11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
துணை ஏடுகள் - I
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
மாற்றுச் சீட்டைப் புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.
2.
மாற்றுச் சீட்டை ஒய்வுபடுத்துதல் பற்றி குறிப்பு எழுதுக.
3.
சலுகை நாட்கள் என்றால் என்ன?
4.
மாற்றுச் சீட்டுடன் தொடர்புடைய நபர்கள் பற்றி குறிப்பு எழுதுக.
5.
திருத்தப் பதிவுகள் என்றால் என்ன?
6.
தொடக்கப்பதிவு என்றான்றால் என்ன?
7.
மாற்றுச் சீட்டின் வரைவிலக்கணம் தருக.
8.
பற்றுக்குறிப்பு என்றால் என்ன?
9.
விற்பனைத் திருப்ப ஏடு என்றால் என்ன?
10.
விற்பனை ஏடு என்றால் என்ன?
1.
மாற்றுச் சீட்டின் ஏற்குநர், தவணை நாளன்று அவரால் பணம் செலுத்த இயலாத நிலையில், எழுதுநரை அணுகி தொகையைச் செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்குமாறு கோருவார். அந்நிலையில் எழுதுநர் பழைய மாற்றுச்சீட்டை இரத்து செய்துவிட்டு நிலுவைத் தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்ந்த தொகைக்கு புதிய மாற்றுச்சீட்டு ஒன்றினை எழுத ஒப்புக்கொள்வார். இதுவே மாற்றுச்சீட்டு புதுப்பித்தல் எனப்படுகிறது.
2.
1. மாற்றுச்சீட்டை ஏற்றுவர், தவணை நாளுக்கு முன்பே தொகையினைச் செலுத்துதல், "மாற்றுச்சீட்டை ஓய்வுபடுத்துதல்" எனப்படும்.
2. வழக்கமாக மாற்றுச்சீட்டினை வைத்திருப்பவருக்கு (செலுத்தப்பெறுநர்) தொகை தவணை நாளுக்கு முன்னரே அளிக்கப்படுவதால் ஏற்குநருக்கு (முன்னராகத் தரப்படும் காலத்தின் அடிப்படையில்) தள்ளுபடி அளிப்பார்.
3.
1. மாற்றுச் சீட்டின் செலுத்தற்குரிய நாளை கணக்கிடும் பொழுது, மாற்றுச்சீட்டின் தவணைக் காலம் முடிந்த பிறகு மூன்று நாட்கள் கூட்டப்படுகிறது. இவ்வாறு கூடுதலாகச் சேர்க்கப்படும் அந்த மூன்று நாட்களுக்கு "சலுகை நாட்கள்" (அ) கருணை நாட்கள் (Grace Days) என்று பெயர்.
4.
1. எழுதுநர்: மாற்றுச் சீட்டினைத் தயார் செய்பவர்(கடனீந்தோர்) எழுதுநர் எனப்படுகிறார்.
2. எழுதப்பெறுநர் அல்லது ஏற்குநர்:
பணம் செலுத்த வேண்டியவர், அல்லது தொகையினை செலுத்த ஒப்புக் கொண்டவர் (கடனாளி). எழுதப்பெறுநர் அல்லது ஏற்குநர் எனப்படுகிறார்.
3. செலுத்தப் பெறுநர்:
தொகையைப் பெறுபவர், செலுத்தப்பெறுநர் எனப்படுகிறார். செலுத்தப் பெறுநர் எழுதுநராககவோ அல்லது மூன்றாவது நபராகவோ இருக்கலாம்.
5.
கணக்கேடுகளில் நடைபெறும் பிழைகளைத் திருத்துவதற்காக செய்யப்படும் பதிவுகள் திருத்தப் பதிவுகள் ஆகும்.
6.
ஒவ்வொரு கணக்காண்டின் இறுதியிலும் அனைத்து பெயரளவு கணக்குகளும் முடிக்கப்படுகின்றன. ஆனால், அதன் முந்தைய ஆண்டுகளின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதலுடன் வணிகம் தொடருகிறது. எனவே, இத்தகைய கணக்குகளை நடப்பு ஆண்டிற்கு கொண்டுவர வேண்டியுள்ளது. இதற்காக நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் சொத்துகள், பொறுப்புகள் மற்றும் முதல் போன்றவைகளின் இருப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளை பதிவது தொடக்கப்பதிவு ஆகும்.
7.
மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881-ன் படி, மாற்றுச்சீட்டு என்பது குறிப்பிட்ட நபருக்கோ அவரது ஆணைக்கேற்பவோ அல்லது அந்த ஆவணத்தைக் கொண்டு வருபவருக்கோ குறிப்பிட்ட பணத்தை செலுத்துமாறு குறிப்பிட்ட நபருக்கு ஒருவர் எந்த நிபந்தனையும் இணைக்காமல் எழுத்து மூலமாகக் கையொப்பமிட்டு விடுக்கும் ஆணைத் தாங்கிய ஆவணமாகும்.
8.
1. பற்றுக் குறிப்பு என்பது ஒரு ஆவணம், சீட்டு அல்லது சரக்குத்திருப்பி அனுப்புபவருக்கு அளிக்கப்படும் அறிக்கை ஆகும்.
2. திருப்பி அனுப்பிய சரக்கின் விவரம், யாருக்கு திருப்பி அனுப்பப்பட்டதோ அவரது பெயர், திருப்பி அனுப்பப்பட்ட சரக்கின் நிகரத் தொகை மற்றும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்கள் போன்ற விவரங்களைக் பற்றுக்குறிப்பு கொண்டிருக்கும்.
9.
1. விற்பனைத் திருப்ப ஏடு, துணை ஏடுகளில் ஒன்றாகும். இது விற்பனைச் செய்த சரக்குகள் உடனடியாக ரொக்கம் அளிக்காமல் திருப்பிப் பெறப்படுவதைப் பதிவு செய்ய உதவுகிறது.
2. சரக்குகளை வாடிக்கையாளரிடமிருந்து திரும்பப் பெறுவது 'உள் திருப்பம்' எனப்படும்.
3. சொத்துக்கள் திரும்பப் பெறுவது அல்லது சரக்குகள் ரொக்கம் அளிக்கப்பட்டு திரும்பப் பெறுவது இந்த ஏட்டில் பதிவு செய்யப்படமாட்டாது.
10.
1. விற்பனை ஏட்டில் கடனுக்கு விற்கப்படும் சரக்குகள் பதியப்படும். இங்கு சரக்கு என்பது நிறுவனம் வழக்கமாக வாங்கி விற்கும் பொருளையே குறிக்கும்.
2. சரக்குகள் ரொக்கத்திற்கு விற்பனை செய்வது இதில் பதியப்படுவதில்லை.
3. இதைப்போலவே, சொத்துக்களை கடனுக்கு விற்பதுவோ அல்லது ரொக்கத்திற்கு விற்பதுவோ விற்பனை ஏட்டில் இடம் பெறாது.
4. இவ்வேடு விற்பனை நாளேடு, விற்பனைக் குறிப்பேடு, மற்றும் விற்பனைப் பதிவேடு என்றும் அழைக்கப்படுகிறது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards