11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 23/10/2019
ஈர்ப்பியல்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
குறுக்குக்கோட்டைப் பொறுத்து g எவ்வாறு மாறுபடும்?
2.
குன்றின் உச்சியிலிருந்து அருவி (நீர்) கீழ்நோக்கி பாய்வது ஏன்?
3.
பூமியின் மையத்தில் ஒரு பொருளின் எடை
முடிவிலி
சுழி
பூமியின் பரப்பின் மீதான எடைக்கு சமம்
5 மடங்கு
4.
ஒரு பொருளின் நிறை 500g மேல்நோக்கி திசைவேகத்துடன் சுற்றுகிறது. 20 s க்கு பிறகு புவிப்பரப்பை திரும்ப அடைகிறது. எனில் அக்கோளில் பொருளின் மீதான எடை
2N
4N
5N
1N
5.
சுருள்வில் தராசு ஒன்றுடன் 10 kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின்உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது, தராசு காட்டும் அளவீடு_____.
98N
சுழி
49N
9.8N
6.
சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர், சென்றால் அவர் எடையானது_____.
அதிகரிக்கும்
குறையும்
மாறாது
அதிகரித்து பின்பு குறையும்
7.
புவியின் மீது சூரியனின் ஈர்ப்பியல் விசை செய்யும் வேலை _____.
எப்பொழுதும் சுழி
எப்பொழுதும் நேர்குறி உடையது
நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும்
எப்பொழுதும் எதிர்க்குறி உடையது
8.
புவியினைப் பொறுத்து நிலவின் ஈர்ப்புநிலை ஆற்றல் _____.
எப்பொழுதும் நேர்க்குறி உடையது
எப்பொழுதும் எதிர்க்குறி உடையது
நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும்
எப்போழுதும் சுழி
9.
புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு இருமடங்கானால், ஓராண்டு என்பது எத்தனை நாட்கள்_____.
64.5
1032
182.5
730
10.
கோளின் நிலை வெக்டரும் கோண உந்தமும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைவது _____.
அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
அனைத்து புள்ளிகளிலும்
அண்மை நிலலயில் மட்டும்
எப்புள்ளியிலும் அல்ல
11.
"கோள்களின் பின்னோக்கு இயக்கம்" என்றால் என்ன?
12.
ஈர்ப்பியல் விசையின் தன்மை யாது?
13.
கெப்ளரின் விதிகளுக்கு அடிப்படை யாது?
14.
புவிப்பரப்புக்கு மேலே 200km உயரத்திலும் மற்றும் கீழே 200km ஆழத்திலும் ஈர்ப்பின் முடுக்கம் g மதிப்பு குறைவாக இருக்கும்?
15.
ஒரு கோளின் கோண உந்தம் \(\overrightarrow { L } =5{ t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \) எனில் கோளின் மீது செயல்படும் திருப்பு விசை, கோண உந்தத்தின் திசையில் செயல்படுமா?
16.
எடை - வரையறு
17.
புவியின் விடுபடு வேகம் என்றால் என்ன?
18.
ஈர்ப்பு நிலை ஆற்றல்-வரையறு.
19.
கோளின் கோண உந்தம் மாறுமா? உன் விடையை நிரூபி.
20.
கெப்ளரின் விதிகளைக் கூறு.
21.
தொடுவிசை, தொடாவிசை விவரி.
22.
கெப்ளரின் சுற்றுக்காலங்களின் விதியினைக் கூறு.
23.
கோள்களின் பரப்பு விதியினை விவரி.
24.
"கோடை காலமும் குளிர் காலமும் புவியில் ஏற்படுவது எவ்வாறு" என்ற வினாவுக்கு மாணவர் ஒருவர் புவி நீள்வட்டப்பாதையில் சுற்றும்போது, புவி சூரியனுக்கு அருகே வரும்போது (அண்மை நிலை) கோடை காலமும் சூரியனை விட்டு விலகி அதிகத் தொலைவில் உள்ளபோது (சேய்மைநிலை) குளிர் காலமும் தோன்றுகிறது என பதில் அளிக்கிறார். மாணவரின் பதில் சரியா? இல்லை எனில் கோடையும் குளிர் களமும் தோன்றும் காரணத்தை விளக்குக.
1.
குறுக்குக்கோட்டைப் (latitude) பொறுத்து g மாறுதல்:
சுழலும் குறிப்பாயத்தில் இயங்கும் பொருள்களின் இயக்கத்தை நாம் பகுத்தாயும் போது (மையவிலக்கு விசையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக பூமியினை நிலைமக் குறிப்பாயமாக கருதுவோம். ஆனால் உண்மையிலேயே பூமி ஒரு சுழலும் குறிப்பாயம். ஏனெனில் பூமியானது தனது அச்சைப் பற்றி சுழல்கிறது. எனவே புவிப்பரப்பில் ஒரு பொருள் உள்ளபோது, அது மைய விலக்கு விசையினை உணருகிறது. அவ்விசையானது புவியின் குறுக்குக்கோட்டு மதிப்பை சார்ந்துள்ளது. புவி சுழலவில்லை எனில் பொருளின் மீதான விசை mg ஆகும். ஆனால் புவி சுழற்ச்சியின் காரணமாக பொருள் கூடுதலாக மைய விலக்கு விசையனை உணர்கிறது.

மைய விளக்கு விசை = \(m{ \omega }^{ 2 }R'\)
R' = R cos \(\lambda \)
இங்கு \(\lambda \) என்பது குறுக்குகோட்டின் மதிப்பு
பொருளின் மீது g க்கு எதிர்திசையில் செயல்படும் மையவிளக்குமுடுக்கத்தின் கூறு
\({ a }_{ pa }={ \omega }^{ 2 }Rcos\lambda ={ \omega }^{ 2 }R{ \ cos }^{ 2 }\ \lambda \)
ஏனெனில் R' = R cos \(\lambda \)
எனவே g' = g - \({ \omega }^{ 2 }\) R cos2 \(\lambda \) .....(1)
புவிமைக்கோட்டில் \(\lambda \) = 0; எனவே சமன்பாடு 1 ஆனது பின்வருமாறு மாறுகிறது.
g' = g - \({ \omega }^{ 2 }\)R. புவிமைக்கோட்டில் ஈர்ப்பின் முடுக்கம் g ஆனது சிறுமம் ஆகும்.
துருவப் பகுதியில் \(\lambda \) = 90° எனவே ; g' = g
ஆகவே துருவப் பகுதியில் ஈர்ப்பின் முடுக்கம் பெருமம் ஆகும்.
2.
ஏனெனில் குன்றின் உச்சியில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றலானது புவிபரப்பில் ஈர்ப்பு தன்னிலை ஆற்றலை விட அதிகம்.

அதாவது > குன்று > தரை
வெக்டர் அளவுகளான \(\overrightarrow { { F }}\)அல்லது \({ \overrightarrow { E } }\)ஆகியவற்றை விட ஸ்கேலார் அளவுகளான U(r) அல்லது V(r) ஆகியவற்றைப் பயன்படுத்தி பொருள்களின் இயக்கத்தை எளிதாக பகுப்பாய்வு செய்ய முடியும். நவீன இயற்பியல் கோட்பாடுகளில் (modern theories physics) ஈர்ப்பு தன்னிலை ஆற்றல் (Potential) முக்கிய பங்கினை வகித்து வருகிறது.
3.
(b)
சுழி
4.
(d)
1N
5.
(b)
சுழி
6.
(b)
குறையும்
7.
(c)
நேர்குறியாகவோ அல்லது எதிர்க்குறியாகவோ அமையும்
8.
(b)
எப்பொழுதும் எதிர்க்குறி உடையது
9.
\(\mathrm{T}^2 =\mathrm{C}\left(\mathrm{R}_{\mathrm{E}}+\mathrm{h}\right)^3 \)
\(T \propto\left(R_E\right)^{3 / 2} \)
\(R_E^{\prime} =2 R_E\) எனில் \(T^{\prime} \propto\left(2 R_E\right)^{3 / 2}\)
∴ அலைவு நோம் 23/2 மடங்கு அதிகரிக்கும்
ஒா் ஆண்டின் நாட்கள் \(=(365.4) \times 2 \sqrt{2} \)
\(\simeq 1032\)
10.
(a)
அண்மை நிலை மற்றும் சேய்மை நிலையிலும்
11.
இரவில் வெறுங்கண்களால் கோள்களின் இயக்கங்களை உற்று நோக்கினோம் எனில் கோள்கள் கிழக்கு திசையில் பயணித்து பின்பு பின்னோக்கி மேற்கு திசையில் இயங்கி மீண்டும் கிழக்கு திசையில் பயணிப்பதை காணலாம். இதற்கு "கோள்களின் பின்னோக்கு இயக்கம்" (Retro grade motion) என்று பெயர்.
12.
ஈர்ப்பியல் விசை எப்பொழுதும் ஈர்க்கும் தன்மை உடையது என்பதை குறிக்கிறது. ஈர்ப்பியல் விசையானது எப்போதும் இருநிறைகளையும் இணைக்கும் நேர்க்கோட்டின் வழியே செயல்படும்.
13.
டைகோ பிராஹே விண்மீன்கள் மற்றும் கோள்கள் ஆகியவற்றின் நிலை மற்றும் இயக்கம் குறித்து கண்டறிந்த பதிவுகளின் வானியல் தரவுகள் கெப்ளரின் விதிகளுக்கு அடிப்படை.
14.
புவிப் பரப்பிற்கு மேலே உள்ள = h = 200km
gh = ? Re = 6371 km
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2h }{ R } \right] \)
\({ g }_{ h }=g\left[ 1-\frac { 2\times 200 }{ 6371 } \right] =\frac { 5971 }{ 6371 } g\)
gh = 0.937g (or) gh = 0.94 g
புவி பரப்பிற்குக் கீழே ஆழம் d = 200km
gd = ? Re = 6371km
\({ g }_{ d }=g\left( 1-\frac { d }{ { R }_{ e } } \right) \)
\(g=\left( 1-\frac { 200 }{ 6371 } \right) =g\left( \frac { 6171 }{ 6371 } \right) \)
gd = 0.968g.
\(\therefore\) gd < gh
15.
ஒரு கோளின் கோண உந்தம் = \(\overrightarrow { L } ={ 5t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } \)
கோளின் மீது செயல்படும் திருப்புவிசை = \(\tau \)= ?
\(\tau =\frac { dL }{ dt } =\frac { d }{ dt } ({ 5t }^{ 2 }\hat { i } -6t\hat { j } +3\hat { k } )\)
\(\tau =10t\hat { i } -6\hat { j } \)
16.
ஒரு பொருளின் எடை \(\vec{W}\) ஆனது கீழ்நோக்கிய விசையாகும். இந்த எடையின் எண் மதிப்பானது அப்பொருளை தரையைப் பொறுத்து ஓய்வு நிலையிலோ அல்லது மாறாத திசைவேகத்திலோ வைத்திருக்க செலுத்த வேண்டிய மேல்நோக்கிய விசையின் எண் மதிப்புக்கு சமம் ஆகும்.
17.
(i) ஒரு பொருள் செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ அல்லது குறிப்பிட்ட கோணத்தில் பொருள் எறியப்பட்டாலோ புவியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு செல்வதற்காக தேவையான சிறும வேகம் விடுபடு வேகம் எனப்படும்.
(ii) இது ஈர்ப்பின் முடுக்கம், புவியின் ஆரம் ஆகிய இரு காரணிகளை சார்ந்துள்ளது. பொருளின் நிறையையும் பொருள் எறியப்படும் திசையையும் சார்ந்தது அல்ல.
18.
ஒரு பொருளின் ஈர்ப்பு நிலை ஆற்றல் என்பது புவிஈர்ப்பு புலத்தில் மற்றொரு பொருளின் நிலைக்கான ஆற்றலுடன் தொடர்புடையது. மேலும் ஈர்ப்புப் புலத்தில் மற்றொரு பொருளை முடிவிலாத் தொலைவிலிருந்து (infinity) ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு எட்டாம் பெயரச் செய்யப்படும் வேலையின் அளவு ஆகும்.
W =\(\frac { G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r } +\frac { G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r' } \)
W =U(r)-U(r')
U(r)=\(\frac { -G{ m }_{ 1 }{ m }_{ 2 } }{ r } \) (அலகு ஜூல்)
19.
கோண உந்தம் மாறாது, சூரியனைச் சுற்றி கோள்கள் சுற்றி வரும்போது ஈர்ப்பு விசையின் இயங்கு அச்சானது, பாதையின் அச்சுடன் பொருத்தும்போது புறத்திருப்பு விசை சுழியாகும்.
\(\tau=\frac{d L}{d t}\) திருப்புவிசை \(\tau\) சுழியாகும்போது கோண உந்தம் (L) மாறாது.
20.
சுற்றுப்பாதைகளுக்கான விதி:
சூரியனை ஒரு குவியப் புள்ளியாகக் கொண்டு ஒவொரு கோளும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது.
பரப்பு விதி:
சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புக்களை ஏற்படுத்தும்.
சுற்றுக்காலங்களின் விதி:
நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் கோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த நீள்வட்டத்தின் அரைநெட்டச்சின் மும்முடிக்கு நேர்தக்கவில் இருக்கும். அதனை கீழ்கண்டவாறு எழுதலாம்.
T2 \(\propto \) a3 ....(1)
\(\frac { { T }^{ 2 } }{ { a }^{ 3 } } \) = மாறிலி ...(2)
21.
(i)தொடுவிசை:
இரு பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் போது ஏற்படும் விசை தொடு விசை ஆகும். விசையை ஏற்படுத்தும் காரணியும் பொருளும் ஒன்றுக்கொன்று தொடுவதன் மூலம் ஏற்படும் தொடு விசையால் பொருளின் இயக்கமானது ஏற்படுகிறது.
(ii) தொடாவிசை: சூரியனை புவி சுற்றி வருவதை கருதுவோம். சூரியனும் புவியும் ஒன்றை ஒன்று தொடவில்லை என்றாலும் அவை ஒன்றையொன்று இடைவினை புரிகின்றன. அதன் காரணமாக புவியானது சூரியனின் ஈர்ப்பு விசையை உணர்கிறது. இவ்வகை ஈர்ப்புவிசை ஒரு தொடா விசை ஆகும்.
22.
சுற்றுக்காலங்களின் விதி:
(i) நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றும் கோளின் சுற்றுக்காலத்தின் இருமடி, அந்த நீள்வட்டத்தின் அரை நெட்டச்சின் மும்முடிக்கு நேர்தகவில் இருக்கும். அதனை கீழ்கண்டவாறு எழுதலாம்.
T2 \(\propto \)a3
\(\frac { { T }^{ 2 } }{ { a }^{ 3 } } \)=மாறிலி
(ii) இங்கு I என்பது சுற்றுக்காலம், a என்பது அரை நெட்டச்சின் நீளம் ஆகும்.
(iii) இச்சமன்பாட்டிலிருந்து நாம் அறிந்து கொள்வது சூரியனிலிருந்து உள்ள தொலைவு அதிகரிக்கும்போது, சுற்றுகாலமும் அதிகரிக்கும்; ஆனால் அதிகரிப்பு வீதம் மாறுபடும் என அறியலாம்.
23.
பரப்பு விதி (Law of area):
(i) சூரியனையும் ஒரு கோளையும் இணைக்கும் ஆர வெக்டரானது சமகால இடைவெளியில் சம பரப்புகளை ஏற்படுத்தும்.
(ii) கோள் ஒன்று சூரியனை சுற்றி வரும்போது \(\triangle \)t என்ற சிறிய நேர அலைல் ஆரவெக்டர் ஏற்படுத்திய பரப்பு. \(\triangle \)A. நீள்வட்டத்தின் மையத்தில் சூரியன் இல்லை.
(iii) எனவே கோள் சூரியனுக்கு அருகே வேகத்திலும், சூரியனிடமிருந்து நீண்ட தொலைவில் செல்லும் போது குறைந்த திசைவேகத்திலும் செல்லும். இதன் மூலம் சமகால அளவில் சம அளவு பரப்புகளை கடந்து செல்கிறது. கோள்களின் வேகம் மாறுபடுவதை தரவுகள் மூலம் கெப்ளர் கண்டறிந்தார்.
24.
இது தவறான கருத்தாகும். உண்மையில் புரியானது சூரியனை 23.5o கோண சாய்வுடன் சுற்றி வருவதாலேயே பருவ காலங்கள் தோன்றுகின்றன. 23.5o சாய்வின் காரணமாக புவியின் வடகோணப் பகுதியில் கோடை காலமாக இருக்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards