11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/01/2020
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
ஒரு பண்டத்திற்கான விலை ரூ.5 அல்லது அதைவிட குறைவாக இருக்கும்போது அளிப்பின் அளவு பூஜ்ஜியமாக உள்ளது. விலை ரூ. 5 ஐ விட ஒவ்வொரு ரூ.1 அதிகரிக்கும்போது அளிப்பு (அளவு) மாறாவீதத்தில் தொடர்ச்சியாக 10 அலகுகள் என்ற வீதத்தில் அதிகரிக்கிறது. அப்பாடி எனில் பண்டத்திற்கான அளிப்புச்சார்பு காண்க.
2.
p= 70 - 4x - x2 ஆகவும் தேவை Xo என்பது 6 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?
3.
மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு பற்றி எழுதுக.
4.
ஊரக கடன்களை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
5.
நுண்ணினப் பொருளியலில் முக்கியத்துவத்தை விவரி.
6.
அளிப்பு விதியின் எடுகோள்கள் யாவை?
7.
வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக.
8.
LPG க்கு எதிரான கருத்துக்கள் யாவை?
9.
TC = 2.5q3 - 13q2 + 50q + 12 என்றால் இறுதிநிலை செலவுச் சார்பு, சராசரி செலவுச் சார்பு ஆகியவற்றைக் காண்.
10.
தேவைச்சார்பு \(x=\frac { 100 }{ P } \) என்கிறபோது விலையைப்பொருத்து தேவை நெகிழ்ச்சி e யை விலை P= 12 ஆக இருக்கும் போது காண்க.
11.
p = 35 – 2x – x2 ஆகவும் ம்தளவ x0 எனபது 3 எனவும் அமையுமெனில் நுகர்வோர் உபரி என்ன?
12.
தமிழ்நாட்டிலுள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் யாவை?
13.
மண்டல ஊரக வங்கி பற்றி குறிப்பு வரைக.
14.
ஊரக மேம்பாட்டின் முக்கியத்துவம் கூறுக?
15.
விவசாய உற்பத்தி அங்காடிக் குழுவின் பணிகளை விவரிக்க.
16.
கிராம சர்வோதயம் – சிறுகுறிப்பு வரைக.
17.
18.
தொழில் முனைவோரின் பணிகள் யாவை?
19.
AC மற்றும் MC எடுத்துக்காட்டுகளுடன் வரையறு.
20.
பொருளாதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக
1.
அளிப்புச்சார்பு (நேர்க்கோடு) அமைக்க குறைந்தது இரண்டு புள்ளிகள் தேவைப்படுகின்றன. விலை ரூ.5 எனும்போது அளிப்பின் அளவு பூஜ்ஜியம் என்பதிலிருந்து அளிப்புச்சார்பின் முதல் புள்ளி கிடைக்கிறது. அதாவது புள்ளி (0,5) ஆகும்.
விலை ஒவ்வொரு ஒரு ரூபாய் உயரும் போதும் அளிப்பு 10 அலகுகள் அதிகரிக்கின்றது என்ற கூற்றிலிருந்து அளிப்புச்சார்பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது புள்ளிகள் கிடைக்கின்றன. அதாவது புள்ளிகள் (10,6) மற்றும் (20,7) ஆகும்.
(10,6) மற்றும் (20,7) ஆகிய இரண்டு புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு கீழே தரப்பட்டுள்ளது.
(X1, Y1), (X2, Y2) என்ற புள்ளிகளின் வழியே செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு
\(\frac { y-{ y }_{ 1 } }{ { y }_{ 2 }-{ y }_{ 1 } } =\frac { x-{ x }_{ 1 } }{ { x }_{ 2 }-{ x }_{ 1 } } \)
(X1, Y1), (X2, Y2) க்குப் பதிலாக (10,6), (20,7) மதிப்புகளை முறையே பிரதியிட
\(\frac { Y-6 }{ 7-6 } =\frac { X-10 }{ 20-10 } \)
\(\ \frac { Y-6 }{ 1 } =\frac { X-10 }{ 10 }\)
y-6 = \(\frac { X-10 }{ 10 } \)
10(Y- 6) = X-I 0
10Y- 60 = X - 10
10Y - 60 + 10 = X

10Y - 50 = X
-X =-I0Y+50
இருபுறமும் (-) ஆல் பெருக்க
X = -50 + 10Y
x என்பதை அளிப்பின் அளவு (s) மற்றும் y என்பதை விலை (p) எனவும் கருதினால்,
X =10P - 50 அல்லது ( X =-50 + 10p)
விலை P = 0 எனில் Q = -50
Q = 0 எனில் P = 5
p =2.5
P =2.5 எனில் தேவை =100-10(2.5)
=75
P =2.5 எனில் அளிப்பு =50+10(2.5)
=75

E என்ற புள்ளியில் தேவையும் அளிப்பும் சமமாகும்.
2.
தரப்பட்ட தேவைச்சார்பு,
p = 70- 4x-x2
x = 6 எனில்,
P = 70 -4 (6) - (6)2
= 70 - 24 - (36)
= 70 - 24 - 36
= 70- 60
p= 10
எனவே
cs=(தேவை வளைக்கோட்டின் 0முதல் 6 வரையிலான வளைக்கோட்டிற்கு கீழுள்ள பகுதியின் பரப்பு )-செவ்வகத்தின் பரப்பு (10 x 6=60)
Cs=\(\int ^6_0(70-4x-x^2)dx -(10 \times 6)\)
\(=[70x-4{x^2\over2}-{3^3\over 3}-60]\)

=420 -72-9-60
=420-141
= 279 அலகுகள்.
3.
1."மொத்த நாட்டு மகிழ்ச்சி"என்ற தொடர் 1972 ஆம் ஆண்டு பூடான் நாட்டின் நான்காவது மன்னரான ஜிக்மே-சிங்யே-வாங்சுக் என்பவரால் உருவாக்கப்பட்டது.
2.இரு நிலைத்த முன்னேற்றம் சுற்றுக்சுழல் பாதுகாப்பு கலாச்சார மேம்பாடு சிறந்த நிர்வாகம்.
3.வளர்ந்த பொருளாதார நாடுகள் என்பவை தொழில்மயமான வளங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதுமான நாடுகளை குறிக்கும்.
4.(எ.கா.)அமெரிக்க ஐக்கிய நாடுகள்,கனடா,இங்கிலாந்து,பிரான்ஸ் மற்றும் ஜப்பான்.
4.
(i) ஊரக கடன்களைத் தீர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
(ii) வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒழுங்குபடுத்துதல், ஊரக வங்கிகளை மேம்படுத்துதல், வட்டார ஊரக வங்கிகள் தொடங்குதல், முன்கடன்கள் வழங்குதல், சுயஉதவிக் குழுக்களை அமைத்தல், தொடக்க கூட்டுறவு வங்கிகள் மற்றும் நில வங்கிகள் தொடங்குதல்.
(iii) பயிர் கடன் வழங்குதல் முன்னோடி வங்கித்திட்டங்கள் சிறிய அழகு முன்னேற்ற மற்றும் மறு நிதியளிப்பு முகவர் வங்கி தொடங்குதல், துணை தொழில்களை உருவாக்குதல், திறன் மேம்பாடு பயிற்சிகள் அளித்தல்.
(iv) ஏழைகள் மற்றும் சுய உதவிக்குழுவினருக்கு வட்டிவீதங்கள் மற்றும் போக்குவரத்து செலவினங்கள் வசதிமிக்கவர்களுக்கு கிடைப்பதை காட்டிலும் அதிகமாக உள்ளது.
5.
1. ஒரு பொருளாதாரத்தின் செயல்பாட்டை அறிந்துகொள்ள உதவுகிறது.
2. பொருளாதாரக் கொள்கைக்கான கருவியைத்தருகிறது.
3. பொருளாதார நலனின் நிலையை பற்றி ஆராய்கிறது.
4. வளங்களை திறன்பட பயன்படுத்த உதவுகிறது.
5. பன்னாட்டு வாணிபத்தில் பயன்படுகிறது.
6. பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கு பயன்படுகிறது.
7. வளங்களை உத்தம அளவில் பங்கிட பயன்படுகிறது.
8.முன்கணிப்பிற்கு அடிப்படையாக உள்ளது.
9. விலை நிர்ணயம் செய்ய உதவுகிறது.
6.
எடுகோள்கள்:
1. உற்பத்திக் காரணிகளின் விலையில் மாற்றம் இல்லை.
2. முதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
3.இயற்கை வளங்கள் மற்றும் அதன் கிடைப்பளவில் மாற்றம் இல்லை.
4. பதலீட்டுப் பண்டங்களின் விலையில் மாற்றம் இல்லை.
5. தொழிநுட்பத்தில் மாற்றம் இல்லை.
6. காலநிலையில் மாற்றம் இல்லை .
7.
(i) ஒரு அங்காடி அமைப்பில் பண்டங்கள் மற்றும் பணிகளை வாங்க ஒருவரே இருப்பதால் அது வாங்குவோர் முற்றுரிமை எனப்படும்.
(ii) சில பண்டங்களுக்கு ஒருவரே வாடிக்கையாளராக இருப்பதால் அந்த அங்காடியில் வாங்குபவர் மிகுந்த சக்தியுடன் காணப்படுவார்.
(iii) முற்றுரிமையும், வாங்குபவர் முற்றிமையும் ஒரே மாதிரி இருந்தாலும், வாங்கும் முற்றுரிமையாளர் அங்காடியின் தேவை பக்கத்திலும், முற்றுரிமையாளர் அங்காடியில் அளிப்புப் பக்கத்திலும் ஆதிக்கத்துடன் இருப்பர்.
8.
(i) தாராளமயமாக்கும் கொள்கை வெளிநாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வசதியாகிவிட்டது.
(ii) தனியார் மயமாக்குதல், பெரிய நிறுவனங்களுக்கு முற்றுரிமை சக்தியினை ஏற்படுத்தும் இதில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது.
(iii) ஏற்கனவே வளர்ந்த நாடுகள் மேலும் வளர சாதகமாகவும், வளர்ச்சி குறைந்த நாடுகளின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டன.
9.
\(\frac{dc}{dq}=2.5 (3)q^{2}-(13\times 2) q +50\)
\(\boxed { \therefore M.C=7.5{ q }^{ 2 }-26q+50 } \)
\(AC=\frac{2.5q^{3}-13q^{3}+50q+12}{q}\)
சராசரி செலவு(AC)=\(2.5 q^{2}-13q+50+\frac{12}{q}\)
10.
\(x=\frac { 100 }{ P } \)=100P-1 என தரப்பட்டுள்ளது
\(\therefore \frac { dx }{ dp } =100(-1){ P }^{ -1-1 }\)
= 100 (-1)P2
= \(\frac { -100 }{ { p }^{ 2 } } \)
P=2 என்றால்
\(\frac { dx }{ dp } =\frac { 100 }{ 4 } =25\) மற்றும் \(x=\frac { 100 }{ 2 } =50\)
சூத்திரத்தில் மதிப்புகளைப் பிரதியிட
\({ e }_{ d }-\frac { Pdx }{ xdp }- \left( \frac { 2 }{ 50 } \right) \left( \frac { -100 }{ 4 } \right) =\frac { -200 }{ 200 } =-1\)
ed = -1
11.
தரப்பட்ட தேவைச்சார்பு
P = 35 - 2x - x2
x = 3 எனில்,
P = 35 - 2(3) -32
= 35 - 6 - 9
P = 20
எனவே,
CS = (தேவை வளைக்கோட்டின் 0 மு்தல் 3 வரையிலான வளைகோட்டிற்கு கீழுள்ள பகுதியின் பரப்பு) – செவ்வகத்தின் பரப்பு (20 x 3 = 60)
\(CS=\int _{ 0 }^{ 3}{ (35-2x-{x}^{2}) } dx-(20\times 3)\)
\(={ \left[ 35x-2{x^2 \over 2} -{x^3\over 3}\right] }_{ 0 }^{3 }-60\)
\(=35(3)-2({3^2 \over 2})-{3^3\over 3}-60\)
= 105 - 9 - 9 - 60
= 27 அலகுகள்
12.
மின்னாற்றல்:
உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு பிற தென் மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.
காற்றாலை மின்சாரம்:
(i) முப்பந்தல் காற்றாலை மையம்: கிராம மக்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்கும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரமாக உள்ளது.
(ii) நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட காற்றாலைகள், இந்தியாவிற்கு தேவையான 2% மின்தேவைகளை நிறைவு செய்கிறது.
(iii) இது இந்தியாவின் காற்றாலை உற்பத்தியில் பாதியளவு ஆகும் (2000 மெகாவாட்கள்)
அணுமின் ஆற்றல்:
கல்ப்பாக்கம், கூடங்குளம் ஆகியவை முக்கியமானவை
வெப்ப ஆற்றல்:
இது அதிக அளவு அத்திப்பட்டு, எண்ணூர், மேட்டூர், நெய்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
புனல் மின்சாரம்:
தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட புனல்மின்சாரம் உள்ளது. அவற்றுள் முக்கியமானவை குந்தா, மேட்டூர், மரவகண்டி, பார்சன் வேலி ஆகியவை.
சூரிய சக்தி மின்சாரம்:
தமிழ்நாடு சூரிய மின் உற்பத்தியில் இந்தியாவின் சிறந்த மாநிலம் ஆகும்.
13.
(i) இந்திய அரசாங்கம் 1975 ஆம் ஆண்டு ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன. ஆராய ஊரக வங்கிகளில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி வட்டார ஊரக வங்கிகள் செயல்படுத்தப்பட்டன.
(ii) சிறு மற்றும் குறு விவசாயிகள், வேளாண் தொழிலாளர்கள் கிராம கைவினைஞர்கள் மற்றும் சிறு நிறுவனங்களும் கடன் மற்றும் பிற உதவிகளை வழங்குவதன் மூலம் ஊரகப் பொருளாதாரம் மேம்பாடு அடைய வட்டார ஊரக வங்கிகள் பரிந்துரைக்கப்பட்டன.
(iii) மத்திய மாநில அரசுகள் மற்றும் வணிக வங்கிகளின் கூட்டு முயற்சியால் உருவானதே வட்டார வங்கிகள் உள்ளன.
(v) பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு மட்டுமே RRB கடன் வழங்குகிறது மற்றும் வங்கியின் வட்டி வீதமானது கூட்டுறவு சங்கங்களின் வட்டி வீதத்தைப் போல் இருக்கும்.
14.
(i) இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மற்றும் முன்னேற்றத்திற்கு ஊரக மேம்பாடு என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும்.
(ii) பெரும்பான்மையான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். ஊரக பகுதியின் முன்னேற்றம் இன்றி நாட்டின் முன்னேற்றம் அமையாது.
(iii) நகர்புறத்திற்கு தேவையான குடிநீர், பால், உணவு மற்றும் கச்சா பொருட்கள் கிராமப்புறத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
(iv) ஊரக மக்களுக்கு முறையான கல்வி, மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை அளிப்பதன் மூலம் நாற்புறங்களில் காணப்படும் பிச்சையெடுத்தல், குப்பை பொறுக்குதல், சாலையோர குடிசைவாசிகள் போன்ற மக்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கலாம்.
(v) வேளாண்மை மற்றும் அதன் சார்புடைய தொழில்களை முன்னேற்றுவதன் மூலம் ஊரக பகுதிகளில் இலாபகரமான வேலை வாய்ப்புகளையம் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியையும் பெருக்க முடியும்.
(vi) கிராமங்களை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பு தேடி திறமைசாலிகள் இடம் பெயர்தல் மற்றும் கிராமங்களில் இருந்து நகர்புற பகுதிகளுக்கு குடிபெயர்ச்சி ஆகியவற்றை தடுக்கலாம்.
(vii) ஊரக பகுதிகளை முன்னேற்றுவதன் மூலம் பயன்படுத்தாத மற்றும் குறைவாக பயன்படுத்தி வரும் இயற்கை வளங்களை முழுமையாக பயன்படுத்த இயலும்.
(viii) கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளுக்கு இடையேயுள்ள வேறுபாட்டினைகுறைக்க முடியும்.
15.
(i) விவசாயப் பொருட்களுக்கான அங்காடிக்குழு, வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது கால்நடைப் பொருட்களை வர்த்தகம் செய்வதற்கு மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பு ஆகும்.
APMC-ன் செயல்பாடுகள்
(i) வேளாண் சந்தைகளில் பொது மற்றும் தனியார்களிடையே கூட்டுறவை வளர்ச்சிப் பெறச் செய்தல்.
(ii) சந்தை சார்ந்த விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.
(iii) விலை நிர்ணயம் மற்றும் அங்காடிப் பரிமாற்றங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வருதல்.
(iv) விவசாய உற்பத்திகளை விற்பனை செய்த அதே நாளில் விவசாயிகளுக்குப் பணம் செலுத்துவதை உறுதி செய்தல்.
(v) வேளாண் நடவடிக்கைகளை ஊக்குவித்தல்.
(vi) வேளாண் பொருட்களின் வரவு மற்றும் விலை தொடர்பான புள்ளி விவரங்களை அவ்வப்போது காட்சிப்படுத்துதல்.
16.
1."உண்மையான இந்தியா வாழ்வது நகரங்களிலோ, புறநகரங்களிலோ இல்லை கிராமங்களில் தான்" என்று கூறுகிறார்.
2.கிராமங்கள் தன்னிறைவு பெற்றவைகளாகவும் சுயசார்பு பெற்றவைகளாகவும் இருக்க வேண்டும் என்றார்.
17.
18.
1. தொழில் முனைவோர் தொழிலை தொடங்கி, தன்னிடம் உள்ள வளங்கள் மற்றும் சூழ்நிலைக்கேற்றவாறு திட்டமிட்டு உற்பத்தியை மேற்கொள்வர்.
2. வெற்றிகரமான தொழில் முனைவோர் புத்தாக்கம் புனைவர் மற்றும் உற்பத்தியில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்துபவர்.
3. தொழில் முனைவோர் சரியான உற்பத்திக்கு காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தியை மேற்கொள்பவர்.
4. கட்டுப்படுத்துதல், வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையிடுதல்.
5. இடர்பாடுகளை ஏற்றல் மற்றும் நிச்சயமற்ற தன்மையை மேற்கொள்ளுதல்.
6. உற்பத்திக்காரணிகளான நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து, உற்பத்தியில் இலாபம் பெற முயல்வர்.
19.
சராசரி செலவு (ATC) அல்லது சராசரி செலவு (AC):
1. சராசரி செலவு என்பது ஒரு பண்டத்திற்கான செலவு எனப்படும்.
2. சராசரி மொத்தத் செலவு என்பது மொத்தச் செலவை, உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களின் எண்ணிக்கையால் வகுத்தால் கிடைப்பதாகும்.
3.(எ -கா) TC=1600
Q=4எனில்
ATC=400ஆகும்
அதாவது ATC=TC/Q=1600/4=400
ATC=400
இறுதிநிலை செலவு (MC)
1. இறுதிநிலைச் செலவு என்பது மொத்த செலவில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கிறது.
2. அதாவது கூடுதலாக ஓர் அலகுப் பண்டத்தை உற்பத்தி செய்வதால் மொத்த செலவில் ஏற்படுகின்ற கூடுதல் இறுதிநிலைச் செலவு எனப்படுகிறது.
3.இறுதிநிலைச் செலவை கீழ்கண்டவாறு அளவிடலாம்
MC=TCn-TCn-1(or)
MC=TCn-1-TCnஇதில்
MC=இறுதிநிலைச் செலவு
TCn ='n'அலகு பண்டத்திற்கான செலவு
TCn-1=n-1அலகு பண்டத்திற்கான செலவு
TCn-1=n+1அலகு பண்டத்திற்கான செலவு
4. (எ -கா.) TC4= Rs. 1600, TC4-1=Rs.1400
MC=Rs. 200(MC=Rs. 1600-Rs. 1400)
TC4=Rs.1600, TC4+1=Rs. 1900எனில்
MC=Rs. 300
20.
பொருளாதார நடவடிக்கைகள் நுகர்வு, உற்பத்தி, பரிமாற்றம், பகிர்வு ஆகியவைகளாகும்.
நுகர்வு:
மனித விருப்பங்களை நிறைவு செய்யும் நுகர்வு, பொருளாதார நடவடிக்கைகளின் துவக்கப் புள்ளியாக விளங்குகிறது.
உற்பத்தி:
உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றும் செயல்பாடே உற்பத்தி எனப்படும்.
பரிமாற்றம்:
பரிமாற்றம் என்பது பல்வேறு அங்காடி அமைப்புகளின் மூலம் விலை தீர்மானிக்கப்படுவதோடு தொடர்புடையது.
பகிர்வு:
உற்பத்தி காரணிகளின் பங்களிப்பு மூலம் கிடைக்கும் விளைவாகும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards