11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
11th First Revision Test Creative Question
11ஆம் வகுப்பு Computer Science / கணினி அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Science / கணினி அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Science Test

1.
அழிப்பி எப்போது அழைக்கப்படுகிறது?
2.
அழிப்பி-சிறு குறிப்பு வரைக.
3.
ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையறுக்கும்போது எவ்வளவு பைட் அளவுள்ளதாக இருக்கும்?
4.
தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் கட்டளையமைப்பை எழுதுக.
5.
தீம்பொருள் என்றால் என்ன?
6.
இணைய பாதுகாப்பு என்றால் என்ன?
7.
பின்வரும் கூற்றின் மதிப்பு யாது? if i = 20 முதலில்
a) ++i < = 20 b) i++ < = 20
8.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டம் பற்றி எழுதுக.
9.
தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருளின் பயன் யாது?
10.
வர்க்க மூலக்கை கணக்ககிடும் செயற்கூற்றினை பற்றி சிறுகுறிப்பு வரைக.
11.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலின் வெளியீட்டை எழுதுக.
#include < string.h >
#include < iostream >
using namespace std;
int main()
{
char target [50] = ''Learning C++ is fun'' ;
char source [50] = '' , easy and very useful'' ;
strcat (target, source);
Cout << target ;
return 0;
}
12.
char str[2]={'5', '+', 'A', 'B'}; என்ற கூற்று ஏன் தவறானது?
13.
break கூற்று பற்றி சிறு குறிப்பு வரைக
14.
அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாட்டை எழுதுக.
15.
அடிப்படை செயல்பாடுகளுக்கான கூற்றுகளை எழுதுக.
16.
தரவு பிணைப்பு என்றால் என்ன?
17.
எப்பொழுது இரண்டு செயற்கூறுகள் பணிமிகுக்க முடியாது?
18.
பல்லுருவாக்கம் ஏதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது?
19.
C++- ன் இனக்குழு என்றால் என்ன?
20.
ஆண்ட்ராய்டு பயன்படும் விசைப்பலகை என்றால் என்ன?
21.
கிராக்கிங் சிறு குறிப்பு வரைக.
22.
அடிப்படை இனக்குழு என்றால் என்ன?
23.
setw( ) வடிவமைப்பு கையாளும் செயற்கூறின் பயன் என்ன?
24.
செயற்கூறு பணிமிகுப்பு என்றால் என்ன?
25.
பின்வரும் நிரல் தொகுதி முழுவதும் சரியானதா? பிழை இருந்தால் அடையாளம் காண்க?
struct sum1{ int n1,n2;}s1;
struct sum2{int n1,n2}s2;
cin >> s1.n1 >> s1.n2;
s2=s1;
26.
வரையறு-கட்டுரு.அதன் பயன் என்ன?
27.
if கூற்றுடன்,?:மும்ம செயற்குறியை ஒப்பிடுக.
28.
பொருள் நோக்கு நிர்லாக்கு குறிமுறை (OOP) அடிப்படையில் இனக்குழு மற்றும் பொருள் பற்றி வேறுபடுத்திக் காட்டுக.
29.
உறைபொதியாக்கம் மற்றும் அருவமாக்குதல் எவ்வாறு தொடர்பு படுத்தப்படுகிறது?
30.
உள்ளமை வரையெல்லை பற்றி சிறுகுறிப்பு வரைக.
31.
உள்ளார்ந்த அழைப்பு மற்றும் வெளிப்படையான அழைப்பின் வேறுபாட்டை எழுதுக.
32.
int ch = 30;
cout << ++ ch;
cout << ch;
(i) மேலே உள்ள கோப்பின் வெளிப்பாடு யாது?
(ii) ++ch க்கு பதிலாக ch+1 என மாற்றியமைத்தால் வரும் வெளிப்பாடு யாது?
33.
கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ள (i), (ii) மற்றும் (iii) என்ற இடத்தில் குறிப்பிடப்படுபவை எவை?
#include <iostream>
using namespace std;
class Box
{
double width; ..(i)
public;
double length;
void printWidth( ) ...(ii)
{
cout << "\n The Width of the box is.." << width;
}
void setWidth( double w);
};
void Box : : setWidth(double w) ..iii
{
width=w;
}
34.
மேலிடல் சிக்கல் எப்போது நிகழும்? அதனைத் தீர்க்க வழி யாது?
35.
இணைய உலகில் உள்ள சில தர நிலைகள் பற்றி எழுதுக.
36.
C++ ன் வரலாறு பற்றி எழுதுக.
37.
பின்வரும் செயற்கூறுவின் செயல்பாட்டை எழுதுக.
(i) display () , (ii) display (x , y ), (iii) x = display (), (iv) x = display (x, y )
38.
வேறுபடுத்துக break கூற்று மற்றும் continue கூற்று
39.
பின்னலான if கூற்று என்றால் என்ன?அவற்றின் மூன்று வடிவங்களை எழுதுக.
40.
அணியின் உறுப்புகளை அணுக கீழொட்டின் மதிப்பு எவ்வாறாக இருக்கலாம்?
41.
பையர்வாலின் பங்கு பற்றி எழுதுக?
42.
private காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும், public காண்புநிலையில் இருக்கும் உறுப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
43.
பெயரற்ற கட்டுரு என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
44.
கட்டுருவை அறிவித்தலுக்கான தொடரியலை எழுது. எடுத்துக்காட்டு கொடு.
45.
செயற்குறி பணிமிகுப்பு என்றால் என்ன? பணிமிகுப்பு செய்யக்கூடிய செயற்குறிகளுள் செலவற்றை கூறு.
46.
பின்வரும் if - else கூற்றுக்கு நிகரான நிபந்தனை கூற்றாக மாற்றுக:
if (x >= 10)
a = m + 5;
else
a = m;
47.
Public அணுகுமுறையில் ஆக்கிகள், அழிப்புகள், அறிவிப்பினால விளையும் நன்மைகள் யாவை?
48.
main செயற்கூற்றின் சிறப்பு யாது?
49.
கூறுநிலையாக்குதல் மற்றும் மென்பொருள் மறு பயணாக்கம் வரையறு.
50.
முன்னிலைப்பு செயலுறுப்புக்கள் என்றல் என்ன? எடுத்துக்காட்டு தருக.
1.
அழிப்பி என்ற சிறப்பு செயற்கூறானது ஆக்கியால் உருவாக்கப்பட்ட பொருளின் வாழ்நாள் முடிந்து அழியும்போது அழைக்கப்படுகிறது. பொதுவாக Public பகுதியில் அறிவிக்கப்படுகிறது.
2.
அழிப்பி என்பது, ஒரு பொருளை உருவாக்கும்போது, ஆக்கியால் பொருளுக்கென ஒதுக்கப்படும் நினைவாகப் பகுதியை விடுவிக்கும் ஒரு செயற்கூறாகும். இதுவும் இனக்குழுவின் பெயரையேக் கொண்டிருக்கும்.அனால் \(\sim \)என்னும் குறியைப் பெயரின் முன்னொட்டாக கொண்டிருக்கும். இது எந்த மதிப்பையும் திருப்பி அனுப்புவதில்லை, எந்த தரவினத்தோடும் தொடர்புடையவை அல்ல.
3.
ஓர் இனக்குழு எந்த அறிவிப்புகளும் இல்லாமல் வரையரையறுக்கும் போது 1 பைட் அளவுள்ளதாக இருக்கும்.
class x { }; x1 பைட் இடத்தை எடுத்துக் கொள்ளும்.
4.
class தருவிக்கப்பட்ட_இனக்குழு_பெயர்: அணுகியல்பு வரையறுப்பி அடிப்படை_இனக்குழுவின்_பெயர்
{
// தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள்
};
5.
தீம்பொருள் சட்ட விரோதமான அணுகல் மற்றும் சேதம் விளைவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு வகை மென்பொருள் ஆகும்.
6.
இணையப் பாதுகாப்பு என்பது பல்வேறு தொழிநுட்பங்கள் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பாகும். இது இணைய தாக்குதல்களின் ஆபத்தை குறைக்கும் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பாதுகாக்கும் கணிப்பொறி சார்ந்த அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும்.
7.
a) false
b) True
8.
மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்:
தமிழில் உள்ள அனைத்து நூல்களையும், இணையத்தில் மின்னணு வடிவில் மாற்றம் செய்வதற்கான ஒரு தன்னார்வ அரசு சாரா திட்டம். இத்திட்டத்தின் மூலம் 1998ம் ஆண்டு முதல், இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் இணையத்தில் ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் தன்னலமற்ற முயற்சியால் இத்திட்டத்தில் இதுவரை 600 நூல்கள் இணைய வெளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
9.
(i) கணிப்பொறியை பயன்படுத்தி சொற்செயல்களில் ஆவணங்களை தட்டச்சு செய்யவும், இணையத்தின் வழியே தகவல்களை தேடவும், பெறவும் மட்டுமே தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
(ii) கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில், தமிழ் இடைமுக மென்பொருள்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறை தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
(iii) கணிப்பொறிகள் மட்டுமின்றி ஸ்மார்ட் கைப்பேசிகளிலும், இம்முறையில் தட்டச்சு செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.
10.
sqrt() செயற்கூறு உள்ளீடப்பட்ட செயலுருபின் மதிப்பிற்கான வர்க்க மூலத்தை திருப்பி அனுப்பும் sqrt () செயற்கூறு ஒரே ஒரு எதிர்ம எண் அல்லதா செயலுருபை மட்டுமே ஏற்கும் . ஒரு எதிர்ம எண்ணை செயலுருபாக கொடுத்தால் sqrt () செயற்கூறு செயற்களப்பகுதி (domain ) பிழையை அறிவிக்கும்.
11.
வெளியீடு:
Learning C++ is fun, easy and very useful
12.
சரங்களின் உறுப்புகளுக்கு தொடக்க மதிப்பிருத்தும்போது, அதன் அளவிற்கு அதிகமாக மதிப்புகளை இருத்தக்கூடாது.
13.
break என்ற தாவுதல் கூற்று கட்டுப்பாட்டை மடக்கினை விட்டு வெளியேற செய்யும். மேலும் மடக்கினுள் உடற்பகுதிக்கு அடுத்துள்ள கூற்றுகளை இயங்கச் செய்யும்.
14.
(i) அணியின் நினைவக ஒதுக்கீட்டை கணக்கிட பயன்படும் வாய்பாடு.
(ii) அணியின் தரவினத்துக்கு ஒதுக்கப்படும் பைட்டுகளின் எண்ணிக்கை உறுப்புகளின் எண்ணிக்கை.
15.
(i) தேர்ந்தெடுப்பு
(ii) மடக்கு மற்றும்
(iii) தாவுதல் கூற்றுகள்
16.
தரவுகளையும் செயற்கூறுகளையும் ஒரு பொருள் என்னும் வரையறைக்குள் ஒன்றாகப் பிணைப்பது தரவு பிணைப்பு ஆகும்.
17.
இரண்டு செயற்கூறுகளில் ஒன்று குறிப்பு அளபுருக்களையும் மற்றொன்று மதிப்பு அளபுருக்களையும் கொண்டிருந்தால் அவற்றை பணிமிகுக்க முடியாது.
18.
C++ மொழியில், பல்லுருவாக்கம் செயற்கூறு பணிமிகுப்பு மற்றும் செயற்குறி பணிமிகுப்பு ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
19.
C++- ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் ஒரு தொகுதிக்குள் இணைக்கப்பட்டு உருவாக்கப்படுவது.
20.
(i) செல்லினம்
(ii) பொன்மடல்
(iii) இமோஜி
(iv) Querty
21.
(i) கிராக் (ஒரு கருப்பு தொப்பி) அல்லது இருண்ட பக்க ஷேக்கர் என்றும் அழைக்கப்படுகின்றது.
(ii) ஒரு தீய, குற்றவியல் ஷேக்கர் கிராக்கிங் என்றால் திருட்டு, ஊழல் அல்லது சட்ட விரோதமாக தரவைப் பார்க்க கணிப்பொறிகளை பயன்படுத்துதல் ஆகும்.
22.
மரபுரிமத்தினை செயல்படுத்த அடிப்படையாக உள்ள இனக்குழுவை, மீ-இனக்குழு அல்லது அடிப்படை இனக்குழு என்கிறோம்.
23.
setw() கையாளுமை செயற்கூறு வெளியீட்டிற்க்காக ஒதுக்கப்பட்ட புலத்தின் அகலத்தை வரையறுக்கிறது. வெளியீட்டில் எழுதப்பட வேண்டிய குறைந்தபட்ச குறியுறு எண்ணிக்கையை புலத்தின் அகலம் நிர்ணயிக்கிறது.
கட்டளையமைப்பு:
set w (எழுத்துருக்களின் எண்ணிக்கை)
24.
செய்தி அல்லது தரவினை ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் செயலாக்கவல்ல செயற்கூறின் திறனையே செயற்கூறு பணிமிகுப்பு என்கிறோம்.
25.
பிழை. ஏன்னென்றால் இரண்டு கட்டுருகள் இயற்றபட்டு இரண்டு பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே பிழைக்கு காரணம்.
26.
(i) வெவ்வேறு வகையான தரவு இனங்களை கொண்ட பயனர் வரையறுக்கும் தரவினம் கட்டுரு எனப்படும். இது பல்வேறு வகையான தரவு இனங்களுடன் கூடிய மாறிகளை ஒரே தொகுதிக்குள் ஒன்றிணைந்துள்ளது.
(ii) வெவ்வேறு தரவு வகையை சார்ந்த தரவு உறுப்புகளை ஒரே தொகுதியின் அறிவித்து, அவைகளுக்கு நினைவகத்தில் அருகருகே இடம் ஒதுக்க கட்டுரு உதவுகிறது.
27.
(எ.கா) if கூற்று - பல கூற்றுகள் கொண்டிருக்கும்.
if(p= =0)
{
P=100;
}
else
P=10;
?: மும்ம செயற்குறி - ஒரே ஒரு கூற்றினை மட்டும் கொண்டிருக்கும் if -else க்கு மாற்றாக பயன்படும்.
எ.கா. (P = = 10)? P = 100; P=10;
28.
| இனக்குழு | பொருள் |
| C++ன் இனக்குழு ஆனது தரவுகளையும் அதற்கு தொடர்பான செயல்கூறுகளையும் உறைபொதியாக்கம் | பொருள் என்பது தொடர்புடைய செயற்கூறுகள், அச்செயற்கூறுகளுக்கான தரவுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு குழுவாகும். |
| இனக்குழு பயனர் வரையறுக்கும் தரவினமாகும். | பொருளானது பொருள்நோக்கு நிரலாக்கத்தின் அடிப்படைஅலகாகும். |
| இனக்குழுவானது ஒரே மாதிரியான பொருள்களின் குழுவைக் குறிக்கிறது. | பொதுவாக பொருளானது இனக்குழுவிலிருந்து உருவாக்கப்படுகிறது. |
29.
இனக்குழுவானது அருவமாக்க கருத்துருவை வரையறுக்கப்பட்ட பண்புக்கூறுகள் மற்றும் அப்பண்புக்கூறுகளின் மீது செயப்படும் செயற்கூறுகளைக் கொண்டு வரையறுக்கிறது. இது அவசியமான பண்புகளை உருவாக்கப்படுகிறது ஒரு பொருளுக்குள் மறைத்து வைக்கிறது.
30.
(i) உள்ளமை மாறி , ஒரு தொகுதிகள் (Block) வரையறுக்கப்படுகிறது. ஒரு தொகுதியில் உள்ள நிரல் { } என்ற அடைப்புக்குறிகள் இருக்கும்.
(ii) ஒரு உள்ளமை மாறியின் வரையெல்லை அது வரையறுக்கப்பட்டுள்ள தொகுதிக்குள் மட்டுமே இருக்கும்.
(iii) ஓர் உள்ளமை மாறியை அது அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிக்கு வெளியிலிருந்து அணுக முடியாது.
(iv)நிரலின் கட்டுப்பாடு ஒரு கட்டளைத் தொகுதிக்குள் நுழையும் போது , அதன் உள்ளமை மாறிகள் உருவாக்கப்படுகின்றன.வெளியேறும் போது அவை அழிக்கப்படுகின்றன.
31.
| உள்ளார்ந்த அழைப்பு | வெளிப்படையான அழைப்பு |
|---|---|
| இந்த முறையில் எப்பொழுதெல்லாம் பொருள் உருவாக்கப்படுகிறதோ அப்பொழுது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது | இந்த முறையில் ஆக்கியின் பெயரை வெளிப்படையாக கொடுக்கும்போது அளபுருக்களை ஏற்கும் ஆக்கி அழைக்கப்படுகிறது. அதனால் பொருளை உருவாக்கி தொடங்கி வைக்க முடிகிறது. |
| எடுத்துக்காட்டு: simple s1 (10, 20); இதில் s1 என்ற பொருளை உருவாக்கும்போது அளபுருவை ஏற்கும் ஆக்கி தானாகவே அழைக்கப்படுகிறது. | எடுத்துக்காட்டு: simple s1 = simple(10,20); //வெளிப்படையான அழைப்பு. |
32.
(i) 31 31
(ii) 31 30
33.
(i) // அணுகியல்பு ஏதும் இடம் பெறவில்லை.
(ii) // inline உறுப்பு செயற்கூறின் அறிவிப்பு
(iii) //outline உறுப்பு செயற்கூறின் அறிவிப்பு
34.
தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும், அடிப்படை இனக்குழுவின் உறுப்பு செயற்கூறும் ஒரே பெயரை பெற்றிருந்தால், தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்பு செயற்கூறுகள் அடிப்படை இனக்குழுவின் மரபுவழி பெறப்பட்ட செயற்கூறுகளை நிழலிடும்/மறைக்கும். இதை செயற்கூறு மேலிடல் என்கிறோம். இந்த சிக்கலை தீர்க்க அடிப்படை இனக்குழு பெயர் அடுத்து : : மற்றும் உறுப்பு செயற்கூறு பெயர் குறிப்பிட வேண்டும்.
35.
இன்றைய இணைய உலகில் சில தர நிலைகள் உள்ளன.
(i) திருட்டு மென்பொருளை பயன்படுத்தாமல் இருப்பது.
(ii) அடுத்த பயனரின் கணக்கை அனுமதியின்றி பயன்படுத்தாமல் இருப்பது.
(iii) அடுத்தவரின் கடவுச்சொல்லை திருடாமல் இருப்பது.
(iv) ஊடுருவல் செய்யாமல் இருப்பது.
36.
(i) C++ ஆனது 1979 ஆம் ஆண்டில் AT & T பெல் ஆய்வகத்தில் ஜேர்ன் ஸ்ட்ரெளஸ்ட்ரப் (Bjarne Stroustrup) - ஆல் உருவாக்கப்பட்டது. C++ மொழி முதலில் C மொழியில் இருந்து தருவிக்கபட்டது மற்றும் சிமுலா (Simula), பி.சி.பி.எல்.(BCPL), அடா (Ada), எம்.எல்.(ML), சி.எல்.யு.(CLU) மற்றும் அல்கால் 68 (ALGOL 68) போன்ற பல மொழிகளால் தாக்கத்தை ஏற்படுத்தியது. " புதிய சி" மற்றும் இனக்குழு உடன் சி என்று 1983 வரை வழங்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு, C++ என ரிக் மாஸ்கிட்யால் (Rick Mascitti.) பெயர் சூட்டப்பட்டது.
(ii) சர்வதேச தரநிர்ணய அமைப்பால் (ISO - International Organization for standardaization) - வால் C++ மொழி தரப்படுத்தப்பட்டது.
(iii) டிசம்பர் 2017-ல் வெளியிடப்பட்ட சமீபத்திய நிலையான பதிப்பு ISO / IEC 14882: 2017 என அழைக்கப்படுகிறது. முதல் தரப்படுத்தப்பட்ட பதிப்பு 1998 இல் ISO / IEC 14882: 1998 ஆக வெளியிடப்பட்டது. பின்னர் C++ 03 (ISO/ IEC 14882: 2003), C++ 11 (ISO / IEC 14882: 2011) மற்றும் C++ 14 (ISO / சிஎச் 14882: 2014). அடுத்த நிலையான பதிப்பு 2020 இல் C++ 20 ஆக இருக்கும்.
(iv) C++ - 9 ன் தாக்கம் C # (சி- ஷார்ப்) (C - Sharp), டி (D), ஜாவா (Java) மற்றும் c -இன் புதிய பதிப்புகளில் உள்ளது.
37.
| (i) | display () | செயலுருப்பு ஏற்காது மற்றும் எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாத அழைப்பு செயற்கூறு. |
| (ii) | display (x , y ) | செயலுருபுக்களை ஏற்கும் மற்றும் எந்த மதிப்பையும் திருப்பி அனுப்பாத அழைப்பு செயற்கூறு. |
| (iii ) | x = display () | செயலுருபு ஏற்காது மற்றும் மதிப்பைத் திருப்பி அனுப்பும் அழைப்பும் செயற்கூறு. |
| (iv) | x = display (x, y ) | செயலுருபுக்களை ஏற்கும் மற்றும் மதிப்பை த் திருப்பி அனுப்பும் அழைக்கும் செயற்கூறு. |
38.
break மற்றும் continue ஒப்பீடு
| break | continue |
| break மடக்கினை விட்டு வெளியேற செய்யும் | continue கூற்று மடக்கை விட்டு வெளியேற செய்யாது. |
| இது பன்முறை செயலை முடித்து வைக்கும் | இது பன்முறை செயலை தவிர்க்கச் செய்யும் |
| இந்த கூற்றை இயக்கப்படும் பொழுது கட்டுப்பாட்டை மடக்கினை விட்டு வெளியேறி மடக்கிற்கு அடுத்து வரும் கூற்றுகளை இயக்கம். | இந்த கூற்று இயக்கப்படும்பொழுது மடக்கைவிட்டு வெளியேறாமல் மடக்கின் அடுத்த சுழற்சிக்குச் தாவச் செய்யும். |
| break கூற்று மடக்கு மற்றும் switch கூற்றுடன் பயன்படுத்தலாம். | continue கூற்று மடக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும், switch கூற்றுடன் பயன்படுத்தப்படாது. |
39.
ஒரு if கூற்று, மற்றொரு if கூற்றை கொண்டிருந்தால் அது பின்னாலான if கூற்று என்று அழைக்கப்படுகிறது. பின்னலான if கூற்றுகள், பின்வரும் மூன்று வடிவங்களில் அமைக்கப்படும்.
(i) ஒரு if கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றை அமைத்தல்
(ii) ஒரு if கூற்றின் எல்ஸ் கூற்றுக்குள் மற்றொரு if கூற்றை அமைத்தல்
(iii) ஒரு if கூற்றுக்கு உள் ஒரு if கூற்றும், எல்ஸ் கூற்றுக்கு உள்ளே மற்றொரு if கூற்றும் அமைத்தல்.
40.
(i) அணியின் உறுப்புகளை அணுக அணியின் பெயருடன் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கீழொட்டின் மதிப்பை கொடுக்க வேண்டும்.
(ii) அடைப்பு குறிக்குள் கொடுக்கப்படும் கீழொட்டு ஒரு மாரியாகவோ, ஒரு மாறிலியாகவோ அல்லது ஒரு கோவையாகவோ இருக்கலாம்.
(iii) கோவையாக இருந்தால் அதன் விடையானது ஒரு முழு எண் மதிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
41.
ஃபயர்வால் மற்றும் பதிலாள் சேவையகங்கள் என்பது கணிப்பொறி வலையமைப்பு பாதுகாப்பு அடிப்படை அமைப்பாகும். பாதுகாப்பு அடிப்படையில் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வலையமைப்பு போக்குவரத்து போன்றவற்றை கண்காணித்து கட்டுப்படுத்துகிறது. ஃபயர்வால் பொதுவாக நம்பகமாக உள்ள கணிப்பொறி வலைதளம் மற்றும் வலைப்பின்னலுக்கு வெளியே ஒப்படைக்கப்பட்ட கணிப்பொறிக்கும் இடையே ஒரு பிளாக் அமைகிறது.
42.
(i) ஓர் அடிப்படை இனக்குழு public என்னும் அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது அடிப்படை இனக்குழுவின் public உறுப்புகள் public உறுப்புகளாகவும், protected உறுப்புகள் protected உறுப்புகளாகவும் தருவிக்கப்பட்ட இனக்குழுவில் இருக்கும்.
(ii) ஓர் இனக்குழு private அணுகியல்புடன் தருவிக்கப்படும் போது, அடிப்படை இனக்குழுவின் public மற்றும் protected உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் private உறுப்புகளாக கருதப்படும்
43.
பெயரற்ற கட்டுருக்கள்
பெயர் (அ) குறிப்பு சொல் இல்லாத ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும்.
struct
{
long rollno;
int age;
float weight;
}student;
student என்பது மேலே உள்ள கட்டுருவிற்கு குறிப்பு பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்புகளை student.rollno, student.age மற்றும் student.weight என அணுக முடியும்.
44.
struct structure_name {
data type member_name1;
data type member_name2;
} reference name;
எடுத்துக்காட்டு:
struct Student
{
long rollno;
int age;
float weight;
};
45.
ஒரு செயற்குறிக்குப் புதிய பொருளை வழங்கும் தொழில்நுட்பமே செயற்குறி பணிமிகுப்பு என்றழைக்கப்படுகிறது.
பணிமிகுப்பு செய்ய கூடிய செயற்குறிகள் சில
எடுத்துக்காட்டு:
+, ++, -, --, +=, -=, *, <, >
46.
a= ( x > = 10) ?m +5 : m;
47.
ஆக்கிக்களை public பகுதியில் வரையறுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் எந்த செயர்கூறுலும் பொருளை உருவாக்க முடியும்.அழிப்பிகள் public பகுதியில் வரையறுப்பதால் ஆக்கிகளால் உருவாக்கப்பட்ட பொருளை அழிக்க முடியும்.
48.
(i) C/C++ நிரலானது செயற்கூறுகளின் தொகுப்பாகும். ஒவ்வொரு C++ நிரலும் main() செயற்க்கூறினைக் கட்டாயமாக்கப் பெற்றிருக்க வேண்டும்.
(ii) செயல்படுத்தப்படும் கூற்றுகள் main() செயற்கூறினுள் இருக்க வேண்டும்.
49.
(i) கூறுநிலையாக்கம் (Modularisation): நிரலானது கூறுகளாக பிரிக்கப்படுகிறது.
(ii) மென்பொருள் மறுபயனாக்கம் (Software reuse): நிரலானது ஏற்கனவே உள்ள அல்லது புதிய கூறுகளைக் கொண்டு தொகுக்கப்படுகிறது.
50.
C++ மொழியில் ஒரு செயற்கூற்றின் முன்வடிவில் உள்ள முறையான அளபுருக்களில் முன்னியல்பு மதிப்புகளை இருத்தி வைக்க முடியும்.செயற்கூற்றை அழைக்கும்போது முன்னியல்பு செயலுருபு சில மதிப்புகளை தவிர்க்க வழிவகுக்கும்.செயற்கூற்றை அழைக்கும் போது ஏதேனும் செயலுறுபுகளுக்கு மதிப்பு கொடுக்காவிடில் நிரல்பெயர்ப்பி முன்னியல்பு செயலுருபுக்களின் மதிப்புகளை அழைக்கப்பட்ட செயற்கூற்றிக்கு ஏற்கும்.
மாறியில் தொடக்க மதிப்பிருந்தும் வடிவில் முன்னி யல்பு மதிப்பு தரப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டு :
void defaultvalue (int n1 = 10, n2 = 100);
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards