற்று
வைக்கப்பட்டுள்ளது.
10.
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
(அ) ஆனந்துக்கு ரூ.1,000 த்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை.
(ஆ) இயந்திரம் பழுதுபார்ப்புக்கு ரூ.400 செலுத்தியது, தவறாக இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) காந்திராஜ்-க்கு ரூ.2,000 சம்பளம் செலுத்தியது, பேரபேரேட்டில் தவறாக அவருடைய கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
1.
இருப்பாய்வு தயாரிக்கும் முன்பு பிழைகளைத் தற்செயலாகவோ அல்லது கணக்கு ஏடுகளை குறிப்பிட்ட நோக்கத்திற்காக கூர்ந்தாய்வு செய்தோ கண்டறியலாம். இருப்பாய்வு தயாரிக்கும் முன் பிழைகளைக் கண்டறியப் பின்பற்ற வேண்டிய படிநிலைகள் பின்வருமாறு:
| (i) | உரிய குறிப்பேட்டின் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (ii) | துணை ஏடுகளில் பதிவுகளை கூர்ந்தாய்வு செய்தல் |
| (iii) | துணை ஏடுகளின் கூட்டுத்தொகைகளை ஆய்வு செய்தல் |
| (iv) | பேரேட்டுக் கணக்கில் பதிவு செய்தவற்றை கூர்ந்தாய்வு செய்தல் |
| (v) | பேரேட்டு கணக்குகளின் இருப்புக் காட்டியதை கூர்ந்தாய்வு செய்தல் |
மேற்கண்டவாறு கண்டுபிடித்த பிழைகளை தொடர்புடைய கணக்குகளில் பற்று அல்லது வரவு வைப்பதன் மூலம் திருத்தம் செய்ய வேண்டும்.
2.
கணக்கியல் செயல்முறையில் பின்வரும் எந்த நிலையிலும் பிழைகள் நிகழலாம்:
I குறிப்பெட்டுப்பதிவு நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(iii) விதிப் பிழை
II பேரேட்டில் எடுத்தெழுதும் நிலையில்
இந்த நிலையில், கீழ்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழைகள்
(அ) முழு விடு பிழைகள்
(ஆ) பகுதி விடு பிழைகள்
(ii) செய் பிழைகள்
(அ) தவறான கணக்கில் எடுத்து எழுதுதல்
(ஆ) தவறான தொகையை எடுத்து எழுதுதல்
(இ) தவறான பக்கத்தில் எடுத்து எழுதுதல்
III இருப்புக்கட்டல் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) கணக்கில் தவறாவறாகக் கூட்டுதல்
(ii) கணக்கில் தவறாவறாக இருப்புக்கட்டுதல்
IV இருப்பாய்வு தயாரிக்கும் நிலையில்
இந்த நிலையில், கீழ்க்காணும் பிழைகள் நிகழலாம்:
(i) விடு பிழை
(ii) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) செய் பிழை
(அ) தவறான கணக்கில் பதிவு செய்தல்
(ஆ) தவறான தொகையைப் பதிவு செய்தல்
(இ) இருப்பாய்யில் தவறான பத்தியில் பதிவு செய்தல்
3.
| வ.எண் | விவரம் | பே.ப.எ | பற்று ரூ | வரவு ரூ | |
|---|---|---|---|---|---|
| அ | கொள்முதல் க/கு | ப | 70 | ||
| அனாமத்துக் க/கு | 70 | ||||
| (கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | விற்பனை க/கு | 340 | |||
| அனாமத்துக் க/கு | 340 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை அதிகமாக எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | அனாமத்துக் க/கு | ப | 150 | ||
| கொள்முதல் க/கு | 150 | ||||
| (கொள்முதல் ஏட்டில் மொத்தம் அதிகமாக எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | அனாமத்துக் க/கு | ப | 200 | ||
| விற்பனை க/கு | 200 | ||||
| (விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக எழுதப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| உ | அனாமத்துக் க/கு | 350 | |||
| கொள்முதல் திருப்ப ஏடு க/கு | 350 | ||||
| (கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகை குறைவாக கூட்டப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) |
4.
சில பிழைகள் இருப்பாய்வு சமன்படுவதை பாதிக்கும். அவ்வாறான பிழைகள், கணக்கு ஏடுகளில் நிகழ்ந்தால் பற்று இருப்புகளின் கூட்டுத்தொகையும் வரவு உறுப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்காது. இருபாய்வு சமநிலை பெறாது. பகுதி விடுப்பிழையும் செய்பிழையும் இருபாய்வு சமன்பாடுவதை பாதிக்கும்.
அவ்வாறான பிழைகளின் உதாரணங்கள் பின்வருமாறு
1. குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டு பேரேட்டில் ஒரு கணக்கில் எழுதப்பட்டு மற்றொரு கணக்கில் எடுத்தெழுதப்படாமல் உள்ளது.
2. பேரேட்டில் எடுத்தெழுதும் போது கணக்கின் தவறான பக்கத்தில் எழுதுதல்
3. பேரேட்டுக் கணக்கில் இருமுறை எடுத்தெழுதுதல்
4. துணை ஏட்டில் அதிகமாக கூட்டுவது அல்லது குறைவாகக் கூட்டுவது.|
5. பேரேட்டுக் கணக்கில் தவறான தொகையை சரியான பக்கத்தில் எடுத்தெழுதுதல்.
6. பேரேட்டுக் கணக்கிலோ அல்லது துணை ஏட்டிலோ ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகையை அடுத்த பக்கத்தில் எடுத்து எழுதும் பொது தவறான தொகையை எழுதுதல்
7. பேரேட்டுக் கணக்கை இருப்புக் காட்டும் போது நிகழும் பிழைகள்
8. துணை எதிலிருந்து பேரேட்டுக் கணக்கில் எடுத்து எழுதத் தவறுதல்.
5.
சில பிழைகள் இருபாய்வு சமன்படுவதை பாதிக்காதவை. அவை ஏடுகளில் இருந்தாலும் பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையும், வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையும் சமமாக இருக்கும். இருபாய்வு சமநிலைப் பெரும். முழு விடுப்பிழைகள், விதிப்பிழைகள், ஈடுசெய் பிழைகள் மற்றும் துணை ஏடுகளில் தவறான பதிவுகள் ஆகியவற்றை இருபாய்வு வெளிப்படுத்துவதில்லை. அவ்வாறான பிள்ளைகளுக்கு உதாரணங்கள்:
1. ஒரு வருவாயினச் செலவை முதலின்ச் செலவாக பாவித்தல்
2. ஒரு நடவடிக்கையை முழுமையாக பதிவு செய்யத் தவறுதல்.
3. ஒரு நடவடிக்கை தவறான துணை ஏட்டில் பதிவு செய்தல்
4. ஒரு நடவடிக்கையை துணை ஏட்டில் அல்லது குறிப்பேட்டில் இருமுறை பதிவு செய்தல்.
5. ஒரு நடவடிக்கையின் திஸ்கியை குறிப்பேட்டில் தவறாக பதிவு செய்தல்
6. ஒரு நடவடிக்கையின் தொகையை துணை ஏட்டில் தவறாக பதிவு செய்தல்
7. ஈடு செய் பிழைகள்.
6.
1. இருபாய்வு சமநிலையடையாத பொது வேறுபாட்டு தொகையை அனாமத்துக் கணக்கு என்ற தற்காலிகக் கணக்கில் பற்று அல்லது வரவு வைக்க வேண்டும்.
2. பற்று உறுப்புகளின் கூட்டுத் தொகையை காட்டிலும் வரவு இருப்புகளின் கூட்டுத் தொகையை மிகையாக இருக்கும் பொது பற்று வைக்கப்படும்.
3. மாறாக வரவு இருப்புகளின் கூட்டுத் தொகை பற்று இருப்புகளின் கூட்டுத் தொகையை வீடாக குறைவாக இருப்பின் வரவு வைக்க வேண்டும்
7.
நடவடிக்கைகளை கணக்கு ஏடுகளில் பதிவு செய்யும்போது அடிப்படை கணக்கியல் விதிகளை தவறாக பின்வற்றுவதால் ஏற்படும் பிழையே விதிப்பிழை எனப்படும்.
விதிபிழை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள்.
1. சொத்து வாங்கியதை கொள்முதல் ஏட்டில் பதிவு செய்தல்
உதாரணம் - அன்பரசி ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுமம் ரூ.10,000 மதிப்புள்ள இயந்திரத்தை கடனுக்கு வாங்கியது, கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
2. சொத்து விற்றதை விற்பனை ஏட்டில் பத்தி பதிவு செய்தல் உதாரணம்
பழைய அறைகலன் ரூ.500 க்கு கடனுக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது.
3. ஒரு முதலினச் செலவை வருவாயினச் செலவாகப் பாவித்தல்
உதாரணம்
அ. கூடுதல் அறை கட்டுவதற்கான செலவு ரூ.3,000 பழுதுபார்ப்புச் செலவு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
ஆ. புதிய இயந்திரம் நிறுவுவதற்காகச் செலுத்திய கூலி ரூ.600 கூலிக்கு கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
4. ஒரு வருவாயினச் செலவை முதலின்ச் செலவாகப் பாவித்தல்
இயந்திரம் பழுதுபார்க்கச் செலுத்திய ரூ.2,000 இயந்திரக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
8.
| அ | அகிலா கணக்கில் ரூ.270 பற்று வைக்கப்படவேண்டும் |
| ஆ | நரேந்திரன் கணக்கில் ரூ.450 வரவு வைக்கப்படவேண்டும் |
| ஈ | இயந்திரக் கணக்கில் ரூ2,000 பற்று வைக்கப்படவேண்டும் |
| உ | கொள்ள்முதல் கணக்கில் ரூ.90 வரவு வைக்கப்பட வேண்டும் |
9.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | அங்கப்பன் க/கு | ப | 500 | ||
| அங்கண்ணன் க/கு | 500 | ||||
| (அங்கப்பனுக்கு ரொக்கம் செலுத்தியது தவறாக அங்கண்ணன் கணக்கில் பற்று வைத்தது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஆ | விற்பனைக் க/கு | ப | 750 | ||
| அறைகலன் க/கு | 750 | ||||
| (அறைகலன் விற்றது தவறாக விற்பனை கணக்கில் வரவு வைக்கப்பட்டது திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| இ | கொள்முதல் க/கு | ப | 2,100 | ||
| விற்பனைக் க/கு | ப | 2,100 | |||
| பாக்யா க/கு | 4,200 | ||||
| (பாக்யாவிடம் சரக்கு கொள்முதல் செய்தது, தவறாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டது, திருத்தம் செய்யப்பட்டது) | |||||
| ஈ | இயந்திரக் க/கு | ப | 1,000 | ||
| கூலி க/கு | 1,000 | ||||
| (இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி தவறாக கூலிக்கணக்கில் பற்று வைத்தது திருத்தம் செய்யப்பட்டது) |
10.
| விவரம் | பே.ப.எ | பற்று ரூ. | வரவு ரூ | ||
|---|---|---|---|---|---|
| அ | ஆனந்த் க/கு | ப | 1,000 | ||
| விற்பனைக் க/கு | 1,000 | ||||
| (ஆனந்துக்கு கடனுக்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் பதியாதது திருத்தப்பட்டது) | |||||
| ஆ | பழுதுபார்ப்பு க/கு | ப | 400 | ||
| இயந்திரக் க/கு | 400 | ||||
| (பழுதுபார்ப்புச் செலவு தவறாக இயந்திரக் கணக்கில் பற்று வைத்தது திருத்தப்பட்டது) | |||||
| இ | சம்பளக் க/கு | ப | 2,000 | ||
| காந்திராஜ் க/கு | 2,000 | ||||
| (சம்பளம் செலுத்தியது தவறாக காந்திராஜ் கணக்கில் பற்று வைத்தது திருத்தப்பட்டது) |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards