11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 13/09/2019
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள்
11ஆம் வகுப்பு Commerce / வணிகவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Commerce / வணிகவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Commerce Test1.
ஏற்றுமதியாளரால் சுங்க நடைமுறைகளைப் பின்பற்ற நியமிக்கப்படும் முகவர்
அகற்றீட்டு முகவர்
அனுப்புகை முகவர்
கழிவு முகவர்
தன் பொறுப்பு முகவர்
2.
3.
இறக்குமதியாளரால் தயாரிக்கப்பட்டு சரக்கை வாங்குவதற்கு ஏற்றுமதியாளருக்கு அனுப்பப்படும் ஆவணம் ________ ஆகும்.
இடாப்பு
சரக்காணை
விசாரணை
கப்பல் வாடகை முறி
4.
STC யின் விரிவாக்கம்
மாநில பயிற்சி மையம்
மாநில பயிற்சி சபை
மாநில வணிக மையம்
மாநில வணிக கழகம்
5.
EPC யின் விரிவாக்கம்
ஏற்றுமதி செயல்முறை குழு
ஏற்றுமதி வளர்ச்சிக்குழு
ஏற்றுமதி சரக்கேற்றி குழு
ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்
6.
நாணய உறுதிக் கடிதம் என்றால் என்ன?
7.
ஏற்றுமதி வளர்ச்சி நிறுவனங்கள் மூன்றினை குறிப்பிடுக.
8.
சரக்காணை என்றால் என்ன?
9.
கப்பல் இரசீது என்றால் என்ன?
10.
கப்பல் வாடகை முறி என்றால் என்ன?
11.
சரக்கானையின் உள்ளடக்கங்கள் யாவை? ( ஏதேனும் 3 )
12.
ஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களைப் பற்றி விளக்கி எழுதுக.
13.
1.
(b)
அனுப்புகை முகவர்
2.
(b)
3.
(a)
இடாப்பு
4.
(d)
மாநில வணிக கழகம்
5.
(b)
ஏற்றுமதி வளர்ச்சிக்குழு
6.
இறக்குமதியாளர் மீது ஏற்றுமதியாளர் வரையும் மாற்று முறை உண்டியல் தன்னிடம் வரும் போது அதற்குப் பணம் தருவதாக இறக்குமதியாளர் வங்கி அளிக்கும் உறுதி மொழி அடங்கிய கடிதமே நாணய உறுதி கடிதம். நன்கு அறிந்த இறக்குமதியாளரின் பணம் செலுத்தும் திறனை அறிய இக்கடிதம் பெறப்படுகிறது.
7.
(i) மாநில வாணிகக் கழகம்
(ii) இந்தியா வணிக மேம்பாட்டு நிறுவனம்
(iii) சரக்குகள் வாரியம்
(iv) உலோகங்கள் மற்றும் கனிம வர்த்தகக் கழகம்
(v) ஏற்றுமதி மற்றும் கடன் பொறுப்புறுதி கழகம்
(vi) ஏற்றுமதி ஆய்வுக் குழு.
8.
சரக்காணை என்பது சரக்கை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு ஆதாரம் ஆகும். இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப் பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்காணையை தானோ அல்லது தன்முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார். சரக்காணை ரெரண்டு நகல்களில் தயாரிக்கப்பட்டு ஒரு நகலை ஏற்றுமதியாளருக்கு அனுப்பி விட்டு மறறொன்றை இறக்குமதியாளர் தன்னிடம் வைத்துக் கொள்வார்.
9.
கப்பல் இரசீது என்பது கப்பல் உரிமையாளரோ அல்லது அவரது முகவரோ குறிப்பிட்ட சரக்கைப் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட துறை முகத்தில் நல்ல முறையில் கொண்டு சேர்க்கப்படும் என்பதற்கான சான்று ஆகும். இதில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
(i) கப்பலின் பெயர்
(ii) சரக்கு அனுப்பப்படும் நாள்
(iii) சரக்கேற்றும் இடம்
(iv) சேரும் துறைமுகம்
(v) ஏற்றுமதியாளர் பெயர் மற்றும் முகவர்
(vi) இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவர்
(vii) காட்டுங்கள் எண்ணிக்கை
(viii) சரக்கின் தன்மை
(ix) அடையாளக் குறியீடுகள்
(x) செலுத்த வேண்டிய சத்தம்.
10.
(i) 'கப்பல் வாடகை முறி' என்பது கப்பல் உரிமையாளருக்கும் ஏற்றுமதியாளருக்கும் அல்லது அவரது முகவருக்கும் இடையே ஒரு முழு கப்பலையே அல்லது கப்பலின் ஒரு பகுதியையோ குறிப்பிட்ட கப்பல் பயணத்திற்கோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ சரக்கை ஏற்றிச் செல்ல செய்து கொள்ளும் ஓர் உடன்பாடு ஆகும்.
(ii) குறிப்பிட்ட கப்பல் பயணத்திற்கு மட்டும் உடன்பாடு செய்து கொண்டால் அது கப்பல் பயண வாடகை முறி எனப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் உடன்பாடு செய்து கொண்டால் அது கால வாடகை முறி எனப்படும்.
(iii) இதில் கப்பலின் பெயர், சரக்கேற்றும் இடம், சேரவேண்டிய துறைமுகம், ஏற்றுமதியாளரின் பெயர், மற்றும் சத்தம் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
11.
ஒரு சரக்காணையில் கீழ்கண்ட விவரங்கள் அடங்கி இருக்கும்.
(i) அனுப்பப்பட்ட பொருளும் அளவு
(ii) பொருட்களின் வடிவமைப்பு
(iii) விலை
(iv) கப்பல் ஏற்றுமதிக்கான தன்மை
(v) ஏற்றும் முறை
(vi) விநியோகக் காலம்
(vii) கட்டணம் செலுத்தும் முறை.
12.
ஏற்றுமதி ஆவணங்கள்:
சரக்கு தொடர்பான ஆவணங்கள்: சரக்காணை, தோற்றுவாய் சான்றிதழ், ஏற்றுமதி ஆய்வு சான்று,
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள்: கப்பல் துணைத்தலைவர் இரசீது கப்பல் ஆணை கப்பல் இரசீது, கடல்சார் காப்பீட்டு திட்டாவணம், வணிக தூதுவர் இடாப்பு, ஏறயில் ரசீது (லாரி ரசீது),
பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள்:
நாணய உறுதி கடிதம், வாணிக இடாப்பு, மாற்றுச்சீட்டு, வங்கிச் சான்று செலுத்துகை.
சரக்கு தொடர்பான ஆவணங்கள்:
(i) சரக்காணை: இறக்குமதியாளர் வியாபார விசாரணைக்குப்பிறகு சரக்கை வாங்குவதற்கான சரக்காணையை தானோ அல்லது தன் முகவர் மூலமோ ஏற்றுமதியாளருக்கு அனுப்பி வைக்கிறார். சரக்காணை என்பது சரக்கை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு ஆதாரம் ஆகும். சரக்காணை இரண்டு நகல்களில் தயாரிக்கப்பட்டு ஒரு நகலை ஏற்றுமதியாளருக்கு அனுப்பி விட்டு மற்றொன்றை இறக்குமதியாளர் தன்னிடம் வைத்துகொள்வார். சரக்காணை மூன்று வகைப்படும்.
1. வெளிப்படை சரக்காணை: இவ்வகை சரக்காணையில் சரக்கின் வகை அளவு, தரம், விலை, கட்டுமம் முறை ஆகியவை ஏற்றுமதியாளரின் விருப்பத்திற்கு விடபப்ட்டிருக்கும்.
2. வரையறுக்கப்பட்ட சரக்காணை: இவ்வகை சரக்காணையில் இறக்குமதியாளரே சரக்கின் வகை, அளவு, தரம், விலைகட்டும் முறை ஆகியவற்றை குறிப்பிட்டிருப்பார் அதை ஏற்றுமதியாளர் முழுமையாகக் கடைபிடிக்க வேண்டும்.
3. உறுதி செய்யும் சரக்காணை: இவ்வகை சரக்காணையை இறக்குமதியாளரோ அவரது முகவரோ உறுதி செய்வர். இறுதி சரக்காணை பின்னர் அனுப்பப்படும்.
(ii) தோற்றுவாய் சான்றிதழ்: இறக்குமதி ஏற்றுமதி வணிக நடைமுறையில் தோற்றுவாய்ச்சான்று மிக முக்கிய ஆவணமாகும். இச்சான்று ஏற்றுமதி செய்யப்படும் பொருள் குறிப்பிட்ட நாட்டில்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்ற உறுதிமொழியை விளம்புகிறது. இந்தியாவில் வணிக வங்கிகள், இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பு, ஏற்றுமதி வளர்ச்சிக்குழு போன்றவை இச்சான்றை வழங்க அதிகாரம் பெற்ற நிறுவனங்களாகும். இச்சான்று இருமுனை வணிக ஒப்பந்தம் உள்ள நாடுகளில் இறக்குமதியாளர், இறக்குமதி தீர்வையிலிருந்து சலுகை பெற உதவுகிறது.
(iii) ஏற்றுமதி ஆய்வு சான்று: பொருட்கள் கட்டுமம் செய்யப்பட்ட பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி ஆய்வு முகாமைக்கு விண்ணப்பித்து சான்று பெற வேண்டும். ஏற்றுமதி ஆய்வாளர் கட்டுமமுறையில் திருப்தி அடைந்தால் சான்று ஒன்றை வழங்குவார். இச்சான்று பொருட்களை காப்பீடு செய்வதற்கு பயன்படும்.
சரக்கு அனுப்புகை தொடர்பான ஆவணங்கள்:
(i) கப்பல் தலைவர் இரசீது (Mates Receipt) கப்பல் தலைவர் அல்லது அவரது உதவியாளர் கப்பலில் சரக்கை பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமாக வழங்கபப்டும் இரசீது ஆகும். இதில் சரக்கின் அளவு, கட்டுமங்களின் எண்ணிக்கை, கட்டும நிபந்தனைகள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். கப்பல் தலைவர் அல்லது அவரது உதவியாளர் சரக்கின் கட்டுமத்தில் திருப்தி அடைந்தால், தூய இரசீது வழங்குவார். கட்டுமத்தில் குறைபாடு இருப்பின், குறைபாடுடைய இரசீது பெற வேண்டும். இல்லையெனில் காப்பீட்டு நிறுவனம், இடர் ஏற்பட்டால் எந்த பொறுப்பையும் ஏற்காது.
(ii) கப்பல் இரசீது (Bill of Lading): கப்பல் இரசீது என்பது கப்பல் உரிமையாளரோ அல்லது அவர் முகவரோ குறிப்பிட்ட சரக்கை பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட துறைமுகத்தில் நல்ல முறையில் கொண்டு, சேர்க்கப்படும் என்பதற்கான சான்று ஆகும். இதன் கீழ்கண்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
1. கப்பலின் பெயர்
2. சரக்கு அனுப்பப்படும் நாள்
3. சரக்கேற்றுமிடம்
4. சேரும் துறைமுகம்
5. ஏற்றுமதியாளர் பெயர் மற்றும் முகவரி
6. இறக்குமதியாளர் பெயர் மற்றும் முகவரி
7. கட்டுமங்களின் எண்ணிக்கை
8. சரக்கின் தன்மை
9. அடையாளக் குறியீடுகள்
10. செலுத்த வேண்டிய சத்தம்
(iii) வணிகத் தூதுவர் இடாப்பு (Consular Invoice): பல நாடுகளில் இறக்குமதி வாரியணைத்து சரக்கின் மதிப்பின் அடிப்படியில் விதிக்கப்படுகிறது. இடாப்பில் கண்டுள்ள தொகை சரியானதுதானா என்று இறக்குமதியாளர் நாட்டிலுள்ள சுங்க அதிகாரிகள் முதலில் உறுதி செய்துகொள்ள விரும்புவர். இதன்படி இறக்குமதியாகும் சரக்கின் மதிப்பு சரியானதுதான் என்று சான்று பகரக்கூடிய ஆவணமே வாணிகத்
தூதுவர் இடாப்பு ஆகும். இதற்கான படிவத்தில் ஏற்றுமதியாளர் விவரங்களை பூர்த்தி செய்து அவர் நாட்டில் பணிபுரியும் (இறக்குமதியாளர் நாட்டு) வாணிகத் தூதுவரிடம் கையொப்பம் பெற்று இறக்குமதியாளருக்கு அனுப்பி வைப்பர். இறக்குமதி நாட்டு சுங்க அதிகாரிகள் சரக்கு கட்டுமத்தை திறந்து பார்க்காமலே இடாப்பில் குறிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் சுங்கத்தீர்வை விதிப்பர்.
(iv) கப்பல் ஆணை (Shipping Order): அனுப்புகை முகவர் கப்பல் நிறுவனத்தை அணுகி சரக்கை அனுப்புவதற்கான இடத்தை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். முன்பதிவு செய்த பிறகு கப்பல் நிறுவனம் கப்பல் ஆணையை வழங்கும். இதில் கப்பல் தலைவருக்கு சரக்கை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கும். மேலும் இதில் கப்பலின் பெயர், அனுப்பப்படும் சரக்கின் தன்மை, சரக்கு அனுப்பபடும் நாள், சரக்கின் எடை, சேர வேண்டிய துறைமுகம் மற்றும் செலுத்தப்பட்ட சத்தம் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும்.
(v) பொருட்களை காப்பீடு செய்தல் (Insurance ஒப்பி Goods) ஏற்றுமதியாளர் சரக்கை அனுப்புவதற்கு முன் உரிய நிறுவனத்தில் காப்பீடு செய்தல் வேண்டும். காப்பீடு என்பது கப்பல் சேதமடைதல், ஒன்றோடு ஒன்று மோதுதல், கப்பல் மூழ்குதல், தீ, கடல், நீர் கப்பலில் புகுதல் போன்ற இடர்களுக்காக செய்யப்பட வேண்டும்.
பணம் செலுத்துகை தொடர்பான ஆவணங்கள்:
(i) நாணய உறுதி கடிதம் (Letter of Credit): இத்தருணத்தில் இறக்குமதியாளரின் பணம் செலுத்தும் திறனை ஏற்றுமதியாளர் அறிய வேண்டும். எனவே அவர் இறக்குமதியாளரை நாணய உறுதி கடிதம் ஏற்பாடு செய்து தருமாறு கோருகிறார். இறக்குமதியாளர் மீது ஏற்றுமதியாளர் வரும்போது மாற்றுமுறை உண்டியல் தன்னிடம் வரும்போது அதற்கு பணம் தருவதாக இறக்குமதியாளரின் வங்கி அளிக்கும் உறுதி கடிதம் ஆகும். நாணய உறுதி கடிதம் நன்கு அறிந்த இறக்குமதியாளருக்கு மட்டுமே வழங்கப்படும். பின்னர் ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரின் பணம் செலுத்தும் திறனைப் பற்றி ஐயப்பட தேவையில்லை.
(ii) வாணிக இடாப்பு: இறக்குமதியாயாளருடன் செய்துகொண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் ஏற்றுமதியாளர் ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்கு தொடர்பாக வாணிக இடாப்பை மூன்று நகல்களில் தயாரிக்கிறார். அதன் பிறகு ஏற்றுமதியாளர் ஏற்றுமதி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் (வாணிக இடாப்பு, காப்பீட்டு திட்டாவணம், தோற்றுவாய்ச் சான்று, வாணிகத்தூதுவர் இடாப்பு போன்றவை) தன்னுடைய வங்கிக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் அந்த ஆவணங்களை இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறும், இறக்குமதியாளர்மாற்றுச்சீட்டிற்கு பணம் செலுத்த ஒப்புகொண்ட பிறகு, அவற்றை அவரிடம் ஒப்படைக்குமாறு நிபந்தனை விதிக்கிறார்.
13.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards