11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
அலைவுகள் செயற்கூறுகள்
11ஆம் வகுப்பு Physics / இயற்பியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Physics / இயற்பியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Physics Test1.
m நிறையானது v என்ற வேகத்தில் ஒரு உராய்வற்ற கிடைத்தள பரப்பில் சென்று, ஏறத்தாழ நிறையற்ற, சுருள் மாறிலி k கொண்ட சுருள்வில் மீது மோதுகின்றது. மோதலுக்கு பிறகு நிறையானது அமைதி நிலைக்கு வருகின்றது எனில் சுருள்வில்லின் அமுக்கத்தை கணக்கிடுக.
2.
மூன்று சுருள் வில்களின் விசை மாறிலிகள் முறையே k1=7.5\(\frac{N}{m}\), k2=10.0\(\frac{N}{m}\), k=12.5\(\frac{N}{m}\). இம்மூன்றும் பக்க இணைப்பில் ஒரு நிறை 0.500kg உடன் இணைக்கப்படுகிறது. வலப்பக்கமாக நிறை இழுக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறது எனில் இயக்கத்தின் கால அளவு யாது?
3.
ஒரு தனி ஊசலின் நீளம் 1.20m, ஆனால் அதை நோக்குபவர் 1மீ நீளம் எனக் காண்கிறார். அதன் அலைவு காலம் 2.00s ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனில் புவிஈர்ப்பு முடுக்கம் யாது?
4.
தடையுறு அலைகள் எடுத்துக்காட்டு தருக.
5.
கோண சீரிசை இயக்கம் என்றால் என்ன?
6.
தனிச் சீரிசை இயக்கத்தில் திசைவேகம் என்பது யாது?
7.
ஒத்த அதிர்வெண்ணும் வெவ்வேறான வீச்சுகளும் கொண்ட இரு சீரிசை இயக்கங்கள் x மற்றும் y அச்சுகளின் வழியே x = A sin (ωt + ψ) (x அச்சின் வழியாக) மற்றும் y = B sin ωt (y அச்சின் வழியாக) என்ற வீச்சுகளுடன் இயக்கமடைகிறது எனக் கொள்க.
\({x^2\over A^2}+{y^2\over B^2}-{2xy\over AB}cosψ=sin^2ψ\)எனக் காட்டுக.
a.ψ=0 b.ψ=π c.\(ψ={\pi\over2}\) d.\(ψ={\pi\over2}\) மற்றும் A=B e.\(ψ={\pi\over4}\)
ஆகிய சிறப்பு நிகழ்வுகளையும் விவாதிக்க.
குறிப்பு: துகளானது ஒன்றுக் கொன்று செங்குத்தாக செயல்படும் இரு சீரிசை இயக்கங்களுக்கு உட்படுத்தப்படும் போது துகளானது வேறுபாதையின் வழியாக இயக்கமடையும், அப்பாதையே லிசாஜபடம் என்று அழைக்கப்படுகிறது.
8.
கிடைத்தளத்துடன் 450 கோணம் ஏற்படுத்தும் சாய்தளத்தில் வைக்கப்பட்டுள்ள உருளும் டிராலியில் l =0.9m நீளமுள்ள தனிஊசல் முறையாக பொருத்தப்பட்டுள்ளதாக கொள்வோம். சாய்தளமான ஊராய்வற்றது எனில் தனிஊசலின் அலைவுக்காலத்தை கணக்கிடுக.
9.
10.
தனி ஊசலின் விதிகளைத் தருக?
11.
தனி ஊசலின் அலைவுநேரம் பற்றி எழுதுக
12.
இரு சுருள்வில்கள் பக்க இணைப்பில் உள்ள தொகுப்பை பற்றி சிறு குறிப்பு வரைக.
13.
தனிச்சீரிசை இயக்கத்தின் அலைவு நேரம் வரையறு.
14.
தனிச்சீரிசை இயக்கத்தின் அதிர்வெண் வரையறு.
15.
சீரலைவு மற்றும் சீரற்ற அலைவு இயக்கம் என்றால் என்ன? இரு உதாரணங்கள் தருக
1.
நிறையானது சுருள்வில்லை மோதும்போது நிறையின் இயக்க ஆற்றல் இழப்பானது சுருள்வில்லில் மீள் நிலை ஆற்றலாக பெறப்படுகிறது. (ஆற்றல் மாறாக்கோட்பாட்டின்படி)
x என்பது சுருளின் இறுக்கமடைந்த தூரம் என்க, ஆற்றல் மாறாக் கோட்பாட்டின்படி
\({1\over2}mv^2={1\over2}k\ x^2\Rightarrow x=v\sqrt{m\over k}\)
2.
T=\(2\pi \sqrt { \frac { m }{ { k }_{ 1 }+{ k }_{ 2 }+{ k }_{ 3 } } } \)
=\(2\pi \sqrt { \frac { 0.500kg }{ 7.5\frac { N }{ m } +10.00\frac { N }{ m } +12.5\frac { N }{ m } } } \)
=2 x 3.14 x \(\sqrt { \frac { 0.5kg }{ 30\frac { N }{ m } } } \)
=2 x 3.14 x \(\sqrt { 0.0167s } \)
=2 x 3.14 =0.1290
=0.8s
3.
g =\(\frac { 4{ \pi }^{ 2 } }{ { T }_{ p }^{ 2 } } l=\frac { 4{ \pi }^{ 2 } }{ (2.00)^{ 2 } } \)
=\(\frac { 4\times (3.14)^{ 2 } }{ 4.00s^{ 2 } } \times 1m=\frac { 39.4m }{ 4s^{ 2 } } \)
=9.85 m/s2.
4.
(i) காற்றில் அலைவுறும் தனி ஊசல்.
(ii) கால்வனாமீட்டரில் கம்பிச் சுருளில் ஏற்படும் மின்காந்தத் தடையுறு அலைவுகள்.
(iii) தொட்டிச் சுற்றில் உருவாகும் மின்காந்த அலைவுகள்.
5.
திருப்பு விசையானது கோண இடப்பெயர்ச்சிக்கு எதிர்த்திசையில் இருப்பதை ፒ=-Cθ சமன்பாட்டில் எதிர்க்குறி குறிக்கிறது. இவ்வகை நிகழ்வு கோணச் சீரிசை இயக்கம் ஆகும்.
6.
இடப்பெயர்ச்சி மாறும் வீதம் திசைவேகம் ஆகும்.
V=\(\omega \sqrt { { A }^{ 2 }-{ y }^{ 2 } } \)
திசைவேகம் v=ωA (பெருமம்) எனில் இடப்பெயர்ச்சி y=0
பெரும இடப்பெயர்ச்சி y=A எனில் திசைவேகம் v =0 இது வெக்டர் அளவு.
7.
a. \(y={B\over A}x\) என்ற சமன்பாடு ஆதிவழிச் செல்லும் நேர்மறை சாய்வுடன் கூடிய நேர்கோட்டுச் சமன்பாடாகும்.
b. \(y=-{B\over A}x\) என்ற சமன்பாடு ஆதிவழிச் செல்லும் நேர்மறை சாய்வுடன் கூடிய நேர்கோட்டுச் சமன்பாடாகும்.
c. \({x^2\over A^ 2}+{y ^2\over B^2}=1\) என்ற சமன்பாடு நீள் வட்டத்தின் சமன்பாடாகும். அதன் மையம் ஆதியில் அமையும்.
d.x2+y2 = A2, என்ற சமன்பாடு வட்டத்திற்கான சமன்பாடாகும். அதன் மையம் ஆதியில் அமையும்.
e. \({x^2\over A ^ 2}+{y^ 2\over B^2}-{2xy \over AB }{1\over \sqrt 2}={1\over 2},\)என்பது நீள் வட்டத்தின் சமன்பாடாகும். (சாய்ந்த நீள்வட்டம்)
8.
தனி ஊசலின் நீளம் l = 0.9 m
கிடைமட்டத்துடன் சாய்வுக் கோணம் a =450
தனி ஊசலின் அலைவு காலம் T =?
\(T=2\pi \sqrt { \cfrac { 1 }{ g\cos { \alpha } } } \)
= \(2\times 3.14\sqrt { \cfrac { 0.9 }{ 9.8\times \cos { 45^{ 0 } } } } \)
= \(2\times 3.14\sqrt { \cfrac { 0.9 }{ 9.8\times 0.7071 } } \)
T = 0.86 s
9.
10.
தனி ஊசல் கீழ்கண்ட விதிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
நீளத்தின் விதி: கொடுக்கப்பட்ட புவிஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பிற்கு, தனி ஊசலின் அலைவு நேரம் தனி ஊசலின் நீளத்தின் இருமடி மூலத்திற்கு நேர்த்தகவல் அமையும்.
\(T\propto =\sqrt { l } \)
முடுக்கத்தின் விதி: கொடுக்கப்பட்ட தனி ஊசலின் நீளம் மாறாதிருக்கும்போது ஊசலின் அலைவு நேரம் புவி ஈர்ப்பு முடுக்கத்தின் இருமடி மூலத்திற்கு எதிர்த்தகவல் அமையும்.
\(T\propto =\frac { 1 }{ \sqrt { g } }\)
11.
தனி ஊசலானது சமநிலைப் புள்ளியிலிருந்து சிறிய இடம்பெயர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு விடப்படும்போது ஊசல் குண்டானது முன்னும் பின்னும் இயக்கத்தை மேற்கொள்ளும். இவ்வியக்கித்திற்கான கால அளவு தனிஊசலின் அலைவு நேரம் எனப்படும்.
\(T=2\pi \sqrt { \frac { l }{ g } } \) விநாடியில்
12.
(i) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சுருள்வில்கள் பக்க இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன என்க.தனித்தனி சுருள் மாறிலிகளின் மதிப்புகள் k1, k2, k3 (தெரிந்த மதிப்புகள்) மற்றும் தொகுப்பயன் சுருள் மாறிலி kp (தெரியாத அளவு) ஆகியவற்றுக்கிடையேயான கணிதவியல் தொடர்பினை நாம் பெற முடியும்.

(ii)m என்ற நிறையுடன் k1, k2, இணைக்கப்பட்டுள்ளதாகக் கொள்க. இதன் மூலம் பெறப்படும் முடிவினைப் பயன்படுத்தி பக்க இணைப்பில் எந்த ஒரு எண்ணிக்கையிலும் இணைக்கப்படும் சுருள்வில்களுக்கான பொதுவான முடிவை பெறலாம்.
13.
துகளொன்று ஒரு முழு அலைவிற்கு எடுத்துக்கொள்ளும் காலம் அலைவு நேரம் என வரையறுக்கப்படுகிறது.
\(\omega t=2\pi \Rightarrow T=\frac { 2\pi }{ \omega } \)
14.
துகளொன்று ஒரு நொடியில் ஏற்படுத்தும் அலைவுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும். இது f என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.இதன் SI அலகு S-1 அல்லது ஹெர்ட்ஸ் ஆகும்.(குறீயீடு Hz)
\(f=\frac { 1 }{ T } \)
15.
சீரலைவு இயக்கம்: சீரான கால இடைவெளியில் தானாகவே மீண்டும், மீண்டும் நிகழும் இயக்கம் சீரலைவு இயக்கம் எனப்படும்.
எடுத்துக்காட்டு: ஊசல் கடிகாரத்தில் உள்ள முட்கள், தொட்டிலின் அலைவுகள், சூரியனைச் சுற்றிவரும் புவியின் இயக்கம், வளரும் மற்றும் தேயும் சந்திரன்.
சீரற்ற அலைவு இயக்கம்: சீரான கால இடைவெளியில் தானாகவே மீண்டும், மீண்டும் நிகழாத எந்த ஒரு இயக்கமும் சீரற்ற அலைவு இயக்கம் எனப்படும்.
எடுத்துக்காக்ட்டு: நிலா நடுக்க நிகழ்வு, எரிமலை வெடிப்பு போன்றவை.
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards