11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
கணக்கியலின் கருத்துக் கட்டமைப்பு
11ஆம் வகுப்பு Accountancy / கணக்குப்பதிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Accountancy / கணக்குப்பதிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Accountancy Test

1.
கணக்கியலின் ஆதாரத் தூண்களாக விளங்குபவை _________________
அடிப்படை அனுமானங்கள்
எதிர்பார்க்கும் நட்டங்கள்
நிறுவனத் தொடர்ச்சி
கணக்கியல் கருத்துகள்
2.
ஈட்டிய ஆதாயத்தைக் குறிப்பது _________________
வருவாய்
கொள்முதல்
விற்பனை
இலாபம்
3.
பொருத்துகை கருத்தின்படி ஒப்பிடப்படும் இனங்கள் _______________
அடக்கம் மற்றும் ஈட்டிய வருவாய்
அடக்கம் மற்றும் ஈட்டிய இலாபம்
அடக்கம் மற்றும் ஈட்டிய நட்டம்
அடக்கம் மற்றும் ஈட்டிய செலவு
4.
இரட்டைத் தன்மைக் கருத்து _________________ க்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
குறிப்பேட்டு
பேரேட்டு
ஒற்றைப் பதிவு முறை
இரட்டைப் பதிவு முறை
5.
உண்மை உணர்த்தும் கொள்கை முக்கியமான தகவல்களை _______________
வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்
வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்
கட்டாயம் தெரிவிக்க கூடியதாய் இருக்க வேண்டும்
இவை ஏதுமில்லை
6.
முதல் - _______ ________
சொத்துக்கள் பொறுப்புகள்
சொத்துக்கள் - பொறுப்புகள்
சொத்துக்கள் கடனீந்தோர்
இவற்றில் ஏதும் இல்லை
7.
ASP என்பது _______
கணக்கியல் தரநிலை வாரியம்
கணக்கியல் தரநிலை வியாபாரம்
கணக்கியல் தரநிலை புத்தகம்
இவற்றில் ஏதும் இல்லை
8.
_______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.
ஒற்றைப்பதிவு முறை
இரட்டைப்பதிவு முறை
கணக்கேடுகள் பராமரிப்பு
மேற்கூறிய அனைத்தும்
9.
10.
வணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து
பண மதிப்பீட்டுக் கருத்து
அடக்கவிலை கருத்து
வணிகத்தனித்தன்மை கருத்து
இரட்டைத்தன்மை கருத்து
11.
பன்னாட்டு நிதிஅறிக்கை தரநிலைகள் குறிப்பு வரைக.
12.
கணக்கேடுகள் பராமரிப்பின் இயல்புகள் யாவை?
13.
கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல் மற்றஉம் கணக்குப் பதிவியலுக்கான உறவுமுறையினை விளக்குக.
14.
நிறுவன தொடர்ச்சி அனுமானம் குறித்து சிறு குறிப்பு வரைக.
15.
கணக்கியலில் முழு வெளியீட்டு கொள்கை என்றால் என்ன?
16.
தீர்வு கருத்து பற்றி சுருக்கமாக விவரிக்க
17.
கணக்கேடுகள் பராமரிப்பை வரையறு
18.
முன்னெச்சரிக்கை மரபு பற்றி விளக்குக.
19.
நிலைத்தன்மை மரபு குறித்து சிறு குறிப்பு வரைக
20.
அடக்கவிலை கருத்து குறித்து விளக்குக.
21.
வணிகத்தன்மை கருத்து பற்றி விளக்குக.
22.
கணக்கியல் தரநிலைகள் குறித்து சிறு குறிப்பு வரைக.
23.
‘ஒரு வணிக நிறுவனம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்’ – இந்த வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கியல் கருத்தை விளக்குக.
24.
பொருத்துகை கருத்து என்றால் என்ன? ஏன் ஒரு வணிக அமைப்பு இக்கருத்தைப் பின்பற்ற வேண்டும்?
25.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை?
1.
(a)
அடிப்படை அனுமானங்கள்
2.
(a)
வருவாய்
3.
(a)
அடக்கம் மற்றும் ஈட்டிய வருவாய்
4.
(d)
இரட்டைப் பதிவு முறை
5.
(a)
வெளிப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்
6.
(b)
சொத்துக்கள் - பொறுப்புகள்
7.
(a)
கணக்கியல் தரநிலை வாரியம்
8.
(b)
இரட்டைப்பதிவு முறை
9.
(b)
10.
(c)
வணிகத்தனித்தன்மை கருத்து
11.
(1) பன்னாட்டு நிதி அறிக்கை தரநிலைகள் (IFRS) பன்னாட்டு கணக்கியல் தரநிலை வாரியத்தால் (IASB) வழங்கப்படுவதாகும்.
(2) இது பன்னாட்டு தரநிலைகளின் தொகுப்பு. இது குறிப்பிட்ட நடவடிக்கை மற்றும் பிறநிகழ்வுகள் எவ்வாறு நிதிநிலை அறிக்கைகளில், அறிக்கையிடப்பட வேண்டும் என்பதை விளங்குகிறது.
(3) கணக்கியல் தரநிலைகளை உலக அளவில் ஏற்றுக்கொள்ளும் படியும், மற்றும் பன்னாட்டு அளவில் நிதிநிலை அறிக்கைகளை மேம்படுத்தும் வண்ணம் உருவாக்கவும் சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் வெளியிடப்படுகின்றன.
12.
1. இது வணிக நடவடிக்கைக்கள், கணக்கேடுகளில் பதிவு செய்வதற்கான செயல்முறை ஆகும்.
2. பணமதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.
3. கணக்கேடுகள் பராமரிப்பே, கணக்கியல் செயல்பாட்டின் முதனமை நிலை ஆகும்.
4. கணக்கேடுகள் பராமரிப்பு, குறிப்பேட்டில் பதிதல் மற்றும் பேரேட்டில் எடுத்தெழுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
13.
1. கணக்கேடுகள் பராமரிப்பு (Book Keeping) என்பதும் கணக்கியலின் ஒரு பகுதியாகும்.இது கணக்கியலின் தொடக்க நிலை ஆகும்.இது நடவடிக்கைகளை கணக்கேடுக்களில் பதியும் ஒரு செயல் முறையாகும்.
2. கணக்கியல் (Accounting) என்பது கணக்குப்பதிவியலின் ஒரு பகுதியாகும். கணக்கியல் என்பது மிதித்த தகவல்களை பதிவு செய்தல், வகைப்படுத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் உய்த்துணர்த்துதல் போன்ற செயல்களை கொண்டதாகும்.
3. கணக்குப் பதிவில் என்பது, கணக்கிடல் செயல்முறையின் முறையான அறிவு மற்றும் தரங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
14.
ஒரு வணிக நிறுவனம் நீண்ட காலம் தொடர்ந்து நடைபெற்று இலாபமூட்டும் என்ற எதிர்பார்ப்பிலே நடத்தப்பட்டு வருகிறது.இக்கண்ணோடத்திலேயே நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன.எதிர்காலத்தில் நிறுவனம் கலைக்கப்படும் தேவை எழும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை.
15.
கணக்கு அறிக்கைகள் அனைவர்க்கும் முக்கிய தகவல்களை முழுமையாக வெளியிட வேண்டும்.இதன் அடிப்படையில் ஆர்வமுள்ளவர்கள் தக்க முடிவினை எடுப்பதற்கு உகந்த வகையில் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு வகையான விளக்கத்துடன் நேர்மையானதாகவும், முழுமையானதாகவும் கூடிய கணக்கியல் தகவல்களை தர வேண்டும்.
16.
வருவாய் தீர்வு கருத்தின்படி, ஒரு சொத்து மதிப்பில் ஏற்படும் மாற்றம், அச்சொத்துக்கள் வணிகத்தால் தீர்வு செய்யப்படும் போதும் மட்டுமே பதிவு செய்யப்படும்.புராதன அடக்கவிலையில் சொத்துக்கள் பதிவு செய்தால், சொத்தின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் அச்சொத்து தீர்வு செய்யும் போது மட்டுமே கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
17.
ஜே.ஆர்.பேட்லிபாய் அவர்களின் கூற்றுப்பா, "கணக்கு ஏடுகள் பராமரிப்பு என்பது வணிக நடவடிக்கைகளை ஏடுகளில் பதிவு செய்யும் ஒரு கலையாகும்."
ஆர்.என்.கார்டர் அவர்களின் கூற்றுப்பா "கணக்கேடுகள் பராமரிப்பு என்பது, பணம் அல்லது பணத்தின் மதிப்பிலுள்ள அணைத்து வணிகிய நடவடிக்கைகளையும் கணக்கேடுகளில் சரியாக பதிவு செய்யும் காலை மற்றும் அறிவியல் ஆகும்."
18.
1. இது எச்சரிக்கையாக அல்லது பாதுகாப்பாக செயல்படும் கொள்கையாகும்.
2. இக்கொள்கையின்படி வணிக நடவடிக்கைகள் பதியும் போது இலாபத்தை எதிர்நோக்காமால் ஆனால் அனைத்து எதிர்பார்க்கும் நட்டங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
3. எடுத்துக்காட்டாக, இறுதி சரக்கிருப்பு அடக்கவிலை அல்லது சந்தைவிலை இதில் எது குறைவாக உள்ளதோ அதை கருத்தில் கொள்ள வேண்டும்.
4. இக்கருத்தின்படி எந்தவொரு மதிப்பின் அதிகரிப்பும், பெறப்படாத நிலையில் கணக்கில் கொண்டு வரக்கூடாது.
5. உருவாகாத ஆதாயத்தை எதிர்நோக்கக்கூடாது.அனால் நாட்டம் ஏற்பட வாய்ப்பிருந்தால் அதற்கு ஒருக்கீடு செய்ய வேண்டும்.
19.
1. கணக்கியல் கொளகையும், நடைமுறைகளும் தொடர்ச்சியாக ஒரு கணக்காண்டிலிருந்து மற்றொரு கனகாந்திற்கும் பின்பற்றப்படும் என்பதை இம்மரபு தெரிவிக்கிறது.
2. ஒரே விதமான கணக்கியல் கொளகைகள் பின்பற்றப்பட்டால் தான் வெவ்வேறு ஆண்டுகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியும்.
3. உதாரணமாக, ஒரு நிறுவனம், நிலைச்சொத்து வாகியதிலிருந்தே நேர்கோட்டு தேய்மான முறையைப் பின்பற்றினால், தொடர்ச்சியாக அதையே பின்பற்ற வேண்டும்.இருப்பினும், இதனை மாற்றம் செய்யவே முடியாது எனப் பொருள் கொள்ள இயலாது.
பின்வரும் சூழ்நிலைகளில் கணக்கியல் கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கலாம்.
1. சட்டத் தேவையைப் பூர்த்தி செய்ய.
2. கணக்கியல் தர நிர்ணயங்களுக்கு இணங்க
3. வணிகத்தின் உண்மையான மற்றும் நேர்மையான நிலையைப் பிரதிபலிக்க.
20.
1. வணிகத்தில் ஒரு சொத்தானது புராதன அடக்கவிலையில் அதாவது வாகிய விலையில் பதிவு செய்யப்படுகிறது.
2. அனைத்து தொடரும் கனாகியலுக்கும் அடிப்படையாக அமையும்.
3. இது சொத்துக்கள் எப்போதுமே அடக்கவிலையில் காணப்பிக்கப்படும் என்று பொருளாகாது.சொத்து வாங்கும் போது அடக்கவிலையில் பதிவு செய்யப்பட்டு முறையாகத் தேய்மானம் புத்தக மதிப்பிலிருந்து கழிக்கப்பட்டு காண்பிக்கப்படுகிறது.
இதன் குறைபாடுகள்:
1. பணவீக்க காலத்தில், பொருட்களின் விலை அதிகரிக்கும் போது சொத்துக்களை புராதன அடக்க விலையில் மதிப்பீடுவது வணிகத்தின் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை.
2. புராதன அடக்கவிலையில் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் வெவ்வேறு நாட்களில் நிறுவப்பட்ட வணிக அமைப்புகளின் முடிவுகளை ஒப்பீடு செய்ய முடியாது.
3. மனிதவளங்கள் போன்ற அடக்கவிலையால் மதிப்பிட முடியாத சொத்துக்களை இக்கருத்தின் கீழ் அங்கீகரிக்க முடிவதில்லை.
21.
1. இந்த கருத்தின்படி வணிக நிறுவனம், முதல் இருக்கின்ற உரிமையாளர் அல்லது உரிமையாளர்களிடமிருந்து தனித்து மற்றும் வேறுபட்டுள்ளதாக கருதப்படுகிறது.
2. இக்கருத்தின் அடிப்படையில் கணக்குகள், உரிமையாளரின் கண்ணோட்டத்தில் இல்லாமல் வபாணிக நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் தயாரிக்கப்படுகின்றன.ஆதலால் உரிமையாளரின் முதல், நிறுவனம் செலுத்த வேண்டிய ஒரு பொறுப்பாகும்.
3. இந்த கருத்தின்படி கணக்கு ஏடுகளில், வணிக நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.உரிமையாளரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் வணிகத்தில் அவர் பங்களித்த முதல், மற்றும் சொந்த உபயோகத்திற்கு வணிகத்திலிருந்து எடுத்த ரொக்கம் போன்ற நடவடிக்கைகள் கணக்கேடுகளில் பதிவு செய்யப்பட வேண்டும்.
22.
கணக்கியலில் பின்பற்ற வேண்டிய கட்டமைப்பையும் விதிகளையும், கணக்கியல் தரநிலைகள், தருவதால் வெவ்வேறு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளை ஒப்பீடு செய்ய முடிகிறது நிதிநிலை அறிக்கை தயார் செய்வதில் நிலைத்தன்மை, ஒப்பீட்டு தன்மை, நிறைவுத் தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு கணக்கியல் கோட்பாடுகளை தர நிர்ணயம் செய்வது அவசியமாகிறது.
கோங்லர் என்பவற்றின் கூற்றுப்படி, "பொதுக் கணக்காளர் மற்றும் கணக்காளர்களின் நலனுக்காக வழங்கும் சட்டம் மற்றும் தொழில்சார் அமைப்புகளால் பொதுவாக உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளே கணக்கியல் தரநிலையாகும்."
கணக்கியல் தரநிலைகள் என்பது கணக்கியல் நடவடிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை அடையாளம் கண்டு, அளவிட்டு, பதிவு செய்து, தகவல்களை நிதி அறிக்கை வாயிலாக வெளிப்படுத்துவதற்காக கணக்கியல் வல்லுநர் குழு அல்லது அரசு அல்லது பிற ஒழுங்காற்று அமைப்புகளால் வெளியிடப்படும் கொள்கை ஆவணங்களாகும்.
23.
நிறுவன தொடர்ச்சி கருத்து:
இது ஒரு அடிப்படை கருத்து.இதன்படி ஒரு வணிக நிறுவனம் தொடராக கூடியது மற்றும் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து செயலாற்றும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.
இக்கருத்தின் அடிப்படையில்:
1. சொத்து மற்றும் பொறுப்புகளை மதிப்பீடு செய்தல்
2. நிலைச் சொத்தின் மீதான தேய்மானம்.
3. கொடுப்பட வேண்டிய மற்றும் முன்கூட்டிச் செய்த செலவுகள்.
4. பெறபடவேண்டிய மற்றும் கூடியுள்ள வருமானம்.
போன்றவைகளின் கணக்கியல் வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
உதாரணமாக, பொதுவாக சொத்துக்கள் புராதான அடக்கவிலையில் (Historical Cost) பதிவு செய்யப்படுகின்றன.சொத்துக்களின் மதிப்பில் உண்டாகும் குறுகிய கால ஏற்ற, இறக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
24.
ஒரு குறிப்பிட்ட கணக்காண்டின் ஈட்டிய வருவாய் அக்கணக்காண்டின் செலவு அடங்களோடு ஒப்பிட்டு வியாபாரத்தின் முடிவை அறிவதே பொறுத்துகைக் கருது எனப்படுகிறது.
இது நிகழ்வு தீர்வு கருது மட்டும் கணக்கியல் காலா கருத்தினை அடிப்டையாகக் கொண்டதாகும்.
குறிப்பிட்ட ஆண்டில் மேற்கொள்ளப்படாமல் அந்த கணக்காண்டிற்குரிய செலவுகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இக்கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டிய மற்றும் முன் கூட்டித் செலுத்திய செலவுகள் மற்றும் பெற வேண்டிய அல்லது முன்கூட்டிப் பெட்ரா வருமானங்கள் பான்ழவற்றிக்கு சரிக்கட்டுதல்கள் செய்யப்படுகின்றன.
இவ்வாறாக இலாபநட்டப் பகிர்வுக்கு முன் ஒரு கணக்காண்டில் ஈட்டிய வருவாய், அவ்வாண்டில் அவ்வருவாயை ஈட்ட செய்த செலவுகளோடு ஒப்பீடு செய்வதன் மூலம் துல்லிய இலாபத்தை கணக்கிட முடியும்.
25.
கணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள்:
1. நடவடிக்கைகள் அனைத்தும் முறையாக, காலவரிசைப்படி கணக்கேடுகளில் பதியப்படுகின்றன.இதனால் அணைத்து வணிக நடவடிக்கைகளுக்கும், கணக்கு ஏடு பராமரிப்பு நிரந்தரமான மட்டும் நம்பகத் தன்மையுள்ள ஆவணங்களை அளிக்கிறது.
2. கணக்கேடுகள் பராமரிப்பு நிதித் தகவல்கள் பெற உதவுகிறது.
3. இது அணைத்து வணிக செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
4. வணிக நிறுவனங்களின் கணக்கேடுகள் நீதிமன்ற வழக்குகளில் சட்டப்படியான சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
5. பல்வேறு ஆண்டுகளின் நிதிவிவரங்களை ஒப்பிடுவது சாத்தியமாகிறது.மேலும், நிதி தகவல்களை, வேறு வணிக நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
6. செலுத்த வேண்டிய வரியினைக் கண்டுபிடிக்க கணக்கேடுகள் பரராமரிப்பு பயனுள்ளதாக இருக்கிறது.
கணக்கேடுகள் பராமரிப்பு குறைபாடுகள்:
1. இதில் பண மதிப்பிலான நடவடிக்கைகள் மட்டுமே பதியப்படுகின்றன.
2. இதில், விலை நிலை மாற்றங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
3. இதில், கடந்த கால நிதி விவரங்களை மட்டுமே பதியப்படுகின்றன.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards