11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 25/07/2019
அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி
11ஆம் வகுப்பு Chemistry / வேதியியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Chemistry / வேதியியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Chemistry Test

1.
பின்வருவனவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு
ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை ஜிங்க் திரையின் மீது செய்யப்பட்டது.
ரூதர்போர்டின் α-சிதறல் வெள்ளி தகட்டின் மீது செய்யப்பட்டது
ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை முடிவு தாம்சனின் அணுமாதிரி தவறானது என நிரூபித்தது
a & b சரி
2.
அணுவானது நேர்மின்சுமையுடைய கோளம் போன்ற அமைப்பில் உள்ளது. அக்கோளத்தில் எதிர்மின்சுமையுடைய எலக்ட்ரான்கள் பொதிந்து உள்ளது. இது பின்வருவனவற்றுள் யாரால் முன்மொழியப்பட்டது.
ஷ்ரோடிங்கர்
J.J. தாம்சன்
ரூதர்போர்டு
போர்
3.
E=-2.178x10-18 J(z2/n2) என்ற சமன்பாட்டின் அடிப்படையில், சில முடிவுகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் சரியாக இல்லாதது எது?
எலக்ட்ரானானது ஒரு ஆர்பிட்டிலிருந்து மற்றொரு ஆர்பிட்டிற்கு மாறும்போது, ஆற்றல்மாறுபாட்டினை கணக்கிட இச்சமன்பாட்டினைப் பயன்படுத்தலாம்.
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
இச்சமன்பாட்டில் உள்ள எதிர்குறியானது, அணுக்கருவோடு எலக்ட்ரான் பிணைக்கப்பட்டுள்ள போது உள்ள ஆற்றலானது, எலக்ட்ரான்கள் அணுக்கருவிலிருந்து ஈறிலாத் தொலைவில் உள்ள போது பெற்றுள்ள ஆற்றலைக் காட்டிலும் குறைவு.
n ன் மதிப்பு அதிகமாக இருப்பின், ஆர்பிட்டால் ஆர மதிப்பும் அதிகம்.
4.
45 nm அலைநீளம் உடைய ஒளியின் ஆற்றல்
6.67x1015J
6.67x1011J
4.42x10-18J
4.42x1015J
5.
M2+ அயனியின் எலக்ட்ரான் அமைப்பு 1s22s22p63s23p63d6 அதன் அணு நிறை 56 எனில் M என்ற அணுவின் அணுக்கரு பெற்றிருக்கும் நியூட்ரான்களின் எண்ணிக்கை
26
22
30
24
6.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும், துணைக்கூட்டின் குறியீடு, அனுமதிக்கப்பட்ட m மதிப்புகள் மற்றும் ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினைத் தருக.
i) n = 4, l =2, ii) n =5, l = 3 iii) n=7, l=0
7.
5400Å பச்சை நிற ஒளியின் அலை நீளத்திற்கு சமமான டிபிராக்ளி அலைநீளத்தினைப் பெற 54g டென்னிஸ் பந்து எவ்வளவு வேகத்தில் பயணிக்க வேண்டும்?
8.
ஆர்பிட்டால் வரையறு. 3px மற்றும் 4\(d_{x^{2}-y ^{2} }\) ஆர்பிட்டாலில் உள்ள எலக்ட்ரானுக்கு n மற்றும் l மதிப்புகளைக் கூறுக
9.
சரிபாதியளவு நிரப்பப்பட்ட ஆர்பிட்டால்கள் நிலைப்புத்தன்மை பெறுதல் p- ஆர்பிட்டாலைக் காட்டிலும் d – ஆர்பிட்டாலில் அதிகமாக உள்ளது. ஏன்?
10.
2s, 4p, 5d மற்றும் 4f ஆர்பிட்டால்களுக்கு எத்தனை ஆரக் கணுக்கள் (radial node) காணப்படுகின்றன? எத்தனை கோணக் கணுக்கள் (angular nodes) காணப்படுகின்றன.
11.
n = 4க்கு சாத்தியமான ஆர்பிட்டால்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுக.
12.
ஆர்பிட்டாலின் வடிவம், ஆற்றல், திசையமைப்பு, உருவளவு ஆகியவற்றினை தரும் குவாண்டம் எண்கள் எவை?
13.
பரிமாற்ற ஆற்றல் என்றால் என்ன?
14.
ஹீண்ட் விதிப்படி சமமான ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் எலக்ட்ரான்கள் எவ்வாறு நிரப்பப்படுகின்றன என்பதை உதாரணத்துடன் விளக்குக.
15.
எலக்ட்ரான் அலைத்தன்மை உடையது. இந்த கண்டுபிடிப்பு எதை உருவாக்க காரணமாக அமைந்தது?
16.
டி -பிராக்ளே அலைநீளம் எதற்கு முக்கியத்துவம் உடையது? எதற்குப் புறக்கணிக்கத்தக்கது?
17.
போர் அணு மாதிரியின் வரம்புகள் யாவை?
18.
ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.
19.
ஆஃபா தத்துவத்தினை விவரிக்க.
20.
பரிமாற்ற ஆற்றலை எடுத்துக்காட்டுகள் விவரி.
21.
140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.
1.
(c)
ரூதர்போர்டின் α-சிதறல் சோதனை முடிவு தாம்சனின் அணுமாதிரி தவறானது என நிரூபித்தது
2.
(b)
J.J. தாம்சன்
3.
(b)
n= 6 வட்டப்பாதையில் இருப்பதைக் காட்டிலும் n= 1 ல் எலக்ட்ரானானது அதிக எதிர்குறி ஆற்றலைப் பெற்றிருக்கும். இது எலக்ட்ரானானது சிறிய அனுமதிக்கப்பட்ட ஆர்பிட்டில் உள்ளது வலிமைக்குறைவாக பிணைக்கப்பட்டுள்ளது என பொருள்படும்.
4.
(c)
4.42x10-18J
5.
(c)
30
6.
| n | l | துணை ஆற்றல் நிலை | ml மதிப்புகள் | ஆர்பிட்டால்களின் எண்ணிக்கை |
| 4 | 2 | 4d | -2,-1,0,+1,+2 | ஐந்து 4d ஆர்பிட்டால்கள் |
| 5 | 3 | 5f | -3,-2,-1,0,+1,+2,+3 | ஏழு 5f ஆர்பிட்டால்கள் |
| 7 | 0 | 7s | 0 | ஒரு 7s ஆர்பிட்டால் |
7.
கொடுக்கப்பட்டவை : ஒரு டென்னிஸ் பந்தின் டி பிராக்ளி அலை நீளம் 5400 Å.
m = 54 g
v = ?
\(\lambda=\frac{h}{mV} \)
\(V=\frac{h}{m\lambda}\)
\(V=\frac{6.626\times10^{-34}JS}{54\times10^{-3}kg\times5400\times10^{-10}m}\)
V=2.27x10-26ms-1
8.
ஓர் அணுவில் அணுக்கருவை சுற்றியுள்ள பகுதியில் அதிகபட்ச அடர்த்தியை கொண்டுள்ள எலக்ட்ரானின் நிகழ்தகவு ஆகும்.
| ஆர்பிட்டால் | n | l |
| 3px | 3 | 1 |
| 4\(d_{x^{2}-y ^{2} }\) | 4 | 2 |
9.
1. சரிபாதி நிரப்பப்பட்ட d - ஆர்பிட்டாலானது, p -ஆர்பிட்டாலை விட அதிக நிலைப்புத்தன்மை உடையது.
2. ஏனெனில், d - ஆர்பிட்டாலின்
(i) அதிக பரிமாற்ற ஆற்றல் மற்றும்
(ii) சமச்சீர் தன்மை
10.
| ஆர்பிட்டால் | n | l | ஆரக்கணு n – l – 1 |
கோணக்கணு l |
| 2s | 2 | 0 | 1 | 0 |
| 4p | 4 | 1 | 2 | 1 |
| 5d | 5 | 2 | 2 | 2 |
| 4f | 4 | 3 | 0 | 3 |
11.
n = 4 l = 0, 1, 2, 3
நான்கு துணைக் கூடுகள் ⇒ s, p, d, f
l = 0 ml = 0 ; ஒரு 4s ஆர்பிட்டால்.
l = 1 ml = –1, 0, +1 ; மூன்று 4p ஆர்பிட்டால்கள்.
l= 2 ml = –2, –1, 0, +1, +2 ; ஐந்து 4d ஆர்பிட்டால்கள்.
l = 3 ml = -3, –2, –1, 0, +1, +2, +3; ஏழு 4f ஆர்பிட்டால்கள்
மொத்தம் பதினாறு ஆர்பிட்டால்கள்.
12.
| குவாண்டம் எண் | குறிப்பிடுவது | |
|---|---|---|
| (i) | முதன்மை குவாண்டம் எண் | உருவளவு மற்றும் ஆற்றல் |
| (ii) | கோண உந்தக் குவாண்டம் எண் | வடிவம் |
| (iii) | காந்தக் குவாண்டம் எண் | திசையமைப்பு |
13.
1. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே தற்சுழற்சி உடைய எலக்ட்ரான்கள் இருக்குமாயின் அவைகளினுடைய இடங்களைப் பரிமாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2. பரிமாற்றம் அடையும் நிகழ்வின்போது ஆற்றலானது வெளியிடப்படுகிறது. வெளியிடப்படும் ஆற்றல் பரிமாற்ற ஆற்றல் என அழைக்கப்படுகிறது.
14.
1. ஆறு எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள கார்பன் அணுவினை கருதுவோம்.
2. ஆஃபா தத்துவத்தின்படி இதன் எலக்ட்ரான் அமைப்பு 6C=1s22s22p2
3. இதனை பின்வருமாறு குறிப்பிடலாம்

4. மேற்கண்ட நிகழ்வில் எலக்ட்ரான் -எலக்ட்ரான் விலக்குவிசையினை குறைத்திட ஹீண்ட் விதிப்படி ஆறாவது எலக்ட்ரானானது ஐந்தாவது எலக்ட்ரான் இடம் கொண்டுள்ள px ஆர்பிட்டாலில் சென்று இரட்டையாகாமல் py ஆர்பிட்டாலுக்குச் செல்கிறது.
15.
1. எலக்ட்ரான் நுண்ணோக்கி
2. குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் விளிம்பு விளைவு
16.
முக்கியத்துவம் உடையது: எலக்ட்ராயனுக்கு டி -பிராக்ளே அலைநீளம் அளவிடக்கூடியது மேலும் முக்கியத்துவம் உடையது.
புறக்கணிக்கத்தக்கது: இரும்பு பந்திற்கு டி -பிராக்ளே மிகக்குறைவாக இருப்பதால் புறக்கணிக்கத்தக்கது.
17.
(i) பல எலக்ட்ரான்களைக் கொண்ட அணுக்களுக்கு இக்கொள்கையினை பயன்படுத்த இயலாது
(ii) சீமன் விளைவு மற்றும் ஸ்டார்க் விளைவு ஆகியவற்றை இக்கொள்கை விளக்கவில்லை.
(iii) அணுக்கருவினைச் சுற்றி எலக்ட்ரான்கள் அவற்றின் கோண உந்தத்தின் மதிப்பு \(\frac{nh}{2\pi}\) க்கு சமமாக இருக்குமாறு உள்ள சில குறிப்பிட்ட வட்டப்பாதையில் மட்டுமே சுழல்வதற்கு அடிப்படையாக அமையும் காரணத்தினை போர் கொள்கையினால் விளக்க இயலவில்லை.
18.
1. டி -பிராக்ளி கொள்கைப்படி, அணுக்கருவினை சுற்றி வரும் எலக்ட்ரானானது, துகள் மற்றும் அலைப்பண்பு ஆகிய இரு பண்புகளையும் பெற்றுள்ளது.
2. எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியாக அமைய வேண்டுமெனில், எலக்ட்ரான் சுற்றி வரும் வட்டப்பாதையின் சுற்றளவானது, அதன் அலை நீளத்தின் முழு எண் மடங்காக இருக்க வேண்டும்.
3. அவ்வாறு இல்லாத நிலையில் எலக்ட்ரான் அலையானது தொடர்ச்சியற்றதாக இருக்கும்.
வட்டப்பாதையில் சுற்றளவு =\(n\lambda \)
\(2\pi r=n\lambda \)...(1)
இங்கு,
\(\lambda =\frac { h }{ mv } \)
\(\lambda \)-வின், மதிப்பை (1) ல் பிரதியிட,
\(2\pi r=\frac { nh }{ mv } \)...(2)
சமன்பாடு (2) ஐ மாற்றியமைக்க,
\(mvr=\frac { nh }{ 2\pi } \)...(3)
கோண உந்தம் =\(\frac { nh }{ 2\pi } \)
4. மேற்கண்ட சமன்பாடு ஏற்கனவே போர் என்பவரால் யூகித்தறியப்பட்ட ஒன்றாகும். எனவே போர் கொள்கையும், டி -பிராக்ளி கொள்கையும் ஒன்றுக்கொன்று உடன்படுகின்றன.
19.
1. ஜெர்மன் மொழியில் ஆஃபா என்ற சொல்லுக்கு கட்டமைத்தல் என்பது பொருளாகும்.
2. அடி ஆற்றல் நிலையில் உள்ள அனுவின், ஆர்பிட்டால்கள் அவற்றின் ஆற்றலின் ஏறுவரிசையில் நிரப்பப்படுகின்றன.
3. அதாவது, எலக்ட்ரான்கள், அவை நிரப்பப்படுவதற்கு வாய்ப்புள்ள ஆர்பிட்டால்களில், எந்த ஆர்பிட்டால் குறைந்த ஆற்றலுடையதோ அந்த ஆர்பிட்டாலில் முதலில் நிரம்பும்.
4. குறைவான ஆற்றலுடைய ஆர்பிட்டால் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே, எலக்ட்ரானானது அடுத்த உயர் ஆற்றலுடைய ஆர்பிட்டாலினுள் நுழையும்.

5. மேலே உள்ள படம் ஆஃபா தத்துவத்தின் அடிப்படையில், பல்வேறு ஆர்பிட்டால்களின் நிரப்பப்படும் வரிசை தரப்பட்டுள்ளது.
6. இவ்வரிசை (n+1) விதிப்படி அமைந்துள்ளது.
20.
1. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரே தற்சுழற்சி உடைய எலக்ட்ரான்கள் இருக்குமாயின், அவைகளினுடைய இடங்களை பரிமாற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது.
2. பரிமாற்றம் அடையும்நிகழ்வின் போது, ஆற்றலானது வெளியிடப்படுகிறது. மேலும் வெளியிடப்படும் ஆற்றல் பரிமாற்ற ஆற்றல் (exchange energy) என அழைக்கப்படுகிறது.
3. பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு இருப்பின், வெளியிடப்படும் ஆற்றலின் மதிப்பும் நிரப்பப்பட்டுள்ள நேர்வுகளில் மட்டும், வாய்ப்புகள் அதிகம்.
4. எடுத்துக்காட்டாக, குரோமியத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Ar]3d54s1 ஆகும்.3d ஆர்பிட்டாலானது சரிபாதியளவு நிரப்பப்பட்டுள்ளது.
5. மேலும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு பத்து பரிமாற்றங்கள் நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. மாறாக [Ar]3d54s2 அமைப்பிற்கு, ஆறு பரிமாற்றங்கள் மட்டுமே நிகழ்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
6. எனவே சரிபாதியளவு நிரப்பப்பட்ட அமைப்பிற்கு பரிமாற்ற ஆற்றல் அதிகம் இது சரி பாதியளவு நிரப்பப்பட்ட 3d ஆர்பிட்டால்களின் நிலைப்புத் தன்மையினை அதிகரிக்கிறது.
7. சம ஆற்றலுடைய ஆர்பிட்டால்களின் ஒற்றை எலக்ட்ரான் நிரப்பப்படுவதற்கு ஏதுவாக காலியான ஆர்பிட்டால்கள் இருக்கும் வரை எலக்ட்ரான் இரட்டையாதல் நிகழாது என்ற ஹூண்ட்விதிக்கு அடிப்படையாக பரிமாற்ற ஆற்றலானது அமைகிறது.

21.
m = 160 g = 160 × 10–3 kg
v = 140 km hr–1=\(\frac{140\times10^{3}}{60\times60}ms^{-1}\)
v = 38.88 ms–1
\(\lambda=\frac{h}{mv}\)
\(\lambda=\frac{6.626\times10^{-34}Kgm^{2}s^{-1}}{160\times10^{-3}kg\times38.88ms^{-1}}\)
\(\lambda=1.065\times10^{-34}m\)
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards