11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
எதிர் சவ்வூடு பரவல் என்றால் என்ன?
2.
இரண்டாம் நிலை வளர்ச்சி என்றால் என்ன?
3.
ஹாட்ரோசென்ட்ரிக் வாஸ்குலக் கற்றை என்றால் என்ன?
4.
வேரிதூவி செல்கள் என்றால் என்ன?
5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A,B,C பாகத்தினை குறிக்கவும்.
6.
பறவை வளர்ப்பின் பயன்கள் யாவை?
7.
ஐரிஸில் காணப்படும் இருவகை தசைகள் யாவை?
8.
"இன்சுலின் எதிர்ப்பு" என்றல் என்ன? அதன் அறிகுறிகள் யாவை?
9.
கூட்டு மீன்வளர்ப்பு என்றால் என்ன?
10.
ஏட்ரியல் நேட்ரியூரிட்டிக் காரணியின் செயல்பாட்டினை குறிப்பிடுக.
11.
ஆல்கஹாலிக் நொதித்தலின் தொழிற்சாலை பயன்களை எழுதுக.
12.
ஒடுக்க ஆக்ஸிஜனேற்ற வினையை எழுதுக.
13.
கற்றைசார் கேம்பியம் மற்றும் கற்றையிடைக் கேம்பியத்திற்கு இடையேயான வேறுபாட்டை எழுதுக?
14.
பட்டைத் துளை நீராவிப் போக்கு பற்றி எழுதுக.
15.
போட்டி நொதிச் செயல் ஒடுக்கிகள் என்பவை யாவை?
16.
சினாப்ஃசிஸ் என்றால் என்ன?
17.
உட்கருவின் தனித்துவம் யாது?
18.
வகைப்பாட்டு துணைக்கருவிகள் என்பது யாவை ?
19.
ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.
1.
நீர் மூலக்கூறுகள் குறைவான அடர்வுள்ள இடத்திலிருந்து (ஹைப்பர்டானிக்) அதிக அடர்வுள்ள இடத்திற்கு (ஹைப்பர்டானிக்) தேர்வு கடத்து சவ்வின் வழியாகச் செல்வது எதிர் சவ்வூடு பரவல் எனப்படும்.
2.
வேர், தண்டின் குறுக்களவு அதிகரிக்கும் நிகழ்வு இரண்டாம் நிலை வளர்ச்சி அல்லது அகலப்போக்கு வளர்ச்சி என்று பெயர். இவ்வளர்ச்சியானது வாஸ்குலக் கேம்பியம் ஆகிய பக்கவாட்டு ஆக்குத்திசுவினால் நடைபெறுகிறது.
எடுத்துக்காட்டு:
1. ஜிம்னோஸ்பெர்ம்கள்
2. பெரும்பாலான ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
3.சில ஒருவிதையிலை தாவரங்கள்
3.
ஃபுளோயம் சைலத்தை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுவது ஹாட்ரோசென்டரிக் (அல்லது) ஃபுளோயம் சூழ் வாஸ்குலக்கற்றை எனப்படும்.
எடுத்துக்காட்டு:பாலிபோடியம்.
4.
1.வேரின் புறத்தோல் அடுக்கு இரண்டு வகையான புறத்தோல் செல்களைக் கொண்டுள்ளது. அவை நீண்ட செல்கள் மற்றும் குட்டை செல்கள்,குட்டைசெல்கள் வேர்தூவி செல்கள் என அழைக்கப்படுகின்றன.
2. இவை வேர்த்தூவிகளாக நீட்டிக்கப்படுகின்றன.
5.
A -ஒருங்கிணைந்த புரதம் அல்லது இடைச் செருகு புரதம்.
B-பாஸ்போலிப்பிட் இரட்டை அடுக்கு.
C-கிளைக்கோ லிப்பிட்
6.
1. பறவை வளர்ப்பகம் உருவாக்கவும் மேலாண்மை செய்யவும் அதிக மூலதனம் தேவையில்லை.
2. அதிகளவிலான இடப்பரப்பு தேவையில்லை.
3. குறைந்த காலத்தில் அதிகளவு லாபம் தரக்கூடியது.
4.புதிய ஊட்ட சத்து மிக்க பொருட்களை தருகின்றன. இதற்கு உலக அளவிலான தேவை அதிகம் உள்ளது.
5. அதிகளவு வேலை வாய்ப்பினை உண்டாக்கப்பயன்படுகிறது.
7.
1. வட்டத்தசைகள் - அதிக ஒளிச்செறிவில் இத்தசைகள் சுருங்குவதால் வழிபாவையின் அளவு குறைந்து, உள்ளே செல்லும் ஒளியின் அளவு கட்டுப்படுத்துகிறது.
2. ஆரத்தசைகள்-குறைந்த ஒளிச் செறிவில் இத்தசைகள் சுருங்கி விழிப்பாவையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் உள்ளே செல்லும் ஒளியின் அளவு அதிகரிக்கிறது.
8.
இவ்வ்வகையில் இன்சுலின்க்கான உணர்வுத்திறன் குறைவாக இருப்பதால் ஏற்படுகின்றது. இதற்கு "இன்சுலின் எதிர்ப்பு" என்றும் பெயர். இந்நோயின் அறிகுறிகளாவன பாலியூரிய (மிகை சிறுநீர்ப்போக்கு), பாலிஃபேஜியா (மிகையான உணவு உட்கொள்ளுதல்), பாலிடிப்சியா (அதிகத் தாகம் காரணமாக மிகையான நீர்மப்பொருட்கள் அருந்துதல்), கீட்டோசிஸ் (கொழுப்பு சிதைந்த குளுக்கோஸாக மாறுவதால் தோன்றும் கீட்டோன்கள்), குளுக்கோ நியோஜெனிசிஸ் (கார்போஹைட்ரேட் அல்லது மற்றும் கொழுப்பில் இருந்து குளுக்கோஸ் தோன்றுதல்) ஆகியன.
9.
1. வெவ்வேறு சீற்றினங்களைச் சார்ந்த சில மீன்களை குறிப்பிட்ட விகிதத்தில் குளத்தில் ஒன்றாக வளர்க்கும் முறை கூட்டு மீன் வளர்ப்பு அல்லது பலமீன் வளர்ப்பு ஆகும்.
2. இம்முறையின் நன்மைகள்.
3. கிடைக்கக் கூடிய சூழ்நிலைக்கூறுகள் முழுவதையும் பயன்படுத்துதல்.
4. பொருத்தமான சீற்றினங்கள் ஒன்றரை ஒன்று பாதிக்காது.
5. இவ்வளர்ப்பில் உள்ள சிற்றினங்களுக்கிடையே போட்டி இருக்காது.
6. கட்லா கட்லா, லேபியோரோஹிட்டா, சிர்ரைனா மிர்காலா (மேற்பரப்பில் உணவீட்டும் வகை) போன்றன கூட்டு மீன் வளர்ப்பு முறையில் வளர்க்கும் மீன்கள் ஆகும்.
10.
இது சிறுநீரகத்தை அடைந்து அங்கு அயனிகள் வெளியேற்றத்தையும் கிளாமருலஸிக்குள் இரதம் பாய்வதையும் அதிகரிக்கின்றது. மேலும் இவை இரத்த குழாய் விரிவாகியாகச் செயல்பட்டு உட்செல்ல கிளாமருலார் தமனிகளை விரிவடையச்செய்கின்றன அல்லது வெளிச்செல் கிளாமருலார் தமனிகள் மீது இரத்த குழாய் சுருக்கியாக செயல்பட்டு அவற்றை சுருங்கச்செய்கின்றன.
11.
1.ரொட்டி, கேக், பிஸ்கட்டுகள் தயாரிப்பதற்குப் பேக்கரிகளில் பயன்படுகிறது.
2.ஒயின் மற்றும் ஆல்கஹாலிக் மதுபானங்கள் தயாரிக்க மதுபானத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
3.வினிகர், மற்றும் டானிங்கள் தோல், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
12.
\(NAD++2e^-+2H+ \rightarrow NADH+H+\)
\(FAD+2e+2H+\rightarrow FADH_2\)
ஆக்ஸிஜனேற்ற நிலையில் உள்ளசுஹானு (நிகோட்டினமைடு அடினைன் டைநியுக்ளியோடைடு) மற்றும் FAD (ப்ளேவின் அடினைன் டைநியூக்ளியோடைடு) எலக்ட்ரான்கள் ஒன்று அல்லது இரண்டு ஹைட்ரஜன் அயனிகளை (புரோட்டான்கள்) ஏற்றுக் கொண்டு முறையே NADH+H+ மற்றும் FADH2 என்ற ஒடுக்க நிலைக்கு மாறுகின்றன.
13.
| கற்றைசார் கேம்பியம் | கற்றையிடைக் கேம்பியம் |
| (i) சைலம் மற்றும் ஃபுளோயத்திற்கு இடையில் காணப்படும். |
இரு வாஸ்குலார் கற்றைகளுக்கிடையே காணப்படும். |
| (ii) புரோகேம்பியத்தில் இருந்து தோன்றுகிறது. | மெடுல்லா கதிர்களிருந்து தோன்றுகிறது. |
| (iii) தோற்றத்தில் இது முதல்நிலை ஆக்குத்திசுவின் ஒரு பகுதியாகும் |
தோற்றம் முதலே இது இரண்டாம் நிலை அக்குத்திசுவின் ஒரு பகுதியாகும். |
14.
தாவரங்களில் இரண்டாம் நிலை வளர்ச்சி நடைபெறுவதன் காரணமாகப் புறத்தோலுக்கு பதிலாக பெரிடெர்ம் உருவாகிறது.
தண்டின் உள்ளமைந்த உயிருள்ள செல்களுக்கும் வெளிப்புற வளிமண்டலத்திற்கும் வாயுப்பரிமாற்றம் நடைபெறுவதற்கு ஏதுவாகச் சிறிய லென்ஸ் வடிவத் துளைகள் தண்டின் மேற்பரப்பில் காணப்படுகின்றன.
இவையே லென்டிசெல்(Lenticels) அல்லது பட்டைத் துளைகள் எனப்படும்.
15.
தளப்பொருளின் அமைப்பை ஒத்த சில மூலக்கூறுகள் ஊக்குவித்து தளத்தில் பிணைவுற்று நொதியின் செயலை ஒடுக்கலாம்.இவை போட்டி நொதிச் செயல் ஒடுக்கிகள் எனப்படும்.
எ.கா:
1.பசுங்கணிகத்தில் CO2 வை அதனை ஏற்கும் தளப் பொருளுடன் நிலைநிறுத்த உதவும் நொதி (RUBISCO)ஆகும்.(ரைபுலோஸ் பிஸ்பாஸ்ஃபேட் கார்பாக்ஸிலேஸ்).
(i)நொதியின் போட்டி R ஒடுக்கிகளாக CO2 மற்றும் O2 திகழ்கின்றன.
(ii) CO2 நிலையில் ஒருவிதமாகவும், O2 அதிகம் உள்ள நிலையில் வேறுவிதமாகவும் இந்நொதி செயல்படுகிறது.
16.
1.மியாசிஸ் I, புரோஃபேஸ் I, சைக்கோட்டீன் துணை நிலையில் ஒத்திசைவு குரோமோசோம்கள் இணை சேர்கின்றன.
2.இதற்கு சினாப்சிஸ் என்று பெயர்.
3.இந்நிகழ்வு சினாப்டினிமல் தொகுப்பின் உதவியால் ஏற்படுகிறது.
17.
1.செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
2. செல்பகுப்படையும் போது மரபுச் செய்திகள் நகலாக்கம் செய்யபப்ட்டு ஒரு செல்லிலிருந்து மறறொரு செல்லிற்கு எடுத்துச் செல்லபப்டுகிறது.
3.பாலினப் பெருக்கத்தின் போது கேமீட்டுகளின் இணைவு நிகழ்ந்து புதிய தோன்றல்களுக்கு மரபுப் பண்புகளை கடத்துகிறது.
18.
வகைப்பாட்டு கருவிகள் என்பது உயரினங்களை இனம் கண்டறிய வரிசை படுத்த உதவும் சில சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் , வழி முறைகள் , செயல் நுட்பங்கள் போன்றவை ஆகும்.
2. இவை வகைப்பாட்டியலை பற்றி அறிய உதவும்.
19.
1. குட்டியிட்டு பால் கொடுக்கும் பால் சுரப்பி வயிற்றின் அடிப்புறத்தில் உள்ளது.
2. வேட்டையாடி உணவுதேடும் மாமிச உண்ணி.
3. மாமிசத்தை உன்ன கோரைப் பற்கள் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது.
4. கால்விரல்களில் உறுதியான கூர்மையான நகங்கள் உண்டு.
5. வலுவான தாடைகளைப் பெற்றுள்ளது.
6. வெட்டுப் பற்கள் சிறியதாகவும், குறைவான பயன் உடையதாக உள்ளது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards