11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
_______ போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையின் நோக்கமாகும்.
"இந்தியாவில் தயாரிப்பு"
ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்தல்
மின்னணு இந்தியா
மேற்கூறிய அனைத்தும்
2.
GST ஒரு _______ வரியாகும்.
பலமுனை
இருமுனை
ஒருமுனை
மேற்கூறிய எதுவுமில்லை
3.
கீழ்க்கண்டவற்றுள் எது தனியார் மயமாதலைக் குறிக்கும்.
முதலீட்டை திரும்பப் பெறுதல்
தேசியமயம் நீக்கல்
தொடர் நிறுவனமாக்கல்
இவை அனைத்தும்.
4.
தொழில் உடைமையை பொதுத்துறையிலிருந்து தனியார் துறைக்கு மாற்றுவது_______ எனப்படும்.
உலகமயமாக்கல்
தாராளமயமாக்கல்
தனியார் மயமாக்கல்
தேசியமயமாக்கல்
5.
இந்தியாவில் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் __________ ஏற்படுத்தப்பட்டது.
மும்பை
சென்னை
காண்ட்லா
கொச்சி
6.
புதிய பொருளாதாரக் கொள்கை கீழ்கண்டவற்றுள் எதனை உள்ளடக்கியது.
வெளிநாட்டு முதலீடூ
வெளிநாட்டு தொழில்நுட்பம்
வெளிநாட்டு வர்த்தகம்
இவை அனைத்தும்.
7.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை _________ ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
2000
2002
2010
2015
8.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழு _____________ ஆகும்.
ஆலோசனைக் குழு
சட்டபூர்வமான குழு
அ மற்றும் ஆ
எதுவுமில்லை
9.
வெளிநாட்டு முதலீடு ___________ உள்ளடக்கியது.
FDI மட்டும்
FPI மற்றும் FFI
FDI மற்றும் FPI
FDI மற்றும் FFI
10.
இன்றைய நாட்களில் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும் _______________ இருக்க வேண்டும்.
சார்ந்து
ஒன்றையொன்று சார்ந்து
தடையில்லா வாணியம்
முதலாளித்துவ அமைப்பு
11.
தொழில் உரிம விலக்களித்தல் பற்றி எழுது.
12.
நிதிப்பற்றாக்குறையின் நிர்ணயம் யாது?
13.
சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதன் பொருள் என்ன?
14.
தனியார் மயமாக்கல் என்றால் என்ன?
15.
LPG கொள்கையை செயல்படுத்த காரணம் என்ன?
16.
LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?
17.
1991-க்குப் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?
18.
GST என்றால் என்ன? அதன் நன்மைகளை எழுதுக.
19.
20.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை பற்றி குறிப்பு வரைக.
21.
சீர்திருத்தங்களுக்குப் பின் உள்ள விவசாய நெருக்கடிகள் யாவை?
22.
2015-2020 ம் ஆண்டிற்கான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கையின் சிறப்பியல்புகளை விளக்குக.
23.
தொழிற்கொள்கை தொடர்பாக இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை விளக்குக.
1.
(d)
மேற்கூறிய அனைத்தும்
2.
(c)
ஒருமுனை
3.
(d)
இவை அனைத்தும்.
4.
(c)
தனியார் மயமாக்கல்
5.
(c)
காண்ட்லா
6.
(d)
இவை அனைத்தும்.
7.
(d)
2015
8.
(b)
சட்டபூர்வமான குழு
9.
(c)
FDI மற்றும் FPI
10.
(b)
ஒன்றையொன்று சார்ந்து
11.
1191-ன் புதிய தொழிற் கொள்கையின் கீழ் தொழிலுக்கு உரிமம் பெறுவதிலிருந்து விலக்களித்தல் மற்றும் சிவப்பு நாடா முறையை முடிவுக்கு கொண்டு வருதலாகும்.
12.
நிதிப்-பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று பன்னாட்டு பணநிதி நிர்ணயம் அறிவித்தது.
13.
சிறப்பு பொருளாதார மண்டலம் எனபது அனுமதி வழங்குவதில் பெருகியிருந்த கட்டுப்பாடுகள், உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான நிதி போன்ற குறைபாடுகளைச் சமாளிக்கவும், நேரடி முதலீட்டை ஈர்க்கவும் உருவாக்கப்பட்டது.
14.
தனியார் மயமாக்கல் என்பது பொதுத்துறையின் நிர்வாகம் மற்றும் மனித உரிமையை தனியாருக்கு மாற்றுவதைக் குறிக்கும்.
15.
(i) இந்தியாவில் பொருளாதார நடவடிக்கை துவங்க கட்டுப்பாடுகள் இருந்தன.
(ii) அரசு உரிமைக்கொள்கைகளை சற்றே தளர்த்துவது அவசியமாக இருந்தது.
(iii) பொருளாதார வளர்ச்சியில் தனியார்துறைக்குப் போதுமான வாய்ப்புகளை வழங்கப்படவில்லை என்று கருதப்பட்டதால் தனியார் மயமாக்கல் அவசியமானது.
16.
(i) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது.
(ii) தனியார் மயமாக்குதல், பெரிய நிறுவனங்களுக்கு முற்றுரிமை சக்தியினை ஏற்படுத்தும் இதில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது.
(iii) ஏற்கனவே வளர்ந்த நாடுகள் மேலும் வளர சாதகமாகவும், வளர்ச்சி குறைந்த நாடுகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.
17.
(i) வெளிநாட்டுச் செலவாணியின் கையிருப்பு அதிகரிக்கத் துவங்கியது.
(ii) தொழில்மயமாதல் விரைவாக நடைபெற்றது.
(iii) நுகர்வு முறை மேம்படத் துவங்கியுள்ளது.
(iv) விரைவு நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரயில், மேம்பாலங்கள், விமான நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பெருகி வருகின்றன.
(v) ஆனால் இந்த வசதிகள் ஏழைகளுக்கு எட்டப்படவில்லை.
18.
பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது நுகர்வோர் நுகரும் பண்டங்கள் மற்றும் பணிகள் மீது விதிக்கப்படும் வரியாகும்.
GST-யின் நன்மைகள்:
(i) அடுக்குவரி விளைவுகளை நீக்கியது.
(ii) ஒரு முனை வரியாக உள்ளது.
(iii) பதிவுக்கான வாசலாக உள்ளது.
(iv) சிறிய நிறுவனங்களுக்கான கலவை திட்டங்கள் உள்ளது.
(v) இணையவழி வசதி மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.
(vi) மின்னணு வணிகம் வரையறுக்கப்பட்டுள்ளது.
(vii) தளவாடங்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
(viii) அமைப்பு ரீதியற்ற துறையை ஒழுங்குபடுத்துகிறது.
19.
20.
(i) பொருளாதார சீர்திருத்தத்தின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிநாட்டு முதலீட்டிற்க்கும் மற்றும் வெளிநாட்டு தொழில் நுட்பத்திற்கும் சிவப்பு கம்பள வரவேற்பு தருவதாகும்.
(ii) நாட்டில் தொழில்துறையில் போட்டியை ஏற்படுத்தி வணிகச் சூழலை மேம்படுத்தியுள்ளது.
(iii) அயல்நாட்டு நேரடி முதலீடு (FDI) மற்றும் அயல்நாட்டு தொகுப்பு முதலீடு (FPI) ஆகியவற்றிற்கு இலகுவான வழி திறந்துவிடப்பட்டது.
(iv) 1991ல் சில உயர் தொழில்நுட்பம் மற்றும் பேரளவு முதலீடு தேவைப்படும் முக்கிய தொழ்ற்சாலைகளுக்கு அனுமதியளித்தது.
(v) 51% பங்குகள் வரை அயல்நாட்டு நேரடி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
(vi) இதன் அளவு பல நிறுவனங்களுக்கு 74% பின்னர் 100% மாற்றியமைக்கப்பட்டது.
21.
இடுபொருள்களின் செலவு உயர்வு:
(i) விதைகளே விவசாயிகளுக்கான மிகப்பெரிய உள்ளீடு ஆகும்.
(ii) தாராள மயமாக்குவதற்கு முன் மாநில அரசாங்கத்திடமிருந்தே விவசாயிகள் விதைகளை வாங்கின.
(iii) தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் விதைகள் சந்தை உலகளாவிய வேளாண் தொழிலுக்கு திறந்துவிடப்பட்டன.
(iv) கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்டு, மாநில அரசு நிறுவனங்கள் மூடப்பட்டன.
(v) இதன் விளைவாக, விலைகள் உயர்வு மற்றும் போலி விதைகள் உருவாக்கம் போன்ற பிரச்சனைகள் உருவாகின.
வேளாண்மை மானியக் குறைப்பு:
தாராளமயமாக்கல் கொள்கைகள், பூச்சிக்கொல்லி மற்றும் உரமானியத்தைக் குறைத்து விட்டதால் உரங்களின் விலைகள் 300% அதிகரித்தன. மின் கட்டணங்களும் அதிகரித்தன ஆனால் விவசாயப் பொருட்களின் விலை உயரவில்லை.
இறக்குமதி சுங்க வரி குறைப்பு:
(i) உலகமயமாக்குதலின் விளைவாக இறக்குமதி மேல் விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டன.
(ii) மேலும் 1500க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரியும் நீக்கப்பட்டன.
(iii) இதன் விளைவாக, சந்தையில் பொருட்கள் குவிந்து, பருத்தி மற்றும் மிள்கு போன்ற பயிர்களின் விலை சரிந்தது.
கடன் வசதிகளை நிறுத்தி வைத்தல்:
(i) 1991 க்கு பின்னர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உட்பட வணிக வங்கிகளின் கடனளிப்பு முறையின் பெரும் மாற்றத்தால் விவசாயத்திற்கு போதுமான கடனுதவி அளிக்க இயலவில்லை.
(ii) விவசாயிகள் வட்டிக்காரரைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று.
22.
ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை (2015-2020):
ஏற்றுமதி சூழல்களை மேம்படுத்துதல், உற்பத்தி அதிகரிப்பு மற்றும் "இந்தியாவில் தயாரிப்பு" மற்றும் "மின்னணு இந்தியா" போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்தலே இக்கொள்கையின் முதன்மையான நோக்கமாகும்.
சிறப்பியல்புகள்:
(i) ஏற்றுமதி உதவிகளை 25% அளவு குறைக்கவும் இந்தியப் பொருட்களை ஊக்குவிக்கவும் "இந்தியத் தயாரிப்பு" என்ற கருத்து உருவாக்கப்பட்டது.
(ii) ஏற்றுமதியாளர் / இறக்குமதியாளர் சுயவிவர ஆவணங்களின் அசல் நகல்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
(iii) டிஜிட்டல் இந்தியா முறைப்படி, வரிதாக்கல், முத்திரைத் தாள் கட்டணம் செலுத்துதல் போன்றவற்றிற்கான கைபேசி செயலி மற்றும் பட்டையக் கணக்காளர், கணக்குக் காசாளர் போன்றோரால் மின்னணு முறையில் கையொப்பமிட்ட ஆவணங்கள் தயாரிக்கப்படுகின்றது.
(iv) பாதுகாப்பு ராணுவக்கிடங்கு விண்வெளி மற்றும் அணுசக்தி போன்றவை தொடர்பான ஏற்றுமதிக் கோரிக்கைகளுக்கு கால அளவு 24 மாதங்களாகும்.
(v) தற்போது உலக வர்த்தகத்தில் 3% ஆக இருக்கின்ற இந்தியாவின் பங்கை 2020 க்குள், ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கை இருமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
23.
தொழிற்கொள்கை பின்வரும் மாற்றங்களை தொழில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
(i) தொழில் உரிமங்கள் விலக்கம் செய்யப்பட்டன.
(ii) தொழில் துறையில் உள்ள ஒதுக்கீட்டை நீக்குதல்.
(iii) பொதுத்துறைக் கொள்கை, கோட்பாடுகள் நீக்கம் மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.
(iv) MRTP-சட்டம் ஒழிப்பு.
(v) அந்நிய முதலீட்டுக் கொள்கை மற்றும் அந்நிய தொழில்நுட்பக் கொள்கை கொண்டு வரப்பட்டது.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards