11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil இயற்கை வேளாண்மை,சுற்றுச்சூழல் -செய்யுள் - மனோன்மணீயம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil என்னுயிர் என்பேன் -துணைப்பாடம் - இசைத்தமிழர் இருவர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மொழி கலை -செய்யுள் - ஒவ்வொரு புல்லையும் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - இலக்கணம் - பகுபத உறுப்புகள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - துணைப்பாடம் - வாடிவாசல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - குறுந்தொகை Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/01/2019
XI STD Important Question ( Volume- 1 )
11ஆம் வகுப்பு Computer Applications / கணினி பயன்பாடுகள் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Computer Applications / கணினி பயன்பாடுகள் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Computer Applications Test

1.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்றால் என்ன?
2.
முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.
3.
ஆம்பியன்ஸ் என்றால் என்ன?
4.
அச்சிடப்படும் முன் ஆவணத்தை பார்வையிடுவதற்கான வழிமுறையே எழுதுக.
5.
தானியங்கு சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?
6.
வடிகட்டியை எவ்வாறு நீக்குவாய்?
7.
கோப்பு அல்லது கோப்புறையை கம்யூட்டர் பணிக்குறி மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பாய்?
8.
ஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்?
9.
கோப்பு நீட்சி (File Extension) என்றால் என்ன?
10.
Slide Master ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்?
11.
புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?
12.
சுட்டி என்றால் என்ன?
13.
முதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.
14.
ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?
15.
முதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.
16.
நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?
17.
எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.
18.
லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.
19.
GUI என்றால் என்ன?
20.
EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?
21.
(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.
22.
உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.
23.
எத்தனை உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் Impress-ல் அடங்கியுள்ளன?
24.
நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் வேறுபடுத்துக.
25.
ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?
26.
இயக்க அமைப்பு செயல் மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகைப் பணிகளுக்குப் பொறுப்பாகும்?
27.
இயக்க அமைப்பின் வகைகள் யாவை?
28.
பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக?
29.
யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது?
30.
ரைட்டர் ஆவணத்தில் உள்ள அட்டவணையை எவ்வாறு வடிவூட்டல் செய்வாய்?
31.
தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?
32.
தானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.
33.
முதன்மை சில்லு என்றால் என்ன? அதன் பயன் யாது?
34.
வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.
35.
மேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?
36.
மையச் செயலகம் என்றால் என்ன? (or) மையச் செயலகம் என்பது யாது?
37.
தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.
38.
Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?
39.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
40.
கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.
41.
(150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.
42.
கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.
43.
44.
Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.
45.
நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.
1.
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்:
மைக்ரோ சாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட தனியுரிம இயக்க அமைப்புகளின் ஒரு குடும்பமாகும்.
இது முதன்மையாக இன்டெல் மற்றும் AMD கட்டமைப்பு அடிப்படையிலான கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டது.
2.
யுனிக்ஸ்
மைக்ரோசாஃபட் விண்டோஸ்
லினக்ஸ்
iOS
அண்ட்ரைடு
3.
பட்டிப்பட்டை (Menubar)யின் கீழே உள்ள திரையில் ஒரு படம் முகப்புதிரை முழுவதுமாக தோன்றும், இதுதான் உபுண்டுவின் கொடாநிலை பின்னணி வால்பேப்பர் ஆகும். இது ஆம்பியன்ஸ் (Ambiance) எனப்படுகிறது.
4.
1. File Page Preview அல்லது Page Preview பொத்தானைக் கிளிக் செய்யவும். ரைட்டர் தற்போதைய பக்கத்தைத் திரையில் காட்டும்.
2. Page Preview கருவிப்பட்டையில் உள்ள multilple Pages பனிக்குறியைக் கிளிக் செய்து எத்தனை பக்கங்கள் தோன்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கலாம்.
3. Close Preview பொத்தானைக் கிளிக் செய்தால் இத்திரை மூடப்படும்.
5.
1. Tools AutoCorrect என்றக் கட்டளையை தேர்வு செய்யலாம்.
2. Autocorrect உரையாடல் பெட்டி தோன்றும்.
3. Replace பெட்டியில் பிழை நீக்கப்பட வேண்டிய சொல்லைத் தட்டச்சு செய்யவும்.
4. with பெட்டியில் மாற்றுச் சொல்லைத் தட்டச்சு செய்யவும்.
5. New பொத்தானைகிளிக் செய்தால் தானியங்கி சரிபார்த்தல் சொல் உருவாக்கப்படும்.
6.
1. தானியங்கு வடிகட்டியை நீக்குதல்:
(i) தானியங்கு வடிகட்டியை நீக்க, கருவிப்பட்டையிலுள்ள Auto Filter பணிக்குறியை மீண்டும் கிளிக் செய்யவும்.
(ii) இப்போது, அட்டவணை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடும்.
2. செந்தர வடிகட்டலை நீக்குதல்:
(i) Data ➝ Filter ➝ Remove Filter என்ற கட்டளையைப் பயன்படுத்தி, இந்த வடிகட்டலை நீக்கலாம்.
7.
பிடி 1- கம்ப்யூட்டர் பணிக்குறியை திரை முகப்பில் தேர்வு செய்யவும் அல்லது Start பட்டி மூலம் தேர்வு செய்யவும்.
பிடி 2-கம்ப்யூட்டர் வட்டு இயக்கி (Disc Drive) என்ற திரை, மேல் வலது மூலையில் தோன்றும். அதில் Search box தேர்வு உள்ளது.
பிடி 3-அதில் கோப்பு அல்லது கோப்புறையின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டும். கோப்பு அல்லது கோப்புறை பெயரின் ஒரு பகுதியை கொடுத்தால் குறிப்பிட்ட பெயரில் தொடங்கும் அனைத்து கோப்பு அல்லது கோப்புறைகளைக் காட்டும்.
பிடி 4- கோப்பு அல்லது கோப்புறையைத் திறக்க அதனை க்ளிக் செய்யவும்.
8.
1. தமிழ் எழுத்துரு '' முறையில் தமிழ் எழுத்துருக்களை பதிவிறக்கம் செய்து கட்டுப்பாட்டு பலகத்தில் உள்ள Font கோப்புறையில் சேர்த்துக் கொள்ளலாம்.
2. தமிழ் தட்டச்சு இடை முகம் முறையில் unicode தொழில் நுட்பம் பின்பற்றுவதால், தமிழ் தட்டச்சு செய்யும் முறை தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
9.
1. கோப்பு நீட்சி என்பது கணிப்பொறி ஒரு கோப்பை எளிதில் அடையாளம் காணப் பயன்படும் கோப்புப் பெயரின் இறுதிப் பகுதியாகும்.
2. Windows ல், இது புள்ளிக்குப் பின் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் கொண்டிருக்கும்.
10.
View Master Slide Master என்பதைக் கிளி செய்வதன் மூலம் Slide Master ஐ தோன்றச் செய்யலாம்.
Master Slide கல் இரண்டு வடிவங்களில் காணலாம்.
1. Slide Master 2.Notes Master
11.
புதிய நிகழ்த்துதலை உருவாக்க Presentation Wizard ல் உள்ள தேர்வுகளில் கீழ்க்காணும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. காலியான நிகழ்த்துதலைத் தேர்ந்தெடுக்கலாம்.
2. Template லிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
3.ஏற்கனவே உள்ள நிகழ்த்துதலைத் தேர்ந்தெடுக்கலாம்.
12.
1. சுட்டி என்பது திரையில் இடசுட்டியின் (Cursor) இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு சுட்டுச் சாதனமாகும்.
2. கணிப்பொறியில் உள்ள பணிக் குறிகள் (icons), பட்டிகள்(menus), கட்டளை பொத்தான்கள் (command buttons) போன்றவற்றைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துவதற்கு பயன்படுகிறது.
13.
| 1. முதல் தலைமுறை | ENIAC, EDVAC, UNIVACI |
| 2. இரண்டாம் தலைமுறை | IBM 1401, IBM 1620, UNIVAC 1108 |
| 3. மூன்றாம் தலைமுறை | IMB 360 series, Honey well 6000 series. |
14.
1. இணை மற்றும் பகிர்வு கணிப்பீடு.
2. கணிப்பொறிகள் சிறந்ததாகவும் விரைவாகவும் மற்றும் சிறியதாகவும் இருக்கும்.
3. செயற்கை மனிதர்கள் (Robots) உருவாக்குதல்.
4. இயற்கை மொழிச் செயலாக்கம்.
5. குரல் அறிதல், மென்பொருள் உருவாக்குதல்.
15.
(i) முதல் வணிக நோக்கு நுண்செயலி Intel 4004 என்ற 4-bit நுண்செயலி ஆகும்.
(ii) இதில் 4 உள்ளீடு மற்றும் 4 வெளியீடு ஊசிகள் உள்ளது. உள்ளீடு மற்றும் வெளியீடு ஊசிகளின் எண்ணிக்கை எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும்.
(iii) ஒரு நேரத்தில் 4-bitகளை செயற்படுத்த முடியும் என்பதால் இது 4-bit செயலி எனப்படும்.
16.
நுண்செயலியின் கட்டளைகளின் தொகுதி செயல்படுத்தும் செயல்களை செயல்படுத்துகிறது.
(i) தரவு மாற்றம்
(ii) எண் கணித செயல்முறைகள்
(iii) தருக்க செயல்முறைகள்
(iv) கட்டுப்பாட்டு நகர்வு
(v) உள்ளீடு/வெளியீடு
17.
1.எண்ணிலை எண் முறையில் 0 முதல் 7 வரை மொத்தம் எட்டு எண் உருக்கள் உள்ளது. இந்த எண் முறையும் "நிலைநிறை" முறையாகும்.
2. இதன் ஒவ்வொரு இலக்கமும், 8 ன் அடுக்குகளில் மதிப்பை பெறுகிறது. எ.கா.(154)8
18.
லினக்ஸ் (Linux)-ன் மிகப் பிரபலமான சேவையக பகிர்மானங்கள்:
1. உபுண்டு லினக்ஸ்
2. லினக்ஸ் மின்ட்
3. பெடோரா
4. டெபியான்
5. ஸென்ட் OS
6.டீப்பன்
7.டெபியான்
19.
"வரைகலை பயனர் இடைமுகம்"(GUI) சன்னல் திரை அடிப்படையிலான,நேரடியாக உள்ளீட்டு/வெளியீடுகளை கையாள்வதற்கும் பட்டிகளிலிருந்து தேர்வு செய்வதற்கும் தேர்ந்தெடுப்பதற்கு தேவையான சுட்டும் கருவிகளைக் (Pointing devices) கொண்டது.
20.
EPROM-ல் தகவல்களை புற ஊதா ஒளி மூலம் அழிக்கப்படுகிறது.
21.
(46)10=(101110)2
(ii) 2ன் அடுக்கு நிலை முறை:
கொடுக்கப்பட்ட எண்: 46
கொடுக்கப்பட்ட எண்ணிற்கு சமமாகவோ அல்லது அதற்குக் குறைவாகவோ உள்ள 2ன் அடுக்கு மதிப்பு 25=32
1) 46-32 =14
2)14-8 =6
3)6-4 =2
4)2-2 =0
| 2-ன் அடுக்கு மதிப்பு | 32 | 16 | 8 | 4 | 2 | 1 |
| இருநிலை இலக்கம் | 1 | 0 | 1 | 1 | 1 | 0 |
\(\therefore \)(46)10=(101110)2
22.
| உள்ளீட்டகம் | வெளியீட்டகம் |
|---|---|
| உள்ளீட்டகம் அனைத்து வகையான தரவுகளையும் கணிப்பொறிக்குள் உள்ளிடப் பயன்படுகிறது. உள்ளிடப்பட்ட தரவுகள் செயலாக்கத்திற்காக நினைவகத்தில் சேமிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டு விசைப்பலகை, சுட்டி போன்றவை. | பயனர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தகவலைத் தெரிவிக்கும் எந்தவொரு வன்பொருளும் வெளியீட்டகம் எனப்படும். எடுத்துக்காட்டு: திரையகம், அச்சுப்பொறி போன்றவை |
23.
ஓபன் ஆஃபீஸ் Impress - ல் 12 உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் அமைந்துள்ளன.
24.
| நகலெடுத்து ஓட்டுதல் | வெட்டி ஓட்டுதல் |
| 1. நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகல் எடுக்கப் பயன்படுகிறது |
நுண்ணறையின் உள்ளடக்கத்தை நகர்த்தப் பயன்படுகிறது. |
| 2. நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலும் இருக்கும். |
நுண்ணறையின் உள்ளடக்கம் மூல நுண்ணறையிலிருந்து நீக்கப்பட்டு. இலக்கு நுண்ணறையில் மட்டும் இருக்கும். |
25.
ஓபன் ஆஃ பீஸ் பல்வேறு அலுவலக தொகுப்புகள் உருவாக்கக்கூடிய கீழ்க்கண்ட மென்பொருள்களை கொண்டுள்ளது.
1. ஓபன் ஆஃ பீஸ் ரைட்டர் (OpenOffice writer) உரை ஆவணங்களை உருவாக்கப் பயன்படும் சொற்செயலி.
2. ஓபன் ஆஃ பீஸ் காலக் (OpenOffice calc) அட்டவணைத் தாள்களை உருவாக்கப் பயன்படும் அட்டவணைச் செயலி.
3. ஓபன் ஆஃ பீஸ் பேஸ் (OpenOffice Base) தரவு தளங்களை உருவாக்கப்பயன்படும்.
4. ஓபன் ஆஃ பீஸ் இம்ப்ரெஸ் (OpenOffice Impress )நிகழ்த்துதலை உருவாக்கப் பயன்படும்.
5. ஓபன் ஆஃ பீஸ் ட்ரா (OpenOffice Draw) படங்கள் வரைய பயன்படும் மென் பொருள்.
6. ஓபன் ஆஃ பீஸ் பார்முலா (OpenOffice Formula) வாய்ப்பாடுகள் மற்றும் சமன்பாடுகளை உருவாக்க பயன்படுகிறது.
26.
1. மைய செயலகத்தின் திட்டமிடல்களும் மற்றும் சிறிய முறைப்படுத்தப்பட்ட கட்டளை தொகுப்புகள்.
2. பயனர் மற்றும் இயக்க அமைப்பு செயல்முறையை உருவாக்குதல் மற்றும் நீக்குதல்.
3. செயல் முறையை இடைநிக்குதல் மற்றும் புதுப்பித்தல்.
4. செயல்முறை ஒத்திசைவுக்கான வழிமுறைகளை வகுத்தல்.
5. செயல்முறைகளுக்கிடையே தொடர்பு அமைக்கத் தேவையான வழிமுறைகளை வகுத்தல்.
27.
செயலாக்கத் திறன்களைப் அமைப்புகள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. ஒற்றைப்பயனார் இயக்க அமைப்பு
2. பல பயனர் இயக்க அமைப்பு
1. ஒற்றைப்பயனார் இயக்க அமைப்பு:
இந்த வகை இயக்க அமைப்பு, ஒரு நேரத்தில், ஒரு பயனரை, ஒரே ஒரு பணியை மட்டுமே செய்ய அனுமதிக்கிறது. எனவே, இது "1. ஒற்றை பயனர் மற்றும் ஒற்றை பணி இயக்க அமைப்பு" என அழைக்கப்படுகிறது.
எ. கா: MS DOS.
2. பல பயனர் இயக்க அமைப்பு:
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனர்கள் தரவுகளையும் பயன்பாடுகளையும் கணிப்பொறியில் பயன்படுத்த அனுமதிக்கும் இயக்க அமைப்பு "பல பயனர் இயக்க அமைப்பு" எனப்படும்.
எகா: விண்டோஸ், லினக்ஸ் மற்றும் யுனிக்ஸ்.
28.
ஒன்றுக்கும் மேற்பட்ட புலங்களை (நெடுவரிசை) அடிப்படையாகக் கொண்டு வரிசையாக்கம் செய்யப்படுவதற்கு "பற்புல வரிசையாக்கம்" என்று பெயர்.
தரவுகளை பற்புல வரிசையாக்கம் செய்தல்:
(i) படிநிலை 1 : Data ⇾ Sort கட்டளையைத் தேர்வு செய்யவும்.
(ii) படிநிலை 2: Sort உரையாடல் பெட்டி தோன்றும்.
(iii) படிநிலை 3:
1. "Sort by" கீழிறக்குப் பெட்டியிலிருந்து, முதலில் என்டக புலத்தின் அடிப்படையில் தரவுகளை வரிசைப்படுத்த வேண்டுமோ, அந்த புலத்தைத் தேர்வு செய்ய்யலாம்.
2. Ascending அல்லது Descending என்ற ரேடியோ பொத்தானில், வரிசை முறையைத் தேர்வு செய்யவும்.
(iv)படிநிலை 4:
1. "Then by" கீழிறக்குப் பெட்டியிலிருந்து, இரண்டாவதாக எந்த புலத்தின் அடிப்படையில் தரவுகளை வரிசைப்படுத்தப்பட வேண்டுமோ, அந்த புலத்தைத் தேர்வு செய்யவும்.
2. Ascending அல்லது Descending என்ற ரேடியோ பொத்தானில், வரிசை முறையைத் தேர்வு செய்யவும்.
(v) இறுதியாக "OK" பொத்தானை கிளிக் செய்ய்யவும்.
29.
1.அனைத்து நவீன கணிப்பொறிகள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் முக்கிய குறியீட்டு முறை யுனிட்கோட் ஆகும்.
2.ASCII குறியீட்டு முறைக்கு பிறகு மிகப் பிரபலமான முறை யுனிகோட் குறியீட்டு முறையாகும்.
3.உலகின் அனைத்து மொழிகளுக்கும் ஒரே குறியீடு முறையை ஏற்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டது.
4.இது 16 பிட் முறையில் 65536 எழுத்துருக்களைக் கையாளும் திறன் பெற்றது.
5.யுனிகோட் குறியீட்டு முறை, பதினாறு நிலை எண் முறையில் குறிப்பிடப்படுகின்றது.
30.
1. Insert Table உரையாடல் பெட்டியில் உள்ள Auto format பொத்தானை அழுத்தினால் Auto format உரையாடல் பெட்டி தோன்றும்.
2. இதில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வடிவூட்டல்கலிருந்து தேவையான வடிவூட்டலைத் தேர்ந்தெடுக்கலாம்.
3. அட்டவணையில் உள்ள ஏதேனும்ஒரு சிற்றரையில் செருகும் புள்ளியை வைத்து View \(\rightarrow \) Toolsbars \(\rightarrow \) Table என்ற கட்டளையைத் தேர்வு செய்ய வேண்டும், இந்தக் கட்டளை அட்டவணை வடிவூட்டல் கருவிப் பட்டையத் திரையில் காட்டும் . இதன் மூலம் தேவையான வடிவூட்டலைத் செய்யலாம்.
31.
1.உபுண்டு-ல் உள்ளணைந்த மின்னஞ்சல் மென்பொருளாக தண்டர்போர்டு (Thunderbird) உள்ளது.
2. இதில் மின்னஞ்சல் பயன்பாட்டிற்கான எக்ஸேஞ்ச் (Exchange),ஜிமெயில் (Gmail), ஹாட்மெயில் (Hotmail) போன்றவற்றை இயக்க வசதி உள்ளது.
32.
1. ஓபன் ஆஃபீஸ் ஒரு கோப்பை, குறிப்பிட்ட கால் இடைவெளியில் சேமிக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இது தானியங்கு சேமித்தல் என்று அழைக்கப்படுகிறது.
2. கொடாநிலை தானியங்கு சேமிப்புக்கான கால இடைவெளி 15 நிமிடங்களாகும். இந்தக் கால இடைவெளியை மேலும் குறைக்க முடியும்.
3. எதிர்பாராத விதமாக கணிப்பொறியின் இயக்கம் தடைபடும் போது, இந்த வசதி கோப்புகளை அழிவிலிருந்து காக்கின்றது.
33.
1.முதன்மை சில்லு என்பது மற்ற சில்லுகளுக்குத் தொடக்க புள்ளியாகப் பயன்படுத்தப்படும் சில்லுவாகும். இது அனைத்து சில்லுகளுக்கான அடிப்படை வடிவமைப்பைக் கட்டுப்படுத்துகிறது.
2.ஒரு சில்லு நிகழ்த்துதலில் ஒன்றுக்கும் மேற்பட்ட Slide Master இருக்கலாம்.
3.ஒரு முதன்மை சில்லு, பின்னணி நிறம், வரைகலை அல்லது சாய்வு, பொருள்கள் பின்னனித் தலைப்பு, அடிக்குறிப்புகள், உரையாடல் மற்றும் உரைச்சட்டங்கள் அளவு மற்றும் உரை வடிவமைத்தல் போன்ற வரையறுக்கப்பட்ட தொகுப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
4. சில்லு Master ன் அனைத்து குணங்களும், பாணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
34.
1.Start→ All Programs → Accessories → Wordpadஅல்லது Run → type Wordpad தட்டச்சு செய்த பிறகு OK பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். Word Pad சன்னல் திரை திறக்கப்படும்.
2.பணித்தளத்தில் தட்டச்சு செய்யப்பட வேண்டிய உரையை தட்டச்சு செய்து, File → Save அல்லது Ctrl +S பயன்படுத்தவும்.
3.Save As உரையாடல் பெட்டி திரையில் தோன்றும்.
4.அந்த உரையாடல் பெட்டியில் ஆவணத்தை எங்கு சேமிக்க வேண்டுமோ அதை Look-in கீழிறங்கு பெட்டியில் தேர்வு செய்ய வேண்டும்.
5.File name என்ற உரைப்பெட்டியில் கோப்பின் பெயரைத் தட்டச்சு செய்ய வேண்டும்.
6.Save பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
35.
1.தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லுகளுக்கு பின் புதிய சில்லுகளைச் சேர்க்கலாம்.
2.தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லுகளை நீக்கலாம் அல்லது மறுபெயரிடலாம்.
3. சில்லுகளின் அமைப்பை மாற்றி அமைக்கவும்.
4.சில்லு படத்திற்கு மாற்றம் செய்யலாம்.
5.ஒரு சில்லுவைத் தேர்ந்தெடுத்து, விரும்புகிற மாற்றத்தைச் சேர்க்கலாம்.
6.ஒன்றுக்கும் மேற்பட்ட சில்லுகள் இருக்குமானால், சில்லு குழுவை தேர்நந்தெடுத்து விரும்பிய மாற்றத்தைச் சேர்க்கவும்.
7.மறைக்கப்பட வேண்டிய ஒரு சில்லுவை குறித்துக்கொள்ளவும், ஏனெனில் மறைக்கப்பட்ட சில்லு நிகழ்ச்சியில் இடம்பெறாது.
8.ஒரு சில்லுவை நகலெடுக்கலாம் அல்லது வெட்டி ஓட்டலாம்.
36.
1. மையச் செயலகம் என்பது கணிப்பொறிக்கு வழங்கப்படும் கட்டளைகளை, கணிப்பொறி புரிந்துகொள்ளும் வகையில் மாற்றி அதனை செயலாக்கம் செய்யும் முதன்மையான பகுதியாகும்.
2. இது நினைவகம், உள்ளீடு. மற்றும் வெளியீடு போன்ற மற்ற அனைத்துச் சாதனங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.
3. இது தரவை உள்ளீடாகப் பெற்று. கொடுக்கப்பட்ட கட்டளைகளின் படி செயல்படுத்தி கட்டளைகளின் படி செயல்படுத்தி, வெளியீட்டை வெளியிடுகிறது.
37.
தனியுரிமை ஆதார சொற்செயலிகள்
| மென்பொருள் தொகுப்பு | உருவாக்கியவர் |
|---|---|
| 1. மைக்ரோ சாஃ ப்ட் வேர்டு (Microsoft word) | மைக்ரோ சாஃ ப்ட் கார்ப்பரேசன் (Microsoft corporation ) |
| 2. WPS வேர்டு | கிங் சாப்ட் (Kingsoft ) |
| 3.வேர்டுப்ரோ (wordpro) | லோட்டஸ் கார்ப்பரேசன் |
திறந்த மூல சொற்செயலிகள்
| 1.ஓபன்ஆஃபீஸ் ரைட்டர் (Open office Witer) | அப்பாச்சி (Apache ) |
|---|---|
| 2. லிபரே ஆஃபீஸ் ரைட்டர் (Libre Office Writer ) | தி டாக்குமென்ட் பெளண்டேசன் (The Document foundation ) |
| 3. அபிவேர்டு (abiword) | அபி ஸோர்ஸ் (abisource) |
38.
1.Cortana என்பது குரல் செயலியாக்க தனி உதவியாளர் வசதியாகும்.இது Windows 10 இயக்க அமைப்பு பதிப்பின் முக்கியப் பகுதியாகும்.
2. இது வலைதள தேடல் மற்றும் தொடக்கப்பட்டி விண்டோஸ் தேடல் போன்ற இரு வேலைகளைச் செய்கிறது.
3.மேலும் குரல் மூலம் தேடல் செய்யும் திறன் பெற்றது.
39.
நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் :
1. ஒரே நேரத்தில் பல பணிகளை அல்லது செயல்களைச் செயல்படுத்துகிறது.
2. பல பயன்பாடுகள் தங்குதடையின்றி குறிப்பிட்ட நேர இடைவெளியில் இயக்கப்படுகின்றன.
தீமைகள்:
(i) அதிக வளங்களை எடுத்துக் கொள்வதால் சிறப்பான இயக்க அமைப்பு தேவை.
(ii) அதிக பயனர்களாலும், பல்வேறு பயன்பாடுகள் ஒரே நேரத்தில் இயக்கப்படுவதாலும் சில நேரங்களில் இயக்க அமைப்பு செயல் இழக்க நேரிடலாம்.
40.
| கணிப்பொறி அமைப்பு | கணிப்பொறி கட்டமைப்பு |
| கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இது நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது. |
கணிப்பொறி கட்டமைப்பு என்பது கணிப்பொறி வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளை உள்ளடக்கியது. |
(i) கணிப்பொறி அமைப்பு என்பது கணினியின் வன்பொருள் கூறுகளை உள்ளடக்கியது. இதில் உள்ளீட்டு / வெளியீட்டு சாதனங்கள், மையச் செயலகம் (CPU), சேமிப்பு சாதனங்கள் மற்றும் முதன்மை நினைவகம் ஆகியவை அடங்கும்.
(ii) இது கணினியின் பல்வேறு பாகங்களை எப்படி செயல்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது. இது ஒரு கணினியின் அனைத்து வன்சாதனங்களும் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றியும், மேலும் பல்வேறு பாகங்களின் இணைப்பு பற்றியும் விளக்குகிறது.
(iii) கணினியின் கட்டமைப்பு என்பதும் கணிப்பொறியின் அமைப்பு என்பதும் ஒன்றே. ஆனால் கணிப்பொறியை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கும் பொறியியல் கருதுகோளுடன் கணினி கட்டமைப்பு உள்ளடக்கியது. அதே நேரத்தில் கணினி அமைப்பானது, நிரலருக்கு வன்பொருள் கூறுகளை வெளிப்படையாக விளக்குகிறது.
41.
(i) (150)10=(?)2
\(\therefore \)(150)10=(10010110)2
(ii) (10010110)2=(?)8
1.கொடுக்கப்பட்டுள்ள இருநிலை எண்களை வலமிருந்து இடமாக மூன்று பிட்டுகளாக குழுவாக்கவும். இடது ஓர குழு மூன்று பிட்டாக அமையவில்லை எனில், மூன்று பிட்டாக மாற்ற 0(Zero) முன்னொட்டாக சேர்க்கவும். 010 010 110
2. 2ன் அடுக்கு நிலை நிறை முறையினைப் பயன்படுத்தி, ஒவ்வொரு குழுவிலும் உள்ள இருநிலை மதிப்புகளுக்கு நிகரான பதின்ம எண்களைக் கணக்கிட வேண்டும்.
010 010 110
2 2 6
\(\therefore \)(150)10=(226)8
42.
கணிப்பொறிகள் பயன்படுத்தப்படும் பல்வேறு துறைகளில் சில
1. கல்வி மற்றும் ஆராய்ச்சி
2. சுற்றலா
3. வானிலை முன்னறிவிப்பு
4. சமூக வலைதளம்
5. மின் வணிகம்(e - commerce)
6. இரயில், வானூர்தி மற்றும் திரைப்பட முன்பதிவு
7. பொழுதுபோக்கு
43.
44.
| Backspace | Delete |
| Backspace பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
Delete பொத்தானைப் பயன்படுத்தி அழித்தல் |
| இது காட்டிக்கு (cursor) இடப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும் |
இது காட்டிக்கு வலப்புறம் உள்ள எழுத்துருக்களை அழிக்கும். |
45.
| நகர்த்தல் | நகலெடுத்தல் |
|---|---|
| 1. நகர்த்த வேண்டிய உரையை தேர்வு செய்ய வேண்டும். | நகலெடுக்க, தேவையான உரையை தேர்வு செய்ய வேண்டும். |
| 2. Ctrl +X அல்லது Cut பணிக்குறி அல்லது Edit → Cut கிளிக் செய்ய வேண்டும். | Ctrl + C அல்லது Copy பணிக்குறி அல்லது Edit → Copy கிளிக் செய்யவும். |
| 3. மூல இடத்திலிருந்து உரை நீக்கப்பட்டு பிடிப்பலகையில் (Clip Board) சேர்க்கப்படும். | நகலெடுக்கப்பட்ட உரை பிடிப்பலகையில் சேர்க்கப்படும். |
| 4. உரை எந்த புதிய இடத்திற்கு நகர்த்தப்பட வேண்டுமோ அங்கு செருகும் புள்ளியை கொண்டு செல்லவும். | நகலெடுக்கப்பட்ட உரை எங்கு நகலெடுக்க வேண்டுமோ அங்கு செருகும் புள்ளியைக் கொண்டு செல்லவும். |
| 5. Ctrl + V அல்லது Paste பணிக்குறி அல்லது Edit → Paste கிளிக் செய்யவும். | Ctrl + V அல்லது Paste பணிக்குறி அல்லது Edit → Paste கிளிக் செய்யவும். |
| 6. தேர்வு செய்யப்பட்ட உரை இப்பொழுது வேண்டிய இடத்திற்கு நகர்த்தப்பட்டிருக்கும். | தேர்வு செய்யப்பட்ட உரை இப்பொழுது வேண்டிய இடத்தில் நகலெடுக்கப்பட்டிருக்கும். |
11th Standard Syllabus & Materials
11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - செய்யுள் - காவடிச்சிந்து Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil பீடு பெற நில் - உரைநடை - மலை இடப்பெயர்கள் : ஓர் ஆய்வு Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - துணைப்பாடம் - யானை டாக்டர் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW11th Standard
TN 11th Tamil மாமழை போற்றுதும் - செய்யுள் - ஐங்குறுநூறு Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 11th Standard Subjects

Maths

Commerce

Economics

Biology

Business Maths and Statistics

Accountancy

Computer Science

Physics

Chemistry

Maths

Biology

Economics

Physics

Chemistry

History

Business Maths and Statistics

Computer Science

Accountancy

Computer Applications

History

Computer Technology

Commerce

Computer Applications

Computer Technology

Tamil

English

French
Tamilnadu Stateboard Standards