11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
தாவரவியல் - தாவர வளர்ச்சியும் படிம வளர்ச்சியும்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
உதிர்தல் என்றால் என்ன?
2.
மூப்படைதலின் வகைகளை எழுதுக.
3.
தட்பப்பதனத்தின் என்றால் என்ன?
4.
நீள் பகல் தாவரம் என்றால் என்ன?
5.
முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.
6.
தாவரங்களின் வளர்ச்சியை அளவிடும் முறைகள் யாவை?
7.
உதிர்தலின் முக்கியத்துவத்தினை எழுதுக.
8.
மூப்படைதல் என்றால் என்ன?
9.
ஒளிக்காலத்துவம் என்றால் என்ன?
10.
வளர்ச்சி அளவறிதல் பற்றி எழுதுக.
11.
உருமாறும் தன்மை என்றால் என்ன?
12.
ஆகிசின் வகைகளை எழுதுக.
13.
உயிர்சார் நெருக்கடியின் செயல் நுட்பங்களை விளக்குக.
14.
15.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் யாவை ?
16.
மூடியவகை வளர்ச்சி இதில் காணப்படாது?
இலைகள், கனிகள்
வேர்
கிளை
தண்டு
17.
பெரும்பாலான தாவரங்களில் கனி உருவாதல் நிகழும் போது _________ அதிகரிக்கிறது.
ஜிப்ரில்லா பியூஜிகுராய்
ஜிப்ரலின்
ஜிப்ரலிக் அமிலம்
செல்சுவாச வீதம்
18.
ஆக்சின் எதிர்பொருட்களைத் தாவரத்தின் மீது தெளிக்கும் போது விளைவுகளை தடை செய்கிறது.
திறந்த வகை வளர்ச்சி
ஆக்சின்
2,4னு மற்றும் 2,4,5 - கூ
பக்கானே
19.
பின்வருவனவற்றுள் எந்தமுறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன?
விதையுறை செதுக்கீடு
மோதல் நிகழ்த்துதல்
அடுக்கமடைதல்
இவை அனைத்தும்
20.
ஒரு பால் மலர்கள் கொண்ட தாவரங்களில் இந்த ஹார்மோன்களால் இனமாற்றம் நிகழ்கிறது.
எத்தனால்
சைட்டோகைனின்
ABA
ஆக்சின்
21.
கப்பியின் விட்டம் 6 அங்குலம், குறிமுள்ளின் நீளம் 10 அங்குலம் மற்றும் குறிமுள் நகர்ந்த தூரம் 5 அங்குலமாக இருந்தால் தாவரத்தின் உண்மையான நீள் வளர்ச்சியைக் கண்டுபிடி.
3 அங்குலம்
6 அங்குலம்
12 அங்குலம்
30 அங்குலம்
1.
தாய் தாவர பகுதியிலிருந்து இலைகள், மலர்கள் கனிகள் மற்றும் விதைகள் உதிரும் செயலில் நிகழ்ச்சி உதிர்தல் எனப்படும். இந்த தாவர பகுதிகள் தாவரங்களிலிருந்து நிக்கப்படும் போது அந்த தாவரப்பகுதியின் வாஸ்குலா அமைப்புகள் அடைக்கப்படுவதால் நீர் மற்றும் சத்துக்களின் இழப்பு தடைசெய்யப்படுகிறது
2.
(i) ஒட்டுமொத்த மூப்படைதல்
(ii) மேற் பகுதி மூப்படைதல்
(iii) இலை உதிர்வு வழி மூப்படைதல்
(iv) படிப்படியாக மூப்படைதல்
3.
ஒளிக் கால அளவை தவிர மலர்தலை உண்டாக்க சில தாவரங்களின் ஆரம்பகால வளர்நிலையின் போது குறைந்த அளவு வெப்பநிலை ஏற்பு ஒன்று தேவைப்படுகிறது. இரு பருவ மற்றும் பல பருவ தாவர சிற்றினங்களில் வெப்ப நிலைக்கு 0'C முதல் 50C) உட்படுத்தி மலர்தல் தூண்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சி தட்பப்பதனம் (vernalization) எனப்படும்.
4.
தீர்வுக்கட்ட ஒளிக்கால அளவைவிட மலர்தலுக்கு அதிக ஒளிக்காலம் தேவைப்படும் தாவரங்கள் நீள் பகல் தாவரங்கள் அல்லது குறு இருள் தாவரங்கள் என்படுகினற்ன,
எடுத்துக்காட்டு : பட்டாணி, பார்லி , ஓட்ஸ்.
5.
| முழு வளர்ச்சி வீதம் | ஒப்பீட்டு வளர்ச்சி வீதம் |
|---|---|
| குறிப்பிட்ட காலத்தில் ஒரு தாவர உறுப்பு ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும்போது ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை இது குறிக்கிறது. | குறிப்பட்ட காலத்தில் ஒரு தாவரத்தில் இரு நிலைகளில் உள்ள ஓர் உறுப்பில் ஏற்படும் வளர்ச்சி அதிகரிப்பை ஓப்பிட்டு அளவிடுதலை இது குறிக்கிறது |
6.
நேரடியாக வளர்ச்சியை அளத்தல் - சாதாரண அளவுகோல் முறை
படிநிலை 1 : சாதாரண அளவுகோல் எடுத்துக்கொள்.
படிநிலை 2 : தாவரத்தின் தரைப்பகுதி தண்டு முதல் வளர்நுனி வரை அளவீடு செய்
படிநிலை 3 : குறிப்பிட்ட கால இடைவெளியில் தாவரத்தின் வேர் மற்றும் தண்டின் நீள் வளர்ச்சி , குறுக்கு வளர்ச்சி இண்டியன் இங்க் (ஜனேயை ஜமே )பயன்படுத்திக் குறித்துக் கொண்டு அளவீடு செய்.
7.
1. தாவரத்தின் இறந்த பகுதிகளான முதிர்ந்த இலைகள் மற்றும் கனிகள் உதிர்தலினால் பிரிகிறது.
2. இது கனிகள் பரவுதலுக்கும் தாவர வாழ்க்கை சுழற்சியை தொடர்வதற்கும் உதவுகிறது.
3. கோடை காலத்தில் இலையுதிர் தாவரங்களின் இலைகள் உதிர்வதால் நீரை தக்க வைக்க இந்த நிகழ்ச்சி உதவுகிறது
8.
தாவரங்களின் வாழ்க்கை சில தொடர் நிகழ்ச்சிகளைக் கொண்டது. அதாவது விதை முளைத்தல், இளம் நிலை , முதிர்ச்சியடைத்தல், மூப்பு நிலை , மற்றும் இறப்பு , இதில் மூப்பு நிலை தாவரங்களின் மூப்படைதல் என்பது , உரு அமைத்தல் வாழ்வியல் செயல்கள் ஆகியவை படிப்படியாக குறைவதால் ஏற்படும் ஒட்டுமொத்த மூப்படைதலாகும் . விலங்குகளை போல் இல்லாமல் தாவரங்களில் தொடச்சியாக புதிய உறுப்புகளை உருவாக்குவதால் முதிர்ச்சியடைந்த உறுப்புகளில் அதிகமான சத்துகளை வெளியேற்றுகிறது.
9.
மரங்கள் மலர்தலை தோற்றுவிப்பதற்கு பல வருடங்கள் எடுத்துக் கொள்கிறது. அதே சமயம் ஒரு பருவத் தாவரங்கள் ஒரு சில மாதங்களுக்குள் மலர்ந்து விடுகிறது. ஒவ்வொரு தாவரத்திற்கும் தழை உடல் வளர்ச்சியை முடிப்பதற்கு குறிப்பிட்ட கால அளவு தேவைப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் இனப்பெருக்க வளர்ச்சி தாவரத்தின் உள் அமைந்த உயிரியல் கடிகாரத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
10.
(i) நீள்வாக்கில் அல்லது குறுக்களவில் அதிகரித்தல் (வேர் மற்றும் தண்டு)
(ii) உலர் எடை அல்லது ஈர எடை அதிகரிக்கிறது
(iii) அளவு மற்றும் பருமன் அதிகரித்தல் (கனிகள் மற்றும் இலைகள் )
(iv) செல்கள் எணிக்கையில் அதிகரித்தல்.
11.
தாவரங்களில் சூழ்நிலை அல்லது வளர்ச்சி நிலைகளுக்கு தகுந்தவாறு பல்வேறு உறவை அமைப்புகள் தோன்றுகிறது.இத்தகைய திறனுக்கு உருமாறும் தன்மை (பிளாஸ்டிசிடி என்று பெயர்). எடுத்துக்காட்டு ஹெட்டிரோ∴பிலி (ஈருவ இலை ) காணப்படும் தாவரங்கள் பருத்தி மற்றும் கொத்தமல்லி இத்தகைய தாவரங்களில் இளந்தவரா இலையின் உருவ அமைப்பும் அதே தாவரத்தின் முதிர்ந்த தாவர இலையின் உருவ அமைப்பும் வேறுபாட்டுக் காணப்படுகிறது.
மற்றொரு எடுத்துக்காட்டாக ரனன்குலஸ் (Butercup) எனும் தாவரத்தில் சூல்நிலைக்குத் தகுந்தவாறு இரு வேறுபட்ட உருவ அமைப்புடைய இலைகள் உருவாகிறது, இத்தாவரத்தில் நீரில் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் , நீர் பரப்பிற்கு மேல் உள்ள இலைகளின் உருவ அமைப்பும் வேறுபடுகிறது. இத்தகைய ஹெட்டிரோ∴பிலி உருமாறும் (Plasticity) தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
12.
ஆகிசின்கள் பொதுவாக இரண்டு வகைப்படும். அவை இயற்கை அக்சின் மற்றும் செயற்கை ஆகிசின். அவை கிழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.
(i) பரவும் ஆகிசின் (Free auxin )
தாவரத் திசுக்களிலிருந்து வெளியேறி எளிதில் பரவும் தன்மை கொண்டது. எடுத்துக்காட்டு: IAA
(ii) பரவலற்ற ஆகிசின் (bound auxin )
இவை எளிதில் பரவும் தன்மை அற்றது. எடுத்துக்காட்டு - அஸ்பார்டிக் அமிலம்.
(iii) முன்னோடிச் சேர்மம் (Precursor)
IAA -வின் முட்டோடிச் சேர்மம் டிரிப்டோ∴பன் என்ற அமினோஅமிலம் ஆகும். மேலும் துத்த நாகம் எனும் தனிமம் இதன் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.
(iv) வேதி அமைப்பு (chemical structure)
இன்டோல் அசி டிக் அமிலம் என்ற சேர்மத்தின் வேதி அமைப்பை பெற்றிருக்கிறது.
13.
உயிரியல் சார் நெருக்கடிகள்:
1. பிற உயிரினங்களான வைரஸ்கள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள், பூச்சிகள், களைகள், போட்டித் தாவரங்கள் போன்றவைகளால் தாவரங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகளே உயிரியல் சார் நெருக்கடி எனப்படுகிறது.
2. கால்நடைகளின் தீவனத்திற்காகவும் எரிபொருள் தேவைக்காகவும், வேளாண்மை பயன்பாட்டிற்காகவும்,மனிதர்களால் தாவரங்கள் வெட்டப்படுதலும் உயிரியல் சார் நெருக்கடிக்கு காரணமாக உள்ளன.
3. சுற்றுச்சூழலில் எப்பொழுதும் காணப்படும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் புழுக்கள் ஆகியவற்றால் ஏற்படும் உயிரியல் சார் நெருக்கடி செயல்திறன் மிக்க நெருக்கடிகள் என்ற அழைக்கப்படுகின்றன.
அல்லிலோபதி:
1. ஓர் உயிரினம் உற்பத்தி செய்யும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயிரி வேதிப்பொருள்கள் பிற உயிரினங்களின் முளைத்தல், வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இது அல்லிலோபதி என்றழைக்கப்படும்.
2. இவை நன்மைத் தருபவை நேர்மறை அல்லிலோபதி அல்லது தீங்களிப்பவை எதிர்மறை அல்லிலோபதி-களாக உள்ளன.
3. இத்தகைய அல்லிலோ வேதிப்பொருட்கள் இலையிலிருந்து கசியும் நீர் தரையை அடைந்த பிறகும் மற்றும் வேரிலிருந்தும் பெறப்படுகின்றன.
4. அல்லிலோபதி என்ற கிரேக்க சொல் அல்லிலோன்-ஒருவருக்கொருவர் மற்றும் பாத்தோஸ்-பாதிக்க எனவும் முதன்முதல் ஹின்ஸ்மோலிஸ் என்பவரால் 1937-ல் பயன்படுத்தப்பட்டது.
5. அல்லிலோபதி விளைவுகளைத் தாவரங்கள் பயிர்களின் மீதும் பயிர்களைத் தாவரங்களின் மீதும் ஏற்படுத்தலாம்.
6. கருப்பு பாதாம் (ஜக்லான் நைக்ரம்) நன்கு அறியப்பட்ட அல்லிலோபதி தாவரங்களில் மீதும் ஏற்படுத்தலாம்.
7. இக்கருப்பு பாதாமில் ஜக்லான் என்ற வேதிப்பொருள் உள்ளன. இது ஒரு சுவாச தடுப்பான்.
8. சொலோனேசி குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்காளான தக்காளி, மிளகாய் மற்றும் கத்திரிக்காய் ஜக்லானுக்கு எளிதில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை.
9. இத்தகையத் தாவரங்கள் அல்லிலோ வேதிப்பொருள்களுடன் சேரும்போது வாடல், பச்சைய சோகை இறப்பு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.
10. தற்போது அல்லிலோபதி மரங்களின் பட்டியலில் பெருமரம் (அய்லாந்தஸ் அல்டிசிமா) சேர்க்கப்பட்டுள்ளது.
11.அய்லான்தோன் ஓர் அல்லிலோ வேதிப்பொருள். இது அய்லான்தஸ் வேரிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
12.சோளத்தில் காணப்படும் சொர்கோலான் என்ற அல்லிலோ வேதிப்பொருள்கள் அல்லிலோபதி செயல்தன்மை கொண்டவை.
13.இது பெரும்பாலும் சோளத்தின் சிற்றினங்களின் வேர்க்கசிவுகளில் காணப்படும்.
14. மக்காசோளத்தின் வேர்க் கசிவு சினோபேடியம் அல்பம் மற்றும் அமரான்தஸ்ரெட்ரோப்ளக்ஸ்ஸஸ் போன்ற சிலகளைத் தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கின்றன.
15.ஓட்ஸ் (அவினா ஃபடுவா) தாவரத்தின் விதைக்கசிவு கோதுமை விதைமுளைத்தலை பாதிக்கின்றன.
(ii) நோய் உருவாக்கம்:
நுண்ணியர்களின் விளைவால் தாவரங்களில் நோய் உண்டாகின்றன. உதாரணமாக சாந்தோமோனாஸ் சிட்ரி.
14.
15.
சைட்டோகைனின் வாழ்வியல் விளைவுகள் :
1. ஆக்சின் (IAA) இருக்கும் போது செல் வகுப்பை தூண்டுகிறது.
2. ஒளி உணரும் தன்மை பெற்ற விதைகளில் அதன் உறக்கத்தை நீக்கி முளைக்கும்படி செய்கிறது. எடுத்துக்காட்டு: புகையிலைத் தாவரம்.
3. ஆக்சின் இருக்கும் போது, பட்டாணி தாவரத்தில் பக்க மொட்டுகளின் வளர்ச்சி தூண்டப்படுகிறது
4. சைட்டோகைனின் கனிம ஊட்ட இடப்பெயர்ச்சி அடையச் செய்து தாவரங்கள் வயதாவதை தாமதப்படுத்துகிறது. இதற்கு ரிச்மாண்ட் லாங்க் விளைவு (Richmond lang effect ) என்று பெயர்.
5. சைட்டோகைனின் புரத சேர்க்கை விதத்தை அதிகப்படுத்தவும் , கற்றை இடைக்கேபியம் உருவாதலைத் தூண்டவும் , புதிய இலைகள் , பசுங்கணிகம் மற்றும் பக்க கிளைகள் உருவாதலை தூண்டவும் உதவுகிறது.
6. தாவரங்கள் மிகத் துரதமாக கரைப் பொருட்களை சேகரமடையச் செய்ய உதவுதல்.
16.
(a)
இலைகள், கனிகள்
17.
(d)
செல்சுவாச வீதம்
18.
(b)
ஆக்சின்
19.
(a)
விதையுறை செதுக்கீடு
20.
(c)
ABA
21.
(a)
3 அங்குலம்
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards