11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 27/07/2019
உற்பத்தி பகுப்பாய்வு
11ஆம் வகுப்பு Economics / பொருளியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Economics / பொருளியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Economics Test

1.
உற்பத்திக் காரணியின் வேறுபெயர் _________
உள்ளீடுகள்
வெளியீடுகள்
மாறாக்காரணி
மாறும் காரணி
2.
_______ ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.
புரட்சிக்கனங்கள்
பொருளாதாரச்சிக்கனங்கள்
அகச்சிக்கனங்கள்
நவீன பொருளாதாரம்
3.
சராசரி உற்பத்தி (AP)யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்
TP/N
TP/N
TP/MP
TP/N
4.
மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்
நிலம்
உழைப்பு
மூலதனம்
தொழிலமைப்பு
5.
முதன்மை உற்பத்திக் காரணிகளாவன
உழைப்பு மற்றும் தொழிலமைப்பு
உழைப்பு மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் மூலதனம்
நிலம் மற்றும் உழைப்பு
6.
பொருளாதார சிக்கனங்கள் எத்தனை வகைப்படும்?அவை யாவை?
7.
விகித அளவு விளைவு விதியின் மூன்று நிலைகள் யாவை?
8.
தொழில் முனைவோர் யார்?
9.
உற்பத்தி என்றால் என்ன?
10.
அளிப்பு கோடு மேல்நோக்கி செல்வதன் காரணம் என்ன?
11.
உற்பத்தியாளர் சமநிலையை அடைய நிபந்தனை யாது?
12.
அகச்சிக்கனம் மற்றும் புறச்சிக்கனம் வேறுபாடு தருக.
13.
மாறும் விகித விதியின் வரைபடம் வரைக.
14.
மொத்த உற்பத்திக்கும் (TP)சராசரி உற்பத்தி (AP)க்கும் உள்ள வேறுபாடு யாது?
15.
மூலதனத்தின் சிறப்பியல்புகள் யாவை?
16.
காப் – டக்லஸ் உற்பத்தி சார்பை விளக்குக
17.
உற்பத்தியாளர் சமநிலையை உதாரணத்துடன் விளக்குக
18.
அளிப்பு நெகிழ்ச்சியின் வகைகளை வரைபடத்துடன் விவரி?
19.
20.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
1.
(a)
உள்ளீடுகள்
2.
(c)
அகச்சிக்கனங்கள்
3.
(d)
TP/N
4.
(c)
மூலதனம்
5.
(d)
நிலம் மற்றும் உழைப்பு
6.
பொருளாதார சிக்கனங்கள் இரண்டு வகைப்படும் அவை,
1. அகச்சிக்கனங்கள்
2. புறச்சிக்கனங்கள்
7.
1. வளர்ந்து செல் விகித அளவு
2. மாறா விகித அளவு
3. குறைந்து செல் விகித அளவு
8.
1. ஒரு தொழிலை ஒருங்கிணைத்து ஏற்று நடத்துபவர் "தொழில் அமைப்பாளர் "(அ) "'தொழில் முனைவோர் "ஆவார்.
2. தொழில் முனைவோர் ஒரு முக்கியமான உற்பத்திக் காரணி ஆவார்.
9.
(i) உற்பத்தி என்பது பல்வேறு வகையான இரு பொருட்களைப் பயன்படுத்தி இறுதிப் பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வுக்காக வழங்குதல் ஆகும்.
(ii) உற்பத்தி என்பது புதிதாக உருவாக்குதல் ஆகும்.
(iii) உற்பத்தி என்பது உள்ளீடுகளை வெளியீடுகளாக மாற்றுவது ஆகும்.
10.
1. ஒரு பண்டத்தின் விலை உயர்வால் அளிப்பு அதிகரிக்கும்,விலை குறைந்தால் அளிப்பும் குறையும்.
2. ஆகவே, அளிப்பு கோடானது கீழிலிருந்து மேல் நோக்கி செல்லும்.
11.
உற்பத்தியாளர் சமநிலையை அடைய இரண்டு நிபந்தனைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
1. சம அளவு செலவுக் கோடு சம உற்பத்தி வளைகோட்டிற்கு தொடுகோடாக அமைய வேண்டும்.
2. அந்த தொடு புள்ளியில் சம உற்பத்தி வளைகோடு தோற்றுவாய் நோக்கி குவிந்து காணப்படும் அல்லது MRTS குறைந்து செல்லும்.
12.
| அகச்சிக்கனங்கள் | புறச்சிக்கனங்கள் | |
| 1. | நிறுவனத்தின் வரி வர்க்கத்தினால் தோன்றும். | தொழிற்சாலையின் மீது வரி வர்க்கத்தினால் ஏற்படுவது. |
| 2. | நீண்டகால சராசரி செலவு குறைவாக இருக்கும். | நன்மைகள் பெரும்பான்மையான அனைத்து நிறுவனத்திற்கும் கிடைக்கும். |
| 3. | நிறுவனத்தின் பேரளவினால் உற்பத்தித் திறன் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருக்கும். | ஒருங்கிணைந்த சிக்கனங்கள் கிடைக்கும். |
| 4. | அகச் சிக்கனங்கள் எ.கா.தொழில்நுட்பம் மற்றும் நிதி சிக்கனங்கள் இருக்கும். | நகரங்களின் அதிவேக வளர்ச்சி பற்றி விளக்கப் பயன்படுகிறது. |
13.

14.
மொத்த உற்பத்திக்கும் (TP):
1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்திக் காரணிகளின் கலவையை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்களின் அளவு மொத்த உற்பத்தியைக் குறிக்கும்.
2. இறுதிநிலை உற்பத்தியின் கூட்டுத்தொகையே மொத்த உற்பத்தி ஆகும்.
அதாவது TP=\(\sum\)MP
இதில் TP =மொத்த உற்பத்தி
MP=இறுதிநிலை உற்பத்தி
\(\sum\)=மொத்தம்
சராசரி உற்பத்தி (AP):
1. மொத்த உற்பத்தியை உற்பத்தி காரணிகளின் அலகுளால் வகுப்பதால் கிடைப்பது சராசரி உற்பத்தி ஆகும்.
2. ஓர் அலகு உற்பத்தி காரணியின் சராசரி உற்பத்தித்திறனே சராசரி உற்பத்தி ஆகும்.
3. கணித ரீதியாக \(\boxed{AP=TP/N}\)
இதில் AP=சராசரி உற்பத்தி
TP=மொத்த உற்பத்தி
N= மொத்த உள்ளீடுகளின் அலகு
15.
1. மூலதனம் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டது.
2. மூலதனம் மனிதனுக்கு மனிதன், இடத்திற்கு இடம்,இடம் பெயரக்கூடியது.
3.மூலதனம் செயலற்ற உற்பத்திக் காரணியாகும்.
4.மூலதனத்தின் அளிப்பு நெகிழும் தன்மையுடையது.
5.மூலதனத்தின் தேவை என்பது தருவிக்கப்பட்ட தேவையாகும்.
6. மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்.
16.
1. காப் - டக்லஸ் உற்பத்தி சார்பினை அளித்தவர்கள் சார்லஸ் காப் மற்றும் பால் H டக்லஸ் ஆவார்கள்.
2. இச்சார்பு ஒருபடித்தான சமச்சீர் தன்மை வாய்ந்த உற்பத்தி சார்பு ஆகும்.
3. இச்சார்பு உற்பத்தி காரணிகளை ஓரளவிற்கு மட்டுமே ஒன்றுக்கொன்று பதிலீட்டு பண்டமாக பயன்படுத்த இயலும் என்பதை விளக்குகிறது.
4. காப் டக்லஸ் உற்பத்தி சார்பு,
\(\boxed{Q=AL^{\alpha} K^{\beta}}\)
Q =வெளியீடு,
A =நேர்மறை நிலை மதிப்பு,
K =மூலதனம்,
L =உழைப்பு
5. \(\alpha\) மற்றும் \(\beta\) ஆகிய நேர்மறை பின்னம் ஆகும்.
6. உற்பத்தி உள்ளீடுகளான உழைப்பு மற்றும் மூலதனத்தின் அளவை மாற்றும் போது எந்த அளவு உற்பத்தியில் மாற்றம் வரும் என்பதை குறிக்கின்றன.
1.\(\alpha + \beta =1\) -மாறாத விகித விளைவு.
2. \(\alpha + \beta <1\)-குறைந்து செல் விகித விளைவு.
3.\(\alpha + \beta >1\) - வளர்ந்துசெல் விகித விளைவு.
7. இந்த உற்பத்தி சார்பு, உற்பத்தி மாறாத விகித அளவு விகிதாச்சார அதிகரிப்பிற்கேற்ப வெளியீடும் அதே விகிதாச்சார அளவு அதிகரிக்கும்.
8. காப் டக்லஸ் உற்பத்தி மாறாத விகித அளவு விளைவை மட்டும் விளக்குகிறது.
17.
(அ) உற்பத்தியாளர் சமநிலை
உற்பத்தியாளர் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட நிலையில் உற்பத்தியாளர் உச்சபட்ச உற்பத்தியை அடையும் நிலையாகும்.
(ஆ) காரணிகளின் உத்தம அளவு குறிப்பிடுவது:
1. குறிப்பிட்ட அளவு உள்ளீட்டில் அதிக பட்ச உற்பத்தியைப் பெறுவது.
2. குறைந்த செலவில், குறிப்பிட்ட உற்பத்தியைப் பெறுவது.

(இ)வரைபட விளக்கம்:
1. E என்ற புள்ளியில் ஒரு நிறுவனம் அல்லது உற்பத்தியாளர் அதிக அளவு இலாபத்தை பெறுகிறார்.
2. அப்புள்ளியில் சம அளவு உற்பத்திக் கோட்டினை சம அளவு செலவுக் கோடு தொட்டுச் செல்லும். அங்கு இரண்டு கோடுகளின் சாய்வும் சமமாக இருக்கும்.
3. MRTSLK=\({P_L\over P_K}\)
4. E என்ற புள்ளியில் நிறுவனம் OM அலகு உழைப்பையும் அலகு மூலதனத்தையும் பயன்படுத்துகிறது.
5. உயிர் சமசெலவுக் கோடுகளில் அமைந்துள்ளH,K,R மற்றும் S புள்ளிகள் அதிக செலவினங்களையும், உற்பத்தியாளர் அடைய இயலாத நிலையையும் குறிக்கின்றன.
18.
அளிப்பு நெகிழ்ச்சி ஐந்து வகைப்படும்:
1. மிகை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி ஒன்றைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் (Es>1)
2. பொருளின் விலையின் ஒரு சதவீத மாற்றம் ஏற்படும்போது பொருளின் அளிப்பு ஒரு சதவீதத்தைவிட அதிக அளவு மாறுபடும்.
2. ஒருமை நெகிழ்ச்சி அளிப்பு:
1. அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு சமமாக அமையும் (Es=1)
2. விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்பட்டால் அளிப்பிலும் ஒரு சதவீதம் மாற்றமே ஏற்படும்.
3.குறைவான நெகிழ்ச்சி அளிப்பு:
1.அளிப்பின் நெகிழ்ச்சி ஒன்றுக்கு குறைவாகவே
அமையும் (Es<1)
2.விலையில் ஒரு சதவீதம் மாற்றம் ஏற்படும்போது அளிப்பில் ஏற்படும் மாற்றம் ஒரு சதவீதத்தை விடக்குறைவாக இருக்கும்.
4.முற்றிலும் நெகிழ்ச்சியற்ற அளிப்பு:
1. அளிப்பு நெகிழ்ச்சி புஜ்ஜிசியத்திற்கு சமமாக உள்ளது (Es=0)
2.விலையில் ஏற்படும் மாற்றம் அளிப்பின் அளவில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
5.முழுமை நெகிழ்ச்சியுள்ள அளிப்பு:
1.அளிப்பு நெகிழ்ச்சி அளவு முடிவில்லாத நிலையில் இருக்கும் (Es=\(\alpha\))
2. விலையில் ஏற்படும் சிறிய மாற்றம் அளிப்பில் அளவிட இயலாத மாற்றத்தை ஏற்படுத்தும்.





19.

20.
மாறும் விகித விளைவு விதியை வரைபடத்துடன் விளக்குக.
1. மாறும் விகித விளைவு விதி:
ஒரே ஒரு உள்ளிட்டினை மட்டும் அதிகப்படுத்தி, பிற உள்ளீடுகளை மாற்றாமல், உற்பத்தியைப் பெருக்க முயன்றால் மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் உயர்ந்து பின்பு குறிப்பிட்ட புள்ளியில் நிலையான பின் குறைந்து செல்லும்.
2. இலக்கணம்:
ஸ்டிக்லரின் கூற்றுப்படி,"உற்பத்தி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பிற காரணிகளின் அளவு நிலையாக இருக்கும் போது, ஓர் உற்பத்திக் காரணி சம உயர்வாக அதிகரிக்கும் போது ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு பிறகு உற்பத்தியின் அளவு குறையும், அதாவது இறுதிநிலை உற்பத்தி குறையும்."
3. எடுகோள்கள்:
1. ஒரே ஒரு உற்பத்திக் காரணியின் அளவு மட்டும் உயர்த்தப்பட்டு, ஏனைய உற்பத்திக் காரணிகளின் அளவு மாறாமல் இருக்கிறது.
2. மாறும் உற்பத்திக் காரணிகள் ஒரே தன்மையுடையவை.
3. உற்பத்திப் பொருளானது பரும அலகுகளால் அளவிடப்படுகிறது.
4. தொழில் நுட்ப நிலையில் மாற்றம் இல்லை.
5. பொருளின் விலையில் மாற்றம் இல்லை.
4. அட்டணை:
| மாறும் உள்ளீடுகளின் (L)அலகுகள் | மொத்த உற்பத்தி (TPL) | இறுதிநிலை உற்பத்தி | சராசரி உற்பத்தி | நிலைகள் |
| 1 2 3 |
2 6 12 |
2 4 6 |
2 3 4 |
I |
| 4 5 |
16 18 |
4 2 |
4 3.6 |
II |
| 6 7 |
18 16 |
0 -2 |
3 2.28 |
III |
1. அட்டவணையின்படி உற்பத்தி மூன்று நிலைகளை கொண்டது.
2. முதலில் அதிகரித்து, பின்பு நிலையாகி, பின்பு குறைகிறது.
3. முதலில் குறைந்த பின்பு பூஜ்ஜியமாகி பின்பு எதிர்கணய செல்கிறது.

வரைபட விளக்கம்:
உழைப்பாளர்களின் எண்ணிக்கை X-அச்சிலும், TP, AP மற்றும் MP Y-அச்சிலும் குறிக்கப்பட்டுள்ளன.
முதல் நிலை (I):
1. இறுதிநிலை உற்பத்தி (MP)3 உழைப்பாளர்களை பயன்படுத்தும் வரை அதிகரிக்கிறது.
2.MP>AP
3.மொத்த உற்பத்தி வளர் விகிதத்தில் அதிகரிக்கிறது. இங்கு A-என்ற புள்ளி "வளைவு மாற்றப்புள்ளி" ஆகும்.
இரண்டாம் நிலை (II):
1. இறுதிநிலை உற்பத்தி குறைந்து 6-அலகு உழைப்பை பயன்படுத்தும் போது புஜ்ஜியமாகிறது.
2. நான்காவது உழைப்பை பயன்படுத்தும் போது MP-AP இதில் MP வளைகோடானதுAP வளைகோட்டைவிட கீழ் அமையும்.
3. TP குறைந்து செல் வீதத்தில் அதிகரிக்கும்.
மூன்றாம் நிலை(III):
1. 7அலகு உழைப்பாளர்களை பயன்படுத்தும் போது MP எதிர்கணியமாகிறது.
2. AP குறைந்து சென்றாலும் நேர்மறை மதிப்பாகவே இருக்கும்.1 அலகு உழைப்பு பயன்படுத்தும்போது TP குறையத் தொடங்கும்.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards