11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil கேடில் விழுச்செல்வம் - உரைநடை - தமிழகக் கல்வி வரலாறு Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set B

Published on: 31/07/2019
விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள்
11ஆம் வகுப்பு Biology / உயிரியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Biology / உயிரியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Biology Test1.
மண்புழுவில் மேலுதடு எனப்படுவது
பெரிஸ்டோமியம்
புரோஸ்டோமியம்
பைஜிடியம்
மெட்டமியர்
2.
கீழ்கண்ட வகை மண்புழு மண்ணின் மேலடுக்குக்குள் வாழிடம் கிடைமட்ட வாழ்விகளாகும். இவைகள் அனிசிக் வகை மண்புழுக்கள் என அழைக்கப்படுகிறது.
பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
லேம்பிட்டோ மாரிட்டீ
ஆக்டகீடோனா தர்ஸ்டோனி
யூட்ரிலஸ் யூஜினியே
3.
தவளையின் சிறுநீரகம் _______.
ஆர்க்கிநெஃப்ராஸ்
புரோநெஃப்ராஸ்
மீசோநெஃப்ராஸ்
மெட்டாநெஃப்ரோஸ்
4.
கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ______ இணை _______ மற்றும் _______ வடிவக் கண்கள் உள்ளன.
ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
இரு, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ
பல, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
பல, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
5.
லாம்பிட்டோ மாரிட்டீ மண்புழுவின் சிறப்புப்பகுதியான கிளைடெல்லம் காணப்படுவது _______.
13 முதல் 14 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
12 முதல் 13 வரை உள்ள கண்டங்களில்
14 முதல் 16 வரை உள்ள கண்டங்களில்
6.
தவளைகள் மாறு வெப்பநிலை விலங்குகள் என அழைக்கப்பட காரணம் யாது?
7.
தவளையின் வகைப்பாட்டு நிலையை எழுதுக.
8.
ஆண் தவளை புணர்ச்சிக்காக எவ்வாறு பெண் தவளையைக் கவர்கின்றது?
9.
கரப்பான் பூச்சியின் கூட்டு கண்களில் உள்ள பார்வை அலகுகளின் பெயர்களை எழுதுக.
10.
11.
ஆண் மற்றும் பெண் தவளைகளில் காணப்படும் பால்வழி வேறுபாடுகள் யாவை.
12.
மண்புழுக்களை மண்ணின் அடுக்குகளில் அவை வாழுமிடத்தை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்து.
13.
தவளையின் பால் வழி வேறுபாட்டு தன்மைகள் எப்பொழுது தெளிவாகக் காணப்படும்? அவைகள் யாவை?
14.
லாம்பிட்டோ மாரிட்டீயின் மண்புழுவில் கிளைடெல்லம் மற்றும் விந்துகொள்பை துளை ஆகியவற்றின் இருப்பிடம் யாது?
15.
தவளையில் காணும் சுவாச முறைகளைப் பெயரிடுக.
16.
தவளையின் சுவாச மண்டலத்தின் அமைப்பை விளக்கு.
17.
தவளைகளுக்கும் தேரைகளுக்குமிடையே வேறுபாடுகளை அட்டவணைப்படுத்து
18.
தவளையின் புறத்தோற்ற அமைப்பை படத்துடன் விளக்குக.
19.
1.
(b)
புரோஸ்டோமியம்
2.
(b)
லேம்பிட்டோ மாரிட்டீ
3.
(c)
மீசோநெஃப்ராஸ்
4.
(a)
ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ
5.
(b)
14 முதல் 17 வரை உள்ள கண்டங்களில்
6.
சுற்றுச் சூழலின் வெப்பநிலைக் கேற்ப தவளையின் உடல் வெப்பமும் மாறுபடுவதால், இவ்வுயிரிகள் மாறும் வெப்பநிலை விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.
7.
தொகுதி : முதுகு நாணிகள்
வகுப்பு : இருவாழ்விகள்
பேரினம் : ரானா
சிற்றினம் : ஹெக்ஸாடேக்டைலா (இந்திய பச்சைத்தவளை)
8.
1. இனப்பெருக்க காலங்களில், ஆன் தவளைகளில் ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. குரல்ப்பையின் உதவியினால் கரகர ஒலியை உருவாக்கி பெண் தவளையை கவர்கின்றது.
9.
ஒம்மட்டியா
10.
11.
| வ.எண் | ஆண் தவளை | பெண் தவளை |
|---|---|---|
| 1 | ஓரிணைய குரல்பையை உள்ளது. | குரல்பை கிடையாது |
| 2 | குரல்பையின் மூலம் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது | ஒலி ஏற்படுத்துவதில்லை |
| 3 | முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் திண்டு காணப்படுகிறது. | கலவித்திண்டு கிடையாது |
12.
1. எபிஜீக் - மேற்பரப்பு வாழ்விகள்
எ.கா: பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்
2. அனிசிக் - மண்ணின் மேலடுக்குகளுக்குள் வாழும் இடைப்பட்ட வாழ்விகள்.
எ.கா: லேம்பிட்டோ மாரிட்டீ
லம்பிரிக்ஸ் டெரெஸ்டரிஸ்
3. எண்டோஜீயிக் - மண்ணடுக்குகளின் ஆழத்தில் வாழும் மண்புழுக்கள்.
எ.கா: ஆக்டகீடோனோ தர்ஸ்டோனி
13.
இனப்பெருக்க காலங்களில் பால்வழி வேறுபாடுகள் தெளிவாக காணப்படும்.
1. ஆண் தவளையை ஓரிணை குரல் பை காணப்படுகிறது.
2. ஆண் தவளையின் முன்னங்கால் முதல் விரலின் கீழே காலவித தண்டு காணப்படுகிறது.
3. குரல் பையின் மூலம் ஆண் தவளைகள் கரகர ஒலியை ஏற்படுத்துகிறது.
14.
1. கிளைடெல்லம் - முதிர்ந்த மண்புழுக்களில் 14 முதல் 17 வரையிலான கண்டங்கள் தடித்து காணப்படுகிறது. இதற்கு கிளைடெல்லம் என்று பெயர்.
2. விந்து கொள்பை துளைகள் 6 வது மற்றும் 7 வது கண்டகளுக்கிடையேயும் 7வது மற்றும் 8வது கண்டகளுக்கிடையேயும் 8வது மற்றும் 9வது கண்டகளுக்கிடையேயும் வயிற்று புறத்தில் திறக்கின்றன.
15.
1. வாய்க்குழி சுவாசம்
2. நுரையீரல் சுவாசம்
3. தோல் சுவாசம்
16.
i. நீரிலும் நிலத்திலும் இருவேறு முறைகளில் சுவாசிக்கின்றன.
ii. வாய்க்குழி சுவாசம் உறுப்புகளாகும்.
1. வாய்க்குழி சுவாசம்
(i) நிலத்தில் இருக்கும் போது வாய்க்குழி சுவாசம் செய்கிறது.
(ii) வாய்க்குழி வழி சுவாசத்தின் போது வாய் மூடியிருக்கும் நிலையில் நாசித் துளைகள் திறந்திருக்கின்றன.
(iii) வாய்குழியின் தரைப்பகுதி மேலும் கீழும் ஏறி இறங்குகையில் நாசித் துளைகள் வழியாக காற்று வெளியேற்றம் மற்றும் உள்ளேற்றம் ஏற்படும்.
2. நுரையீரல் சுவாசம்
(i). மார்பின் மேற்பகுதியில் 1 இணை வெளிசிவப்பு நிறமுடைய பை போன்ற நுரையீரல்கள் அமைந்துள்ளது.
(ii) நாசித் துளைகள் வழியாக உள்நுழையும் காற்று வாய்க்குழி மூலம் நுரையீரல்களை அடைகிறது.
3. தோல் சுவாசம்
(i) நீரில் இருக்கும் பொது நீரில் கரைந்துள்ள O2 தோலின் வழியாக விரவல் முறையில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
(ii) கோடைகால உறக்கம் மற்றும் குளிர்கால உறக்கத்தின்போது தோலின் வழியாக சுவாசம் நடைபெறுகிறது.
17.
| பண்புகள் | தவளைகள் | தேரைகள் |
|---|---|---|
| குடும்பம் | ராணிடே | பஃபோனிடே |
| உடல் வடிவம் | ஒல்லியானது | பருத்தது |
| கால்கள் | நீண்டவை | குட்டையானவை |
| விரலிடைச்சவ்வு கொண்ட பாதம் | உள்ளது | இல்லை |
| தோல் | மென்மையான ஈரமுள்ள தோல் | பெருமுகிழ்ப்பு போன்ற சுரபிகளுடன் உலர்ந்த தோல் |
| பற்கள் | மேல்தாடை பற்கள், வோமரின் பற்கள் ஆகியவை உண்டு | பற்கள் இல்லை |
| முட்டையிடுதல் | கொத்தாக முட்டைகளைளிடும் | சாரமாக முட்டைகளையிடும் |
18.
1. தவளையின் உடல் படகு போன்று நீரில் நீந்துவதற்கு ஏற்றதாக உள்ளது.
2. முதுகுப்புறம், வயிற்றுப்புறம் அச்சுவாக்கி தட்டையாக உள்ளது.
3. உடலானது தலை மற்றும் உடல் எனும் இப்பகுதிகளை கொண்டது.
4. உடல் தோல் மென்மையாகவும் வழுவழுப்பு தன்மையுடையதாகவும் தளர்வாக உடலோடு இணைக்கப்பட்டுள்ளது.
5. முதுகுப்புற தோல் அடர் பச்சை நிறமுள்ளது
6. வயிற்றுப்புற தோல் வெளிறிய நிறமுள்ளது.
7. தலை முக்கோண வடிவிலானது.
8. தலையின் முன்முனைப்பகுதியில் அகன்ற பெரியவாய் உள்ளது.
9. முகப்பகுதியின் முதுகுபுறத்தில் மையக்கோட்டின் இருபுறமும் பக்கத்திற்கொன்றாக புறநாசித் துளைகள் உள்ளன.
10. நாசித்துளைகளுக்கு சற்று பின்னே பெரிய, ஓர் இணை கண்கள்புடைத்த நிலையில் காணப்படுகிறது.
11. இமைகள் கண்களை பாதுகாக்கிறது. மேல் இமை அசைவற்றது.
12. கீழ் இமை அசையும் தன்மையுடையது, கண்களைப் பாதுகாக்கிறது.
13. மூன்றாவது இமை நிக்டிடேடிவ் சவ்வு ஒளி ஊடுருவாக் கூடியது. நீரில் இருக்கும் போது கண்களைப் பாதுகாக்கின்றது.
14. கண்களுக்குப் பின்னால் இரண்டு பக்கங்களிலும் செவிப்பறை காணப்படுகின்றன.
15. தவளையில் புறச்செவி, கழுத்து மற்றும் வாழ் இல்லை.
16. ஓரிணை முன்னங்கால்கள் மற்றும் பின்னங்கால்கள் உண்டு
17. முதுகுப்புறத்தின் பின் முனையில் பின்னங்கால்களுக்கிடையே செரிமான, சிறுநீரக இனப்பெருக்கப் பொதுக்கழிவு புழை அமைந்துள்ளது.
18. குட்டையான தடிமனான முன்னங்கால்கள் உடல் எடையைத் தாங்கக் கூடியதாக உள்ளன.
19. தாவளின் முடிவில் தரையிறங்கும் போது நிலத்தில் ஊன்ற இக்கால்கள் பயன்படுகின்றன.
20. முன்னங்கால்களில் மேற்கை, முன்னகை மற்றும் கை ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன.
21. கையில் நான்கு விரல்கள் உண்டு.
22. பின்னங்கால்கள் நீண்டு பெரியதாக உள்ளன.
23. பின்னங்காலில் தொடை கீழ்கால் மற்றும் பாதம் என மூன்று பகுதிகள் உண்டு.
24. பாதத்தில் விரலிடைச் சவ்வு கொண்ட 5 விரல்களும் 6வது விரல் எனக் கருதப்படுகிற சிறிய புடைப்பும் உள்ளது.
25. நீரில் இருக்கும் போது நீந்துவதற்கும் நிலத்தில் தாவிக் குதிப்பதற்குமான தகவமைப்பாக பின்னங்கால்கள் உள்ளது.
26. ஓய்வு நிலையில் தன் பின்னங்கால்களை Z வடிவத்தில் மாய்த்து வைத்துக் கொள்கிறது.
27. இனப்பெருக்க காலங்களில் தவளைகளின் பால்வழி வேறுபாட்டு தன்மை தெளிவாக தெரிகிறது.
28. ஆண் தவளையை 1 இணை குரல்பை, கரகர ஒலியை எழுப்புகிறது.
29. ஆண் தவளையின் முன்னங்கால் முதல் விரலின் கீழே கலவித் தீண்டும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
30. பெந்தவளையில் கலவித்திண்டு, குரல்பை காணவில்லை.
19.
11th Standard Syllabus & Materials
11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
Tamilnadu 11th Standard Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards